தவணை

Tuesday, March 16, 2021

 தவணை முறையில்

அவள் அழகை

இரசித்துக் கொண்டிருக்கிறேன்..

- தினேஷ்மாயா 

வாழ்வின் சூட்சுமம்

 எனக்கு வாழவே பிடிக்கலனு சொல்ற நிலைமை நம் எல்லோருக்கும் எப்போதாவது ஒரு கட்டத்தில் வந்திருக்கும். ஆனால் அத்தோடு நொடிந்துப் போகாமல், வாழ்வை எதிர்நோக்கி நடப்பதில்தான் வாழ்வின் சூட்சுமமே அடங்கி இருக்கிறது. அடுத்த நொடி நமக்கு பல ஆச்சரியங்களை மறைத்து வைத்திருக்கலாம், அதில் வலிகளும் கலந்திருக்கலாம். இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை. கண்ணீர் சிந்தி வருந்துவதைவிட, வியர்வை சிந்தி உயர்வது உத்தமம்.

-தினேஷ்மாயா

மோகத்தீ

Saturday, March 13, 2021


என் மோகத்தீ

உன் பாதம் பட்ட

அந்நொடியே

உருகி

டி

து

.

.

.


* தினேஷ்மாயா  *

ஒற்றை உயிர்

 


என் ஒற்றை உயிர்

பல துண்டுகளாக உடைந்து

அந்த சலங்கைக்குள்

அடைந்து கிடக்கிறது..

நானே ஆடி ஆடி

என்னை உயிர்ப்பிக்கிறேன்..

* தினேஷ்மாயா *

தாண்டவக்கோனே...

 


சலங்கைகள் 

என் காலில் சேர்ந்ததும்

ஆடல் நாயகனாம்

சிவனும் தோற்கும்படி

உருத்திர தாண்டவமே

அரங்கேற்றி விடுகிறேன்..

* தினேஷ்மாயா *

அறம் பொருள் இன்பம்

Monday, March 08, 2021

 அறம் என்பது ஆண்.

ஆண், அறத்துடன் நிற்றல் வேண்டும்.

பொருள் என்பது பெண்.

பெண், பொருளை நிர்வகிப்பதில் தனித்து விளங்க வேண்டும்.

அறமும் பொருளுமாகிய ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே நிலையான இன்பம் கிடைக்கும்.

இந்த தத்துவத்தையே வள்ளுவப் பெருந்தகை நமக்கு அருளியுள்ளார்..

* தினேஷ்மாயா *

மூலதனம்

 பொதுமக்களின் மூடத்தனமே, இன்று பல்கிப் பெருகி இருக்கும் கார்ப்பரேட் சாமியார்களின் மூலதனம்.

 * தினேஷ்மாயா *