விவேகானந்தரின் பொன்மொழிகள் !

Friday, November 20, 2009



விவேகானந்தர்
என் மனம் கவர்ந்த ஒரு உன்னத மனிதர்.
நான் அறிந்த பல அறிஞர் பெருமக்கள் அனைவரும் ஏதோ ஒரு
காரணத்துக்காகவே பிரபலமானவர்கள்.
எந்த ஒரு குறிக்கோளும் இன்றி மக்களின் நன்மைக்காகவே தன் வாழ்நாளை
அர்ப்பணித்த உயர்ந்த மனிதர்.
மனிதர் அல்ல மகா அவதாரம்..
அவரின் பொன்மொழிகள் தமிழில் இங்கே உங்களின் உயர்வுக்காக தந்துள்ளேன்.
இதை ஒவ்வோர் மனிதனும் இனம், மதம் பாகுபாடின்றி பின்பற்றினால்
நிச்சயம் வாழ்க்கையில் வெல்லலாம்.


விவேகானந்தரின் பொன்மொழிகள்
· உங்களை நீங்களே நம்புங்கள் !

· இல்லை என்று சொல்லாதே !

· நீ வரம்பில்லா வலிமை உடையவன் !

· விடமுயற்சியே வெற்றி தரும் !

· எல்லா ஆற்றல்களுக்கும் நீயே சொந்தக்காரன் !

· உன் கனவை நிறைவேற்று !

· மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர் !

· ஆற்றலை வீணாக்காதே !

· நல்ல எண்ணங்களை கருவிகளாகக் கைக்கொள் !

· நமது நிலைக்கு நாமே காரணம் !

· நமது விதியை நாமே நிர்ணயிக்கிறோம் !

· நடந்து முடிந்ததைப் பற்றீ வருந்தாதே !

· உயர்ந்த லட்சியத்தை மேற்கொள் !

· தூய்மைப்படுத்திக் கொள் !

· சண்டையிடுதலும் குறை சொல்வதும் வீண் !

· தூய்மை, பொறுமை, விடமுயற்சி வெற்றிக்கு ஆதாரம் !

· உன் வினை உன்னைச் சுடும் !

· கரடு முரடான பாதையே நன்மைக்கு அழைத்துச்செல்லும் !

· அடக்குமுறையும் எதிர்ப்பும் வரவேற்கத் தக்கவையே !

· சொந்தக் காலில் நிற்க உதவுவதே உண்மைக் கல்வி !

· கட்டளையிட விரும்பாதே, கீழ்ப்படிந்து நட !

· பிறரை எள்ளி நகையாடுவது ஒரு நோய் !

· தாழ்ந்தவர்களுக்குக் கல்வி அளிப்பது சிறந்த நன்மை !

· நல்லொழுக்கம் தருவதே உயர்ந்த கல்வி !

· நமக்குத் தேவை அன்பும் பொறுமையுமே !

· கருத்து மட்டுமல்ல, காரியமற்றவும் வேண்டும் !

· உலகுக்கு செய்யும் நன்மை நமக்கே நன்மையாக முடியும் !

· பிச்சையல்ல…. அது ஒரு உதவி !

· நன்மை செய், நன்மை தானாக வந்தடையும் !

· நீ யார் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பது முக்கியம் !

· ஒவ்வோர் உயிரும் கடவுளே !

· சக்தியை சிதற விடாதே !

· அஞ்சாமல் முன்னேறு !

· விக்கிரகத்தில் மட்டுமே கடவுள் இல்லை !

· நீ கடவுளாக ஆக தியாகம் செய் !

· எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து விடு !

· கட்டளையிடுமுன் கீழ்ப்படிய கற்றுக்கொள் !

· பணம் படைத்தவர்கள் பிணங்களே !

· இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை
செய்யக் கூடிய கைகள் இவையே முக்கிய தேவை !

· உன்னை அழித்துக் கொண்டாவது பிறருக்கு நன்மை செய் !

· உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள் !

· இந்தியாவின் எதிர்காலம் உன் கையில் மட்டுமே உள்ளது !

· செம்மறி ஆடுகளாக வாழாதே !

· நாய்குட்டிகளின் குரைப்பை கேட்டு அஞ்ச வேண்டாம் !

· பாமர மக்களை ஒதுக்கியதே நம் நாடு செய்த பெரும் பாவம் !

· எண்ணம் என்பது சொல்லின் ஆற்றல் !

· ஏட்டுக் கல்வியால் குழப்பமே மிஞ்சும் !

· உலகம் ஒரு பயிற்சிக் கூடம் !

· எல்லாம் தெரிந்து விட்டதாக எண்ணாதே !

· உன்னைவிட உயர்ந்தவர் இல்லை !

· கடவுளுக்கு உருவம் தேவையில்லை !

· கடவுள் நம்மை காப்பாற்றுகிறார் !

· அறிவு வேறு, உணர்வு வேறு !

· சடங்குகள் மிகவும் தாழ்ந்தவை !

· விவாதம் செய்வதில் ஆற்றலை
செலவழிக்காதே !

· உன்னுடைய செல்வம் கடவுளுக்கு சொந்தமானது !

· பக்குவம் அடைந்தால் யோகி ஆகிவிடலாம் !

· உலகத்தை விரும்பாதே !

· மயக்கம் தரும் மயக்கம் !

· ஆசைகள் ஒழிய அன்பு செலுத்து !

· அசைவற்ற எண்ணம் பெறு !

· இரக்க குணம் நாம் பெற்ற பேறு !

· வயிறு புடைக்க உண்ணாதே !

· உணவுக்காக உயிர் கொலையா !

· தீயவன் தொட்ட உணவு நஞ்சு !

· தூய்மையற்ற உணவு மனத்தின் தூய்மையை கெடுக்கும் !

· உடலின் தூய்மை மனத்தின் தூய்மை !

· ஆசைகள் மனிதனை அடிமையாக்குகிறது !

· தீமைகளுக்கெல்லாம் அடிப்படை பொறாமை !

· தாவிக் குதித்து கீழே விழாதே !

· நினைப்பதற்கெல்லாம் அடிமையாகாதே !

· இசைக்கு கடவுளும் வளைந்து கொடுக்கின்றார் !

· உனக்காக மட்டும் வாழ்வது வாழ்க்கையல்ல !

· சொர்க்கமும் நரகமும் கனவுகளே !

· மனத்தை அடக்கு, புலன்கள் தொடர்பை அறுத்துவிடு !

· எல்லாம் மயக்கங்களே !

· புலன்கள் உன்னை ஏமாற்றுகின்றன !

· ஆன்மாவே அனைத்துக்கும் மெய்ப்பொருள் !

· உலகம் ஒரு கனவு !

· எல்லா மனிதர்களும் கடவுளே !

· உண்மையை தைரியமாக பேசு !

· கங்கை கரையில் கிணறு தோண்டுவதா ?

· மூட நம்பிக்கை உன்னை காப்பாற்றாது !

· நீ இந்த உலகின் அரசன் !

· சுதந்திரமாக இரு, பயந்தவனாக இராதே !

· அறிவு முடியும் இடத்தில் சமயம் தொடங்கும் !

· நிகழ்காலத்தில் வாழு !

· துயரத்திற்க்கு காரணம் கண்ணியம்மில்லாமல் இருப்பதே !

· நிலையான உணர்வுநிலையே கடவுள் !

· அறிவு இருக்கிறது கைகள்தான் இல்லை !

· ஏழைகள் உயராதவரை இந்தியா உயராது!

· உறங்குவதற்கு இது நேரமில்லை !

· உதடுகளை மூடிக் கொண்டு இதயங்களை திறந்து வை !

· அழுகையை நிறுத்துங்கள் !

· உயிர் போவதானாலும் பிறருக்காக உழையுங்கள் !

· மரணம் வரும் வரை வேலை செய் !

· தன்நம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் !

· எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் !

· ஆயிரம் முறை தோற்றாலும் முயற்சியைக் கைவிடாதே !

· உண்மை ஒன்றுதான் வலிமையை தருகிறது !

· விடா முயற்சியும் மன உறுதியும் வெற்றியின் படிகள் !

· ஏதாவது வீர செயலை செய் !

· முன்னேறிச் செல் !

· பிறரை நம்பாதே – உன்னையே நம்பு !

· கடவுளை கூவி அழைத்தால் மட்டுமே வெற்றி வந்து விடாது !

· ஆசைகளை விடு, சொர்க்கத்தை அடையலாம் !

· கடவுள் மீது உருவத்தை புகுத்தக் கூடாது !

· ஆண்டவனின் பார்வையில் மனிதன் ஒரு பிரதிநிதி !

· சூரியன் ஒன்றே பார்வைகள் பல பல !

· வேறுபாடுகள் மறைந்து போகட்டும் !

· உங்களுடையது சிறப்பான இலட்சியம் !

· பிதாவை நொக்கி பிரார்த்தனை செய் !

· ஆன்ம சக்தி எல்லோருக்கும் பொதுவானது !

· கடவுள் ஒரு வைர சுரங்கம் !

· கடவுளுக்கு மட்டுமே சேவை செய் !

· எதிர்ப்பு ஒரு வீண் வேலை !

· ஒரே நாமம் ! ஒரே சின்னம் !

· கடவுளுடன் வாழ முடியும் !

· முன்னேறிக் கொண்டே இரு !

· உண்மை, தூய்மை, சுயநலமின்மை !

· நன்மை செய்வதே தர்மம் !

· கடுமையாக உழைதால்தான் சாதனையில் உயர்வு !

· சிந்தித்துக் கொண்டே இரு !

· கடவுள் தரிசனத்துக்கு உதவுவது ஆன்மா பரிசுத்தமே !

· நேர்மையுடன் இரு, தைரியமாக இரு !


அன்புடன் - 

தினேஷ்மாயா

DhineshMaya Blog

Monday, November 09, 2009



அனைவர்க்கும் வணக்கம் ! ! !

என் வலைப்பக்கத்தை தேடி வந்தமைக்காக
நன்றிகள் பல...

உங்களுக்கு நிச்சயமாக ஒரு சிறந்த, மறக்கமுடியாத அனுபவத்தை தருவேன் என
உறுதியளிக்கிறேன்....

சிறுகதை, கவிதை, விழிப்புணர்வு கட்டுரை, பொது கட்டுரை, பாடல் வரிகள், எப்போதாவது ஒருசில அறிவுரைகள், இலக்கிய இலக்கண செய்திகள், வரலாற்று சுவடுகள், இன்னும் பல உங்களுக்காக அள்ளித்தர காத்திருக்கின்றேன்.....


இதோ என் முதல் கவிதை....


ஆத்திச்சூடி
  • அறுவடை செய்…
  • ஆண்டவனை தொழு…
  • இயன்றவரை உதவு…
  • ஈரநெஞ்சு கொள்…
  • உதவிசெய்து வாழ்…
  • ஊன்றுகோலாய் இரு…
  • எண்ணம்தெளிவு பெறு…
  • ஏட்டில்புலமை புரி…
  • ஐம்புலன் அடக்கு…
  • ஒருமுகமனம் வேண்டு…
  • ஓராயிரம்துறை கற்றறி…
  • ஔவைசொல் கேள்….


    தினேஷ்மாயா

தங்களின் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆவலுடன்
எதிர்நோக்கி காத்துகொண்டிருக்கிறேன்...


தொடர்புக்கு:
மு.தினேஷ் குமார்.
கைபேசி : 9791155982
மின்னஞ்சல் : mddinesh@yahoo.co.in