இதுதான் வாழ்க்கை

Wednesday, April 26, 2017



* தினேஷ்மாயா *

மழை !

Saturday, April 22, 2017


அன்று மழைபெய்தபோது நீ குடையுடன் வந்தாய்

என்னையும் குடையினுள் அழைத்தாய்

குடைக்குள் முத்த மழையை பொழிந்தாய்..

முத்தத்தோடு என் கன்னத்தையும் -

அப்படியே விட்டுவிட்டு நடந்தாய்

மழையும் நின்றது உன் முத்த மழையும்தான்..

பின் நானும் உனைநோக்கி நடைப்போட்டேன்..

நீ கொடுத்த முத்தத்தால்

அந்த குடை நாணத்தால் தலைசாய்கிறது பார்..

* தினேஷ்மாயா *


வெள்ளை வெளிச்சம்

Wednesday, April 19, 2017



இன்று கோவை கொடிசியா மைதானத்தில் தினமணி நாளேடு சார்பாக நடந்த "வெள்ளை வெளிச்சம்" நிகழ்ச்சி சென்றிருந்தேன். கவிஞஎ வைரமுத்து அவர்கள் வள்ளலார் பற்றி பேசினார், பின் அவரைப்பற்றி கவியும் பாடினார். 

எனக்கு வள்ளலாரையும் பிடிக்கும் வைரமுத்துவையும் பிடிக்கும். இன்றைய நிகழ்ச்சியில் கவியின் பேச்சு வழக்கம்போல மிக அருமையாக இருந்தது. வள்ளலார் ஒரு புரட்சி துறவி. சுத்த சன்மார்க்க சபை தோற்றுவித்து சமூகத்திலும் சமயத்திலும் பல புரட்சிகளை கொண்டுவந்தவர். இன்னும் வள்ளலார் பற்றி நிறைய கூறினார். 

19-ஆம் நூற்றாண்டு இந்தியாவில் கடும் பஞ்சம். அதை தன் கவி பாணியில் விவரித்தார் கவிஞர். மக்களின் கண்ணீர் துளிகளின் அளவு விண்ணின் மழைத்துளிகளைவிட அதிகமாக இருந்தது என்றார்.

மனிதன்தான் இவ்வுலகில் தோன்றிய கடைசி உயிரினம். ஆனால் அவன்தான் இவ்வுலகை அழித்து வருகிறான். இவ்வுலகம் விலங்குகளுக்கான உலகம், பறவைகளுக்கான உலகம், பூச்சிகளுக்கான உலகம்.

இலட்சியவாதிகளின் பயணம் மாலைக்குள் முடிவு தெரியும் விளையாட்டல்ல, பல போராட்டங்கள் நிறைந்தது, அதற்கான வெற்றி நிச்சயம் ஒருநாள் வரும்.

இன்னும் இப்படி மனதை கவரும்படி நிறைய சொன்னார்.

வள்ளலாரை பெரியார், பாரதியார் இவர்களுடன் சம்பந்தப்படுத்தி பேசினார். இவர்கள் இருவரும் வள்ளலாரின் கருத்துக்களையே தங்கள் பாணியில் கையாண்டு மக்களுக்கு சொன்னார்கள் என்றார். நிறைய நிறைய ஆராய்ச்சி செய்திருப்பார் போல கவிஞர். அவர் சொன்ன பல கருத்துக்கள் மனதில் உள்ளன. ஆனால் அனைத்தையும் இங்கே பதிய வார்த்தைகளை என்னால் தேட முடியவில்லை. அதனால் இத்தோடு இதை முடித்துக்கொள்கிறேன். 

அருமையான ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மன நிறைவுடன் வீடு வந்தேன்.

* தினேஷ்மாயா *

மயில் - குயில்


மயிலின் கையில் குயில்..

* தினேஷ்மாயா *

ஸ்பரிசம்


யார் சொன்னது ?

சூரிய ஒளி இருந்தால்தான்

செடிகள் வளரும் என்று..

உன் ஸ்பரிசம் மட்டுமே போதுமடி !

