வேற்றுகிரகவாசி

Friday, April 05, 2019


 என் சின்ன வயதில், எனக்கு விண்வெளி ஆராய்ச்சியாளன் ஆகவேண்டும் என்கிற கனவு இருந்தது. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டும், நிலவிற்கு செல்ல வேண்டும், விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்கிற கனவும் ஆசையும் அதிகம் இருந்தது. 

ஆனால், இன்று நம் அறிவியல் இந்த அனைத்தையும் சாத்தியமாக்கிவிட்டது. இருந்தாலும் அந்த ஆசையும் கனவும் வெகுவாய் குறைந்துவிட்டது. இப்போது என்னை விண்வெளிக்கு/நிலவிற்கு/செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்வதாக சொன்னாலும் நான் வேண்டாம் என்றே சொல்வேன். எனக்கு இந்த பூமித்தாயை பிடித்திருக்கிறது. இதன் அருமை எனக்கு புரியும். இதுபோன்றதொரு இடம் வேறெங்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

இருக்கும் இடத்தைவிட்டு எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே என்கிற பாடல்தான் நினைவில் ஒலிக்கிறது...

* தினேஷ்மாயா *

இதுதான் மனிதன்


2024-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களையும், 2033-ம் ஆண்டிற்குள் மனிதர்களையும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 

இருப்பது ஒரு பூமி. இதை பாதுகாத்து இங்கே மனித இனம் செம்மையாய் வாழ எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், வேறு கிரகத்தில் குடிபெயர முயற்சிகள் மேற்கொள்பவன்தான் மனிதன் !!

இயற்கையின் படைப்பில் தன் இனத்தை தாமே அழிக்கும் ஒரே இனம் - மனித இனம் மட்டுமே. 


* தினேஷ்மாயா *