வடலூர் வழிபாடு

Sunday, June 29, 2014


பல நாள் கனவு இன்று நனவாகப்போகிறது.

நானும் என் நண்பரும் இன்றிரவு வடலூர் செல்லவிருக்கிறோம். வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையை காணவும், அவர் ஏற்றிய ஜோதியை தரிசிக்கவும், அவர் ஜோதியாய் ஐக்கியமான இடத்தையும் இன்னும் அவர் சார்ந்த பல இடங்களை காணவும் இன்று பயணப்பட உள்ளோம். 

திரும்பிவந்து என்னுள் ஏற்பட்ட மாற்றங்களையும், என் மனம் லயித்துக்கொண்ட விஷயங்களையும் இங்கே பதிகிறேன்.

* தினேஷ்மாயா *

அண்டமும் உன்னுள்ளே


* தினேஷ்மாயா *

இறக்கமுடியாத சிலுவைகள்

Saturday, June 28, 2014


சொன்னவள் நான் தான்
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அணுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!


- வைரமுத்து..


* தினேஷ்மாயா *

சிறை


உன் பார்வையால்

உன்னுள் சிறைப்பட்டிருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

கலங்காதே


தெய்வம் உன் வாழ்வில்

செய்ய நினைத்தது

எதுவும் தடைபடாது;

ஆகவே எதைக்குறித்தும்

கலங்காதே.

* தினேஷ்மாயா *

மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு



மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று...

மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டும்தான் தெரியும், கடைக்கு அனுப்பினால் மீதி சில்லறை கிடைக்காது என்று...


நன்றி: முகநூல்

* தினேஷ்மாயா *

பசுமை இந்தியா


* தினேஷ்மாயா *

கடைசி தடவை


ஏய்.. இதோ பார்..

இதுதான் உனக்கு கடைசி தடவை..

இனிமேல் என் கனவில் வந்த...

அவ்ளோதான் !!

* தினேஷ்மாயா *

காணவில்லை





நான் சிறுவயதில் அதிகம் ரசித்த

பொன்வண்டும், மின்மினி புச்சியும்

இப்போது காணவில்லை...

இதுப்போன்ற பல விஷயங்கள்

நம் அடுத்த தலைமுறைக்கு

தெரியாமலே போய்விடும் போல !

* தினேஷ்மாயா *

காமம் மட்டுமே


காமம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது..

அதற்கு மேலும் பல புனிதமான விஷயங்கள் இருக்கிறது...

* தினேஷ்மாயா *

மாணவர்கள் உலகம்


என்ன படிக்கிறோம்

எதற்கு படிக்கிறோம்

என்பதையே மறந்து

எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறது

இன்றைய மாணவர்கள் உலகம்..

* தினேஷ்மாயா *

2265 நாட்கள்



 2265 நாட்கள்  ..

நாம் இருவரும் காதலாய் வாழ்ந்த நாட்கள்...

* தினேஷ்மாயா *

சந்தோஷம்



வாழ்க்கையின் கடினமான தருணங்களை

கடந்துவந்தால் மட்டுமே

உண்மையான சந்தோஷம் கிடைக்கிறது..

* தினேஷ்மாயா *

சில நேரங்களில்


சில நேரங்களில்

வாழ்க்கையை நாம்

சற்றி வித்தியாசமான கோணத்தில்

அணுகவேண்டியிருக்கிறது...

* தினேஷ்மாயா *

நிம்மதியான வாழ்க்கை



ஆடம்பரமான வாழ்க்கையைவிட

உன்னுடன் வாழும்

நிம்மதியான வாழ்க்கையே

எனக்கு போதும்...

* தினேஷ்மாயா *

ஆனந்தமாய் அழுகிறேன்


ஆனந்தமாய் அழுகிறேன்..

நேற்று என் கனவில் நீ !!

* தினேஷ்மாயா *

அரவணைப்பு


* தினேஷ்மாயா *

காதல் மொழி


காதலின் பொதுவான மொழி

மௌனம் !!

