வரம்

Tuesday, June 30, 2015



நீ என்னருகே இருக்கையில்

தூங்கா வரம் வேண்டுமடி எனக்கு !

* தினேஷ்மாயா *

சிலிர்ப்பு


உடம்பெல்லாம் சிலிர்க்கும்..

உன்னை தீண்டிய காற்று

என்னையும் தீண்டும்பொழுது..

* தினேஷ்மாயா *

கவி பயணம்


வாழையடி வாழையாக

இக்கவி பயணம்

இக்கவியின் பயணம் தொடரும்..

* தினேஷ்மாயா *

போர்


போர் ..

அமைதியை நிலைநாட்ட

அரிவாளை எடுப்பானேன் !

* தினேஷ்மாயா *

பூவே !


பூவே..

பூவை பறிக்காதே..

என் மனதை பறித்தாயே அது போதாதா ?

* தினேஷ்மாயா *

புன்னகை பூவே


வேறொன்றுமில்லை..

பூக்களுக்கு புன்னகைக்க கற்றுகொடுக்கிறாள் !!

* தினேஷ்மாயா *

சோலைவனம்


என் மனதில் வந்து கூடுகட்டி வசிக்கிறாய்..

பாலைவனமான என் மனதை

சோலைவனம் ஆக்கிவிட்டாய்...

* தினேஷ்மாயா *

கெஞ்சல்


யாரிடமும் கெஞ்சியதில்லை நான்..

ஆனால்,

தினமும் வேலைக்கு செல்லும் முன்

உன் முத்ததிற்காக கொஞ்சலாய் உன்னிடம் கெஞ்சுவது

எனக்கு பிடிக்குமடி..

* தினேஷ்மாயா *

உனக்கு என்ன பிடிக்கும் ?



திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது..

     திருமணத்திற்கு முன் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் என்ன நிறத்தில் உடை எடுக்கலாம் என்று என்னிடம் கேட்டாய். உன் விருப்பம் என்றேன்.

        தேனிலவிற்கு எங்கே செல்லலாம் என்றாய், உன் விருப்பம் என்றேன்.

     தனிக்குடித்தனம் வேண்டாம், அத்தை மாமாவுடனே சேர்ந்து வாழ்வோம் என்றாய், உன் விருப்பம் என்றேன்.

   நம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றாய், உன் விருப்பம் என்றேன்.

   குழந்தையை எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்றாய், உன் விருப்பம் என்றேன்.

       இப்படி எல்லாம் உன் விருப்பம் என்றேன். திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது, இப்போது என்னை கேட்கிறாய். எல்லாம் என் விருப்பம் என்கிறாயே? உனக்கு என்ன பிடிக்கும் ? என்று.

      எனக்கு உன்னை பிடிக்கும்.. உன்னை மட்டுமே பிடிக்கும்.. !! - என்றேன்...

* தினேஷ்மாயா *

மனிதன் இறைவனை அழிக்கிறான் !

Friday, June 26, 2015


எல்லோரும் சொன்னார்கள்.

இறைவன், படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களை செய்கிறான் என்று.

நான் நம்பவில்லை..

மனிதன்தான் இறைவனை படைத்தான், இறைவனை காக்கிறான், அவன்தான் இறைவனை அழிக்கவும் செய்கிறான் !!

சற்று சிந்தித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும்..

* தினேஷ்மாயா *

வாழ்வாதாரம்


         இறக்கும் கடைசி நொடிவரை தன் வாழ்வாதாரத்தை கெட்டியாக பிடித்து வைத்துக்கொள்ளும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். இயற்கையின் மீது நம்பிக்கை இல்லை அவனுக்கு. மற்ற உயிர்களெல்லாம் இயற்கையையே தங்கள் வாழ்வாதாரமாய் கருதுகிறது. ஆனால் மனிதனுக்கோ அவன் உருவாக்கியதாக நினைத்துக்கொண்டிருக்கும் சில விஷயங்கள் மட்டுமே வாழ்வாதாரம் என்கிற நினைப்பு !!

