பிறந்தநாள்

Monday, September 29, 2014


உன் பிறந்தநாள்..

உன் இதழில் படவேண்டும் என்பதற்காகவே

நேற்றிரவு முதல் காத்துக்கிடக்கிறது

இந்த கேக்குகள் !!

* தினேஷ்மாயா *

படையெடுப்பு


வாசலில் வந்து நிற்கிறாய்..

உன்னைப் பார்த்துவிட்டு செல்ல

படையெடுத்து வருகின்றன -

சைபீரிய பறவைகள்..

* தினேஷ்மாயா *

வேண்டுதல்


என்ன வேண்டுவதென்று தெரியவில்லை..

இவளைக்கண்டுவிட்ட காரணத்தால்,

வேண்டுதலும் வரவில்லை...

* தினேஷ்மாயா *

வெள்ளை நிறத்தொரு..



வெள்ளை நிறத்தொரு தேவதை

என் மனதில் வளருது கண்டீர் !

* தினேஷ்மாயா *

நீதானோ ?


சிலந்திக்கு வலைப்பின்னும் கலையை

கற்றுக்கொடுத்தவள் நீதானோ ?

* தினேஷ்மாயா *

ஒன்று சேரக்கூடாதா ?



நம் இதயங்கள் ஒன்று சேர்ந்தது போல

நம் இதழ்கள் ஒன்று சேரக்கூடாதா என்ன ?

* தினேஷ்மாயா *

பூவின் நடுவே



பூக்களின் நடுவே

ஒரு பூகம்பம் !

* தினேஷ்மாயா *

படபடக்கும்

Saturday, September 20, 2014


நீ அருகில் வருகையில்

என் இதயம் படபடக்கும்..

நீ அருகில் இருக்கும்போது

என் கண்கள் உன்னை படம்பிடிக்கும்..

* தினேஷ்மாயா *

உயிர் தானம்



உயிரில்லா கல்லுக்கு

உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறாள் !!

* தினேஷ்மாயா *

உன் காதல்



சென்று வா

என்று எனை வழியனுப்பிவிட்டாய்..

உன் கால்கள் உள்ளே இழுத்தாலும்

உன் காதல் வெளியே இழுக்கிறது -

தெருமுற்றத்தில் என் பின்பம் மறையும்வரை !

* தினேஷ்மாயா *

காதல் கவிதை


எல்லோரும் சொல்கிறார்கள்,

நான் காதல் கவிதை எழுதுகிறேன் என்று ..

ஆனால்,

எனக்கு மட்டுமே தெரியும்

நான் நம் காதலைத்தான்

கவிதையாய் எழுதுகிறேன் என்று !

* தினேஷ்மாயா *

வாழ்க்கை வாழ்வதற்கே !

Thursday, September 18, 2014

ஒரு பூ,

தன் அருகில் இருக்கும்

மற்றொரு பூவிடம்

போட்டியிடுவதில்லை..

அது தன் அழகால் பிரகாசிக்கும்..

@@@@

அதுபோல -

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே !!

மற்றவருடன் போட்டியிட்டோ ஒப்பிட்டு வாழ்வதற்கோ அல்ல !

* தினேஷ்மாயா *

எவ்வளவு நாட்களாச்சு !!


இயற்கையோடு நடைபழகி எவ்வளவு நாட்களாச்சு !!

* தினேஷ்மாயா *

பெரியார் பொன்மொழி


பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச்

சொல்லுவதை விட தன்னிடத்தில்

அது எவ்வளவு இருக்கிறது என்று

ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

- பெரியார்

* தினேஷ்மாயா *

உன்னருகில்


உன்னருகில் வேண்டாம்..

உன் நினைவருகில் இருந்தாலே போதும்..

ஓர் ஜென்மம் வாழ்ந்திடுவேன் நான்..

* தினேஷ்மாயா *

உன்னைத்தேடு



கடவுளைத் தேடினேன்..

என்னை மட்டுமே கண்டேன் !

என்னைத் தேடினேன்..

கடவுளை மட்டுமே கண்டேன் !

- சூஃபி தத்துவம்

* தினேஷ்மாயா *

கடைப்பிடிப்போம்

Wednesday, September 17, 2014


நான் எனது வாழ்நாளில் யாருடைய

உடலுக்கும், மனதுக்கும்

துன்பம் தரமாட்டேன்.

துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த

உதவிகளைச் செய்வேன்.

- வேதாத்திரி மஹரிஷி


@ இயன்றவரை இதை கடைப்பிடிப்போம் @

* தினேஷ்மாயா *

நபிகள் வார்த்தை..


இரவில்

பட்டினியாக இருக்காதீர்கள் !

- நபிகள் நாயகம்

* தினேஷ்மாயா *

ஆரோக்யமான வாழ்வு



ஆரோக்யமான வாழ்க்கைக்கு

எடை குறைப்பு மட்டும் போதாது..

நம் மனநிலையையும்

வாழ்க்கை முறையையும்

கட்டாயம் மாற்றிக்கொள்ள வேண்டும்...

* தினேஷ்மாயா *

இயற்கை உணவு


பெட்டியில் அடைத்த உணவை தவிர்ப்போம்..

இயற்கையாக கிடைக்கும் உணவை அதிகம் உட்கொள்வோம்..

* தினேஷ்மாயா *

கடனாய் கொடேன்


எனக்கும் ஒரு காலம் வரும்..

அன்று வட்டியுடன் வாங்கிக்கொள் -

இப்போது கொஞ்சம் கடனாய் கொடேன்

ஒரேயொரு முத்தத்தை !

* தினேஷ்மாயா *

இரண்டு கண்கள் போதாதா



இரண்டு கண்கள் போதாதா ?

ஏன் என்னை

நான்கு கண்களால் கொல்கிறாய் ?

* தினேஷ்மாயா *

காதல் தேர்வு


என் காதல் தேர்விற்கு

நீ எழுதிய கோனார் நோட்ஸ்தான்

தினமும் படிக்கிறேன் !

* தினேஷ்மாயா *

உள்ளுணர்வு


ஏதோ என் உள்ளுணர்வு சொல்கிறது..

மூக்குத்தி அணிந்த பெண்ணொருத்திதான்

என் மாயாவாக இருப்பாள்,

என் துணையாய் வருவாள் என்று...

* தினேஷ்மாயா *

சிறு பிழை


தமிழில் சிறு பிழையொன்றை

நேற்று கண்டுபிடித்தேன்..

முக்கனிகள் -

மா, பலா, வாழை என்றார்கள்..

உன் கன்னத்தை 

கணக்கில் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார்கள் !

* தினேஷ்மாயா *

இடையில் வாழ்க்கை



மனிதனின் வாழ்க்கையும்

உந்தன் இடையும் ஒன்றே ..

எத்தனை ஏற்ற இறக்கங்கள் !!

* தினேஷ்மாயா *

பள்ளத்தாக்கு



நீ கடித்து துப்பும்

உன் நகங்கள் பூமியில் விழுந்தே

பள்ளத்தாக்குகள் ஏற்படுகிறதோ !?

* தினேஷ்மாயா *

திகட்டாத காதல்



திகட்டாத காதலை -

என்னால் உனக்கு தரமுடியும்...

* தினேஷ்மாயா *

எழுத்து


நல்லவேளை..

எழுத்தில்லாத காலத்தில் நான் பிறக்கவில்லை..

ஒருவேளை நான் அந்த காலத்தில் பிறந்திருந்தால் -

உன்னைப்பற்றி எழுதமுடியாத பாவியாகியிருப்பேன்..

* தினேஷ்மாயா *

நான் பாவம்


வர வர உனக்கு

அழகு கூடிக்கொண்டே போகிறது..

சொல்லிவை அந்த அழகிடம்..

நான் பாவமென்று !!

* தினேஷ்மாயா *




புதுவகை தாலி !



புதுவகை தாலி !

எப்படி இருக்கிறது ?

* தினேஷ்மாயா *

கவிதை



இதைவிட வேறென்ன கவிதை எழுதமுடியும் சொல்லுங்கள் ?

* தினேஷ்மாயா *

வேண்டுகோள்



உன்னை காணும்போதெல்லாம்

காதலோடு கவிதையும் வந்துவிடுகிறது !

உன் வேண்டுகோளுக்கேற்ப -

நம் முதலிரவன்று மட்டும்,

கவிதையை விட்டுவிட்டு

கவித்துவமாய் இருக்கிறேன் போதுமா ?!

* தினேஷ்மாயா *

வட்ட நிலா



பொட்டு வைக்காத

ஒரு வட்ட நிலா !

* தினேஷ்மாயா *

கிறுக்கன்


எல்லோரும் என்னை

காதல் கிறுக்கன் என்கிறார்கள்..

ஆனால் -

நான் உன்மீது தானே

கிறுக்காய் இருக்கிறேன் ?!

* தினேஷ்மாயா *

சத்தியம்


என் பிறந்தநாள் இன்று..

நாம் செய்த சத்தியத்திற்கு

இன்று மட்டும் விடுமுறை கொடுத்துவிடேன் -

எனக்காக ஒரேயொரு முத்தம் !!

* தினேஷ்மாயா *

திட்டு



நான் உன்னிடம் முத்தம் கேட்கிறேன்..

என்னை கண்டபடி திட்டுகிறாய்..

உன் முத்தத்தைவிடவும்,

உன் திட்டு அதிகம் இனிக்கிறதடி !

* தினேஷ்மாயா *

இரட்டை குழந்தைகள்


ஓ !

காதலும் கவிதையும் இரட்டை குழந்தைகளா ?

அழகும் நீயும் போல !

* தினேஷ்மாயா *

பிறக்கிறான்


காதல் பிறக்கும்போது

கூடவே -

ஒரு கவிஞனும் பிறக்கிறான் !


 * தினேஷ்மாயா *

காலம்



கடந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

இதில் எதுவும் வேண்டாம் எனக்கு..

உன்னுடன் வாழும்

காதல் காலம் போதும் எனக்கு !

* தினேஷ்மாயா *

வெட்கம் வருகிறது



நீ கோபப்படும்போது -

அந்த கோபத்திற்கே

வெட்கம் வருகிறது !!

( எனக்கும்தான் )

* தினேஷ்மாயா *

கொலைத்திட்டம்


இன்று என்னை எப்படி கொல்லலாம் என்று

திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறாயா ?

* தினேஷ்மாயா *

மெதுவாய் பிடி


மெதுவாய் பிடி..

செத்துவிடப்போகிறது அந்த தொலைப்பேசி -

உன் மென்மை தாங்காமல் !

* தினேஷ்மாயா *

கடன்



மெழுகுவர்த்திக்கு  -

ஒளியை உன்னிடமிருந்து

கடன் கொடுக்கிறாயோ ?

* தினேஷ்மாயா *

அழகே பெண்ணாய் !!



அழகான பெண்ணை பார்த்திருக்கிறேன்..

அழகே பெண்ணாய் இப்போதுதான் பார்க்கிறேன் !!

* தினேஷ்மாயா *

என்ன வேலை ?



படித்த படிப்புக்கு வேலை பார்க்கலாமா ?

இருக்கும் அறிவுக்கு வேலை பார்க்கலாமா ?

மனதுக்கு பிடித்த விஷயத்தில் வேலை பார்க்கலாமா ?

பொதுமக்களுக்காக வேலை பார்க்கலாமா ?

ஒரே குழப்பம் !!

* தினேஷ்மாயா *

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?

Tuesday, September 16, 2014



அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?

அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?

சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊர் பறவை எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை அழைத்தேன் உன் ஆகிம்ஸை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா?
குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா

அழகே சுகமா? அன்பே சுகமா?
உன் கோபங்கள் சுகமா? உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
கன்னம் ரெண்டு சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா என் ஒற்றை தலையணை சுகமா?

படம்: பார்த்தாலே பரவசம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

சமீபத்தில்தான் இந்த பாடலை கேட்டேன். இன்னமும் இந்த படத்தை நான் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கனும். இப்பாடல் கேட்ட முதல்முறையே என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. இசையும், வரிகளும் இதற்கு காரணம் என்றும் கூட சொல்லலாம். இசையைவிட வரிகள்தான் என்னை அதிகம் கவர்ந்தது. அதுவும் கடைசியில் இருக்கும் வரிகளில் வைரமுத்து அதிகம் விளையாடியிருக்கிறார் !!


* தினேஷ்மாயா *

நல்லவன்




நல்லவன் சாபம் கொடுத்தால் நடக்கும்..

ஆனால், நல்லவன் சாபம் கொடுக்க மாட்டான்..

கெட்டவன் நல்லது சொன்னால் நடக்காது..

ஏனென்றால் அவன் மனதில் நல்ல என்னமே தோன்றாது..

அப்படியிருக்க அவன் கொடுக்கும் சாபம் மட்டும் எப்படி நடக்கும் ?

* தினேஷ்மாயா *

பால திரிபுர சுந்தரி



கடந்த சனிக்கிழமை நெமிலியில் அருள்பாலிக்கும் பால திரிபுரசுந்தரியை காண சென்றோம். சென்னையில் இருந்து வண்டியிலேயே சென்றுவிட்டோம். ஒரு மாதத்திற்கு முன்பே இங்கு செல்லவேண்டும் என்று மனதில் திட்டம் போட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு சீக்கிரம் தூங்க வேண்டும், சனிக்கிழமை விரைவாக எழுந்து அங்கே சென்று பாலாவை காணவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், வெள்ளிக்கிழமை எனக்கு எதிர்பாராவிதமாக அதிக காய்ச்சல். என்னடா இது சோதனை, நாளை பாலாவை சென்று காண முடியாதா என்று மிகவும் வருந்தினேன். எப்போதும் மாத்திரை எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் நாளை நிச்சயம் நெமிலி சென்றாக வேண்டும் என்பதால் மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கிவந்து மாத்திரை எடுத்துக்கொண்டேன். காலையில் காய்ச்சல் குறைந்திருந்தது ஆனால் எனக்கு உடலில் குளிர் கொஞ்சம் தெரிந்தது. அதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்று அதிகாலை முதலே மழை தூரிக்கொண்டிருந்தது. இதென்ன புது சோதனை என்று சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். பின்னர் கடவுளை மனதில் பிரார்த்தனை செய்துவிட்டு வண்டியை கிளப்பினேன். என்ன நடந்தாலும் சரி, பாலாவை சந்தித்தே ஆகவேண்டும் கிளம்பினேன். 

  ஒருவழியாக பால பீடம் வந்து சேர்ந்தோம். உள்ளே சென்றதும் மனதில் அப்படியொரு மகிழ்ச்சி. அப்படியொரு நிம்மதி. நான் வண்டியில் செல்லும்போதே நினைத்தேன். அடடா பூ வாங்க மறந்துவிட்டோமே என்று. Dairy Milk மிட்டாயாச்சும் வாங்கி சென்றிருக்கலாமோ ? என்றும் என் மனதில் உதித்தது. ஒரு அம்மா ஸ்தானத்தில் பார்க்கும் தெய்வத்துக்குத்தானே பூ வாங்கி செல்லவேண்டும். குழந்தையான பாலாவிற்கு மிட்டாய் வாங்கி செல்லலாமே என்று நினைத்தேன். ஆனால் வாங்கமுடியவில்லை. இருப்பினும் மனதிற்கு ஒரு பெரிய ஆறுதல் காத்திருந்தது. பீடத்தினுள் சென்றதும், அங்கே இருந்தவர் கேட்டார், எதாச்சும் வாங்கி வந்திருக்கீங்களா என்றார். இல்லை சாமி, இருங்க போய் மாலை வாங்கி வருகிறேன் என்று சொன்னதற்கு, அதெல்லாம் வேண்டாம், இங்கே மிட்டாய் (சாக்லேட் பாக்கெட்) இருக்கு அதையே வாங்கி கொடுங்கள் போதும். அதுதான் பாலாவிற்கு பிடிக்கும் என்றார். அப்போதுதான் என் மனதிற்கு பெரிய ஆறுதலாய் இருந்தது. பாலாவிற்காக நான் என்ன வாங்க வேண்டுமென்று நினைத்தேனோ அதுவே அவளுக்காக வாங்க முடிந்தது.

