மௌனம்…

Thursday, September 22, 2011





பொது இடங்களில் கொஞ்சம் தங்கள் குரலை உயர்த்திப் பேசினால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் அதிகம் உண்டு. இன்று என் வங்கிக்கு ஒருவர் வந்தார். மேனேஜரின் அறைக்குள் சென்றார். அவரும் என் மேனேஜரும் என்ன பேசினர் என்று எனக்கு தெரியவில்லை.சிறிது நேரம் கழித்து மேனேஜர் அறையில் இருந்தபடியே சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். அப்புறம் அறையைவிட்டு வெளியே வந்து சத்தம்போட்டார். வங்கியில் மற்ற வாடிக்கையாளர்களும் இருந்தனர். அவரவர் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தோம். இவர் இப்படி கூச்சல்போட்டது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது. அப்புறம் அந்த பிரச்சனையை ஒருவழியாக தீர்த்து அனுப்பிவைத்தோம். குரலை உயர்த்திப் பேசுவதால் எங்கேயும் எப்போதும் உங்கள் வேலை உடனே முடிந்துவிடாது என்பதை மட்டும் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
நான் சொல்லவருவது என்னவென்றால், தேவையில்லாமல் கத்தி எதற்காக தன் சுயமரியாதையை இழக்க வேண்டும். நான் எப்போதுமே என் பொறுமையை இழக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சரி யார் என்ன சொன்னலும் சரி. அதை அமைதியாகவும் புன்சிரிப்புடனும்தான் கேட்டுக்கொண்டிருப்பேன். இதனால் எனக்கு உணர்ச்சிகளே இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் எப்போதும் உணர்ச்சிகளை விட உணர்வுகளைத்தான் அதிகம் மதிக்கிறேன். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட நான் முட்டாள் இல்லை. சொன்ன வார்த்தையை திரும்ப எடுப்பது முடியாத காரியம். எல்லோரும் ஒருநாள் முடிவில்லாத மௌனத்தில்தான் இருக்கப்போகிறோம் என்பதை நான் நன்றாக உணர்ந்துவிட்டேன். அதனால்தான் நான் என்னை இப்போதிருந்தே அதற்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதிகம் பேசுபவன் புத்திசாலியும் இல்லை அதிகம் பேசாதவன் முட்டாளும் இல்லை. சாது மிரண்டால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். மௌனமாய் இருப்பது என்றும் உங்களுக்கு நன்மையையே தரும் என்பதை என் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நீங்களும் முடிந்தால் மௌனத்தை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள்…

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

காதலும் காமமும் பக்தியும்....

Tuesday, September 20, 2011






உள்ளத்தின் பசி
காதல்....

உடலின் பசி
காமம்....

உயிரின் பசி
பக்தி.....



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

மனிதன்..




மனிதனுக்கு மனிதன் என்பதைவிட எவ்வளவு பெயர்கள் இருக்கு தெரியுமா..


  1. முரடன்
  2. திருடன்
  3. முட்டாள்
  4. பைத்தியம்
  5. கோழை
  6. கொலைக்காரன்
  7. கொள்ளைக்காரன்
  8. பொய்யாக நடிப்பவன்
  9. மற்றவர் காலை வாரி விடுபவன்
  10. நம்பிக்கை துரோகி
  11. கூட்டிக்கொடுப்பவன்
  12. மற்றவர் குடியை கெடுப்பவன்
  13. தான் வாழ பிறரை அழிப்பவன்
  14. பொய் உரைப்பவன்
  15. ......................................................................................................
சொல்ல முற்பட்டால் சொல்லிக்கொண்டே போகலாம். இது எண்ணிக்கையில் அடங்காது. மனிதனாக இருப்பதற்கு ஒருவகையில் பெருமைப்பட்டாலும் மனிதனாக இருப்பதற்கு ஒருவகையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன்..


ஏனென்றால் மிருகம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் சொல்லிவிட முடியும். மனிதனை இப்படித்தான் இருப்பான் என்று சொல்லிவிடமுடியாது. மிருகங்களைக்கூட நம்பிவிடலாம், ஆனால் மனிதன் மனிதனை நம்ப முடியவில்லை.. காலம் களி காலம் என்று சொல்லிவிட்டு செல்ல நான் தயாராக இல்லை. எல்லா தவறுகளையும் நாம் செய்துவிட்டு கடவுளை பழிப்போடுவது என்ன நியாயம். மனிதன் என்று மனிதனாக மாறுகிறானோ அன்றுதான் பூமி சுழல்வதற்கே அர்த்தம் இருக்கிறது என்பேன் நான்...


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

என் வேலை..




நான் இப்போது வங்கியில் இணை மேலாளராக இருக்கிறேன். மனசுக்கு ரொம்ப பிடிச்ச வேலை. எனக்கு முழு சுதந்திரம் இருக்கு. ஏன் இந்த வேலையை செய்யவில்லை ஏன் இந்த வேலையை செய்கிறாய் என்று யாரும் என்னை கேட்க முடியாது. எனக்கென்று சில அதிகாரம் இருக்கிறது. என் அதிகாரத்திற்கு ஏற்ப என் வேலைகளை செவ்வனே செய்து வருகிறேன். வேலைப்பொழுதில் செல்போனை சைலண்ட் மோட்-ல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுப்பு வேண்டுமானால் உயரதிகாரிகளிடம் கெஞ்ச வேண்டியதில்லை. என் விடுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன். அதை யாரும் தடுக்க முடியாது. எனக்கென தனி மேஜை தனி போன் தனி கணிணி மற்றும் எனக்கென்ன தனித்தனி வசதிகள் செய்து தந்திருக்கிறார்கள். எதாச்சும் வேணும்னா அதை செய்து கொடுக்க ஒரு ஆளையும் அமர்த்தியிருக்கிறார்கள். என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் எனக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுதான் என்னிடம் பேச ஆரம்பிப்பார்கள். எனக்கு என்பதைவிட நான் இருக்கும் பதவிதான்  எனக்கு இவ்வளவு மரியாதையை பெற்று தந்திருக்கிறது. அதும் ஒருசில வாடிக்கையாளர்கள் கைகூப்பி நன்றி தெரிவிப்பார்கள் அது என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷத்தை தருகிறது தெரியுமா. சம்பளம் 20-25 ஆயிரம் வரைதான் கிடைக்கிறது. ஆனால் அரசு தரும் மற்ற சலுகைகள் எல்லவற்றையும் சேர்த்தால் ஒரு IT துறையில் வேலை செய்யும் நபரைவிட நான் அதிகமாகவேதான் சம்பளம் வாங்குகிறேன். சம்பளம் என்பதைவிட மக்களுக்கு சேவை செய்வதால் ந்ன் மனதிற்கு கிடைக்கும் மகிழ்ச்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது. வேலை அதிகம் என்று சொல்லிவிட முடியாது ஆனால் எப்படியும் மாலை 7 மணி வரையாச்சும் ஆகிவிடுகிறது என் தினசரி வேலைகளை முடிக்க. அது ஒன்றும் பெரிதாக எனக்கு தெரியவில்லை. அதைவிட மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால், தேவை என்று வரும் மக்களுக்கு கடன் வழங்கி அவர்களின் அவசரத்தேவைக்கு உதவி செய்வது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. மேலிடத்தில் இருந்து எந்தவித நச்சரிப்பும் இல்லை. என் பாட்டுக்கு நான் என் சேவையை தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கிறேன்.
அரசுத்துறை வேலை என்பது மக்களுக்கு உன்னதமாக சேவை செய்ய ஒரு வாய்ப்பு. அதை எத்தனைபேர் என்னைப்போல் உணர்ந்து செயல்படுகிறார்கள் என்று எனக்குத்தெரியாது ஆனால் நான் என் மனதார மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாய்க்கொண்டு சேவைப்புரிந்து வருகிறேன்..


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

மார்கழியில் குளிச்சுப்பாரு

Wednesday, September 14, 2011




மார்கழியில் குளிச்சுப்பாரு
குளிரு  பழகி போகும்..
மாதவனா வாழ்ந்துப்பாரு
வறும பழகி போகும்..
உப்பில்லாம குடிச்சுப்பாரு
கஞ்சி பழகி போகும்..
பாயில்லாம படுத்துப்பாரு
தூக்கம் பழகி போகும்..
வறுமையோடு இருந்துப்பாரு
வாழ்வு பழகி போகும்..
சந்தோசத்தை வெறுத்துப்பாரு
சாவு பழகி போகும்..
மார்கழியில் குளிச்சுப்பாரு
குளிரு  பழகி போகும்..
மாதவனா வாழ்ந்துப்பாரு
வறும பழகி போகும்..

என்னோட சொத்தெல்லாம்
தொலைச்சுப்புட்டேன்..
இப்போ என் பேரில் உலகத்தையே
எழுதிக்கிட்டேன்..
துறவிக்கு வீடுமனை
ஏதுமில்ல..
ஒரு குருவிக்கு தாசில்தார்
தேவயில்ல..
சில்லென காத்து…
சித்தோட ஊத்து…
பசிச்சா கஞ்சி…
படுத்த ஊறக்கம்..
போதுமடா போதுமடா
போதுமடா சாமி…
நான் சொன்னாக்க
வலயிடமா சுத்துமடா பூமி..
மார்கழியில் குளிச்சுப்பாரு
குளிரு  பழகி போகும்..
மாதவனா வாழ்ந்துப்பாரு
வறும பழகி போகும்..

காசுப்பணம் சந்தோசம்
தருவதில்ல..
வைரக்கல்லுக்கு அரிசியோட
ருசியும்மில்ல..
போதுமெனும் மனசப்போல
செல்வமில்ல..
தன் பொண்டாட்டிப்போலவொரு
தெய்வமில்ல..
வேப்பமர நிழலு…
விசிலடிக்கும் குயிலு…
மாட்டுமணி சத்தம்…
வயசான முத்தம்..
போதுமடா போதுமடா
போதுமடா சாமி..
அட என்னப்போல
சுகமான ஆளிருந்தா காமி..
மார்கழியில் குளிச்சுப்பாரு
குளிரு  பழகி போகும்..
மாதவனா வாழ்ந்துப்பாரு
வறும பழகி போகும்..
உப்பில்லாம குடிச்சுப்பாரு
கஞ்சி பழகி போகும்..
பாயில்லாம படுத்துப்பாரு
தூக்கம் பழகி போகும்..
வறுமையோடு இருந்துப்பாரு
வாழ்வு பழகி போகும்..
சந்தோசத்தை வெறுத்துப்பாரு
சாவு பழகி போகும்..

படம் : ஒன்பது ரூபாய் நோட்டு..

வாழ்க்கையை அருமையாக எடுத்து சொல்லும் பாடல். என்னை அதிகம் சிந்திக்க வைத்த பாடல்.ரொம்பவும் ந்ஆன் நேசித்த பாடல்.

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா