இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Tuesday, October 25, 2011



அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்..


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

முதுமைக்காலம்...

Sunday, October 23, 2011



முதுமைக்காலத்திற்கே உரிய 3 குணங்கள் என்ன தெரியுமா...

1. ஞாபகமறதி அதிகமாக இருக்கும்...

மன்னிச்சுடுங்க.. மத்த இரண்டை மறந்துட்டேன்.....


குறிப்பு : எங்கோ ஒருமுறை புத்தகத்தில் படித்தது இது...




- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

ஏற்றம் வருமா ...

Saturday, October 22, 2011




உழைப்பாளி...

           உழைக்கும் வர்க்கம் இல்லா நாடு எங்காச்சும் உண்டா. உழைப்பவன் இல்லாமல் இன்று நம் உலகம் இப்படி முன்னேறி இருக்குமா. உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் இருக்குனு எல்லோரும் பெருமையாய் சொல்கிறோம். அதில் எத்தனை ஆயிரம் உழைப்பாளிகளின் உழைப்பு இருக்கிறது தெரியுமா. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலையெல்லாம் போய்விட்டது. இன்றைய நிலையில் உழைப்பவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்த உலகமே உழைப்பை நம்பித்தான் இருக்கு. உங்களுக்கு தேவையான பொருளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கவும், உங்களுக்கு சேவை செய்யவும், உங்களை கடைசில் சமாதியில் வைக்கவும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் உழைப்பாளியை சார்ந்துதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட உழைப்பாளி என்றுமே உழைத்துக்கொண்டேத்தான் இருக்கிறானே தவிர அவன் வாழ்வில் என்றுமே ஏற்றம் வந்தபாடில்லையே. பணக்காரன் மேலும் பணம் சேர்த்துக்கொண்டே இருக்கிறான், உழைத்து தேய்பவன் என்றும் உழைத்துக்கொண்டேதான் இருக்கிறான். அவன் வாழ்க்கைத்தரம் என்றுதான் உயரும். உழைப்பவன் உயர்ந்துவிட்டால் பின் யார் நமக்காக உழைப்பார்கள் என்று நினைக்கும் பல வக்கிரமான மனம் படைத்தவர்கள் இன்றும் நம் உலகில் உண்டு. உழைப்பவனை தரம் உயர்த்தி அவனை தட்டிக்கொடுத்தால் உங்கள் வேலை சிறப்பாக முடியும். 
                    தீபாவளிக்கு பட்டாசு வாங்கி சந்தோஷமாக வெடிக்கிறோம், புத்தாடைகள் வாங்கி மகிழ்கிறோம், ஆனால் அதை தயாரித்து விற்கும் உழைப்பாளிக்கு அதை உபயோகிக்கும் நிலை இல்லையே. இதற்கு காரணம் யார். அந்த கடவுளா, இல்லை மனிதனா. இடைத்தரகர்கள் மற்றும் பணம் மட்டுமே குறிக்கோளாய் நினைக்கும் முதலாளி முதலைகள் இருக்கும் வரை என்றும் உழைப்பவன் வாழ்வில் ஏற்றத்திற்கு இடமில்லை. நாம் கண்டிப்பாக இதற்கு ஒரு நல்ல தீர்வு எடுத்தே ஆகவேண்டும்.


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா