இசையாவோமா ?

Wednesday, October 28, 2015


மூங்கிலாய் நீ..

காற்றாய் நான்..

நாமிருவரும் கலந்து இசையாவோமா ?

* தினேஷ்மாயா *

உன்னால்..உனக்காக..


நான் கண்ணடிக்கவும் விசிலடிக்கவும் கற்றுக்கொண்டது

உன்னால்..உனக்காக..

* தினேஷ்மாயா *


தென்மேற்கு பருவக்காற்று


மேற்கு தொடர்ச்சி மலை நான்..

தென்மேற்கு பருவக்காற்று நீ..

நீ என்னை கடந்து செல்கையில்

நீ மழையாகிறாய்..

நீ என்னை கடக்காவிடில் -

நான் வரண்டுபோகிறேன்..

* தினேஷ்மாயா *

ஊஞ்சலாடி...



நீ ஊஞ்சலாடித்தான்

வானவில்லை வளைத்தாயோ ?

* தினேஷ்மாயா *

ஜாக்கிரதை


அவள் வீட்டு கதவில் எழுதியிருந்தது..

“தேவதைகள் ஜாக்கிரதை”

* தினேஷ்மாயா *

இலக்கியப்பிழைகள்



என் கிறுக்கல்களில்

இலக்கணப்பிழையை காணமுடியாது..

இலக்கியப்பிழைகள் அதிகம் இருக்கலாம்..

* தினேஷ்மாயா *

முன்னும் பின்னும் இருக்கிறாய்...


  

... என்னுடைய கவிதைகள் ஒவ்வொன்றிற்கும் 

முன்னும் நீ இருக்கிறாய்

பின்னும் நீ இருக்கிறாய்...

மூன்று புள்ளிகளாய்...

* தினேஷ்மாயா *


சுட்டிக்குழந்தை



இருபத்தியோரு வயசானாலும்

இன்னமும் நீ எனக்கு சுட்டிக்குழந்தை தானடி..

* தினேஷ்மாயா *

நீ என் ...



 நீ என் உயிர் என்று சொல்லமாட்டேன்..

உயிர் என்றாவது ஒருநாள் பிரிந்துவிடும்..

நீ என் பேரண்டம்...

என்றுமே அழிவில்லை !

* தினேஷ்மாயா *

நீதி


    நீதிமன்றம் சொல்லும் அனைத்தும் சரியாகிவிடாது. ஏனென்றால், நீதிமன்றங்களே பலநேரங்களில் தம் தீர்ப்பை திருத்திய சம்பவங்கள் நடந்திருக்கிறது..

* தினேஷ்மாயா *

விடுதலை..



      Don't beg for freedom.You are always free in this world. It's your thoughts that keep you a slave. Come out of it.

* தினேஷ்மாயா *

பூமித்தாய் !!


I need a gun and 7 billion bullets to save our Mother Earth..

* தினேஷ்மாயா *

மழை !!



Instead of Praying.. Do Planting..

That will give us Rain definitely..

* தினேஷ்மாயா *

மதுவும் மாதுவும்


    மதுவும் மாதுவும்தான் ஒருவனிடத்தில் இருக்கும் கவிஞனை தட்டி எழுப்புகிறது..

* தினேஷ்மாயா *

அன்றும் இன்றும்


1991 - Privatization in India

2015 - Corporatization of India

* தினேஷ்மாயா *

காவிப்புரட்சி


   ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் பசுமைப்புரட்சி நடந்தேறியது..
தற்போது காவிப்புரட்சி நடந்துக்கொண்டிருக்கிறது..

* தினேஷ்மாயா *

ஓட்டு மட்டும் போதும்

   

     இன்றைய உலகமயமாகிவிட்ட உலகில், பெரும்பாலான அரசாங்கத்திற்கு மக்களின் 100% ஓட்டுக்கள் வேண்டும், ஆட்சிக்கு வர 100% மக்கள் ஆதரவு வேண்டும், ஆனால் பொதுத்துறை நிறுவனங்களில் 26%/49%/51%/75% மட்டும் பங்குகள் போதும் என்கிற நிலைதான் இருக்கிறது.

   போகிற போக்கில், அரசாங்கத்திலும் 51% மட்டும் தங்களிடம் இருந்தால்போதும், மீதம் இருக்கும் 49% தனியாரிடம் கொடுத்தாலும் சொல்வதற்கில்லை..

* தினேஷ்மாயா *

யாரை குறை சொல்வது?


   
      நம் மக்கள் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையுமே குறை கூறி பழகிவிட்டார்கள். ஆனால் உண்மையில், எல்லா தவறுகளுக்கும் மக்கள்தான் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறார்கள் என்பதை மறந்திவிடுகிறார்கள்.

   இதனை ஆழமாக சிந்தித்து செயல்பட்டாலே, பெரும்பாலான குறைகள் நீங்கிவிடும்..

* தினேஷ்மாயா *

இன்னொரு வாழ்க்கை

Saturday, October 10, 2015


         வாழ்க்கையில் ஒருவர்மீது மட்டும், வாழ்க்கையில் ஒரேயொருமுறை மட்டும்தான் காதல் வரவேண்டும் என்றில்லை. முதல் காதல் சேராவிட்டால், வாழ்க்கை முடிந்துவிட்டதாக அர்த்தமாகாது. நம் வாழ்க்கைக்கான ஒருவர் இவர் இல்லை, வேறொருவர் என்று வாழ்க்கை நமக்கு சொல்கிறது. அதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்..

* தினேஷ்மாயா *