பரிணாமம்

Tuesday, March 31, 2020


மனிதன் இந்நிலையிலேயே (மேற்படம்) இருந்திருக்கலாம். நெருப்பையோ, சக்கரத்தையோ, விவசாயத்தையோ, அறிவியலையோ கண்டுபித்திருக்க வேண்டாம், தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு பரிணமித்திருக்க வேண்டாம் என்று எண்ணும் வண்ணம் செய்துவிட்டது இந்த மனிதக்கூட்டம்...

* தினேஷ்மாயா *

அவள் முகம் !!



அமாவாசை முடிந்து

வெண்ணிலா வானில் எட்டிப்பார்க்கும்

வைபவத்திற்குப் பெயர் என்ன தெரியுமா ??

அவள் முகம் !!

* தினேஷ்மாயா *

ஒன்று அதிகம் !!


இதுவரை - நான்

எழுதி பதிவு செய்தது ஆயிரம் கவிதைகள்...

எழுதி கிழித்துப்போட்டது ஆயிரம் ஆயிரம் கவிதைகள்...

எண்ணத்திலேயே கருகலைப்பு செய்யப்பட்டது

இன்னும் சில ஆயிரம் ஆயிரம் கவிதைகள்...

ஆனால், வார்த்தைகள் இன்றி தவித்த கவிதைகள்  -

பேரண்டத்தின் நட்சத்திர எண்ணிக்கைகளைவிடவும்

ஒன்று அதிகம் !!

* தினேஷ்மாயா * 

வல்லினம் மிகும் இடம்


” ச்” என்னும் வல்லினம் மிகும் இடம்

எனக்கு - உன் இதழ் தான் !

* தினேஷ்மாயா *

யாருக்கு தகுதியில்லை ?



பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த உலகம் வாழத்தகுதி இல்லாத இடமாக மாறிவருகிறது என்பதால் வேறு கிரகங்களிலும் வேறு பால்வளியிலும் மனிதர்கள் வாழத்தகுதியான இடம் இருக்கிறதா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த உலகில் வாழ மனிதனுக்குத்தான் தகுதி இல்லை என்பேன்.

கொரோனா தாக்குதலால் தற்போது உலகில் கிட்டத்தட்ட 170 கோடி மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். மேலும், பல்வேறு நாடுகளிலும் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுப்போன்ற செயல்களால், மனிதனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதினாலும், இயற்கையின் இயல்பு வாழ்க்கை மென்மேலும் உயர்ந்திருக்கிறது எனலாம்.

ஆம். மனிதனின் ஆசைக்கும் பேராசைக்கும் அவன் இயற்கை வளங்களை அழித்தும் இயற்கையை மாசுப்படுத்தியும் வருகிறான். அது இப்போது வெகுவாக குறைந்திருக்கிறதை காணலாம். வாழவே தகுதியில்லாத நகரங்களின் பட்டியலில் இருந்த நகரங்கள் இப்போது மீண்டும் நல்ல காற்றை சுவாசிக்க நேர்ந்தது. மனிதனால் கொட்டப்படும் குப்பைகள் குறைந்திருக்கிறது. அவனால் வெளியேற்றப்படும் கரியமில வாயுக்கள் குறைந்துள்ளது. இயற்கை தன்னைத்தானே மீட்டெடுத்து வருகிறது.

இந்த கொரோனா தாக்குதல் ஏற்ப்படுத்திய சூழல், மனிதன் இயற்கையை எப்படி கொன்றுக்கொண்டிருக்கிறான் என்பதை நன்கு உணர்த்துகிறது. மேலும், மனிதன் தான் அந்த கொலைக்காரன் என்பதையும் உணர்த்துகிறது.

உலகம் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று பலர் எச்சரிக்கை மணி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

உலகம் அழிவை நோக்கி செல்லவில்லை. மானுட இனம்தான் தன் அழிவை தானே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. மனித இனம் அழியும். ஆனால், அந்த மனித இனம் இல்லாத உலகம் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு இன்னும் புத்துணர்வுடன் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். அந்த உலகில், கடலில் இருக்கும் ஒரு நீர்த்துளியாக, அல்லது சிறு புல்லாகவோ மீண்டும் பிறந்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையிலே கலந்துவிட விரும்புகிறேன்.

* தினேஷ்மாயா *

ஊரடங்கு...

Friday, March 27, 2020



 கொரோனா முன்னெச்சரிக்கையாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும், காட்சி ஊடகங்களிலும் இதற்கு வரவேற்பும், கொஞ்சம் எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும், அன்றாடம் வருமானத்தை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும், கூலித்தொழிலாளர்கள், வேறு மாநிலத்தில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் இப்படி இதனால் பாதிப்படைவோரின் பட்டியல் நீள்கிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தை நான் நினைவுக் கூற விரும்புகிறேன். கடந்த ஆண்டு, அதாவது 05-08-2019 முதல் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த பதிவை நான் எழுதும் போது, இன்றோடு 226 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நாம் 21 நாட்கள், நம் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக ஊரடங்கில் இருக்கவே மிகவும் கஷ்டப்படுகிறோம். ஆனால், அங்கே மக்கள், பலரின் அரசியல் நலனுக்காக அப்பாவி மக்கள் ஊரடங்கை ஏற்க மனமின்றி திணிக்கப்பட்டிருக்கிறார்கள். 
அவர்கள் அங்கே கஷ்டப்படுவதால் நானும் இங்கே கஷ்டப்பட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நான் சொல்ல வருவது இதைத்தான். ஒடுக்குமுறை எங்கே நடந்தாலும் நாம் அதற்காக நம் குரலை கொடுப்போம். நாம் நேரடியாக அதில் பாதிப்படையாவிட்டாலும். அப்போதுதான், நம் குரல் ஒடுக்கப்படும்போது வேறொருவன் நமக்காக குரல் கொடுப்பான்.

இந்த சுய ஊரடங்கை பின்பற்றி கொரோனா  கொடுந்தொற்றை விரட்டி அடிப்போம்.

* தினேஷ்மாயா *

நீங்க முடியுமா ?

Tuesday, March 10, 2020




நீங்க முடியுமா ?
நினைவு தூங்குமா ?
நீங்க முடியுமா ?
நினைவு தூங்குமா ?

காலம் மாறுமா ?
காயம் ஆறுமா ?
வானம் பிரிந்த மேகமா ?
வாழ்வில் உனக்கு சோகமா ?
காதல் போயின் காதல் சாகுமா ?

காற்றாகவே நேற்றாகவே
நீ போனதேன் ?

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தபின்
கண் மூடுவேன்

நீங்க முடியுமா ?
நினைவு தூங்குமா ?

மூன்று காலில் காதல் தேடி
நடந்து போகிறேன்
இரண்டு இரவு இருந்த போதும்
நிலவை கேட்கிறேன்

நீ கடந்து போன திசையோ ?
நான் கேட்க மறந்த இசையோ ?
நீ தெய்வம் தேடும் சிலையோ ?
உன்னை மீட்க என்ன விலையோ ?

இன்று இல்லை நீ எனக்கு
உடைந்து போகிறேன்
மீண்டும் வாழ நாளை உண்டு
மீட்க வருகிறேன்

ஒரு தனிமையும்
ஒரு தனிமையும்
இனி இணையுமே

நீங்க முடியுமா ?
நினைவு தூங்குமா ?
காலம் மாறுமா ?
காயம் ஆறுமா ?
வானம் பிரிந்த மேகமா ?
வாழ்வில் உனக்கு சோகமா ?
காதல் போயின் காதல் சாகுமா ?

காற்றாகவே நேற்றாகவே
நீ போனதேன் ?

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தபின்
கண் மூடுவேன்

நீங்க முடியுமா ?
நினைவு தூங்குமா ?

படம் : சைக்கோ
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கபிலன்
குரல்: சித் ஸ்ரீராம்

* தினேஷ்மாயா *

மண்ணுருண்ட மேல




மண்ணுருண்ட மேல…….
மண்ணுருண்ட மேல…
மனுச பயன் ஆட்டம் பாரு
ஹா ஹா ஆட்டம் பாரு
ஹே.. ஹே.. ஆட்டம் பாரு
ஆட்டம் பாரு ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம்

மண்ணுருண்ட மேல இங்க
மனுச பயன் ஆட்டம் பாரு
கண்ணு ரெண்ட மூடிப்புட்டா
வீதியில போகும் தேரு
அண்டாவுல கொண்டு வந்து
சாராயத்த ஊத்து
அய்யாவோட ஊர்வலத்தில்
ஆடுங்கடா கூத்து
ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுசனுக்கு
ஊதுவாய்ங்க சங்கு
ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுசனுக்கு
ஊதுவாய்ங்க சங்கு

நெத்திக்காசு ஒத்த ரூவா
கூட வரும் சொத்து
ஹே ஒத்த ரூவா
ஹா ஹா ஒத்த ரூவா
ஹே ஹே ஒத்த ரூவா
ஒத்த ரூவா ஒத்த  ஒத்த ஒத்த
ஒத்த ஒத்த ஒத்த ஒத்த

நெத்திக்காசு ஒத்த ரூவா
கூட வரும் சொத்து தானே
செத்தவரும் சேர்ந்து ஆட
வாங்கிப் போட்டு குத்துவோமே
சாராயம் குடிச்சவங்க வேட்டி
அவுந்து விழுமே
குடம் ஒடைக்கும் இடம் வரைக்கும்
பொம்பளைங்க அழுமே
ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வர்லடா
அடுக்குமாடி வீடு இருந்தும்
ஆறடிதான் மெய்யடா
ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வர்லடா
அடுக்குமாடி வீடு இருந்தும்
ஆறடிதான் மெய்யடா

கீழ்சாதி உடம்புக்குள்ள…
கீழ்சாதி உடம்புக்குள்ள…
ஓடுறது சாக்கடையா ?
ஐயா ஓடுறது சாக்கடையா ?
அந்த மேல்சாதி காரனுக்கு..
அந்த மேல்சாதி காரனுக்கு..
ரெண்டு கொம்பிருந்தா
ஹா ஹா கொம்பிருந்தா
ஹே.. ஹே.. கொம்பிருந்தா
கொம்பிருந்தா கொம்பு கொம்பு கொம்பு
கொம்பு கொம்பு கொம்பு கொம்பு

கீழ்சாதி உடம்புக்குள்ள
ஓடுறது சாக்கடையா ?
மேல்சாதி காரனுக்கு
கொம்பிருந்தா காட்டுங்கையா
உழைக்குற கூட்டமெல்லாம்
கீழ்சாதி மனுசங்களாம்
உக்காந்து திங்கிறவெலாம்
மேல்சாதி வம்சங்கலாம்
என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கிப்போடு
என்னங்கடா நாடு
அட சாதிய பொதச்சிமூடு
என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கிப்போடு
என்னங்கடா நாடு
அட சாதிய பொதச்சிமூடு

படம் : சூரர்ரைப் போற்று
இசை : GV பிரகாஷ்
வரிகள் : ஏகாதசி
குரல்: செந்தில் கணேஷ்

* தினேஷ்மாயா *


உன்ன நெனெச்சு நெனெச்சு



உன்ன நினெச்சு நினெச்சு உருகிப்போனேன் மெழுகா..
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்துப்போனா அழகா..
உன்ன நினெச்சு நினெச்சு உருகிப் போனேன் மெழுகா..
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்துப் போனா அழகா..

யாரோ அவளோ ?
எனைத்தீண்டும் காற்றின் விரலோ?
யாரோ அவளோ ?
தாலாட்டும் தாயின்… குரலோ ?

உன்ன நினெச்சு நினெச்சு உருகிப்போனேன் மெழுகா..
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்துப்போனா அழகா..

வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவே
உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னைக் கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வைப் போனாலும்.. பாதை நீதானே..
காதல்தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை !!

உன்ன நினெச்சு நினெச்சு உருகிப்போனேன் மெழுகா..
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்துப்போனா அழகா..

ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ ?
உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ ?
காதில்  கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும் காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன்

உன்ன நினெச்சு நினெச்சு உருகிப்போனேன் மெழுகா..
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்துப்போனா அழகா..

யாரோ அவளோ ?
எனைத்தீண்டும் காற்றின் விரலோ?
யாரோ அவளோ ?
தாலாட்டும் தாயின் குரலோ ?

உன்ன நினெச்சு நினெச்சு உருகிப்போனேன் மெழுகா..
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்துப்போனா அழகா..

திரைப்படம்: சைக்கோ
இசை: இசைஞானி இளையராஜா
வரிகள்: கபிலன்
குரல்: சித் ஸ்ரீராம்

* தினேஷ்மாயா *