நான் பார்த்த TV Serials..

Sunday, April 11, 2010

நான் அதிகமாக TV சீரியல்கள் பார்க்க மாட்டேன்.. பள்ளி படிக்கும்போது, சிறு வயதில் நான் பார்த்து என் நினைவில் இன்று வரை இருக்கும் தொலைக்காட்சி தொடர்களை கொஞ்சம் நினைவுபடுத்தி பார்க்கிறேன்..


  1. பஞ்சமி - கொஞ்சம் த்ரில்லிங்கான கதை.. ரொம்ப பயந்து பயந்து பார்த்த சீரியல்..
  2. கங்கா யமுனா சரஸ்வதி - இந்த சீரியலை பார்த்த நியாபகம் இல்லை..ஆனா இந்த சீரியலின் பாட்டு இன்னமும் நினைவிருக்கு.. எம்.எஸ்.வி அவர்களின் Humming-ல ஆரம்பிச்சு, ஹரிஹரனின் குரலில் இனிமையாக ஒலிக்கும் பாடல்..
    “புண்ணிய நீரோடு திருவேணிப் பேரோடு,
    ஊர்போற்றி நீராடும் கங்கா யமுனா சரஸ்வதி..”
    பாடல் வரிகள் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்..
  3. மர்மதேசம் - ரொம்ப Interesting-ஆன சீரியல்.. கொஞ்சம் த்ரில்லிங்கான சீரியல்..
  4. சித்தி - எல்லோருக்கும் நல்லா தெரிஞ்ச சீரியல்.. கதை நியாபகம் இல்ல.. ஆனா இரவு சாப்பிடும்போது அம்மாகூட சேர்ந்து இதை பார்ப்பேன்..
  5. மாங்கல்யம் - பள்ளி படிக்கும்போது மதியம் சாப்பிட வீட்டிற்கு வருவேன்.. அப்போது இதை பார்ப்பேன்..
  6. சிவமயம் - எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல்.. இந்த சீரியலின் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சீரியலின் முதலில் வரும் “ அருள்தரும் சிவம் சிவம்” பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. சீரியலின் முடிவில் வரும் “கண்டாரே காணாததை கண்டாரே” என்னும் பாடலும் ரொம்ப பிடிக்கும்.. இந்த சீரியலின் கதையும் எனக்கு அதிகமா பிடிக்கும்..
  7. மாயா மச்சீந்த்ரா - நல்ல கதை. சின்ன வயசில ரொம்ப விரும்பி பார்ப்பேன்.. நாமலும் இப்படி ஆவோமானு நினைத்ததுண்டு..
  8. ஜீ பூம் பா - விஜய் டிவி ல வரும் சீரியல்.. நல்லா இருக்கும்..காமெடியாவும் இருக்கும்..
  9. கோலங்கள் - அம்மா பார்க்கும்போது எப்பவாவது பார்ப்பேன்..
  10. மெட்டி ஒலி - ம்.. ரொம்பலாம் பார்க்க மாட்டேன்.. Tuition விட்டு வீடு வரும்போது பார்ப்பேன்..
  11. ருத்ரவீணை - இதை அதிகமா பார்க்க மாட்டேன்.. இந்த சீரியலின் முதலில் வரும் வீணை ரொம்ப அருமையா இருக்கும்.. சீரியல் ஆரம்பமாகும்போது ஒவ்வொரு முறையும் ஒரு ராகத்தை வீணையில் வாசிப்பார் ஒருவர்.. அது மட்டும் கேட்பேன்..
  12. தடயம் - Sundays-ல மட்டும் இந்த சீரியல் வரும்.. ரொம்ப அருமையா இருக்கும்..
  13. ப்ரேமி - பாலசந்தரின் சீரியல்.. நல்லா இருக்கும்னு அம்மா சொல்வாங்க.. கதை மறந்துபோச்சு.. ஆனா சீரியல் பார்த்த மாதிரி நினைவிருக்கு..
  14. கனா காணும் காலங்கள் - அம்மா திட்ட திட்ட இந்த சீரியலை பார்க்கும் சுகமே தனி..
  15. சூலம் - அம்மன் சீரியல்.. முதல்ல நல்லா இருந்துச்சு.. போக போக போர் அடிச்சு போச்சி..
  16. அண்ணாமலை - இந்த சீரியலின் பாட்டு ரொம்ப பிடிக்கும்..
  17. மாயாவி மாரீசன் - சரித்திர கதை, இந்த காலத்தோடு இணைந்த மாதிரி கதை இருக்கும்..
  18. சக்திமான் - இந்தியாவில் இருக்கும் பல குழந்தைகளுக்கும் பிடித்த சீரியல்..
  19. Captain VYOM - இது ஒரு Fiction கதை.. இதை பார்த்த பின்பே எனக்கு Science-ல கொஞ்சம் ஆர்வம் அதிகமாச்சு..
  20. ஓம் நமச்சிவாய - எனக்கு ரொமப் ரொம்ப பிடிச்ச சீரியல்.. ஆன்மீகத்தின் மீது எனக்கு ஆர்வத்தை உண்டக்கிய சீரியல்..
  21. ஜெய் அனுமான் - இந்த சீரியலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ராமாயணத்தை பற்றியும் அனுமான் பற்றியுமான கதை.. அருமையாக இருக்கும்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: