உடுக்கும் ஊன் அடக்கியான்

Tuesday, February 25, 2020



உடுக்கும் ஊன் அடக்கியான்
நடப்பினை ஒடுக்கியான்
படைப்பினை கடத்துவான்
கடைநிலை உணர்த்துவான்

உடுக்கும் ஊன் அடக்கியான்
நடப்பினை ஒடுக்கியான்
படைப்பினை கடத்துவான்
கடைநிலை உணர்த்துவான்

தடுக்கும் உந்தன் ஊழ்வினை
முடக்கும் உன் மனம்தனை
கடந்து செல்ல உந்துவான்
கடைநிலை உணர்த்துவான்

தடுக்கும் உந்தன் ஊழ்வினை
முடக்கும் உன் மனம்தனை
கடந்து செல்ல உந்துவான்
கடைநிலை உணர்த்துவான்

நிறைவு காணும் மறை வகுத்த ஆதியோகி
மறைகள் போற்றும் அருளின் ஊற்று ஆதியோகி
நிறைவு காணும் மறை வகுத்த ஆதியோகி
மறைகள் போற்றும் அருளின் ஊற்று ஆதியோகி

வினை வழி செல்லும் மனம்
நிலை வழித்திடும் விதம்
தடைகளை அகற்றுவான்
கடைநிலை உணர்த்துவான்

வினை வழி செல்லும் மனம்
நிலை வழித்திடும் விதம்
தடைகளை அகற்றுவான்
கடைநிலை உணர்த்துவான்

மறைந்திடா தடைகளை
கரைத்திடும் முறைகளை
கருத்தினில் நிறுத்துவான்
கடைநிலை உணர்த்துவான்

மறைந்திடா தடைகளை
கரைத்திடும் முறைகளை
கருத்தினில் நிறுத்துவான்
கடைநிலை உணர்த்துவான்

நிறைவு காணும் மறை வகுத்த ஆதியோகி
மறைகள் போற்றும் அருளின் ஊற்று ஆதியோகி
நிறைவு காணும் மறை வகுத்த ஆதியோகி
மறைகள் போற்றும் அருளின் ஊற்று ஆதியோகி

இறப்பினை விடுத்திட
பிறப்பினை அறுத்திட
அறத்தினில் நிறுத்துவான்
கடைநிலை உணர்த்துவான்

இறப்பினை விடுத்திட
பிறப்பினை அறுத்திட
அறத்தினில் நிறுத்துவான்
கடைநிலை உணர்த்துவான்

சப்த யோகி வேண்டியே
சப்த நாடி தாண்டியே
சப்தத்தை அடக்கியான்
கடைநிலை உணர்த்துவான்

சப்த யோகி வேண்டியே
சப்த நாடி தாண்டியே
சப்தத்தை அடக்கியான்
கடைநிலை உணர்த்துவான்

நிறைவு காணும் மறை வகுத்த ஆதியோகி
மறைகள் போற்றும் அருளின் ஊற்று ஆதியோகி
நிறைவு காணும் மறை வகுத்த ஆதியோகி
மறைகள் போற்றும் அருளின் ஊற்று ஆதியோகி

ஆல்பம்: ஆதியோகி - ஈஷா

* தினேஷ்மாயா *