* தினேஷ்மாயா *

தாய்ப்பாசம்


* தினேஷ்மாயா *

கன்னி சாமி


* தினேஷ்மாயா *

கில்லி


* தினேஷ்மாயா *

விளையாட்டு


* தினேஷ்மாயா *

அடுத்த தலைமுறை



நாம் நம் பேரக்குழந்தைகளுக்கு

எதை விட்டு செல்லப்போகிறோம்??

* தினேஷ்மாயா *

கலாச்சார மாற்றம்


அன்று..

தேரடி வீதியில்

இறைவன் ஊர்வலம் வந்தால்

அனைவரும் ஒன்றாய் வணங்கினர்..

இன்று..

தேரடி வீதியில்

இறைவன் ஊர்வலம் வந்தால்

அனைவரும் சுற்றி நின்று

புகைப்படம் எடுக்கின்றனர்...

எவர்க்கும் இறைவனை வணங்கும்

பக்தியும் இல்லை,

இறைவனை வணங்க

நேரமும் இல்லை...

* தினேஷ்மாயா *

விட்டு விலகு


உங்களை சுற்றியிருக்கும்

தீய சக்திகளிடமிருந்து

விட்டு விலக தெரிந்துக்கொள்ளுங்கள்..

* தினேஷ்மாயா *

உற்சாகம்


* தினேஷ்மாயா *

முதிர்ச்சி


பெரிய பெரிய விஷயங்களை

பேசுவதால் மட்டுமே

நீங்கள் பெரிய ஆள் ஆகிவிடமுடியாது..

சின்ன சின்ன விஷயங்களை

எந்த அளவுக்கு உங்களால்

புரிந்துக்கொள்ள முடிகிறதோ

அதுதான் உங்கள் முதிர்ச்சியை

உலகிற்கு புரியவைக்கும்...

* தினேஷ்மாயா *

ஞானி


 மற்றவர் பாவங்களை

எண்ணிக்கொண்டிருந்தால் மட்டுமே

நீங்கள் ஞானியாகிவிட முடியாது..

* தினேஷ்மாயா *

இது போதும்


நான் அழுகையில்

என் கண்ணீரை துடிக்க

நீ இருக்கிறாய்..

இது போதும் எனக்கு..

* தினேஷ்மாயா *

ஏக்கம்


 கைத்தடி பிடித்து

நடக்கும் வயதிலும்

பிள்ளையின் கை பிடித்து

நடக்கத்தான்

மனம் ஏங்கும்...

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

புத்தம் புதிதாய்



ஒவ்வொருமுறை பார்க்கும்போது

நீ எனக்கு

புத்தம் புதிதாய்தான் தெரிகிறாய் ...

* தினேஷ்மாயா *

வாயை மூடி பேசவும்

Friday, June 27, 2014


        சமீபத்தில் ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம். நான் படத்தை ரொம்பவே ரசித்துப்பார்த்தேன். அதுவும் நஸ்ரியா இந்த படத்தில் ரொம்பவும் அழகாய் லட்சனமாய் இருக்கிறார். கதாநாயகனும் அருமையாக நடித்திருக்கிறார். படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் அதிகம் ரசிக்க வைக்கிறது. 

      பேச வேண்டிய இடத்தில் பேசனும், அதுவும் தேவையில்லாமல் அதிகம் பேசக்கூடாது என்பதை நன்றாகவே உணர்த்தியிருக்கிறது. அதைவிட, பேசாமலும் நம் செயல்களால் நம் எண்ணங்களை வெளிப்படுத்தி மற்றவர்கள் மனதில் நம் கருத்தை பதியவைக்கலாம் என்று மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். நேரம் கிடைத்தால் நீங்களும் இந்தப்படத்தை பாருங்களேன்.

    படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

* தினேஷ்மாயா *

சர்க்கரை நோய்



உன் உதட்டால் ஒரே முறைதான் எனக்கு முத்தம் தந்தாய்..

