மார்கழி பூவே

Friday, September 11, 2020



 

மார்கழி மாதத்தில்


வாசலில் கோலமிட்டு


மார்கழி பூவை வைப்பார்கள்...


ஆனால் இங்கோ - தரையில்


பாவை ஒருத்தி


பூவாய் பூத்திருக்கிறாள்...


* தினேஷ்மாயா *

எண்ணத்துப்பூச்சி



வண்ணங்களை பூசியதால் நீ


வண்ணத்துப்பூச்சியானாய்..


உன் எண்ணங்களை பூசியதால் நான் 


எண்ணத்துப்பூச்சியானேன்..


* தினேஷ்மாயா *

தொலைந்தேன்


 என் விடலையில்


உன்னுள் தொலைந்து


காதலை இரசித்தேன்..


முப்பதுகளின் தொடக்கத்தில்


என்னுள்ளேயே தொலைந்து


வாழ்க்கையை இரசிக்கிறேன்..


* தினேஷ்மாயா *

தேசாந்திரி


தேசாந்திரியாய்


திரிய ஆசை...


இருக்கிறேன் இங்கே


கடமையாற்றியும்


கட்டுண்டும் !!


* தினேஷ்மாயா *

பாலைவனச்சோலை

Thursday, September 10, 2020


 

பாலைவனமான என் வாழ்வில் வந்த


சொலையம்மா நீ !!


* தினேஷ்மாயா *

கொழுசு


 

சிலம்பினால் அறியப்பட்டவள் கண்ணகி


கொழுசால் அறியப்படுபவள் என் காதலி..


* தினேஷ்மாயா *

அவள் கொலுசு


 

நடந்துவரும் அவளை மிதந்துவர வைக்கும்..


தொலைவில் வருகையிலேயே அவள் -


வரவை தெரியப்படுத்தும்... 


ஊடலின் போது - சலசலப்பும்


கூடலின் போது - சிலுசிலுப்பும் !!


* தினேஷ்மாயா *

தேவதைகளின் தேவதை


 

பேதை


பெதும்பை


மங்கை


மடந்தை


அரிவை


தெரிவை


பேரிளம்பெண்..


சங்க இலக்கியங்களில் பெண்களை இந்த ஏழு வகையினுள் அடைத்துவிடுவார்கள்.


ஆனால், எந்த வகையிலும் அடைக்கமுடியாத


தேவதைகளின் தேவதை என்னவள் !!


* தினேஷ்மாயா *

வித்தகன்


 

கடலில் மூழ்கி முத்தெடுக்கும் 


வித்தை அறிகிலேன்..


ஆனால் - உன்னுள் மூழ்கி


முத்தங்கள் எடுக்கும் வித்தையை


நன்கறிவேன்..


* தினேஷ்மாயா *

கருங்கடல்


 

நீலக்கடல்


அவள் கடலலையினில்


காலை நனைத்தப்பின்


கருங்கடலாய் 


நிற மாற்றம் கொண்டது..


* தினேஷ்மாயா *


அமைதி


 

புயலுக்கு பின் அமைதியாம்


நான் - புயலிலேயே அமைதி காண்கிறேன்..


என் காதல் புயலாய் வீச


உன் கண்கள் அமைதியாய்...


* தினேஷ்மாயா *

மகிழ்ந்திருப்போம்...


நான் வெளிவிடும் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து 


அதை நீ வெளியிட்டப்பின் நான்  மீண்டும் சுவாசித்து


குளிர் காற்றை வெப்பமாக்கும் இந்த கூடலில்


மெய்மறந்து மேல் சாய்ந்து


மகிழ்ந்திருப்போம்...


* தினேஷ்மாயா *

பெரிய பெரிய ஆசை

Sunday, September 06, 2020


காற்றைப் போல


எல்லைகள் கடந்து


உலகை சுற்றி வர பேராசை !


* தினேஷ்மாயா *

காதலில் விழுந்தேன்


அவள் பார்வையை அனுப்பி


தன் கண்கள் எனும் சிறையில்


அடைக்கப் பார்க்கிறாள்..


தப்பிக்க நினைத்து


அவள் காதலில் விழுந்துவிட்டேன்..


* தினேஷ்மாயா *

எல்லாம் சுகமே


 தூக்கில் தொங்குவதும்


சுகமே..


எப்போது உன்னை உரசும்


உன் தோடுகளுக்கு..


* தினேஷ்மாயா *

வயலில் வயலின்


 

நீ வயலின் வாசிப்பதால் 


இசை பிறக்கவில்லை...


அந்த வயலின் நடுவே 


ஒய்யாரமாய் வீற்றிருக்கும்


பொன்சிலையான உன்னை


வருடி செல்லும் கோடைக்காற்றே


இசையாய் பிரதிபலிக்கிறது !!


* தினேஷ்மாயா *

ராதே ராதே !!


 

காத்திருப்பு 


தவிப்பு அல்ல


அது ஒரு 


தவம்...


எனக்கு ராதை உணர்த்திய பாடம் !!

* தினேஷ்மாயா *

கண் பேசும் வார்த்தைகள்


 ஆம்..


கண்கள் பேசும் வார்த்தைகள்


புரிவதில்லைதான்..


எனக்கு அதன் அர்த்தங்கள் வேண்டாம்..


எனை மயக்கும் பேரழகே போதுமே..


* தினேஷ்மாயா *

கொள்ளையடித்தாய்.


 மனதைக் கொள்ளையடித்தாய் சரி


ஆனால் - ஏன் 


உன் முகத்திற்கு வெள்ளையடித்தாய் ?


* தினேஷ்மாயா *

ஒரு விநோதமான சிந்தனை

Friday, September 04, 2020


 

இன்று மதியம் வீட்டு பால்கனியில் நின்று காற்று வாங்கிக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு விசித்திரமான, விநோதமான சிந்தனை வந்து மறைந்தது.

இறக்கும் போது எப்படி இருக்கும். இறக்கும் உணர்வு எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன்.

அந்த நொடி சிலருக்கு வயது மூப்பின் காரணமாக உடனே வந்துவிடும், சிலருக்கு பிணிக் காரணமாக இழு இழு என்று இழுத்து பிறகே உயிர் பிரியும், சிலருக்கு எதிர்பாராமல் எந்த நேரத்திலும் எந்த விதத்திலும் வந்து சேரும்,  சிலர் தாங்களாகவே அந்த நொடியை தேடிக்கொள்வர்.

ஆனாலும், அனைவருக்கும் அந்த ஒரு நொடி ஒரேமாதிரியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மனித மூளைக்கு தெரியும். உயிர் என்றால் என்ன, உயிர் பிரியும் தருவாயில் அந்த மூளைக்கு உயிர் பிரியப்போகிறது என்று உணர முடியுமா ? அப்படி மனித உடல் உயிர் வாழ்வதை நீட்டிக்க எதையாவது செய்யுமா அல்லது, போதுமென தன் உழைப்பை முடித்துக்கொண்டு உயிரிடம் சரணடைந்துவிடுமா ?

உயிர் பிரியும் அந்த தருவாய் எப்படி இருக்கும் ?

வலி நிறைந்ததாக இருக்குமா ? ? ?

ஒரு விடயம் நீங்கள் கவனித்தீர்களா. இதுவரை மரணித்த எவரும் அந்த தருணம் எப்படி இருக்கும் என்று மீண்டு வந்து வாழ்பவர்களிடம் சொன்னதுமில்லை, அப்படி சொல்ல நினைத்தாலும் சொல்ல முடிவதுமில்லை. மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதையும் அவர்களால் நம்மிடம் பகிர்ந்துக் கொள்ளவும் முடிவதில்லை.

இதுதான் வாழ்க்கையின் இரகசியம் என்பதோ ?

அல்லது, இதனால்தான் வாழ்க்கையே இரகசியமாக இருக்கிறதோ ?

* தினேஷ்மாயா *