நாம் பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி !

Tuesday, December 19, 2017


கண்கள் நான்கில்

காணப்படும்

காட்சி - ஒன்றே - அதுதான் நம்

காதல் !!

* தினேஷ்மாயா *

மீண்டும் ஒருமுறை

Friday, December 15, 2017




பல மாதங்களுக்குப் பிறகு

இன்று - மீண்டுமொருமுறை

தூக்கம் தொலைத்திருக்கிறேன் !

#தினேஷ்மாயா

கவிஞானாகிவிட்டேனோ


காரணமுமின்றி

கருவுமின்றி

கவியெழுதுவதால் - நானும்

கவிஞானாகிவிட்டேனோ ?!

#தினேஷ்மாயா




செவி சேரா மௌனங்கள்



   ஒரு நடுத்தர வர்க்கத்தின் ஆண்மகனின் ஆசைகளும் கனவுகளும் உணர்வுகளும், கடைசிவரை சொல்லப்படுவதும் இல்லை, கேட்கப்படுவதும் இல்லை..

#தினேஷ்மாயா

அர்த்தம்



அவள் பேசிய வார்த்தைகளைவிட,

அவன் பேசாத வார்த்தைகளுக்கு

அர்த்தம் அதிகம் !!

#தினேஷ்மாயா

நான்கு கண்களில்



அவளின் அழுகை

நான்கு கண்களிலும்

நீரை வார்க்கிறது !

என் கண்களையும் சேர்த்து..

#தினேஷ்மாயா

UNIVERSE

Tuesday, December 12, 2017



Home..

Street..

Home town..

Native District..

Home State..

Mother Nation..

World...

I thought all these days I belong here..

Nope..

I belong to this entire UNIVERSE !!

Definitely I can say that, if I depart from this world,

I will.land on a very very beautiful place of this UNIVERSE !!

* தினேஷ்மாயா *

Is it so ?



Suicide is not the only option !!

But - if you don't have any other option

This will.be the final option !!

- Anonymous

*  தினேஷ்மாயா *

Sometimes.....


* தினேஷ்மாயா *

காவிய காதல்

Monday, December 11, 2017





நம் முத்தம் ஒரு

ஹைக்கு -

சிறிதாக இருந்தாலும்

சிலிர்க்க வைக்கும் !!

நம் ஊடல், ஒரு

காவியம் -

கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்

படிக்க படிக்க குதூகலமூட்டும் !!

நம் கூடல், ஒரு

இதிகாசம் -

படிக்க படிக்க சிலிர்க்கும்

படித்து முடித்தாலும்

காலம் காலமாக மனதில் நிற்கும் !!

* தினேஷ்பூர்ணிஷா *

கவிதைகள் சொல்லவா !!


நாணத்தால் நான் நிலம் நோக்க

ஆச்சரியத்தில் நீ வான் நோக்க

நம் இதழ்கள்

கவி பேசிக்கொள்கின்றன !!

* தினேஷ்பூர்ணிஷா *

புதுப்புது அர்த்தங்கள்




என் விரல்கள் எத்தனையோ

கவிதைகள் கிறுக்கி இருக்கிறது..

ஆனால் -

என் விரல்கள் உன் தேகத்தில்

கவியெழுதும்போதுதான்

என் கவிதைகளுக்கு

புதுப்புது அர்த்தங்கள் பிறக்கிறதடி..

* தினேஷ்பூர்ணிஷா *

பத்திரமாக வைத்துக்கொள்



உன்னிடம் தந்துவிட்டு வந்திருக்கிறேன்..

அடுத்த வாரம் வந்து திரும்ப -

வாங்கிக்கொள்கிறேன்..

அதுவரை பத்திரமாக வைத்திரு -

என்னுயிரை !!

* தினேஷ்பூர்ணிஷா *

ஏழாம் சுவை



இதுவரை நான் அறிந்தது

அறுசுவை மட்டுமே..

இன்று உணர்ந்தேன்

ஏழாம் சுவையை !!

உன் இதழ்களின் தேன்சுவையை !!

* தினேஷ்பூர்ணிஷா *

மௌன ஞானி

Thursday, December 07, 2017




என் சிந்தையில் உதித்த ஞான சிறுகதை இது..

" ஒருவன் என்னிடம் கேட்கிறான்..

மூன்று பேர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர்..

முதலாமவர் அந்த விஷயத்தை வாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

இரண்டாமவர் அந்த விஷயத்தை விவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

மூன்றாமவர் அந்த விஷயத்தை விதண்டாவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த மூவரில், யார் செய்வது சரி என்று என்னிடம் வந்து கேட்கிறான்.

நான் மௌனமாக இருந்தேன். மீண்டும் என்னிடம் இதே கேள்வியை கேட்கிறான். அப்போதும் நான் மௌனமாக இருந்தேன். அவன் இந்த கேள்வியை என்னிடம் பலமுறை கேட்டான். ஆனாலும் நான் ஒவ்வொருமுறையும் மௌனமாகவே இருந்தேன். அவன் பொறுமை இழந்து சென்றுவிட்டான்.

நான் அவனுக்கு சொன்னது அவனுக்கு புரியவில்லை. எந்த ஒரு விஷயமானாலும், அதில் வாதம் செய்வதோ விவாதம் செய்வதோ அல்லது விதண்டாவாதம் செய்வதோ சரியல்ல. அனைத்து நிலையிலும் மௌனம் காப்பதே சிறந்தது என்பதை நான் அவனுக்கு குறிப்பால் உணர்த்தினேன். ஞானம் உள்ளவர்கள் புரிந்துக்கொள்வார்கள். ஞானமற்றவர்களுக்கு ஞானம் வரும்போது மௌனத்தின் சக்தி புரியும் !"

* தினேஷ்மாயா *

கேள்வி பதில்



கேட்கப்படும் அனைத்தும்
கேள்விகள் ஆகிவிடாது..

சொல்லப்படும் அனைத்தும்
பதில்கள் ஆகிவிடாது..

* தினேஷ்மாயா *

காதலும் களவும்

Friday, December 01, 2017



ஆன்றார் உரைப்பர்

மந்திரம் கால் மதி முக்கால்..

நானுரைப்பேன்

களவு கால் காதல் முக்கால் !!

* தினேஷ்மாயா *

சொர்க்க வாசல்



நான் அவள்மேல் கொண்ட

ஆசையின் பாதையில்

பயணப்பட்டேன்..

சொர்க்கத்தின் வாசல் என்னை

அன்புடன் அழைத்தது !!

* தினேஷ்மாயா *

கள்ளி நீ




கனவுகளில்

களவாடிவிட்டு சென்ற

கள்ளி நீ !!

* தினேஷ்மாயா *

நீதானடி



இசைக்கு அடுத்து

இவ்வுலகில் - என்னுயிரை

இதுபோல் துளைத்தது

நீதானடி !!

* தினேஷ்மாயா *

எப்போது ?



உன்னோடு நான்

கைகோர்த்து நடப்பது

எப்போது ?


உன் மடியில் நான்

தலைசாய்த்து கதைபேசுவது

எப்போது ?


உன் கைகளால் நான்

உணவை சுவைப்பது

எப்போது ?


உன் கைகளால் என்

தலை முடி கோதப்படுவது

எப்போது ?


உன் அழகில் நான்

மயங்கப்போவது

எப்போது ?


உன் பார்வையால் நான்

உன்னில் தொலைவது

எப்போது ?


உன் இதழ்களில் நான்

புல்லாங்குழல் வாசிப்பத

எப்போது ?


உன் பெண்மைக்கு நான்

விடை சொல்வது

எப்போது !!!!


* தினேஷ்மாயா * 

வானவில்



என்னவள் -

தன் கைகளில்

கொஞ்சம் கோலப்பொடியை எடுத்து

வானத்தை நோக்கி தூவினாள்...

வானவில் பிறந்தது !!

* தினேஷ்மாயா *

என் காதல்



உன் கைவிரலில் இருக்கும்
நான் அணிவித்த மோதிரத்தைப் பார்..
அதில் என் இதயத்துடிப்பு இருக்கிறது !

உனக்கு நான் பரிசளித்த ஓவியத்தைப் பார்..
அதின் என் உதிரம்
இருக்கிறது !

என் உள்ளமும் உதிரமும்
உனக்கென கொடுத்து விட்டேன்..

அதில் என் காதல் உள்ளதடி !!

* தினேஷ்மாயா *


மாங்கல்யம் தந்துனாநேனா !

Friday, November 10, 2017


* தினேஷ்மாயா *

அவள் வந்துவிட்டாள் !!




   என் கரம்.கொடுக்கும் பூக்களை காதலோடு பெற ஒருத்தி வந்துவிட்டாள். என் கடந்தகால வலிகளை போக்க ஒருத்தி வந்துவிட்டாள். என் இதயம் பெற்று தன் இதயம் தர ஒருத்தி வந்துவிட்டாள். என் கையோடு கைகோர்க்க ஒருத்தி வந்துவிட்டாள். என் கவிதைகள் அனைத்திற்கும் அர்த்தம் சொல்ல ஒருத்தி வந்துவிட்டாள். என் கனவுகளுக்கு சிறகுகளை பரிசளிக்க.ஒருத்தி வந்துவிட்டாள். என் வாழ்வில் ஒளியேற்ற என் தேவதை வந்துவிட்டாள் !!

* தினேஷ்மாயா *

குழந்தைகள் !


என் முன்னே நிற்கும் குழந்தை

என் கையில் இருக்கும் குழந்தையை

கொஞ்சுகிறது !!

என்னையும் நீ கொஞ்சுவது எக்காலம் ?

* தினேஷ்மாயா *

கொடுத்து வைத்தவன்



எல்லோரும் சொல்கிறார்கள்..

சிலசமயம், நீயே சொன்னதுண்டு..

நான் கொடுத்து வைத்தவன் என்று..

அதெல்லாம் எனக்கு தெரியாது -

என் இதயத்தை உன்னிடம்

நான் கொடுத்து வைத்திருக்கிறேன் !!

இதுதான் எனக்கு தெரியுமடி !!

* தினேஷ்மாயா *

சொக்கத்தங்கம்





வெள்ளிக்கொலுசு தான்..

ஆனால், அவள் பாதம் தொட்டதும்

தங்கமாய் மாறிவிட்டது !!

தங்கமே பெண்ணாய் இருப்பதால் !!

* தினேஷ்மாயா *

சங்கேத வார்த்தைகள்




அவளும் நானும் எங்களுக்குள் பேசிக்கொள்ள சில சங்கேத வார்த்தைகளை வைத்துள்ளோம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பதிகிறேன் !!

* ALM
* NF
* MH
* Cell
* C?
* CI
* MPD
* Butterflies
* Coffee Bite
* Pop Song
* Hero Pen
* Speaker
* Honeyfab
* Avocado
* Knock Out

* தினேஷ்பூர்ணிஷா *

என்னுயிர் இருக்கும்



கண்ணகி தன் சிலம்பை உடைத்து காண்பித்தாள்.

அதில் முத்து கற்கள் இருந்தது..

என்னவள் கொழுசின் மணியை உடைத்துப் பாருங்கள்..

அங்கே என்னுயிர் இருக்கும் !!

* தினேஷ்மாயா *

சத்தியம்


 நான் பெரும்பாலும், ஒருவர் என்னிடம் சத்தியம் கேட்கும்போது பலமுறை சிந்திப்பேன்.  இந்த சத்தியத்தை என்னால் காப்பாற்ற முடியுமா, ஏன் சத்தியம் கேட்கிறார், எதற்காக கேட்கிறார், சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை காப்பாற்ற முடியாவிட்டால் ஏற்படும் பாதிப்பின் தன்மை என்ன என்றெல்லாம் பலமுறை ஆராய்ந்துவிட்டுதான் சத்தியம் செய்ய முன் வருவேன். என் மனம் வேண்டாம் என்றால், சத்தியம் செய்ய மாட்டேன். செய்த சத்தியத்தின்படி நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

ஆனால், என்னவள் என்னிடம் ஒரு சத்தியம் செய்துகொடு என்பாள். நான், ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவே மாட்டேன். அவள் என்ன சத்தியம் கேட்கிறாள், பெரியதா சிறியதா, எதற்காக கேட்கிறாள் இப்படியெல்லாம் ஒன்றுமே சிந்திக்க மாட்டேன். அவள் கேட்ட அடுத்த நிமிடமே சத்தியம் செய்து கொடுத்துவிடுவேன். அவளுக்காக எப்பாடுபட்டாவது அந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன். அதற்கு எங்கள் காதல் எனக்கு உறுதுணையாக இருக்கும். அதனால்தான். அவளுக்கு நான் செய்து கொடுக்கும் சத்தியம் அனைத்தையும் நிறைவேற்ற முடிகிறது என்னாள்.

சமீபத்தில் அவளுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். அவள் கேட்காமலே நானே செய்து கொடுத்த சத்தியம் அது. இந்த நொடியில் உன் கரம் பற்றினேன். இனி ஒருபோதும் பிரிய மாட்டேன் என்று !!

* தினேஷ்மாயா *

சத்தமில்லா முத்தம்


 அவள் என்னிடம் சில சமயம் அதிகம் சண்டை போடுவாள். சத்தம் போடுவாள். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏன் தெரியுமா ?

அவள் சண்டையும் கோபமும் தீர்ந்த பிறகு, அவளின் சத்தத்தின் அளவை பொறுத்து அவளின் சத்தமில்லா முத்தம் அதிகம் எனக்கு கிடைக்கும். என்னை சமாதானப்படுத்த..

புறாவை தூதுவிட்டு சமாதானப்படுத்தியது அந்த காலம். இது முத்தத்தை தூதுவிட்டு சமாதானப்படுத்துவது இக்காலம் !

* தினேஷ்மாயா *

இன்னும் ஒரு படி

Wednesday, November 01, 2017


நாமிருவரும்

நிச்சயமாக

இன்னும் ஒரு படி

நெருங்கி வந்துவிட்டோம் !!

* தினேஷ்மாயா *

கஞ்சன்


அவள் தரும் முத்தத்தை தாராளமாக வாங்கிக்கொள்கிறேன்

ஆனால், அவளுக்கு கொடுப்பதில்லை நான்..

இதனால் என்னை கஞ்சன் என்கிறாள் !

பொறுத்திரு கண்ணே !!

வட்டியும் முதலுமாய் சேர்த்து 

சரியான தருணத்தில் திருப்பி தருகிறேனடி..

* தினேஷ்மாயா *

அவளை தண்டிக்க விரும்புகிறேன்


தப்பு செய்தவரைவிட

தப்பு செய்ய தூண்டியவர்களுக்குத்தான்

தண்டணை அதிகம் என்பார்கள்..

ஆம்.. நான் தப்பு செய்துவிட்டேன்..

அந்த தப்புக்கு அவள்தான் காரணம் !

ஆதலால் -

அவளை தண்டிக்க விரும்புகிறேன் !

அவள் என்னை முத்தத்தால் தண்டித்தது போல !!

* தினேஷ்மாயா *

உனக்காக சுவாசிக்கிறேன்

Friday, October 20, 2017




நான் உனக்காக சுவாசிக்க துவங்கி

இன்றுடன் 97 நாட்கள் ஆகிறது !!

* தினேஷ்மாயா *

சண்டை




எனக்கும் உனக்கும் சண்டை வருகிறது..

அந்த சண்டையின் போதுதான் உணர்கிறேன்

நம் இருவருக்குமான அழகான காதலை !!

* தினேஷ்மாயா *

கால்களால் கவிதை


நான் என் கைகளால்
காகிதத்தில் கவிதை எழுதிக்கொண்டிருக்கையில்,

அவள் - தன் கால்களால்
நடக்கும் இடமெங்கும் கவிதையை
சிதறவிட்டப்படி செல்கிறாள் !!