அப்புறம் நீங்கள் மேலே பார்ப்பது பல ஓவியர்கள் வரைந்த பாலாவின் உருவங்களில் ஒன்றே ! ஆனால் அங்கே சென்று பார்த்தால் பாலாவில் விக்ரகம் கட்டைவிரல் அளவிலேயே இருக்கிறது. பாலா உருவான கதையை அங்கே இருப்பவர் சொன்னார். பாலா விரும்பினால் மட்டுமே இங்கே வரமுடியும். நீங்கள் பாலாவை பார்க்க வரவில்லை, அவள்தான் உங்களை பார்க்கவேண்டுமென்று நினைத்து வரவைத்திருக்கிறாள் என்றார். இங்கே எப்படிவேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் நிம்மதியுடனே செல்வீர்கள் என்றார். 100 பேர் வர நினைத்தால் 10 பேருக்கு மட்டுமே இங்கு வர வாய்ப்பு கிடைக்கும் என்றார். அதுவும் பாலாவின் விருப்பம் இருந்தால் மட்டுமே. இங்கே வந்து உங்கள் குறைகளை சொல்லுங்கள் தவறில்லை, ஆனால், இது செய்தால் உனக்கு அது செய்கிறேன், இது செய்கிறேன் என்றெல்லாம் வியாபாரம் செய்ய வேண்டாம். பாலா ஒரு குழந்தை. அவள் நீங்கள் கேட்கும் முன்பே கொடுக்கும் குணம் கொண்டவள். மனதார அவளை நம்புங்கள். அவள் உங்கள் உள்ளேதான் இருக்கிறாள். அவள் எப்போதும் உங்களுடனே இருக்கிறாள். 

ஒருமுறை அங்கே சென்று வாருங்கள். பாலா விரும்பினால் நிச்சயம் அவள் உங்களை காண அழைப்பாள். பாலாவின் அடுத்த அழைப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

* தினேஷ்மாயா *


துணை


    இறைவன் என்றும் எனக்கு துணையிருக்கிறான் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் என் வாழ்வில் நடந்தேறிக்கொண்டே இருக்கும். பார்க்க அனைத்தும் சிறிய விஷயங்களாக தோன்றினாலும் அதில் இறைவன் இருப்பதை என்னால் உணர முடிகிறது.


  இன்று உடல்நலமில்லாத காரணத்தால் அலுவலகத்திற்கு கொஞ்சம் தாமதமாகவே கிளம்ப நேர்ந்தது. அவரசம் ஏதுமில்லை என்றாலும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வதில் எனக்கு விருப்பமில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்புகிறேன். வழியில் வண்டிக்கான திரவமில்லாமல் வண்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. என்னடா இது என்று மனதில் நினைத்துக்கொண்டே வண்டி எவ்வளவு தூரம்வரை செல்லுமோ அதுவரை வண்டியை செலுத்துவோம் என்று நானும் வண்டியை ஓட்டுகிறேன். தன்னால் முடிந்தவரை என்னை இழுத்துக்கொண்டு வந்து தன் மூச்சை நிறுத்தியது வண்டி. வண்டி நின்ற இடம், வண்டிக்கான திரவம் நிறுப்பும் இடம் !

     மனதில், “நன்றி இறைவா” என்று சொல்லிவிட்டு வண்டிக்கு திரவம் நிரப்பிவிட்டு குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தேன். மனதில் இறைவனை உண்மையாக நேசித்தால் போதும். அதுவே பக்திதான். அவனை மந்திரங்கள் சொல்லித்தான் மகிழ்விக்க வேண்டியதில்லை. மனதில் மற்றவர்க்கு தீங்கு நினைக்காமல், இயன்றவரை பிறர்க்கு உதவி செய்து வாழ்ந்துவந்தாலே போதும். நம் ஒவ்வொரு செயலிலும் இறைவன் நம்முடன் துணை வருவார்..

* தினேஷ்மாயா *