எனக்கு இந்த இளவயதிலேயே வந்துவிட்டதடி சர்க்கரை நோய்..

உன் இதழ்களின் இனிமையால் !!

* தினேஷ்மாயா *

அவசர சிகிச்சை


              இன்று காலை 8:30 மணிக்கு என் நணபனின் அவசர சிகிச்சைக்காக அருகில் இருக்கும் 24 மணி நேர மருத்துவமனைக்கு சென்றேன். நான் சென்ற நேரம் இரவு நேரமோ அல்லது அதிகாலை நேரமோ இல்லை. காலை 8:30 மணிக்கு சென்று மருத்துவரை பார்க்க வேண்டும் என்று சொன்னால், அங்கே ஒரு மருத்துவர்கூட இல்லை. செவிலியர்களும் எதுவும் செய்ய முன்வரவில்லை. இவர்கள் எதாவது மருத்துவம் செய்தால் மருத்துவர் வந்ததும் அவர்களை திட்டுவாராம். 

   ஒரு அவசர சிகிச்சைக்காக செல்லும்போது இப்படி நடந்துக்கொள்கிறார்களே என்று கோபம்தான் வந்தது. ஆனால் இது கோபம்கொள்ள சரியான தருணம் இல்லை என்று பக்கத்தில் இருந்த வேறொரு மருத்துவமனைக்கு சென்றுவிட்டேன்.

   இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதுபோல நடந்திருக்கும். ஆனால் நம்மால் இதுப்போன்ற அவசர தருணங்களில் என்னத்தான் செய்ய முடியும் ?
அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருந்தாலும் அங்கே பராமரிப்பு சரியில்லாத காரணத்தால் பலரும் அங்கே செல்ல தயங்குகின்றனர். மருத்துவமனையில் தனியார் இருப்பது ஒருவகையில் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், மருத்துவ துறையை ஒரு சேவையாக நினைக்காமல் அதையும் ஒரு வியாபாரமாக பார்க்கின்றனர் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

* தினேஷ்மாயா *

புதிய காதல்

Wednesday, June 25, 2014


  இன்று ஒரு செய்தியை படித்தேன். ஒரு நடிகையின் பெயரை சொல்லி அவரின் புதிய காதலர் என்று ஒரு நடிகரின் பெயரை சுட்டிக்காட்டினர்.

இதுப்போன்ற கிசுகிசுக்கள் சினிமாவில் சகஜம்தான். எனக்கு இந்த செய்தியை படித்ததும் ஊடகங்கள்மீது கோபம்தான் வந்தது.

“ புதிய காதலர்” என்கிற வார்த்தைதான் என்னை அதிகம் பாதித்தது. நாளுக்கு ஒருநாள் மாற்றிக்கொள்வதா காதல் ?

 காதல் என்றால் என்ன என்பதை இந்த ஊடகங்கள்தான் தவறாக சித்தரிக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. அதனால்தான் உண்மையான காதல் அனாதையாக கிடக்கிறது.

காதல் என்பது ஒன்றுதான் அது எப்போதும் ஒன்றே என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி...

* தினேஷ்மாயா *

விபச்சாரம்


இதென்ன நியாயம் ?

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மட்டுமே அவப்பெயர். ஆனால், அவர்களை நாடி செல்லும் ஆண்களுக்கு எந்த அவப்பெயரும் இல்லை !

பலருடன் உறவுகொள்ளும் பெண் ஒழுங்கீனமானவல் என்றால், அப்படியான ஒருத்தியுடன் உறவுகொள்ளும் ஒரு ஆணும் ஒழுங்கீனமானவன்தானே ?

நம் சமுதாயத்தின் அனைத்து அடுக்குகளிலும் ஆணாதிக்கம் ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு..

* தினேஷ்மாயா *

என்று மாறும்?

Wednesday, June 11, 2014


என்று தான் இந்த நிலை மாறும் ?

* தினேஷ்மாயா *

சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்


நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *