இரகசியம்

Monday, June 21, 2021


உன் ரவிக்கை ரகசியம் அறிய வந்தவனை

மஞ்சள் கயிறெனும் வேலியால் தடுத்துவிட்டாயே !

* தினேஷ்மாயா *


தொடரும்


அதிகாலை பனித்துளிக்கும் புல்லுக்குமான தொடர்பு

சூரியன் வரும்வரை...

உனக்கும் எனக்குமான அன்பு

மரணம் வரும்வரை...

* தினேஷ்மாயா *

கடற்கன்னி



கடற்கன்னிகள் உண்மையல்ல என்றிருந்தேன்.

கடற்கரையில் அவளைக்காணும் வரையில்..

* தினேஷ்மாயா *



 

பரப்பிரம்மம்

ஆரம்பத்தில் ரிக் வேதம் மற்றும் பிற வேத, ஆரன்யக, உபநிடத நூல்களில் எல்லாம் கடவுளைப்பற்றிய பிம்பம் ஒருவாறாக கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் இதை கேள்வி கேட்கும் முற்போக்கு சிந்தனையாளர்கள் வரலாம் என்று எவனோ ஒருவன் நினைத்திருக்கிறான். அவன் உருவாக்கிய பொய்யான சித்தாந்தமே இந்த “பரப்பிரம்மம்” என்பது.

கடவுள் எங்கே இருக்கிறார் அவரைக் காட்டுங்கள் என்று கேட்போருக்கு, அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று பதில் கூறவே இந்த பரப்பிரம்மம் சித்தாந்தம் உருவாக்கப்பட்டது. காற்றைப்போல எங்கும் இருப்பவரை நீதான் உணர வேண்டும், உன் கண்களுக்கெல்லாம் தெரியாது, நீயே உணர்ந்து புரிந்துக்கொள் என்று கிளப்பிவிட்டான்.

அவன் சொல்லிவிட்டுச் சென்றதை, ஏன் என்று எவரும் கேள்விகேட்காமல், அவன் சொன்னது உண்மைதானா என்றும் ஆராயாமல் அப்படியே அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தொடங்கினர். 

இந்த உண்மையை அறிந்து, பரப்பிரம்மம் என்று ஏதுமில்லை என்பதை உணர்வோமாக.

* தினேஷ்மாயா *

பித்தலாட்டம்

 கடவுள் பெயரால் நடக்கும் பொய்யும் பித்தலாட்டத்தையும் கடவுள் கண்டுக்கொள்ளவோ தடுக்காதபோதுதான் புரிகிறது, கடவுள் என்கிற சித்தாந்தமே பொய்யும் பித்தலாட்டமுமே என்று...

* தினேஷ்மாயா *

புலம்பல்கள்

Thursday, June 10, 2021

நான் உன்னுடன் பேச நினைத்து, என்னுள்ளேயே பேசிக்கொண்ட வார்த்தைகளை சேமித்தால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பல புத்தகங்களை பிரசுரிக்கலாம்.

நான் உன்னிடம் அழ நினைத்து, கண்ணீர் வரும்படி தனியாகவும், கண்ணீரை வெளிப்படுத்தாமல் என்னுள்ளும் தொண்டை தழுதழுக்க அழுதபோது வெளிப்பட்ட கண்ணீரை எல்லாம் சேமித்தால் செவ்வாய் கிரகத்தில் இவ்வுலகின் அனைத்து உயிரினங்களும் வாழப் போதுமான நீரை காணலாம்.

நான் உன்னிடம் காட்ட விரும்பி, ஆனால் உன்னிடம் வெளிக்காட்டாமல் விட்ட அன்பினை சேமித்தால், பிரபங்சத்தையே நிரப்பிடலாம்.

* தினேஷ்மாயா *

44-வது சென்னை புத்தகக்காட்சி



 

ஏறத்தாழ பல ஆண்டுகள் கழித்து, சென்னை புத்தகக் காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

44-வது சென்னை புத்தகக் காட்சியில்..

* தினேஷ்மாயா *

மனிதத்தை மீட்டெடுப்போம்

 நாம் நிம்மதியாய் வாழ எதுவும் தேவையில்லை. நம் வாழ்க்கையையும், நிம்மதியையும் கெடுக்கவே இங்கே பல விடயங்கள் இருக்கின்றன. மனிதனை மகிழ்விக்க கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் இன்று மனிதனையும் மனிதத்தையும், பல நாள் பசியா இருந்த மலைப்பாம்பு தனக்கு கிடைத்த சிறு ஆட்டுக்குட்டியை விழுங்குவதைப்போல விழுங்கிக்கொண்டிருக்கிறது.

இதனாலேயே, மனித உறவுகளில் அதிகம் பிளவு ஏற்படுகிறது. ஒரே இடத்தில் இருந்து மட்டுமே தொலைப்பேசியை பேச முடியும் என்கிற வசதியே முன்னர் இருந்தது. நாம் எங்கு இருக்கிறோமோ அங்கும் நம் தொலைப்பேசியை எடுத்துக்கொண்டு செல்லலாம் என்கிற நிலை வந்தது. தொலைக்காட்சியில் பார்க்கும் அனைத்தையும் நம் தொடுதிரை தொலைப்பேசியில் காணும்படி செய்துவிட்டனர். பிறகென்ன, நிற்கும்போது, நடக்கும்போது, உறங்கும்போது இப்படி எல்லா நேரங்களிலும் தொலைப்பேசி தொல்லைப்பேசியாக நம்முடன் பயணிக்கிறது. இறந்தபிறகு மனிதனுடன் சேர்த்து புதைக்கப்படுவதில்லை, அதைத்தவிர இந்த தொல்லைப்பேசி மனித உறவுகளை மேம்படுத்துவதை விடவும் அதிகம் பிளவையே ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

ஒரு மாதம் முழுவதற்கும் 1GB data பயன்படுத்திய நாம், இன்று ஒரு நாளைக்கு 1.5 GB data நமக்கு போதவில்லை. இணையம் என்வது சிலந்திவலை. அதில் இரைகள் சிக்குண்டு சிலந்திக்கு உணவாவதுபோல, அந்த வலையில் நாமும் சிக்குண்டு நம் மனிதத்தையும், வாழ்க்கையையும் நாசமாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. நல்ல விடயங்களுக்காக இணையம் பயன்பட்டாலும், குணம் நாடி குற்றமும் நாடி என்கிற விதிப்படி பார்த்தால், இதில் குணங்களைவிடவும் குற்றங்களே அதிகம் என்பது திண்ணம்.

உறவுகளையும், உணர்வுகளையும், மனிதத்தையும் மீட்டெடுப்போம். 

* தினேஷ்மாயா *

be happy

 every human 100% deserve to live happy...

--------------------

that's the message..

*DhineshMaya*

நீண்ட ஆயுள்

Monday, June 07, 2021

ஒரு மனிதனுக்கு மரணம் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஒருவர் இயற்கையாக மரணிக்கிறார் என்றால், அவர் நீண்ட காலம் வாழ்ந்தபிறகே இறப்பார். ஒருவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டுமானால், முதலில் தன் வாழ்வில் கோபத்தை அவர் விட்டொழிக்க வேண்டும். 
எவர் ஒருவர் கோபம் கொள்ளாமல் இருக்கிறாரோ, அவர் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.

* தினேஷ்மாயா *

என்னுள்ளே என்னுள்ளே

Tuesday, June 01, 2021

 


வானத்தை அடைய வழிகள் வேண்டா

எவ்விடத்திலிருந்தும் வானை அடையலாம்..

உன்னை அடையவும் வழிகள் வேண்டா

என்னுள்ளேயே உறைந்திருக்கும் உன்னை !!

* தினேஷ்மாயா *

சரணாகதி



எங்கிருந்து விழுந்தாலும்

பூமியின் மீதுதான் விழுந்தாக வேண்டும்..

நானும் எவ்விடத்தே இருப்பினும்

என் நினைவுகள் உன்னை மட்டுமே

சரணடையும் !!

* தினேஷ்மாயா * 

அமில மழை



அது என்னவோ குளிர்மழை தான்

ஆனால் - 

அந்த குளிர் மழையில்

நீயும் என்னருகில் இருக்கையில்

என்னுள் ஏனோ

அமில மழை !!

 * தினேஷ்மாயா *

நெஞ்சத்துப் பூச்சி


வானில் உலவும் வண்ணத்துப்பூச்சி

நீ இருக்கும் நெஞ்சத்துள் நுழைந்துவிட்டது...

தன் இராணியான

உன்னைக் காண...

* தினேஷ்மாயா *