சினிமா

Sunday, June 05, 2016

அக்காலத்தில், உழைத்து களித்த பாமர மக்களை மகிழ்விக்க உருவானதுதான் தெருக்கூத்து..

பின்னர், அது மேடை நாடகமாக உருமாறியது.

பின்னர், அதிக மக்களை சென்றடையும் என்பதால் மேடை நாடகங்கள் சுதந்திர போராட்டத்தின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது..

சினிமா !

நாடகத்தின் எதிர்காலத்தையும் அது சார்ந்த பல கலைகளையும் ஒன்றாக சேர்த்து சினிமா என்னும் 65-வது கலை ஒன்று உருவானது..

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் நம் சினிமா பயணித்த பாதை வேறு. இன்று பயணிக்கும் பாதை வேறு.

இப்போது வெளியாகும் சில சினிமாக்கள் உலக தரத்தில் இருக்கின்ற நிலையில், பல சினிமாக்கள் ஏன் எடுக்கப்படுகிறது என்ற கேள்வியைதான் என்னுள் எழுகிறது.

சினிமா மீது இருந்த ஆர்வம் மாறி, இன்று சினிமா மீது மோகம்தான் அதிகம் இருக்கிறது. இது நம் இன்றைய சமூகத்தை பெரிதும் நேராகவும் மறைமுகமாகவும் பெரிதும் பாதித்துள்ளது..

இந்நிலை ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல. இதை இந்த சமூகமும் சினிமா துறையும் உணர வேண்டும்..

* தினேஷ்மாயா *

அறிக்கை

அரசியல்வாதிகள் அறிக்கை விடுகிறார்களே..

அது எதற்கு என்பதுதான் எனக்கு ஒன்றுமே புரியவில்லை..

இந்த அறிக்கை கலாச்சாரம் மாறி மக்களோடும் சக அரசியல்வாதிகளிடமும் மனம்விட்டு நேராக பேசும் கலாச்சாரம் வருமேயானால் அன்றுதான் ஜனநாயகம் செழிக்கும்..

* தினேஷ்மாயா *

வருங்காலத்தில்

வருங்காலத்தில்..

" அனைத்து மக்களும் தங்கள் கைப்பேசியில் WiFi-ஐ அனைத்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது"

இது போன்ற அறிவிப்புகள் வரும்..

* தினேஷ்மாயா *

என்னத்த சொல்ல ?

தேர்தல் நாடகம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அனைத்து மக்களும் அறிந்ததே..

இந்நிலையில், தோல்வியடைந்த கட்சிகள் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றும் பண பலம் வென்றது எனவும் கூவிக்கொண்டிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது..

* தினேஷ்மாயா *