* தினேஷ்மாயா *

முதலாளித்துவம்


முதலாளித்துவத்தின் நிர்வாணம் கொடூரமானது.. 

அதை தோலுரித்து பார்த்தால்தான் அதன் உண்மை புரியும்.. 

* தினேஷ்மாயா *

அன்பெனும் மதம்


அன்பிற்கு மதம் இல்லை..

அன்பே ஒரு மதம் தான்..

அனைவரும் பின்பற்றவேண்டிய மதம்..

* தினேஷ்மாயா *

சாதனை ?


இரண்டு உலக யுத்தங்கள் சாதித்தது என்ன ??

* தினேஷ்மாயா *

மனிதா !!


மனிதா !!

இரண்டு கால்களால் நடப்பதால் மட்டும் நீ மனிதனாகிவிட முடியாது..

* தினேஷ்மாயா *

இதயத்தின் ஈரம்



ஒவ்வோர் இதயத்தின் ஓரத்திலும்

கொஞ்சம் ஈரம் இருக்கத்தான் செய்கிறது !!

அந்த ஈரம் எப்போதாவதுதான் வெளிப்படும்

அதையும் யாரோ ஒருசிலர் மட்டும்தான் உணரவும் முடியும்..

* தினேஷ்மாயா *

ஆச்சரியம்



நான் அன்று ஆச்சரியமாக பார்த்தவை அனைத்தையும்

இன்று என்னால் எளிதாக அனுபவிக்க முடிகிறது..

ஆனால்,  அன்று எனக்கு சாதாரணமாக இருந்தவை எல்லாம்

இன்று நான் ஆச்சரியப்படும்படி எட்டா தூரத்தில் இருக்கிறது.

இயற்கையின் முரண் !!

* தினேஷ்மாயா *

ஆசை



என்ன பேசுவதென்று தெரியவில்லை..

எப்படி ஆரம்பிப்பதென்றும் தெரியவில்லை.

ஆனால் உன்னுடன் பேச ஆசை..

* தினேஷ்மாயா *

அமைதி


வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பலவற்றை மௌனத்தாலும் புன்னகையாலும் வெளிப்படுத்தலாம்..

நீ கேட்டாய்..

நீ என் வாழ்வில் வந்ததை நான் எப்படிஉணர்கிறேன் என்று கேட்டாய்..

நான் புன்னகைத்தேன் !

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

தந்தைக்குப்பின் நான்

Thursday, June 25, 2015


தாய்க்குப்பின் தாரம் என்பார்கள்..

அது உண்மையா என தெரியாதெனக்கு..

ஆனால்,

உன் தந்தைக்குப்பிறகு உனக்கு நான் -

எல்லாவற்றிலும் உனக்கு துணையாய்..

* தினேஷ்மாயா *

தூது


தூது செல்ல யாருமில்லா காரணத்தால்

என் இதயத்தை தூது அனுப்புகிறேன்..

சேதி கேட்டுவிட்டு திருப்பி அனுப்பு

உன் இதயத்தை !!

* தினேஷ்மாயா *

உங்கள் வாழ்க்கை


பிறருக்காக வாழலாம்

ஆனால், பிறருக்காக மட்டுமே வாழாதீர்கள்..

உங்கள் வாழ்க்கையை வாழாமலே போய்விடுவீர்கள்..

* தினேஷ்மாயா *

நல்ல நண்பன் !!


நல்ல நண்பன் !!

* தினேஷ்மாயா *

மாயை


மிகப்பெரிய மாயை எது தெரியுமா ?

இன்றைவிட நாளை அதிக நேரம் இருக்கு என்று நம்பி

இன்றைய வேலையை நாளைக்கு ஒத்திவைப்பதுதான்...

* தினேஷ்மாயா *

அழகான நாள்


அழகான வாழ்க்கையை விரும்பி தினமும் ஓடுகிறோம்.

தினம் தினம் அழகான நாள்தான் என்பதை ஏனோ மறக்கின்றோம்..

* தினேஷ்மாயா *

சிந்தனை



அதிகம் சிந்திப்பதும்

குறைவாக செயல்படுத்துவதும்தான்

நம் தோல்விகளுக்கு காரணம்.

* தினேஷ்மாயா *

நீ - நான்

Tuesday, June 23, 2015




எட்டி பார்த்தது நீ ..

கீழே விழுந்தது நான் !!

* தினேஷ்மாயா *

போ போ வாழ்வே காக்கா முட்டைதான்



போ போ வாழ்வே
காக்கா முட்டைதான்
கூட்டை விட்டா
ஓட்ட சட்டைதான்
மழை வெயில் ரெண்டும் எங்கள்
அண்ணன் தம்பிதான்
நட்சத்திரம் வருவது
நம்மை நம்பிதான்
இங்கு வழியாவும் நேரில்லை
சந்துல பொந்துல போ போ போ போ
போடா போ போடா
புது இன்பம் தேடி போ
கண் பார்க்கும் யாவும்
உன் சொந்தம் என்றெண்ணி போ போ இன்னும் மேலே போ...
திரனா...

தூரல் வந்தால் இங்கே
கோனி குடையாகுமே
ஒரு வாட்டர்பாட்டிலை விளக்காய் மாற்றி
இருட்டை ஓட்டிடுவோம்
அட கட்டாந்தரையில் கைகளை நீட்டி
படுத்ததும் தூங்கிடுவோம்
சண்டைகள் அடிதடி இங்கும் உண்டு நாள்தோறுமே
சட்டென அன்பாய் அணைத்திட ஓடும் நம் நெஞ்சமே
கதவுகள் உண்டு முகவரி இல்லை நம் வீதியிலே
அட யார் வீடும் நம் வீடென்றெண்ணி வாழுகிறோம்
போடா போ போடா
புது இன்பம் தேடி போ
கண் பார்க்கும் யாவும்
உன் சொந்தம் என்றெண்ணி போ போ இன்னும் மேலே போ...
திரனா...

டௌசர் தாப்பால்பெட்டி
தோஸ்து ஆட்டுக்குட்டி
தினம் அஞ்சு ரூபாய் கிடைச்சா போதும்
ஹீரோ நாங்களடா
அட அஞ்சாங்கிளாசை தாண்டல ஆனா
அனுபவம் அதிகமடா
கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா
கூவம் எங்களை தாய்மடியாக தாலாட்டுமடா
ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடுமடா
அட ரேஷன் கார்டு அதில் எங்கள் நாய் பேர் சேர்த்திடுவோம்
போடா போ போடா
புது இன்பம் தேடி போ
கண் பார்க்கும் யாவும்
உன் சொந்தம் என்றெண்ணி போ போ இன்னும் மேலே போ...
திரனா...

படம் : காக்கா முட்டை
குரல் : சத்ய ப்ரகாஷ்
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்

* தினேஷ்மாயா *

பிச்சை


எவ்வளவு பெரிய பணக்காரனும்

இயற்கை போடும் பிச்சையில்தான்

இவ்வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்..

* தினேஷ்மாயா *

அந்த வெற்றிடம்


   நேற்றிரவு பாதி தூக்கத்தில் இருக்கிறேன். தூக்கம் வரவில்லை, படுத்துக்கொண்டு தூங்க முயற்சிக்கிறேன். அப்போது, ஒரு சிறு கனவு. தூக்கத்தில் வந்த கனவு இல்லை, விழிப்பின்போது வந்த கனவும் இல்லை. அந்த இரண்டுக்கும் இடையேயான ஓர் நிலையில் எனக்கு வந்த கனவு அது.

         கடவுள்.. ஓர் சக்தி என்னிடம் எதையோ காண்பிக்கிறது. அந்த சக்தி கைகாட்டிய இடத்தை நான் உற்று நோக்குகிறேன். அது ஒரு வெற்றிடம். அதுதான் எல்லாவற்றின் முடிவு. அதனருகில் சென்று பார்க்கிறேன். இந்த உலகத்தின் அனைத்தும் என்னிடமிருந்து என்னைவிட்டு விலகி செல்கிறது, அல்லது நான் அவையனைத்தையும் விட்டு விலகி செல்கிறேன் என்கிற ஓர் உணர்வு. நான் ஒரு புது பயணத்துக்கு ஆயத்தமாகிறேன். அந்த வெற்றிடம் என்னை ஓர் புதிய பயணத்துக்கு தயாராக சொல்கிறது போன்ற ஓர் உணர்வு. அந்த பயணம் எப்படி இருக்கும், அது எவ்வளவு தூரம், எப்படி பயணிக்கப்போகிறேன் என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால் நான் மட்டும் தனியே பயணிக்கப்போகிறேன் என்று மட்டும் எனக்கு புரிந்தது. அந்த வெற்றிடத்தையே உற்று நோக்கினேன். என் மனம் கேட்டது, இதுதான் மரணம் என்பதோ ?

             பாதி தூக்கத்தில் மரணத்தை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன் என்கிற சந்தோஷம் எனக்கு. அந்த பாதி தூக்கத்தை வலுகட்டாயமாக விட்டுவிட்டு உடனே எழுந்து என் கைப்பேசியை எடுத்து இந்த கனவு அனுபவத்தை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டேன், இங்கே பதிவு செய்ய.

              ஆனாலும் எனக்கொரு பெருமை.. அது மரணம் என்று தெரிந்தும் நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அது கனவு என்று தெரிந்ததாலோ என்னவோ, இருப்பினும் அந்த வெற்றிடத்தினுள் பயணிக்க என் மனதை பக்குவப்படுத்திக்கொண்டேன். 

* தினேஷ்மாயா *

நிறம்

Monday, June 22, 2015


நிறம் மாறா மனிதர்கள் !

தங்கள் சுயநலத்திற்காக இங்கே தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் மனிதர்களைத்தான் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், எல்லா நேரங்களிலும் தங்கள் நிறத்தை மாற்றாமல் ஒரேமாதிரி இருக்கும் உயரிய குணம் கொண்ட மக்கள் இங்கு வெகு குறைவே..

* தினேஷ்மாயா *

இசை தெய்வம்

Friday, June 19, 2015


இதுவரை ஏன் என்னிடம் சொல்லவில்லை,

நீதான் இசை தெய்வம் என்று !

* தினேஷ்மாயா *

பிடித்ததை செய்



     உனக்கு பிடித்த வேலையை செய். உன் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் வேலையை செய். அதற்கு யாருடைய அனுமதியும் உனக்கு தேவையில்லை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற கவலையும் வேண்டாம். உன் மனதிற்கு பிடித்ததை செய். 

* தினேஷ்மாயா *

பொல்லாத உலகம்


அமைதியை நிலைநாட்ட

ஆயுதம் எடுக்கும்

பொல்லாத உலகமடா இது !

* தினேஷ்மாயா *

அகதி



     எத்தனையோ பதிவுகள் அகதிகளைப்பற்றி எழுதினாலும் அகதிகள் பற்றிய பதிவு என் மனதை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நானும் இந்த உலகத்திற்கு எங்கிருந்தோ வந்த அகதி என்பதாலோ ?

  சில தினங்களுக்கு முன்னர், மியான்மர் நாட்டில் ரோஹிங்யா இன மக்களுக்கு வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் இல்லாததால் அவர்கள் அகதிகளாய் இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாய் செல்வதாக ஒரு செய்திப்படித்தேன். 

    இதில் வருத்தம் என்னவென்றால், அகதிகளாக வரும் மக்களை எந்த நாடும் ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், அகதிகளாக வெளியேறியவர்களுக்கு மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல மனமில்லாமல் வழியிலேயே பலர் தங்கள் முடிவை தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.
உலகம் எவ்வளவோ வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது, ஆனால் சக மனிதனின் கஷ்டங்களை கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாமல் அப்படி இவ்வளவு வேகமாய் எங்கே செல்கிறது இந்த பொல்லாத உலகம் என்று எனக்கு விளங்கவில்லை. 

* தினேஷ்மாயா *

வீட்டுப்பாடம்



      இன்றைய இந்தியாவின் கல்விமுறை எப்படி இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்துவைத்த கல்விமுறையையே நாம் இன்னமும் பின்பற்றி வருகிறோம், அதுவே நம் அனைவருக்கும் ஏற்ற கல்விமுறை என கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

          சில தினங்களுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் அந்தமான் தீவு சுற்றுலா சென்று வந்தார். சுற்றுலா மிகவும் அருமையாக இருந்தது என்றார். சுற்றுலா முடிந்து வந்ததும் அலுவலகத்தில் தன் குழந்தைக்கு வீட்டுப்பாடம் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள், அதற்கு இணையத்தில் இருந்து சில குறிப்புகளை எடுத்துத்தர முடியுமா என்று என்னிடம் கேட்டார்.

       நான் அவரிடம் கேட்டேன், முழு ஆண்டு விடுமுறையில் என்ன வீட்டுப்பாடம் ? என்று கேட்டேன். அவர் குழந்தை படிக்கும் பள்ளியில் எந்த விடுமுறை வந்தாலும் சரி, அந்த  விடுமுறை முழுவதும் வீட்டுப்பாடம் எழுதியே விடுமுறை கழிந்துவிட வேண்டும் என்பது போல் அவ்வளவு வீட்டுப்பாடம் கொடுப்பார்கள் என்றார்.

      எனக்கோ வியப்பு, என்ன கல்விமுறை இது ? என்று. விடுமுறை என்பதே கல்வியில் இருந்து நம்மை கொஞ்சம் விலக்கிக்கொண்டு வாழ்க்கையின் மற்ற சாரம்சங்களையும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்குதான். ஆனால், விடுமுறையிலும் வீட்டுப்பாடம் தந்து குழந்தைகளை புத்தகப்புழுக்களாக ஏன் மாற்றுகிறார்கள் என்கிற ஆதங்கம் எனக்கு. 

  உலகில் தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் சொல்லியிருக்கிறார், கல்வி என்பது பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தபிறகு நம் நினைவில் என்ன மிச்சம் இருக்கிறதோ அதுதான் கல்வி என்று. கற்பது வெறும் நூல்களில் மட்டும் இருந்துவிடக்கூடாது. குழந்தைகளை வெறுமனே நடக்க விடுங்கள். அவர்கள் நடக்கும்போதே பல விடயங்களை கூர்ந்து கவனிப்பார்கள். அவர்கள் மனதில் பல கேள்விகள் எழும். அந்த கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் கூறுங்கள். அதுவும் ஒரு கல்விதான். அவர்களை விளையாட விடுங்கள். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதை கற்பார்கள். நீச்சல் அடிக்க, ஊர் சுற்ற, நண்பர்களுடன் பழக, சிறு சிறு சண்டைகள் போட, சில வாக்குவாதங்களில் ஈடுபட, பிடித்த வேலையை செய்ய இப்படி சில விஷயங்களுக்கு அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அவர்கள் பள்ளியில் கற்பதைவிட அதிகமடங்கு இங்கே கற்பார்கள்.

    நம் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம். அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள். அவர்கள் விருப்பம் போல் வாழ்க்கையை வாழவிடுங்கள் அதே நேரம் உங்கள் மேற்பார்வையில் எல்லாம் நடக்கட்டும். பாடம் கற்க பள்ளி இருக்க, வீட்டில் ஓர் பாடம் - வீட்டுப்பாடம் எதற்கு ?
இந்த கல்விமுறை நிச்சயம் மாறியே ஆக வேண்டும்.

* தினேஷ்மாயா *

விமான நிலையம் !!



      இந்த மாதம் இரண்டுமுறை சென்னை பன்னாட்டு விமான நிலையம் செல்ல நேர்ந்தது. முதல்முறை நண்பர் ஒருவரை வெளிநாட்டிற்கு வழியனுப்ப சென்றேன், அடுத்தமுறை உறவினர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தார், அவரை வரவேற்க சென்றேன்.

     முதல்முறை ஒரு வித்தியாசமான உணர்வுகள், அனுபவங்கள் எனக்கு கிடைத்தது. அந்த இடம் பெரும்பாலும் சோக காட்சிகளாலும், கண்ணீராலும் சில இடங்களில் மகிழ்ச்சியாலும் நிரம்பியிருந்தது. அங்கே பல காட்சிகளை காண நேர்ந்தது. வேலைக்காக, படிப்பிற்காக, திருமணம் முடிந்து செல்வோர், வெளிநாட்டில் இருக்கும் பேரப்பிள்ளைகளை காணச்செல்வோர், இப்படியாக இன்னும் பலவிதமான பயணிகளை காணமுடிந்தது. அதுவும் சிலருக்கு, விமான பயண அனுபவம் முதல்முறையாகவும் இருக்கலாம், இங்கே உறவுகளையும் உணர்வுகளையும் விட்டு செல்லும் வலியைவிட, முதல் விமான பயணம் தரும் பீதிதான் அவர்கள் முகத்தை பெரிதும் ஆட்கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. என் நண்பரும் முதல் விமான பயணத்தை எண்ணி பெரிதும் பயந்தார். பலர் தங்கள் விமானம் தாமதம் ஆனதைக் கண்டு கொஞ்ச நேரம் தங்கள் உறவுகளிடம் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம் என்கிற சிறிய சந்தோசத்துடன் இருந்ததையும் என்னால் பார்கக முடிந்தது. எது எப்படி இருந்தாலும், நம் தாய்நாட்டை விட்டு செல்லும் அந்த உணர்வு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தவே முடியாது. பள்ளி படிப்பு முடிந்ததும் , கல்லூரிக்காக சொந்த ஊரைவிட்டு வரவே மனம் அப்படி கனத்தது எனக்கு, பிறந்து வளர்ந்து நம் நினைவுகள் அத்தனையையும் ஆட்கொண்டிருக்கும் தாய்நாட்டை விட்டு வெளியில் செல்லும் அந்த முதல் தருணம் அதிகம் வலிக்கத்தான் செய்யும்.

        இரண்டாம் முறை விமான நிலையம் சென்றபோது கிடைத்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது. பல நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ வெளிநாட்டில் இருந்துவிட்டு தாய்நாட்டிற்கு திரும்பும் மக்களின் முகத்தில் சொல்லமுடியாத மகிழ்ச்சியை என்னால் காண முடிந்தது. வெளிநாட்டிலேயே பேரன்/பேத்தி பிறந்திருப்பான்/ள். இதுநாள்வரை தொலைப்பேசியிலும் கணிணி வாயிலாகவுமே அவர்களின் குரலை கேட்டுவந்த தாத்தா பாட்டிக்கு அவர்களை முதன்முதலில் நேரில் பார்க்கும்போடு ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, அந்த உணர்வு உலகையே வென்றுவிட்டதுபோல் இருக்கும்.சொந்தங்களின் வருகைக்காக வழியையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருக்கும் சொந்தங்களின் கண்களில் அவ்வளவு ஏக்கம். சொந்தங்களை பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் வந்து சொந்தங்களை காணும்போது கட்டியணைத்து அன்பை பரிமாற்றம் செய்துக்கொள்கின்றனர். வேலைவிஷயமாக சென்றவர்கள், பல நாள் பொறுப்பை கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு இங்கே வரும்போது அவர் முகத்தில் ஒருவகையான மகிழ்ச்சி. சிலர் வியாபாரம், சுற்றுலா இன்னும் இப்படி பல காரணங்களுக்காகவும் வந்தமாதிரி தெரிந்தது. அவர்கள் முகத்தில் ஒருமாதிரியான உணர்வுகள். 

உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் வந்தால், விமான நிலையம் வாருங்கள். பன்னாட்டு வருகையில் சென்று பாருங்கள், உறவுகளை விட்டு பிரிந்திருந்ததன் வலி எல்லாம் மறைவதை அங்கே காணலாம். பன்னாட்டு புறப்பாடு சென்று பாருங்கள். பிரிவால் நீங்கள் வருந்துகிறீர்கள் என்றால் அதைவிட பலர் அங்கே பிரிவால் வாடுவார்கள், அதைப்பார்த்து கொஞ்சம் ஆறுதல் அடைந்துக்கொள்ளுங்கள்.

விமான நிலையம் !!

எண்ணற்ற நினைவுகளையும், பிரிவின் வலையையும், மகிழ்ச்சியையும், பலரின் ஆத்மார்த்தமான உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது என்று எண்ணிப்பார்க்கும்போது கொஞ்சம் மனம் கனக்கவும் செய்கிறது, கொஞ்சம் லேசாக பறக்கவும் செய்கிறது. 

* தினேஷ்மாயா *

சொத்து

Thursday, June 18, 2015


ஒரு ஆண் முதுமையில்

இழக்ககூடாத

மிக பெரிய சொத்து மனைவி மட்டுமே !!

* தினேஷ்மாயா *

காதல் வருகிறதே

Wednesday, June 17, 2015


இன்று ஒரு செய்தி படித்தேன்..

இரவில் உறங்காமல் இருந்தால் நோய் வருமாம்..

ஆனால், எனக்கோ உன்மீது

காதல்தானே வருகிறது !

* தினேஷ்மாயா *

நீ மட்டும் தான்


நீ மட்டும் தான்

உன் முன்னழகாலும், பின்னழகாலும்

எனை கொல்பவள்..

* தினேஷ்மாயா *

என் உயிர்



இறப்பதற்கு முன் உயில் எழுதிவைப்பார்கள்..

நான் - இறப்பதற்கு முன் வரை எழுதும் அனைத்துமே

என் உயில்தான்..

என் எழுத்துகள் என் உயிர்தான்..

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சி


நீ தொலைத்த இடத்திலேயே உன் மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருப்பதை நிறுத்து !!

அது உலகமெங்கும் சிதறிக்கிடக்கிறது. அதை தேடு...

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

தனிமை



தனிமை கொஞ்சம்

வித்தியாசமானது

நாமே அதை

எடுத்துக்கொண்டால்

அது - இனிக்கும்

மற்றவர் நமக்கு

அதை கொடுத்தால்

கசக்கும்...

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

நீங்காத நினைவுகள்


நீங்காத நினைவுகளை தந்தவளே !

உனக்கும், நீ எனக்கு தந்த

நீங்காத நினைவுகளுக்கும் நன்றி !

* தினேஷ்மாயா *

வெற்றிடம்


காதலால் ஏற்படும் வலிக்கு

இன்னொரு காதல்தான் மருந்து என்பார்கள்..

ஆனால் - அது வெறும் வெட்டிப்பேச்சு..

காதல் ஏற்படுத்தும் வெற்றிடத்தை

இன்னொரு காதல் என்றுமே நிரப்பமுடியாது..

* தினேஷ்மாயா *

இசைக்கல்லூரி

Tuesday, June 16, 2015


உன் வீட்டருகே இசைக்கல்லூரி தொடங்கட்டுமா ?

அதில் நான் மட்டுமே மாணவன் !

* தினேஷ்மாயா *

நினைவுகள்


காதலுக்கு இருக்கும் சக்தியைவிட

நான் உன்னோடு பழகிய நாட்களுக்கு சக்தி அதிகமடி..

உன் காதலைவிட, உன் நினைவுகள் 

எனை கொல்லுதே !

* தினேஷ்மாயா *

ஏன் வந்தாய் ?



காதலை எனக்கு சொல்லித்தர 

வந்தாயா ?

இல்லை -

காதலின் வலியை எனக்கு சொல்லித்தர

வந்தாயா ?

நீ - ஏன் வந்தாயடி ?

* தினேஷ்மாயா *

நம்பிக்கை

Wednesday, June 10, 2015



எல்லோரையும் நம்பிவிடாதே..

எல்லோரையும் சந்தேகிக்காதே..

நடுநிலையாளனாய் இரு !

* தினேஷ்மாயா *

உன் பெயர்

Tuesday, June 09, 2015


இதயத்துடிப்பை அதிகப்படுத்தவும், குறைக்கவும் கூடிய

மருந்தின் பெயர் தெரியுமா உனக்கு.

எனக்கு தெரியும் !

“ உன் பெயர் ” !!!

* தினேஷ்மாயா *