அன்பு

Friday, December 09, 2022

 

அன்பு ஒன்றே..

அது தங்கையிடம்

அன்னையிடம்

காதலியிடம்

தோழியிடம்

மனைவியிடம்

மகளிடம்

வெளிப்படுத்தும் விதம் மட்டுமே

மாறுகிறது...


வெளிப்படுத்தும் தன்மைக்கேற்ப

அன்பின் ஆழமும் மாறுபடுகிறது..


* தினேஷ்மாயா *

மனமே!!

 மனம் !!

அற்பானமதும்

அற்புதமானதும் 

இரண்டின் கலவையே !!

* தினேஷ்மாயா *

பாவம் !!

 அதிக அன்பின் வெளிப்பாடால் செய்யும் செயல்கள் சில சமயம் குற்றம் என்பதையும்தாண்டி பாவமாய் முடிந்திட வாய்ப்புள்ளதா என்ன !?


* தினேஷ்மாயா *

திருநாள் இந்த ஒருநாள்

Sunday, December 04, 2022

 



தாய்மை வாழ்க்கென தூய செந்தமிழ்

ஆரிராரோ ஆராரோ

தங்க கை வலை வைர கை வலை

ஆரிராரோ ஆராரோ


இந்த நாளிலே வந்த ஞாபகம்

எந்த நாளும் மாறாதோ

கண்கள் பேசிடும் மௌன பாசையில்

என்னவென்று கூறாதோ


தாய்மை வாழ்க்கென தூய செந்தமிழ்

பாடல் பாட மாட்டாயோ


திருநாள் இந்த ஒரு நாள்

இதில் பலநாள் கண்ட சுகமே

தினமும் ஒரு கனமும்

இதை மறவா எந்தன் மனமே


விழி பேசிடும் மொழி தான்

இந்த உலகின் பொது மொழியே

பல ஆயிரம் கதை பேசிட

உதவும் விழி வழியே


படம்: தெறி

இசை: GV பிரகாஷ்

குரல்: பாம்பே ஜெயஸ்ரீ

வரிகள்: புலமைப்பித்தன்.


இந்த பாடலை இன்றுதான்  முதலில் கேட்டேன். படம் பார்த்தபோதுகூட இந்த பாடல் மனதில் இடம் பிடிக்கவில்லை. 

என்னவோ தெரியவில்லை, இந்த பாடலை முதலில் கேட்டதுமே கண்கள் நீரை சொரிந்தது.. ஆனந்தக்கண்ணீர் !!!

திருநாள் இந்த ஒருநாள் - இப்போது இந்த வரிகள்தான் என்னுடைய Mobile Ringtone...  

இந்த வரிகள் அனைத்து உறவுக்கும், அனைத்து தருணத்திற்கும் பொருத்தமாய் இருப்பதாக நான் உணர்கிறேன்..

* தினேஷ்மாயா *

உன் பிறந்தநாள்

Friday, November 04, 2022



உன் பிறந்தநாள்..

உன்னை வாழ்த்தி கவிதை எழுதுவதா ?

நீ பிறந்த நாளை வாழ்த்தி கவிதை எழுதுவதா ?

அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கிறேன்..

உன் பிறந்தநாளை ( எனக்கு மட்டும் )

தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று..

ஐ.நா. உன் பிறந்தநாளை,

உலக தேவதைகள் தினமாக அறிவித்துவிட்டது..

இன்று மட்டும்

சூரியனுக்கு விடுமுறை..

நிலவு கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது..

இன்று இறைவனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்வதில்லை

இன்று பூக்கும் பூக்கள் அனைத்தும் உனக்கே சமர்ப்பணம்..

காதலர் தினம் இருக்கிறது..

காதலுக்கான தினமாக உன் பிறந்தநாளை அறிவிக்கிறேன்..

(2015-ல் எழுதி பதிவு செய்யாத கவிதையை பதிவிடுகிறேன் !)

* தினேஷ்மாயா *

Crazy Partners

Thursday, October 27, 2022


 

* DhineshMaya*

Yes !!! She Is !!!!!



😍😍

I got a message which says "The Universe if finally on your side..."

And my Heart says... "YES !!! SHE IS !!!"

* DhineshMaya

Asylum

Saturday, October 22, 2022

 


Art is my Asylum 

- DhineshMaya

கற்பி !!

Sunday, October 16, 2022




கற்ற கல்வியை பிறரோடு பகிர்ந்தபோது.. 


வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டதாய் உணர்கிறேன்.


* தினேஷ்மாயா *

நான் யார் ?

Wednesday, September 14, 2022



 ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் பாடியுள்ளார். அவரின் வரிகளுக்கேற்ப, நான் வளர வளர என் அறிவும் வளர்வதை நான் உணர்கிறேன். படிப்பறிவும், பட்டறிவும் என்னை வளர்ப்பதை உணர்கிறேன்.

    என் சிந்தனைகள் நன்னெறிப்படுவதையும், செயலும் அவ்வாறாக பயணப்படுவதையும் உணர்கிறேன். கோபம் குறைந்திருக்கிறது. பொதுவாகவே எனக்கு கோபம் வராது. எப்போதாவது வரும் கோபமும் குறைந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் உற்று கவனித்து அனுபவித்து நானும் நகர்கிறேன். பொதுவாகவே பொறுமைசாலியான நான், இப்போது மிகவும் பொறுமையை கடைப்பிடிக்கிறேன். அவசர அவசரமாக செயல்படாமல், நின்று நிதானமாய் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்வதாய் உணர்கிறேன்.

என் சிந்தனைகள் புதுமையான பாதையில் என்னை அழைத்து செல்வதையும், அங்கே நான் பல கேள்விகளை எழுப்பி, நானே என்னையும், நான் கண்டது கேட்டது என அனைத்தையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி அதற்கான விடையையும் காண்கிறேன்.

என் சிந்தனையின் வாழ்க்கைப் பயணத்தை இங்கே கொஞ்சம் அசைப்போட விரும்புகிறேன். 

நானும் சிறுவயது முதலே இறை நம்பிக்கை கொண்ட மனிதனாகவே இருந்தேன். 2020-ம் ஆண்டுவரையிலும்கூட ஒரு பக்திமானாக இருந்தவன். முருகன் பிடிக்கும். அண்ணாமலையாரை என் அப்பனாகவே பாவித்து வந்தவன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலை கிரிவலம் சென்றவன். என் வலைப்பக்கத்தில் இருக்கும் முந்தைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் என் பக்தியின் ஆழம். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சார்லஸ் டார்வின் சொல்வது போல Evolution எனக்குள் துவங்கியது. Buddha, Confucius, Aristotle, Socrates, Plato, Periyar, Ambedkar, Karl Marx, Voltaire, Rousseau, Machiavelli, Friedrich Nietzsche, Richard Dawkins, Charles Darwin, Sigmund Freud, Arignar Anna இப்படி எண்ணற்ற சிந்தனையாளர்களின் தத்துவங்களை படிக்கவும் கேட்கவும் வாய்ப்பு அமைந்தது (Lockdown சமயத்தில்)

இவர்களின் படைப்புகள் அனைத்தையும் நான் படிக்கவில்லையென்றாலும், அவர்களின் சித்தாந்தங்களை முழுவதும் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நிறைய படிக்க முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் மாறத்துவங்கினேன். என் நம்பிக்கைகளை நானே கேள்வி கேட்கத் துவங்கினேன். முதலில் அடிப்பட்டது என் இறை நம்பிக்கை. இதுநாள் வரை - சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இறைவனைத் தேடி பல பாதைகளில் பயணப்பட்டிருக்கிறேன். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், சித்தர் வழிபாடு மார்க்கம், இப்படி பல பாதகள். அனைத்திலும் தேடிக்கிடைக்காத இறைவன், நான் என்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தியபோது கிடைத்துவிட்டான். ஆம். இறைவன் என்னுள் இருக்கிறான் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. என் இறை பயணத்தில் கிடைத்த அனுபவமும், மேற்கூறிய சிந்தனையாளர்களின் சீறிய சிந்தனைகளும் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.

கடவுள் என்ற ஒருவர் இல்லை என்கிற உண்மைதான் அது. ஒருவர் தன் நம்பிக்கைக்கு உருவம் கொடுத்தோ/கொடுக்காமலோ ஒரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். அதுவே கடவுள்.

என் நண்பர்கள் / குடும்பத்தார் மத்தியில் நான் தீவிர ஆன்மீகவாதியாக அறியப்பட்டவன். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளாக நாத்திகனாக மாறியதாக அவர்கள் உணர்கிறார்கள். ஒருமுறை என் நண்பன் கேட்டான்.

மச்சி.. உனக்கு இப்போ கடவுள் நம்பிக்கை இருக்கா ? என்று.

நான் சொன்னேன். கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான் என்று. நான் சொன்னது அவனுக்கு புரிந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்காச்சும் புரிகிறதா !!

இயற்கை எனக்குக் கொடுத்த பாலினம் - ஆண் என்கிற அடையாளம். எனக்கு சூட்டப்பட்ட பெயர் பிறர் என்னை அடையாளம் கண்டுக்கொள்ள. அதைத்தவிர, என் மீது திணிக்கப்பட்ட சாதி, மதம், இனம் இவ்வாறான அடையாளங்களால் நான் அறியப்பட விரும்பவில்லை. அது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா ?

இங்கே பிறக்கும் அனைத்து மனித குழந்தைகளும் நாத்திகராகவே பிறக்கின்றன. சாதி மதம் இனம் இப்படி எதுவும் அறியாத குழந்தைகள். அவற்றிற்கு சாதியை திணித்து, மதத்தை புகுத்தி அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் நாமே ஒரு கோடு போட்டு அதில் நடக்க சொல்கிறோம். நாமும் சுயமாக சிந்திப்பதில்லை, நம் குழந்தைகளையும் சுயமாக சிந்திக்க விடுவதில்லை.

ஆயிரம் கிலோ எடைக்கொண்ட ஒரு கல்லை எந்த  மனிதனாலும் தூக்க முடியாது. இது நம் அறிவுக்கு நன்கு தெரியும். ஆயினும், அனுமன் ஒரு மலையையே தன் கையால் தூக்கிக்கொண்டு பறந்தான் எனவும், கண்ணன் தன் சுண்டுவிரலால் ஒரு மலையையே தூக்கி நிறுத்தினான் என்பதையும் இங்கே மக்கள் நம்பவே செய்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்று எவரும் கேள்வி கேட்பதில்லை. தெய்வகுற்றம் ஆகிவிடும் என்று அச்சமோ !

அனைத்து மதங்களிலும் மூடநம்பிக்கை பரவிக்கிடக்கிறது. அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறதென்றால், இந்நேரம் உலகமே ஒரு சொர்க்க பூமியாக மாறியிருக்க வேண்டுமே ! ஏன் அப்படி இல்லை ?

இங்கே மதம், சாதி, இனம், மொழி என பல பிரிவினைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவை ஒரு வகைப்படுத்துதலுக்காக மட்டுமே பயன்பட்டாலும், இன்று அவற்றை மையமாக வைத்து உலகம் முழுவதும் பல அரசியல் நடக்கிறது. அதில் பெரும்பாலான மக்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். அவர்கள் சிக்கியிருப்பது ஒரு மாயவலை என்பதை அறியாவண்ணம் இருக்கின்றனர்.

அவற்றில் இருந்து வெளியே வாருங்கள். நாம் அனைவரும் மனிதர்கள். , நமக்கு கிடத்த அடையாளங்கள் அல்லது திணிக்கப்பட்ட அடையாளங்களை விட்டு வெளியேறுங்கள். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை மட்டுமே விதைப்போம். அன்பையே அறுவடை செய்வோம். அன்பை பரிமாறிக்கொள்வோம். 

அன்பு பேரன்பாக மாறும்போது நீங்கள் தேடும் அந்த இறைவன் உங்களிடம் வந்திருப்பான். நான் இறைவனை தேடியதில் எனக்கு கிடைத்தது இரண்டு.

1. இறைவன் இல்லை என்கிற உண்மை !!

2. இறைவனை அடைவதைவிடுத்து நானே இறைத்தன்மையை அடைந்தது !!

அன்பே சிவம் என்கிறார் திருமூலர் சித்தர்.

அன்பே உங்கள் பிரதான கொள்கையாக இருக்கும்போது, நீங்களே அந்த சிவனாக மாறிவிடுவீர்கள்.

நான் சொன்னது கொஞ்சமாச்சும் புரிந்ததா !?

புரிந்தால் மகிழ்ச்சி.

புரியவில்லையென்றாலும் மகிழ்ச்சி.

இதில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும் மகிழ்ச்சி.

ஆனால், நான் சொன்னதை புரிந்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் வாருங்கள். விவாதிப்போம். கலந்து பேசுவோம். என்னால் முடிந்தவரை என் அறிவையும் அனுபவத்தையும் உங்களுடன் பகிர்கிறேன். நான் இருக்கும் பேரின்ப நிலையை நீங்களும் அடைய உதவுகிறேன்.

- பேரன்புடன்

* தினேஷ்மாயா * 

ஆசிரியர் தினம்

Monday, September 05, 2022

 நான் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொரும் எதையாவது எனக்கு கற்றுகொடுத்துள்ளனர்.


நான் கற்றதில் சரிபாதி இயற்கையும், விலங்குகளும், பூச்சிகளும், மரங்களும், பூக்களும் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளன. 


என்னை நன்னெறிப்படுத்திய (மேற்கூறிய) அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள் 🖤❤️💙


* தினேஷ்மாயா *

26.08.2022

Thursday, August 25, 2022

 ஆழ்மனம் சொல்வது பல நேரங்களில் நடந்துவிடுமல்லவா. அப்படியான ஒரு உணர்வு எனக்கு இப்போது எழுகிறது.

26.08.2022

இன்றைய தினம் என் அலுவலகத்தில், துறை ரீதியான தேர்விற்கு தயாராகும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நான் வகுப்பு எடுக்கிறேன். நான் பல ஆண்டுகளாக எண்ணற்ற நபர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறேன். ஆனால் அது ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 முதல் 15 நபர்களுக்கு எடுத்திருப்பேன். அதிலும்  பெரும்பாலானவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் எந்தவித தயக்கமுமின்றி பாடம் நடத்தியிருக்கிறேன்.

ஆனால், இன்றோ நான் அறிந்திராத 100-க்கும் மேலான நபர்களுக்கு வகுப்பு எடுக்கப்போகிறேன். இந்த நாள் என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையுமென என் ஆழ்மனம் சொல்கிறது. 

சில மாதங்களாக, என் அலுவலக நண்பர்கள் சுமார் 15 பேருக்கு நான் வகுப்பு எடுத்து வருகிறேன். அதிலிருந்து ஒருவர் சொன்னார், Sir your teaching is so good and unique என்று. அது எனக்கு மிகவும் மன நிறைவாக இருந்தது. அது எனக்கு மேலும் உத்வேகத்தை தந்திருக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்து நான் எட்டாவது படிக்கும் காலத்திலிருந்தே என் நண்பர்களுக்கு கணக்குப் பாடம் எடுத்து வருகிறேன். 2002-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை எதோ வகையில் நான் பிறருக்கு  எதையாவது கற்பித்துக்கொண்டே இருந்திருக்கிறேன், இருக்கிறேன். இதுவரை இந்த 20 வருட பயணத்தில் குறைவான நபர்களுக்கு மட்டுமே கற்பித்து வந்துள்ளேன். அது இன்று முதல் மிகப்பெரிய பயணத்தை நான் மேற்கொள்ள ஒரு தருணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நான் உணர்கிறேன்.

பிறருக்கு கற்பிக்க வேண்டுமென்பதால் நானும் அதிகம் படிக்கிறேன். அது என் அறிவையும் மெருகேற்றுகிறது. கற்று மகிழ்ந்து கற்பித்தும் மகிழ்கிறேன்.

 * தினேஷ்மாயா *

வள்ளுவனும்

Monday, May 09, 2022

அதிகாரம் இருக்குமிடத்தில் அன்பு இருக்காது..

உண்மையே..

ஆனால் கணவன் மனைவி உறவு ஒரு விதிவிலக்கு..

அங்கே அன்பினால் வரும் அதிகாரமே அதிகம்.

வள்ளுவனும்கூட "அன்பை" அதிகாரமொன்றில் தானே வைத்திருக்கிறார் !!

* தினேஷ்மாயா *


ஏழாம் சுவை

தன்மானத்தின் சுவை அறிந்தவன்

ஒருபோதும் பட்டினியால் வாடுவதில்லை..

* தினேஷ்மாயா *

பெருந்தன்மை

Monday, January 24, 2022

இப்போதெல்லாம் பெருந்தன்மை என்கிற உயர்குணம் இங்கே மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுவதில்லை. நவநாகரிகம் என்கிற பெயரில் நம்மிடையே ஊடுருவிவிட்ட கலாச்சாரத்தின் பின்விளைவினாலேயே பெருந்தன்மை என்கிற உயர்குணம் கொஞ்சம் கொஞ்சமாக நம் சமூகத்திலிருந்து மறைந்து வருகிறது. 

இக்குணம், பெரும்பாலும் வயது மற்றும்/அல்லது அறிவு (அ) அனுபவம் முதிர்ச்சியால் ஒருவருக்குள் இருக்கும். ஆனால் வயது/அறிவு/அனுபவத்தில் முதிர்ந்த அனைவருக்கும் பெருந்தன்மை இருப்பதில்லை என்பது வேறு கதை. பொதுவாக, இவற்றில் முதிர்ச்சி அடைந்த மக்கள் பெருந்தன்மை குணத்தோடு விளங்குவர்.

இந்த உலக வாழ்க்கையையே வெறுமனே போட்டிகள் மற்றும் நிறைந்த ஒன்றாக, வெற்றி/தோல்வி என்கிற இலக்கை மட்டுமே வைத்து ஓடக்கூடிய ஒன்றாக இச்சமூகம் மாற்றிவிட்டது. இச்சூழலில், இந்த உலகில் பெருந்தன்மையாக வாழ்வதென்பது முட்டாள்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று என்று வாதிடும் மக்களையும் நான் கடந்து வந்திருக்கிறேன்.

அவர்களின் கூற்றுக்களை ஏற்கவியலாது. நாம் இங்கே வந்திருப்பது வாழ்வதற்காக. அந்த வாழ்க்கையில் நீங்களும் கொஞ்சம் பெருந்தன்மையோடு வாழ்ந்துப் பாருங்களேன். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டானதாய் உணர்வீர், நீங்களும் மனநிம்மதியை உணர்வீர்.

இங்கே ஒரு முதுமொழியை குறிப்பிட விளைகிறேன்.

“ விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.”

*தினேஷ்மாயா*

RGB

Thursday, January 20, 2022

 Rules the Break !

- DM

Do Anything

 Do anything -

That doesn't hurt others

And also

Makes you Happy  !!

Your choice

Yes..

It's true. 

Pain is obvious

But 

Suffering is optional. 

-DM

Perfect

 If you think youre perfect...

WTF !!

Well... That's  Fine !!


If you think only you're perfect and no one else is..

WTF

What The F !!

* DM*

My favourite drug

 Loneliness is my favourite Drug

* DhineshMaya *