* தினேஷ்மாயா *

என் தேவதையின் பிறந்தநாள் !!

Tuesday, October 17, 2017



என் தேவதையின் பிறந்தநாள் !!

நான் கோவையில் இருக்கிறேன். அவள் கன்னியாகுமரியில் இருக்கிறாள்.. அவள் பிறந்தநாளும், அவள் வயதும் ஒன்றாக அமைந்தது இந்த வருடம்.  இன்னமும் எங்கள் நிச்சயதார்த்ததிற்கு ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கிறது, ஆனால் அவள் பிறந்தநாள் அதற்குள் வந்துவிட்டது. 

அவளை காண வருகிறேன் என்று சொன்னால், நிச்சயம் அடம்பிடிப்பாள். வர வேண்டாம், எல்லாம் நிச்சயதார்த்தம் நடக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என்பாள். அதனால் அவளுக்கு சொல்லாமலே, ஆகஸ்ட் மாதமே கோவையிலிருந்து கன்னியாகுமரி செல்ல முன்பதிவு செய்துவிட்டேன். அவளிடம் அனைத்தையும் சொல்லிவிடும் நான், இதை மட்டும் சொல்லவில்லை. அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம் என்று இதை மட்டும் மறைத்துவிட்டேன். நாளை அவள் பிறந்தநாள். அவளுக்கு இரவு வெகுநேரம் விழித்திருக்க பிடிக்காது. அது எனக்கு சாதகமாக அமைந்தது. இரவு 8 மணிக்கு அவளுக்கு தொலைப்பேசியில் அழைத்தேன். இன்று இரவு நண்பர்களுடன் துப்பறிவாளன் திரைப்படம் பார்க்க திரையரங்கம் செல்கிறேன் என்று பொய்யுரைத்தேன். ஆனால், உன்னுடன் குறுஞ்செய்தியில் பேசுவேன் என்று சொல்லிவிட்டு நான் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டேன். இரவு 11 மணி வரை அவளுடன் குறுஞ்செய்தியில் பேசிக்கொண்டிருந்தேன். அவள் தூக்கம் வருகிறது என்றாள். என் மனமார்ந்த வாழ்த்துக்களை அவளுக்கு குறுஞ்செய்தியிலேயே தெரிவித்தேன். காலை 6 மணிக்கே நான் கன்னியாகுமரி வந்து சேர்ந்தேன். என் நண்பன் ஒருவனிடம் முன்னரே பேசிவைத்திருந்தேன். நான் வருவேன் என்று. அவன் வீட்டிற்கு சென்று அவன் வீட்டில் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு அவன் வண்டியை எடுத்துக்கொண்டேன். சில நாட்கள் முன்னர், அவளிடம் சொல்லியிருந்தேன், உன் பிறந்தநாளன்ரு, காலை உணவு ஒரு உணவகத்தில் இருந்து வரவழைத்து தருகிறேன் என்று. அன்று அவளுக்கு அலுவலகம் இருந்தது. அவள் அன்று விடுப்பு எடுக்கவில்லை என்பதை முன்னமே அவளிடம் உறுதி செய்துக்கொண்டேன். வண்டியை எடுத்தேன். அருகில் இருக்கும் ஒரு பெரிய உணவகம் சென்றேன். அவளுக்காக காலை சிற்றுண்டி வாங்கிக்கொண்டேன். அவள் அலுவலகம் செல்லும்போது நேரம் கிடைக்கையில் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோவில் செல்வாள். அவளிடம் நான்  முன்னமே கேட்டுக்கொண்டிருந்தேன். உன் பிறந்தநாளன்று நிச்சயம் அந்த சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு உன் அலுவலகம் செல் என்று. அவளும் முயற்சிக்கிறேன் என்று சொன்னாள். அன்று காலை 6 மணிக்கு என்னை அழைத்தாள். தூக்க கலக்கத்திலேயே பேசினாள் என் மாயா. படுக்கையில் இருந்து எழுந்துக்கொள்ளவில்லை. கண் விழித்த உடனே எனக்கு அழைத்தாள். நான் காதலுடன், பாசத்துடன் என் மனமார்ந்த வாழ்த்துக்களை அவளுக்கு தெரிவித்தேன். நான் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன் என்றேன். அவளை மறவாமல் அந்த சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன். நிச்சயம் செல்கிறேன் என்றாள். ஒரு மணி நேரம் கழித்து, அவள் அலுவலகம் கிளம்ப பேருந்து நிலையம் வந்து என்னைஅழைத்தாள். நான் மருதமலை முருகனை தரிசித்துவிட்டு, என் வீட்டின் அருகே இருக்கும் சிவன் கோவிலில் நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றேன். அவள் ஏன் காத்துக்கொண்டிருக்கிறாய், நீ வணங்கிவிட்டு உன் அலுவலகம் செல்லலாமே என்றாள். நான் சொன்னேன், இல்லை இல்லை, நீ அங்கே அந்த சிவன் கோவிலில் தரிசிக்கும் போது நானும் இங்கே தரிசிக்க வேண்டும் என்றேன். அப்படியே அவளிடம் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், நான் நிஜமாக அவள் அலுவலகம் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் தான் அவள் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தேன். அவளை பெண் பார்க்க சென்ற போது பார்த்தது. அதற்கு பின்னர், அலைப்பேசியில் பேசியிருக்கிறோம், இருவரின் புகைப்படங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளோம். ஆனால், நேரில் பார்க்கவில்லை. அவளை பார்த்துவிட்டு வந்த தேதியில் இருந்து இன்று அவளை இரண்டாவதுமுறை பார்க்க கிட்டத்தட்ட 75 நாட்கள் ஓடிவிட்டது. எனக்கு சிறிது தயக்கமும்கூட. நேரில் பார்க்க போகிறேன், எப்படி எடுத்துக்கொள்ள போகிறாளோ என்கிற பயமும் தயக்கும் இருந்தது. அவள் பேருந்தைவிட்டு இறங்கி கோவிலினுள் நுழைந்தாள். அவள் கோவிலினுள் நுழைவதை வண்டியின் கண்ணாடியில் பார்த்தேன். 



( அதோ - தொலைவில் என் மாயா வருகிறாள் !!! )

        நான் இறைவனுக்காக வாங்கி வைத்திருந்த மாலையை கையில் எடுத்துக்கொண்டு வண்டியைவிட்டு இறங்கினேன். அவள் தன் காலணிக்ளை கழட்டிவிட்டு கோவில் பிரகாரத்தில் நுழையும்போது அவள் முன்னே சென்றேன். அவள் கண்களில் தெரிந்த அந்த வியப்பை என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது. ஏதோ கனவில் காண்பதுபோல் என்னை பார்த்தாள். நான் என் கைகளை கொடுத்து இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றேன். அவள் பேச்சு வராமல் அப்படியே நின்றாள். நான் சுதாரித்துக்கொண்டு, சரி வா, உனக்கு நேரமாச்சு என்றேன். இருவரும் ஈசனை வணங்கிவிட்டு, ஒவ்வொரு சன்னதியிலும் வணங்கினோம். அது நவராத்திரி நேரம். அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தார்கள் அதை இருவரும் சில நொடிகள் பார்த்து இரசித்து தரிசித்துவிட்டு, அனைத்துசன்னதிகளையும் வணங்கினோம். ஆனால், கோவில் பிரகாரத்தை வலம்வந்துகொண்டிருக்கையில் அவள் என்னை வியப்பாகவே பார்த்தாள், நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள். மருதமலையில்தானே இருக்கிறேனு சொன்னீங்க என்றாள் அப்பாவியாய். சரி சரி அதெல்லாம் பிறகு சொல்கிறேன் என்றேன். பின் கோவிலில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு செல்வோம் என்றேன். என்னை ஒரு கோவமான பார்வையால் பார்த்தாள். சரி நீ அலுவலகம் கிளம்பு என்று சொல்லி, நான் வாங்கிவந்த உணவு, இனிப்பு, பூ அனைத்தையும் அவள் கையில் கொடுத்து அனுப்பினேன். உன்னை உன் அலுவலகம்வரை வண்டியில் இறக்கிவிடட்டுமா என்றேன். இப்போது கொஞ்சம் அதிகமாகவே முறைத்தாள். அவள் அலுவலகம் சென்றுவிட்டாள். அவள் ஒரு வங்கியில் காசாளராக பணியில் இருக்கிறாள். அவள் அலுவலகம் சென்று 10 நிமிடம் ஆனதும், நான் அவள் வங்கிக்கு சென்றேன். ஒரு வாடிக்கையாளராக சென்றேன். சில வாரங்களுக்கு முன்னரே, ஏதோ ஒரு காரணம் சொல்லி அவள் வங்கி கணக்கு எண்ணை வாங்கிவைத்துக்கொண்டேன். அன்று வங்கிக்கு சென்றேன். பணம் செலுத்தும் படிவத்தை எடுத்தேன். அதில் அவள் பெயரை எழுதினேன், அவள் கணக்கு எண்ணை எழுதினேன், ரூ.143/- அவள் கணக்கில் செலுத்த, அந்த படிவத்தை நிரப்பிவிட்டு அவள் முன்னாடி சென்று நின்றேன். அவளுக்கு இன்னும் கோவம் அதிகமானது. இருந்தாலும் அவள் காதல் அந்த கோபத்தை குறைத்துவிட்டது என்றுதான் சொல்லனும். பின் அந்த படிவத்தை அவளிடம் கொடுத்தேன். அவள் அந்த 143 என்ற தொகையை பார்த்துவிட்டு என்னை மீண்டுமொருமுறை முறைத்தாள். 143 - I LOVE YOU , இதை சொல்லும்விதமாகத்தான் அந்த தொகையை அவள் கணக்கில் செலுத்தினேன். இன்னும் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும், அவள் பிறந்தநாளின் நான் அவள் கணக்கில் 143 செலுத்தினேன் என்பதும், அவளைக் காண வந்தேன் என்பதும் அவள் நினைவில் இருக்கும். பணத்தை செலுத்திவிட்டு நான் கிளம்பிவிட்டேன். பின்னர் நான் என் நண்பன் வீட்டிற்கு வந்துவிட்டேன். அது அவள் அலுவலகத்தில் இருந்து, 20 நிமிடம் பயணத்தில் இருக்கிறது. அங்கே வந்துவிட்டு அவளுக்கு அலைப்பேசியில் அழைத்தேன். அவள் இப்போதுதான் என்னை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டுவந்து என்னிடம் பேசினாள். நீங்க எப்போ இங்க வந்தீங்க, எப்படி வந்தீங்க, இப்படி இன்னும் நிறைய கேள்விகள் அடுக்கிக்கொண்டே சென்றாள். நான் சொன்னேன், அதற்கெல்லாம் விடையை பிறகு சொல்கிறேன், உனக்காக ஒரு சிறப்பு பரிசு வைத்திருக்கிறேன் அதை இன்று மாலை உன் அலுவலகத்தில் வந்து தருகிறேன் என்றேன். அதற்கும் அவள் தயங்கினாள். இருந்தாலும் அந்த பரிசு கொஞ்சம் நிறையவே சிறப்புகள் வாய்ந்தது. நான் வரைந்த இரண்டு ஓவியங்கள் அவளுக்கு பரிசளித்தேன். அன்று மாலை அவள் அலுவலகத்தில் ஆயுத பூஜை போட்டார்கள். அவளைக்காண நான் வந்தேன் என்று அவள் தன் அலுவலகத்தில் தன் சக ஊழியர்களிடம் தெரிவித்தாள். அவர்களும் என்னைக்காண வேண்டும் என்றனராம். சரியென்று, அந்த பரிசை கையில் எடுத்துக்கொண்டு, அனைவருக்கும் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அவள் அலுவலகம் சென்றேன். நானும் ஆயுத பூஜையில் கலந்துக்கொண்டேன். பின் அனைவருக்கும் என் மாயாவின் பிறந்தநாளுக்காக இனிப்புகள் வழங்கிவிட்டு அனைவரிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு உண்மையை சொல்லப்போனால், அவளிடம் அப்போது நான் பேசவில்லை. வழக்கமாக 4 மணிக்கெல்லாம் அலுவலகத்தைவிட்டு கிளம்பிவிடுவாள். 6:30-7:00 மணிக்கெல்லாம் தன் வீட்டில் இருப்பாள். ஆனால் இன்றோ மாலை 05:30 வரை அலுவலகத்திலேயே இருக்க வேண்டியிருந்தது. ஆயுத பூஜை என்பதால். நான் அவள் அலுவலகம் சென்றது, அவள் அலுவலக நண்பர்களை சந்தித்து இனிப்பு வழங்கிவிட்டு, என்னவளிடன் என் பரிசை அளித்துவிட்டு வீடு திரும்பவேண்டும் என்றுதான். ஆனால், நேரம் அதிகமாகிவிட்டதால் நான் வேண்டுமானால் உன்னை வீட்டில் இறக்கிவிடட்டுமா என்றேன். அவள் வேண்டவே வேண்டாம், முடியவே முடியாது என்று ஒற்றைக்காலில் நின்றாள். நான் பக்குவமாக எடுத்துக்கூறினேன். இதற்குமேல் பேருந்தில் சென்றால் நிச்சயம் உனக்கும் அலைச்சல் அதிகம், தாமதமாகத்தான் வீட்டிற்கு செல்வாய் என்றேன். ஒருவழியாக என் மாயா என்னுடன் வண்டியில் வர சம்மதித்தாள். அன்று வழியில் வண்டிகளில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டோம். ஆனாலும், அவளும் நானும் பேசிக்கொண்டுதான் வந்தோம். ஆண்டவன் இன்னுமொரு விளையாட்டை நடத்தினான். அப்போது மழை பொழிந்தது. மழைக்கு ஒரு கடையின் அருகில் மக்கள் ஒதுங்கியிருந்தார்கள். அங்கே நாங்களும் நின்றோம். அப்போதுதான் நாங்கள் இருவரும் மனம்விட்டு பேசிக்கொள்ள சிறிது நேரம் கிடைத்தது. நான் எப்படி கன்னியாகுமரி வந்தேன்,  எப்போது வந்தேன் என்று அந்த கதையை விவரித்துக்கொண்டிருந்தேன். பின் மழை நின்றமாதிரி தெரிந்தது. சரியென்று வண்டியை எடுத்தேன். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் மழை. இம்முறை தேவையில்லாமல் ஒரு இடத்தில் நிற்பதைவிட, இருவரும் ஏதாவது உணவகம் சென்று இரவு உணவை முடித்துக்கொள்ளலாம் என்று நான் ஒரு யோசனை சொன்னேன். மழையில் நின்று நேரத்தை வீணாக்காமல் எதிரெதிரே அமர்ந்து பேச ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்று அந்த யோசனையை தெரிவித்தேன். வழியில் ஒரு பெரிய உணவகம் ஒன்று தென்பட்டது. அங்கே சென்றோம். நாங்கள்தான் முதல் வாடிக்கையாளர் போல. மாலை 6:30 மணிக்கே சென்றுவிட்டோம். அவளுக்கு என்ன பிடிக்குமோ அதை கொண்டுவர சொன்னேன். பின் இருவரும் பேச ஆரம்பித்தோம். இதுதான் நாங்கள் முதலில் தனியாக சந்திக்கிறோம். இதுநாள்வரை அலைப்பேசியிலும், குறுஞ்செய்தியிலுமே பேசிக்கொண்டிருந்தோம். முதலில் நேரில் பார்த்து பேசும்போது எனக்கும் சிறு தயக்கம் இருந்தது, அவளுக்கும் இருந்தது. காலையில், கோவிலில் இருவருக்குமே அதிக தயக்கம். சரிவர பேசிக்கொள்ளவில்லை. ஆனால், வண்டியில் வரும்போது நாங்கள் இருவரும் வெகு சகஜமாக பேசிக்கொண்டு வந்தோம். என்னவோ திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன தம்பதிகளைப்போல பேசிக்கொண்டு வந்தோம். இருவரின் காதலும் ஒரே சீரான அலைவரிசையில் இருந்ததால், எங்கள் இருவருக்கும் இருந்த தயக்கம் உடனே மறைந்துவிட்டது. நாங்கள் அந்த உணவகத்தில் இருக்கும்போது அவள் அம்மாவிற்கு அவள் அலைப்பேசியில் அழைத்தாள். அலுவலகத்தில் நேரமாகிவிட்டதால், என்னுடன் வீட்டிற்கு வருவதாய் சொன்னாள். நானும் அவள் அம்மாவிடம் பேசினேன். நான் பத்திரமாக அழைத்துவந்து வீட்டில் சேர்க்கிறேன்மா என்று உறுதியளித்தேன். அவரும் சரியென்று சம்மதம் தெரிவித்தார். பின் நாங்கள் இருவரும் உணவருந்தினோம். நிறைய பேசினோம். மனம்விட்டு பேச நிறைய நேரம் கிடைத்தது. 

          இருவரும் சாப்பிட்டபின், நான் அவளுக்கு என் பரிசினை அளித்தேன். அதை அவள் உடனே பிரித்து பார்க்கட்டுமா, இல்லை வீட்டிற்கு சென்று பார்க்கட்டுமா என்றாள். நான் சொன்னேன், இதை இப்போதே பிரித்துப்பார், என் பரிசு என்ன என்பதை நீ பார். நீ பார்க்கும்போது உன் முக பாவனைகள் எப்படி இருக்கிறது என்பதை நானும் பார்த்து இரசிக்கிறேன் என்றேன். அவளும் ஒப்புக்கொண்டாள். அந்த பரிசை பிரித்தாள். அதை பிரித்து பார்க்கவே 5 நிமிடம் ஆனது அவளுக்கு. அப்படியொரு பொக்கிஷம்போல் அதை அவளுக்கு பரிசளித்தேன்.



      நானும் அவளும் சிவனும் பார்வதியும் போல பழகிவருகிறோம். நான் அவளின் சிவனாக இருக்கிறேன், அவள் என் சக்தியாக இருக்கிறாள். சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதற்கு சான்றாக எங்கள் காதல் இருக்கிறது. அதை நாங்கள் இருவருமே உணர்வோம். அவளின் சிவன் நான், என் சிந்தையில் அவள் மட்டுமே எப்போதும் இருக்கிறாள் என்பதை உணர்த்தும்விதமாக ஒரு ஓவியத்தை வரைந்தேன். அதை முதலில் அவள் பார்க்கையில் அதில் அவள்பெயர் மட்டுமே இருந்தது, என் பெயர் எங்கேயாவது இருக்கிறதா என்று தேடினாள். ஆனால் அதில் என் பெயர் எங்குமே இல்லை. நான் பிறகு அந்த ஓவியத்தின் அர்த்தத்தை சொன்னேன். அந்த சிவன் நான். உன்னுடைய சிவன் அது. என் சிந்தை முழுவதும் நீதான்இருக்கிறாய் என்பதற்கு அர்த்தமாய் அந்த ஓவியம் இருக்கிறது என்பதை விளக்கினேன். அவள் ம்னதில் அப்போது ஏற்பட்ட ஆனந்தத்தை அவள் கண்களின் வழியாக கண்டு நான் மகிழ்ந்தேன். பின் அவளை அவள் வீட்டில் சென்று இறக்கிவிட்டு அவள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இனிப்பும் வழங்கிவிட்டு நான் நண்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அன்றிரவே கோவைக்கு கிளம்பி வந்தேன். 


( அவளுக்கு நான் பரிசளித்த இன்னொரு ஓவியம்)


அழகான ஓர் கவிதையைப்போல் நடந்த இந்த நிகழ்வு எத்தனை ஆண்டுகளானலும் எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் இனிமையாய் இருக்கும். நான் மேலே சொன்னதில், பல விஷயங்களை விட்டுவிட்டேன். நேரம் இல்லை என்பதால் இயன்றவரை என் மாயாவின் பிறந்ததினத்தில் அவளை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டேன். இன்னும் என் மாயாவும் நானும் வாழப்போகும் வாழ்க்கையின் அழகான பதிவுகளை பின்னர் பகிர்கிறேன்.

காதலுடன் - என் மாயாவுடன்

* தினேஷ்மாயா *

ஆவி பறக்க !

Saturday, September 23, 2017



              நேற்று நான் வழக்கமாக உணவருந்தும் அந்த உணவகம் சென்றேன். மதிய நேரம். நல்ல பசி. சுத்த சைவ சாப்பாடு மட்டுமே அங்கே கிடைக்கும். பசியோடு சாப்பிட அமர்ந்தேன். இந்த உணவகத்தில் பெரும்பாலும் எதைக்கேட்டாலும் சுடச்சுட கிடைக்கும், அப்பளம் தவிர. நான் சாப்பிட்டு முடிக்கும் நேரம், என்னருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார். அவர் இலையில் தண்ணீரை தெளித்து, சாப்பிட அமர்ந்தார். பின்னர், தான் கொண்டுவந்த ஆனந்த விகடனை திறந்து தன்னருகே வைத்தார். உணவருந்தியவாரே, அதை படிக்க ஆரம்பித்தார். சொல்லப்போனால், ஆ.வி. படிப்பதில்தான் அதிக கவனமும் சாப்பிடுவதில் கவனம் இல்லாமலும் இருந்தார். இதை நான் எதுவும் சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆவி பறக்க பறக்க சாப்பிட்ட காலம் போய், ஆ.வி. படிக்க படிக்க சாப்பிடும் காலம் தான் இதுவோ ?

* தினேஷ்மாயா *

நம் காதல்



என் வார்த்தைகள் உன்னை காயப்படுத்தினாலும்
உன் வார்த்தைகள் என்னை காயப்படுத்தினாலும்
காயம் என்னவோ நம்மில் ஒருவருக்குத்தான்

ஆனால், வலி என்பது நம் இருவருக்குமே !

வலியானாலும் சரி
சந்தோசமானாலும் சரி
நம் காதல் அந்த இரண்டையும் நமக்கு சரிசமமாக பகிர்ந்து அளிக்கும் என் கண்ணே !

* தினேஷ்மாயா *

விடை !!

Tuesday, September 19, 2017




காதல் நம்மை தழுவ

உறக்கம் நம்மை தழுவ

இந்த தழுவல்களிடமிருந்து

நாம் நழுவிக்கொண்டிருப்போம் !!

இல்லாத வினாவிற்கு விடையை

தேடிக்கொண்டிருப்போம் !!

* தினேஷ்மாயா *

நாமாகியிருப்போம்




இன்னும் நான்கு மாதங்களில்

இந்நேரத்தில் -

நீயும் நானும்

நாமாகி இருப்போம் !!

* தினேஷ்மாயா *

அளவில்லா காதல்

Thursday, September 14, 2017


உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று ஒரு கேள்வியை என்னிடம் வைத்திருக்கிறாய் நீ ?

இதற்கு என்னால் பதிலெல்லாம் சொல்ல முடியாதடி.. இதை ஒரு கேள்வியாகவே நான் கருதவில்லை. எல்லையில்லா, அளவில்லா அன்பை கேள்விக்குள்ளாக்குவதை நான் விரும்பவில்லை.

எனக்கு உன்னை பிடிக்கும். உன்னை மட்டுமே பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். உன் குழந்தைத்தனம் பிடிக்கும். தேவையில்லாத  விடயங்களுக்கு நீ பயப்படுவது பிடிக்கும். உன் சிறு சிறு சண்டைகள் பிடிக்கும். உன் பெரிய பெரிய கோபங்களும் பிடிக்கும். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும்வரை நாமிருவரும் உரையாடிக்கொண்டே இருப்பது மிக பிடிக்கும். நீ எனக்கு சூட்டிய செல்ல பெயர்கள் பிடிக்கும். உன் கண்கள் பிடிக்கும். உன் இதழ் பிடிக்கும். உன் நடனம் பிடிக்கும். உன் திருட்டு விழி பிடிக்கும் !

உன் கள்ளம் கபடமற்ற மனம் பிடிக்கும். என்னிடம் பேசுகையில் உனக்கு தோன்றும் வெட்கம் எனக்கு பிடிக்கும். உன் காதல் மிக மிக பிடிக்கும். உன் கொஞ்சல் ரொம்ப பிடிக்கும். நீ என்னை குழந்தையாய் பாவிப்பது பிடிக்கும். நீ என் குழந்தையாய் மாறிவிடுவது பிடிக்கும். நம் எதிர்கால திட்டமிடல்கள் பிடிக்கும். உன் அறிவு பிடிக்கும். நாம் சமூக பிரச்சனைகளை விவாதிப்பது பிடிக்கும். சப்தமின்றி நீ தரும் முத்தங்கள் பிடிக்கும். அன்பான உன் அரவணைப்பு பிடிக்கும். நான் தவறிழைத்துவிட்டால், உன் செல்ல திட்டுகள் பிடிக்கும். என்னை கண்டிப்பது பிடிக்கும். சில நேரங்களில் நீ கோபமாய் கத்தினாலும், அதுவும் எனக்கு பிடிக்கும். 

இப்படி சொல்லிக்கொண்டே போனால், எழுத்துக்கள் வற்றிவிடும் கண்ணே. உன்னை மொத்தமாய் எனக்கு பிடிக்குமடி.

இனிமேலும் என்னால் சில விஷயங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.  கொஞ்சம் பொறுத்திரு என் கண்ணே. உன் கணவனாக நான் உன் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கிறேன், என் ஆருயிர் மனைவியே !

* தினேஷ்மாயா *

அவள் மூச்சுக்காற்று

Sunday, September 10, 2017


பலர் மத்தியில் அவள் இருக்கையில்

அவள் மூச்சுக்காற்று வெறும் சப்தமே..

சற்றுத்தொலைவில் அவள் இருக்கையில்

அவள் மூச்சுக்காற்று மெல்லிசை..

என்னருகில் அவள் இருக்கையில்

அவள் மூச்சுக்காற்று இன்னிசை..

என்னுடன் அவள் இருக்கையில்

அவள் மூச்சுக்காற்று ஓங்காரம் !!

* தினேஷ்மாயா *

இன்னொரு தாய்


தாயை பிரிந்து

என்னுடன் வருகிறாய் என நீ

வருத்தம் கொள்கிறாய்..

நீ இன்னொரு தாயிடம்தான் வருகிறாய் என்பதை மறந்துவிட்டு !

* தினேஷ்மாயா *