மங்களகரம்

Saturday, November 30, 2013



நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

கல்வி குறி - கேள்வி குறி


இவளுக்கு கல்வி குறி ஒரு கேள்வி குறி ..

புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

நடராஜர்



புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

பல்லாங்குழி


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

களைப்பு



புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

ஆலய மணி


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

பாத்து இறங்குங்கடா


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

பலூன் சுட்டதுண்டா ?



கடற்கரைக்கு சென்றால் பலூன் சுடுவதென்பது தவறாமல் என் செய்கைகளில் இடம்பெறும் ஒன்று..

புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *


கிளி ஜோசியம்


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

காந்தி நடந்த மண்..


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

மணல் வீடு



புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

லக்ஷ்மி வெடி



புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

குதிரை சவாரி போலாமா ?



புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

தா.. தை.. தித்தித்.. தை..


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

கொஞ்சம் பயம்



     இதுப்போன்ற பெரிய ராட்டினத்தில் ஆடுவதென்றால் எனக்கு கொஞ்சம் பயம்.. உங்களுக்கு எப்படி ?

புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா ?


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

விழாக்கோலம்


விழாக்கோலமா அல்லது வெறும் கோலமா ?

புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

நெல்லிக்காய் வேணுமா ?



புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

பாத்து நடக்கனும்



புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

அங்க போலாமா ?


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

தலைக்கு மேல வேலை இருக்கு


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

ஓய்வு


கொஞ்சம் ஓய்வெடுக்க சென்றிருப்பார் போல..

புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

கொலு


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

காவல் காக்கிறோம் !


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

அங்க என்ன லுக்கு?



தம்பிகளா.. அங்க என்னடா லுக்கு ???

புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

பூமாலை...


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

ஜோடி எங்கே ?



ஜாடி இங்கே.. இதைப்பருகிய ஜோடி எங்கே ??

புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

குட்டிக் கரணம்



இது குட்டிக் கரணமா இல்லை பெரிய கரணமா ?


புகைப்படம் : முகநூல்

* தினேஷ்மாயா *

இதை செய்ததுண்டா



இதை செய்ததுண்டா நீங்கள் ?

புகைப்படம் : இணையம்

* தினேஷ்மாயா *

முற்றத்தில் சின்னஞ்சிட்டு..



நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

மழையில் ஓர் சின்ன ஆட்டம்


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

வானம் வசப்படுமே



நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

கொஞ்சம் யோசியுங்கள்



நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

நம்பிக்கை


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

சிறை



மிகப்பெரிய சிறை எதுவென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற பயத்துடன் வாழ்வதுதான்.. - டேவிட் ஐக்..

* தினேஷ்மாயா *

காஃபி பைட்..


    நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது இரவில் அதிகநேரம் கண்விழித்து படிக்க வேண்டி இருந்தது. ஆனால் தூக்கத்தை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. என்னவளுக்கு இரவில் வெகுநேரம் படிப்பது சாதாரண விஷயமாக இருந்தது. நான் எனக்கு இருக்கும் கஷ்டத்தை சொன்னபோது என்னவள் எனக்கு சொன்ன யோசனைதான் இந்த காஃபி பைட். இரவில் தூக்கம் வரும்போதெல்லாம் ஒரு காஃபி பைட் சாப்பிட்டுக்கொண்டே படித்தால் தூக்கம் வராது. அதேபோல இரவில் அதிக நேரம் கண்விழித்ததால் தேர்வு அறையில் தூக்கம் வர வாய்ப்பிருக்கும்,தேர்வு அறையிலும் 3 மணி நேர தேர்விற்கு 4 முறை சீரான இடைவெளிவிட்டு காஃபி பைட் சாப்பிட்டால், தூக்கமும் வராது, நம் மூளையும் சுறுசுறுப்பாய் இருக்கும் படித்த அனைத்தும் நினைவில் இருக்கும் நாமும் நிறைய கேள்விகளுக்கு சரியாக விடையளிக்கலாம் என்றாள். அவள் சொன்ன அனைத்தையும் சரியாக கடைபிடித்தேன். அதனால் என் தேர்வில் சிறப்பாக மதிப்பெண்ணும் கிடைத்தது. இதை என் நண்பர்கள் பலருக்கும் சொல்லியிருக்கிறேன்.

  இன்று வரும்வழியில் காஃபி பைட் மிட்டாயை பார்த்தேன். அவள் நினைவு வந்துவிட்டது. அதான் இங்கே என் நினைவுகளை இறக்கிவைத்துவிட்டு செல்லலாம் என்று வந்தேன்...

* தினேஷ்மாயா *

சொல்லிட்டாளே அவ காதல


சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போலொரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போலொரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

ம். ம். .ம் .ம். .

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்

மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

திரைப்படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி

இந்த படத்தை திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கில் நண்பர்களுடன் சேர்ந்து கிட்டதட்ட 6 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். படமும் சரி, இப்படத்தின் பாடல்களும் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத ஒன்று. எனக்கு எப்போதாவது மனம் கொஞ்சம் சோகமும் கொஞ்சம் சந்தோஷமும் கலந்த ஒரு நிலையில் இருக்கும்போதெல்லாம் இப்பாடலை கேட்பேன். இந்த பாடலிலும் கொஞ்சம் சோகமும் இருக்கிறது கொஞ்சம் மகிழ்ச்சியும் இருக்கிறது.

* தினேஷ்மாயா *

பிரச்சாரம் எதற்கு ?



    சமீபத்தில் நடக்கவிருக்கும் சில மாநில சட்டசபை தேர்தலுக்காகவும், இடைத்தேர்தலுக்காகவும்  தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த பிரச்சாரம் எதற்கு என்று எனக்கு தெரியவில்லை.

     எனக்கு தெரிந்தவரை பிரச்சாரம் என்பது மக்களிடம் நம் கருத்துக்களை எடுத்து சொல்லி, அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு விடிவு ஏற்படுத்தி கொடுப்பதாய் மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்.

    ஆனால், அதெல்லாம் நடப்பதாய் தெரியவில்லை. எதிர்கட்சியினர் ஆளுங்கட்சியினரையும், ஆளுங்கட்சியினர் எதிர்கட்சியினரையும் சாடும் ஒரு களமாகவே பார்க்கப்படுகிறது இந்த மேடைகள். நாம் இந்த மக்களுக்காக என்ன செய்தோம் என்பதை விடுத்து, மற்ற கட்சியை சாடுவதென்பதே தொழிலாய் கொண்டிருக்கின்றனர்.

       இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும் ஆனால் நான் சுத்தமானவன் மற்றவன்தான் கெட்டவன் என்று இந்த அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். மக்கள் என்றோ விழிப்படைந்துவிட்டார்கள். இந்த அரசியவாதிகள் தான் இன்னமும் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருக்கின்றனர்.

     இந்த நிலை என்றுதான் மாறுமோ ?? ஐயோ பாவம் இந்த அரசியல்வாதிகள்.

* தினேஷ்மாயா *

இந்தியா வளர்கிறதா ?



     இந்தியா வளர்கிறது ஒளிர்கிறது மிளிர்கிறது என்றெல்லாம் வாய்கூசாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்களே, எதன் அடிப்படையில் இந்தியா வளர்கிறது என்று சொல்கிறார்கள் என்று நான் தெரிந்துக்கொள்ளலாமா ?

    இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களை மறந்துவிட்டு நகரங்களை மட்டும் வளரவிட்டால் அது வளர்ச்சி ஆகிவிடுமா ?

         நகரத்திற்கு இணையான வசதிகளை கிராமங்களுக்கும் செய்து கொடுத்தால் அதுதான் சிறந்த வளர்ச்சி. அதைவிடுத்து, நகரங்களை மட்டுமே வளர்ப்பதால், கிராமத்தில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளுக்காக நகரங்களுக்கு படையெடுப்பர். அப்படித்தான் இன்று சென்னையிலும் ஐதராபாத்திலும் மக்கள்தொகை அதிகமாய் உயர்ந்திருக்க காரணம். அடிப்படை வசதிகளையு உள்கட்டமைப்பையும் பலப்படுத்தினாலே கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான வேலையை கிராமங்களிலேயே ஏற்படுத்திக்கொள்வார்கள். நகர வாழ்க்கைக்கு வரவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படாது.

         நகரத்தில் கடந்த 7 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இந்த நகர வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. கிராமத்து வாழ்க்கைதான் எனக்கு பிடித்திருக்கிறது. இங்கே எவர்க்கும் மனிதனை மதிக்கக்கூட தெரியவில்லை. மனிதவளத்தை மேம்படுத்தாமல் மனிதவளத்தின் தேவையை நம் மக்களும் உணரவில்லை, அரசாங்கமும் உணரவில்லை.

           என்ன செய்ய ! ?

* தினேஷ்மாயா *

மர்பி விதியின் முன்னோடி



   நீங்கள் மர்பி விதிகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முரண்பாடான கோட்பாட்டை சொல்லும் விதிகள் இவை. இந்த விதிகள் 1940-1950 காலகட்டத்தில் எட்வர்ட் மர்பி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபகாலமான மர்பி விதிகளை படித்து வருகிறேன். என்னை பல விதிகள் பெரிதும் கவர்ந்தது. அதில் சிலவற்றை நேரம் கிடைக்கையில் இங்கே பதிவு செய்கிறேன்.

   உதாரணத்திற்கு சில.

* ஒரு பழைய கட்டிடத்தைத் திருத்தியமக்க அதைப் புதிதாகக் கட்ட ஆகும் செலவைப் போல் இரு மடங்கும், காலத்தைப் போல் மூன்று மடங்கும் ஆகும்.

* உலகத்திலேயே மக்களை ஈர்க்கும் சக்தியுடைய இரண்டாவது வசனம், "இதைப் பாருங்கள்!".முதலாவது, "அட! இதைப் பாருங்கள்!".

* எது சரியாக ஆரம்பிக்கப்படுகிறதோ அது தவறாக முடியும். எது தவறாக ஆரம்பிக்கப்படுகிறதோ அது மோசமாக முடியும்.

ஆனால், நம் தமிழிலும் மர்பி விதிகள் போல பல பழமொழிகள் ஏட்டிலும் வாய்மொழியாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

* பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.

* நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்துவிடும்.

இப்படி இன்னும் ஏராளமாய் சொல்லிக்கொண்டே போகலாம். உலகில் இருக்கும் அனைத்து தத்துவ மேதைகள் சொன்னதெல்லாம் நம் தமிழ் மொழியில் என்றோ சொல்லப்பட்டுவிட்டது என்பதை முதலில் தமிழர்களாகிய நாம் உணர வேண்டும்..

* தினேஷ்மாயா *

தன்னந்தனியனாய்

Thursday, November 28, 2013



 என் வாழ்க்கை முழுவதும் நான் தன்னந்தனியனாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ இந்த காலம் !!

* தினேஷ்மாயா *

எது உண்மையான உண்மை


    இந்த காலத்தில் எது உண்மை எது பொய் என்று பிரித்து அறிவது முடியாத காரியம். எல்லா உண்மையிலும் ஒரு பொய் இருக்கும், எல்லா பொய்களிலும் ஒரு உண்மை இருக்கும்.

  எது உண்மை எது பொய் என்று பிரித்து உண்மையான உண்மையை கண்டிபிடிப்பது அவரவர் திறமை. 

   எவரையும் எளிதில் நம்பிவிடவேண்டாம், எளிதில் சந்தேகிக்கவும் வேண்டாம்.

* தினேஷ்மாயா *

சமநிலை



   ஒரு தண்ணீரை நீங்கள் எந்த பாத்திரத்தில் வைத்தாலும் அது எப்போது நிலையான தன்மையில்தான் இருக்கும். அதுப்போல, நாமும் எந்த நிலைகு சென்றாலும், சமநிலைக்கு வந்துவிட வேண்டும். இல்லையேல் நம்மால் அதிக காலம் அந்த மேல்நிலையில் இருக்க முடியாது.

* தினேஷ்மாயா *

கண்ணீர்



“மனிதர்கள் சில நேரம்

நிறம் மாறலாம் !!

மனங்களும் அவர் குணங்களும்

தடம் மாறலாம் !! ”

காரணமில்லா கண்ணிரை இப்போது எனக்கு தந்த வரிகள்..

* தினேஷ்மாயா *

தைரியம் வேண்டும்



செய்த தவறை ஒப்புக்கொள்ளவும்,

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும்

ஒரு தனி தைரியம் வேண்டும்..

* தினேஷ்மாயா *

காரணமில்லா கண்ணீர்



      சில பாடல்களை கேட்கும்போதெல்லாம் காரணமில்லாமல் கண்ணீர் வரும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் எவராச்சும் என்னருகில் இருந்தால், உடனே தைலத்தை தேடி கண்டுபிடித்து என் நெற்றியில் பூசிக்கொள்வேன். ஏன் கண்கள் கலங்கியிருக்கிறது என்று அவர்கள் கேட்டால், தைலம் போட்டிருக்கேன், அதான் என்று சொல்லிவிடலாம் பாருங்கள் !!

இப்போதும் காரணமில்லா கண்ணீரை வரவழைக்கும் பாடல்களை கேட்டுக்கொண்டே ....

- அன்புடன்
* தினேஷ்மாயா *

என்னவள் வளையல்



       அவள் என்னுள் எவ்வாறெல்லாம் கலந்திருக்கிறாள் என்பதை வார்த்தைகளில் என்னால் சொல்லிவிட முடியாது. அவளை சார்ந்த நினைவுகள் வராத நாளில்லை. அதற்காக நான் துவண்டுவிடவும் இல்லை. இருப்பினும் அந்த பசுமையான நினைவுகளையும் கொஞ்சம் வலியையும் நான் இன்றளவும் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். \

             என் பள்ளிக்கூட பொதுத்தேர்வுக்கு கணித தேர்வின்போது வடிவியல்(Geometry) சம்பந்தமாக வட்டம் வரைய பலர் Compass உபயோகிப்பார்கள். ஆனால் நான் அவளிடம் தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே அவளின் வளையலை வாங்கிக்கொள்வேன். அதைக்கொண்டுதான் தேர்வுக்கு தேவையான வட்டம், அரைவட்டம் எல்லாவற்றையும் வரைந்தேன். என்னமோ தெரியவில்லை, என் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் அவள் கலந்திருந்தாள் அப்போது. இன்று ஒவ்வொரு நினைவிலும் கலந்திருக்கிறாள்.

* தினேஷ்மாயா *

பிரார்தனை



நான் இன்று இறந்தாலும்,

நாளை இறந்தாலும்,

என்று இறந்தாலும் -

என்னை நினைப்பவர்கள்

அனைவருக்காகவும்

என் ஆன்மா நான் இறந்தபின்பும்

என்றும் என்றென்றும்

பிரார்த்தை செய்துக்கொண்டே இருக்கும்..

* தினேஷ்மாயா *

இசை - வரிகள்



மனம் மகிழ்ச்சியாய்

இருக்கும்போது - நம் மனம்,

இசையை ரசிக்கும்..

மனம் சோகமாய்

இருக்கும்போது - நம் மனம்

பாடலின் வரிகளை

உணரும் !!

* தினேஷ்மாயா *

ஒவ்வொரு பாடலிலும்


ஒவ்வொரு பாடலிலும்
ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு  நெஞ்சே
ஒவ்வொரு பாடலிலும்  
ஒவ்வொரு நினைவிருக்கு  
உள்ளுக்குள் வலியிருக்கு  நெஞ்சே  இசை நெஞ்சே
காதலின் கனவுகளை  
கண்ணீரின் நினைவுகளை  
பாடல்கள் சுமந்துவரும்  நெஞ்சே  இசை நெஞ்சே
ஹோ ஹோ  
வெட்டோடு பொருந்தும் வார்த்தை  எதுவென்று தாய் மொழி அறியும்  
நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை  எதுவென்று யாருக்கு தெரியும் ?  
வலி போக  எந்தன் பாடல்  வார்த்தை கொண்டு வரும்
ஒவ்வொரு பாடலிலும்  
ஒவ்வொரு நினைவிருக்கு  
உள்ளுக்குள் வலியிருக்கு  நெஞ்சே
யாருக்கு மாலைகள் ஆவதென்று  பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை  
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று  தேவதைகள் வந்து சொல்வதில்லை  
விதியென்ற காட்டிலே  திசை மாறும் வாழ்க்கையே  
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு  
எண்ணம் போல வாழ்க்கையே  எவருக்கும் வாய்ப்பதில்லை  
வாழ்கை போல எண்ணம் கொள்  வாழ்வது துயரமில்லை  
ஹோ ஹோ  
ரோஜாவின் கண்ணீர் தானே  அர்தறாய் வாசம் கொள்ளும்  
கண்ணோடு பொறுமை காத்தால்  காலம் பதில் சொல்லும்  
ஒவ்வொரு பாடலிலும்
ஒவ்வொரு நினைவிருக்கு
 உள்ளுக்குள் வழியிருக்கு  நெஞ்சே
பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் 
தேகங்களை நம்பி வாழ்வதில்லை  
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் 
காதல் அன்பு என்றும் காய்வதில்லை 
உருவங்கள் தாண்டியும்  உள்ளங்கள் வாழுமே  
அண்டம் மறையும்  அன்பே நித்தியமே  
எந்த மேடை என்பதை  அன்பே மறந்துவிடு  
ஏற்றுக்கொண்ட பாத்திரம்  அதிலே கரைந்துவிடு
ஹோ ஹோ  
நீர் கொண்ட மஞ்சள் வாழ்க  
நிழல் தந்த சொந்தம் வாழ்க 
கல்யாண மாலை நனைத்த  கண்ணீர் துளி வாழ்க  
ஒவ்வொரு பாடலிலும்  
ஒவ்வொரு நினைவிருக்கு  
உள்ளுக்குள் வலியுருக்கு  நெஞ்சே  இசை நெஞ்சே...
காதலின் கனவுகளை  

கண்ணீரின் நினைவுகளை  
பாடல்கள் சுமந்துவரும்  நெஞ்சே  இசை நெஞ்சே...

திரைப்படம்: என்னவளே

இசை: S.A.ராஜ்குமார்

பாடியவர்: உன்னிகிருஷ்ணன்.


என் பள்ளிப்பருவத்தில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் இது, அதிகம் கவர்ந்த படம் இது. இந்த பாடல் என்னை பெரிதாய் பாதித்திருந்தது. நீண்ண்ண்ட இடைவெளிக்குப்பிறகு தேடிகிடைப்பிடித்துவிட்டேன். அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இந்த பாடலை எங்கள் வீட்டின் அருகே நடந்த ஒரு பாட்டுப்போட்டியில் பாடி மூன்றாம் பரிசு வாங்கியிருக்கிறேன். பல நாட்கள் கழித்து இப்பாடலை கேட்டபோது காதலை எண்ணியும் வரிகளை எண்ணியும் கண்ணீர் துளிகள் வந்து என்னை நனைத்துவிட்டு சென்றது.

* தினேஷ்மாயா *