* தினேஷ்மாயா *

அடம்


தண்ணீர் பிடிக்க ஆற்றங்கரைக்கு செல்கிறாயா ?

வேண்டாமடி.. சொன்னால் கேள்..

ஆற்று நீர் அனைத்தும்

உன்னுடனே வந்துவிடுகிறேன் என்று

அடம்பிடிக்கப்போகிறது பார் !

* தினேஷ்மாயா *

இம்சை


இசை கேட்கிறாள்..

இம்சையும் செய்கிறாள்..

* தினேஷ்மாயா *

பூந்தோட்டம்


அவளொரு பூந்தோட்டம்..

அவளிடமிருந்து சிதறிய பூக்களே

அவள் கையில் பூங்கொத்தாய் !

* தினேஷ்மாயா *

ஓடாதே.. நில்


* தினேஷ்மாயா *

பயம் வேண்டாம்


என்னுள் எரியும் தீ..

அதை உணர்ந்தவர் எவருமில்லை..

பலருக்கு வெளிச்சமாய் இருக்கும்

சிலருக்கு ?

விடை அவர்கள் கையில் !

ஆனால் - அவ்வளவு சீக்கிரம்

எவரையும் எரித்துவிட மாட்டேன்...

பயம் வேண்டாம்..

* தினேஷ்மாயா *

விநாயகா

Tuesday, April 18, 2017



அழகென்ற சொல்லுக்கு முருகா

பேரழகு என்ற சொல்லுக்கு விநாயகா !

* தினேஷ்மாயா *

தென்றல் வந்து என்னைத்தொடும்


தென்றல் வந்து என்னைத் தொடும்

அது.. சத்தமின்றி முத்தமிடும்..

பகலே போய்விடு.

இரவே பாய்கொடு..

நிலவே !

பன்னீரைத்தூவி ஓய்வெடு !

#தென்றல்_வந்து

* தினேஷ்மாயா *

வானவில்


வளைந்திருக்கிறாய்..

வானவில் தான்..

ஆனால் என்னடி இது ?

ஏழு வண்ணம் எங்கே ?

ஓ !

என் வானில் மட்டுமே வரும்

கருப்பு வெள்ளை வானவில்லோ நீ !?

* தினேஷ்மாயா *

என் காதல் ஓவியம்


காணவேண்டும் சீக்கிரம்

என் காதல் ஓவியம்

#தேடும்_கண்_பார்வை

* தினேஷ்மாயா *

ஓரப்பார்வை



ஒற்றைக்கண் ஓரப்பார்வையே

எனை ஏதேதோ செய்கிறதே !

நேருக்கு நேர் உனை கண்டால் - என்னாவேனோ ?

* தினேஷ்மாயா *

திருடி !


கண்மூடி திறந்து பார்க்கிறேன்..

காணவில்லை என்னை !

திருடி  !

எனை எங்கே கடத்தி சென்றாயடி ?

* தினேஷ்மாயா *

என்னை என்ன செய்தாய் வேங்குழலே

Sunday, April 16, 2017


என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இயங்கிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே.......

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்….
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்

யாரோ…. அவன் யாரோ….
யாரோ…. அவன் யாரோ….
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தோரு இசை கனையால்
என்னை என்ன செய்தாய் வேங்குழலே

மழை கம்பி குத்தாமல் இருக்க
குடை கம்பியாய் ஒதுங்கினேன்
குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்

கானம் கேட்க கண் மூட போய்
காணாமலே போனேன் நான்

விட்டு கூடு பாய்ந்திருப்பேனோ என
தட்டு தடுமாரி தேடி
காதுகளால் இரைந்துகிடக்கும்
உன் கால் அடிவாரம் வந்தடைந்தேன் 

மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க

அடடா தாளமிடும் கைக்கும்
தட்டு படும் உன் தொடைக்கும் இடையே நான்
சிக்கிகொண்டிருப்பதை கண்டுகொண்டேன்

மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க

துளைக்கும் வண்டாய் மனதினை துளைத்தாய் நீயே
துளைக்கும் வண்டாய் மனதினை துளைத்தாய் நீயே
ஏதோ காது கொடுக்க வந்தவன்
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ

தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க
ஆஆ……
மீட்டும் விரலாய் நரம்பினில் அடங்காய் நீயே
வண்ண மலர் உண்டு….
வண்ண மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவு போ
வண்ண மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவு போ

பச்சை கொடியுண்டு
பசும் புல் மடியுண்டு
பனியின் துளியை போல தழுவு போ
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ
நீயும் விலையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ

என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இயங்கிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே......
வேங்குழலே......

படம் : இவன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
பாடியவர்கள் : சுதா ரகுநாதன்


இன்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கையில் இந்த பாடலை கடந்து வந்தேன். அருமையான பாடல். கவிஞர் வாலி மற்றும் இசைஞானி இளையராஜா அவர்கள் இருவரும் சேர்ந்து நல்ல இசை விருந்து படைத்திருக்கிறார்கள். சுதா ரகுநாதன் அவர்களின் குரல் அந்த விருந்தை மேலும் ஒருபடி மேலே சென்று இன்னிசை விருந்தாக்கிவிட்டது..

* தினேஷ்மாயா *

மாலை சாற்றினாள்




மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
பூ மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
சீதா மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
துளசி மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்

ராகம்: சங்கராபரணம்

மிக அருமையான பாடல். இதையும் ஒருவழியாக மனப்பாடம் செய்துவிட்டேன்.


* தினேஷ்மாயா *

அலை பாயுதே கண்ணா



பல்லவி:


அலை பாயுதே கண்ணா

என் மனம் அலை பாயுதே

ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா


அனுபல்லவி:


நிலை பெயராது சிலை போலவே நின்று

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே

மிக விநோதமான முரளிதரா

என் மனம் அலை பாயுதே

கண்ணா....



சரணம்:


தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே

திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!


கதித்த மனத்தில் உறுத்திதி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்த வா !

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!

கணைகடலலையினில் கதிரவன் ஒளியென

இணையிருக் கழலெனக் கனித்தவா!

கதறி மனமுருகி நான் அழைக்கவா

இதர மாதருடன் நீ களிக்கவோ ?

இது தகுமோ? இது முறையோ?

இது தருமம் தானோ?


குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்

குழைகள் போலவே

மனது வேதனை மிகவோடு


அலை பாயுதே கண்ணா

என் மனம் மிக அலை பாயுதே

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அலை பாயுதே கண்ணா



ராகம்: கானடா

தாளம்: ஆதி

பாடல் இயற்றியவர்: ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்


மிக அருமையான பாடல். ஒரு வழியாக இந்த பாடலை நான் மனப்பாடம் செய்துவிட்டேன். கேட்கவும் சரி, பாடவும் சரி அவ்வளவு இனிமையாக இருக்கிறது இந்த பாடல். நேரம் கிடைக்கையில் கேட்டுப்பாருங்கள்.

* தினேஷ்மாயா *

தூது

Saturday, April 15, 2017



நாளைய சந்திப்பில் நான் வரவில்லை

தூது அனுப்பியுள்ளேன்..

தலைவி தோழியை தூது அனுப்புவாள்..

தலைவனாகிய நான், தோழனை தூது அனுப்பியுள்ளேன் !

* தினேஷ்மாயா *

உன் கண்களால்



அன்று நம் நண்பர்களுடன் ஒரு உணவகம் சென்றிருந்தோம்

நான் உட்பட அனைவரும் உணவை உண்ண,

நீ மட்டும் எதுவும் சாப்பிடாமல் இருந்தாய்..

ஓ !

உன் கண்களால் என்னை சாப்பிட்டுக்கொண்டிருந்ததனாலோ ?!

* தினேஷ்மாயா *

No Rice Diet



   ஒரு வாரத்திற்கு No Rice Diet - உணவுமுறை பின்பற்றலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வெற்றிகரமாக அதை இரண்டு நாட்கள் கடைப்பிடித்து வருகிறேன். இது ஒரு வாரம் ஒரு ஒத்திகைப்போல் பின்பற்றலாம் என்றிருக்கிறேன். பழகிவிட்டதென்றால், ஒரு மாதம் இதை நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் இருக்கிறேன். பலவருடமாக வெறும் கனவாகவே இருந்ததை இரு தினங்களுக்கு முன்னர் நனவாக்கியிருக்கிறேன். அது வேறொன்றுமில்லை. அதிகாலை எழுந்து உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது. இதை அப்படியே தொடரவேண்டும் என்றிருக்கிறேன். உணவில் கட்டுப்பாடு கொண்டுவந்துவிட்டேன். மனதையும் இயன்றவரை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். இனி உடலையும் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்த முயற்சியே அது. இம்மூன்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே போதும் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். நீங்களும் முயன்றுதான் பாருங்களேன்.

* தினேஷ்மாயா *

Fast & Furious 8



நேற்றிரவு Fast & Furious 8 திரைப்படத்திற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். வழக்கம்போல் விறுவிறுப்பு குறையாமல் மற்ற பாகங்களின் அதே வேகத்துடன் படம் நகர்ந்தது. நட்பின் அருமையும் குடும்பத்தின் அருமையையும் சொல்லியிருக்கிறார்கள். பல மாதங்கள் கழிச்சு திரையரங்கம் சென்று படம் பார்த்தேன். கவலைகள் பொறுப்புகள் எல்லாம் கொஞ்ச நேரம் மறந்து படம் பார்த்து ரசித்து மகிழ்ந்திருந்தேன்..

* தினேஷ்மாயா *

சூப்பரா சொதப்பிட்ட தினேஷ் !



நேற்று நான் சொன்ன மாதிரி, நிச்சயமாக நேற்று என் வாழ்நாளில் முக்கியமான நாள் தான். மறக்கவும் முடியாத நாளும் கூட. என்னை நினைத்து நான் சிரித்துக்கொள்வதா, இல்லை நொந்துக்கொள்வதா என்றே தெரியவில்லை. அப்படி என்ன ஆச்சு என்றுதானே கேட்க போறீங்க. நானே சொல்றேன் இருங்க.

நேற்று நான், அம்மா, அப்பா, என்னோட தம்பி நாங்கள் நால்வரும் இங்கே கோவையில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றோம். புத்தாண்டு என்பதாலும், அப்புறம் வீட்டில் பார்த்த பெண் ஒருவரை நேரில் சென்று பார்க்கலாம் என்றும் சென்றோம். இதுவரை புகைப்படத்தில் மட்டும்தானே இரு குடும்பமும் பார்த்துக்கொண்டது, சரி அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன்னர், ஒருமுறை நேரில் சென்று பார்த்துடலாம் என்ற முடிவுக்கு இரு வீட்டாரும் வந்தனர். அவர்கள் வீட்டிற்கே வந்து பார்க்கலாம் என்று அவர்கள் அழைத்தார்கள். ஆனால், நான்தான் அப்பாவிடம் அவர்களை கோவிலுக்கு வரசொல்லுங்கள், கோவிலில் பார்ப்போம் என்று சொன்னேன். என் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் இறைவன் இருக்கிறான். அவன் சன்னதியிலேயே இந்த நிகழ்வும் நடக்கட்டுமே என்றுதான் அப்படி சொன்னேன். மேலும், எனக்கு வரப்போகும் துணையை முதன்முதலில் கோவிலில்தான் பார்க்க வேண்டும் என்கிற கனவும் ஆசையும் எனக்கு உண்டு. சரி ஒருவழியா இரு குடும்பமும் கோவில் வந்து சேர்ந்தாச்சு.

ம். ஒரு பத்து நிமிஷம் கோவிலில் இருந்திருப்போம். என் அப்பா தான் பெண்ணிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தார். அவர்தான் ஏதேதோ கேள்விகள் எல்லாம் கேட்டுக்கொண்டு எதை எதையோ பேசிக்கொண்டிருந்தார். நான் எதுவும் பேசவில்லை எனக்கு பேசுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. அட அதுக்கூட பரவாயில்லை. அங்கே இருந்த பத்து நிமிஷத்தில் நான் பெண்ணை மொத்தமாக ஒரு 10 நொடிகள் கூட பார்த்திருக்க மாட்டேன். சொல்லப்போனால் பெண்ணின் முகம் என் மனதில் பதியக்கூட இல்லை. அதெப்படி பதியும் சொல்லுங்க, ஒவ்வொரு நொடியாக பத்து முறை பார்த்திருப்பேன் அவ்ளோதான். என் தம்பி என்னருகில்தான் அமர்ந்தான், அவனிடம் சொல்லிட்டேன். டேய் தம்பி, நான் பெண்ணை சரியா பார்க்கலை, மரியாதையா நீ ஒழுங்கா பாத்துக்கோ. நீதான் சொல்லனும்னு. அவன் திட்டினான். போ அண்ணா, அவங்களே தைரியமா உன்னை பார்க்குறாங்க நீ ஏன் பார்க்க பயப்படுறனு. 

ம்.. இது பயமெல்லாம் இல்லை. ஆனா நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க. சுத்தி என் அம்மா அப்பா, அவளுடைய அம்மா அப்பா, அப்புறம் எல்லோரும் சுற்றியிருக்க நான் எப்படி அந்த பெண்ணை பார்க்க முடியும் சொல்லுங்க. ஒரு நொடிக்கு மேல் நான் பெண்ணை பார்க்க வில்லை. இப்படி கிடைத்த பத்து நிமிஷத்தில் ஒவ்வொரு நொடியாக ஒரு பத்துமுறைகூட பார்த்திருக்க மாட்டேன். எனக்கே நல்லா தெரியுது நான் பெண்ணை பார்க்க தயங்குகிறேன் என்று. ஆனாலும் அந்த தயக்கத்தை மீறி என்னால் அவளை பார்க்க முடியவில்லை. ஒரு பத்து அடி தொலைவில் இருக்கும் பெண்ணை சுலபமாக பார்த்துவிடலாம். அதுவே, வெறும் மூன்று அடி தொலைவில் அமர்ந்திருக்கும் அவளை அதுவும் இருவரின் பெற்றோர் சுற்றி அமர்ந்திருக்க எப்படி அவளை நான் பார்ப்பது ? தம்பி சொன்னான், அவங்களே தைரியமா உன்னை பார்த்தாங்க என்று. எது எப்படியோ நான் பார்க்காவிட்டாலும் அவள் என்னை பார்த்திருக்கிறாள். இப்போதைக்கு அதுபோதும். நேற்று கோவிலில் சென்று பார்த்தது ஒரு சம்பிரதாயத்துக்காகவே. 

ஏம்பா... ஒத்துக்கறேன் பா. இந்த காலத்துல பெண்கள் எல்லாம் தைரியமாகத்தான் இருக்காங்க. இந்த பசங்கதான் பாவம் பாருங்க. மத்தவங்க எப்படியோ நான் ரொம்பவே பாவம்தான் போங்க. நேற்று இரவு உறங்கும் முன் கண்ணை மூடி அவள் முகத்தை நினைவுகூற முயன்று முயன்று தோற்றுப்போனேன். ஏன்டா இவ்ளோ அப்பாவியா இருக்கனு உள்மனசு அசிங்கமா என்ன திட்டுனது என் காது வழியே எனக்கு கேட்டுச்சுனா பாத்துக்கோங்க. ஆனால், இதில் ஒரு சின்ன பிரச்சனை என்னனா, நான் அவளை சரியாக பார்க்கவில்லை. இது என் கூச்சத்தாலும், தயக்கத்தாலும் என்பது எனக்கும் என் தம்பிக்கு, அம்மாவிற்கும் தெரியும். ஆனால், இதை அவளும் அவள் வீட்டு ஆட்களும் எப்படி புரிந்துக்கொண்டார்களோ என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு விருப்பமில்லை என்கிறமாதிரி நினைத்திருப்பார்களோ என்று என் தம்பி ஒரு கூற்றை கூறினான். சரி இதற்கெல்லாம் எப்படி நான் விளக்கம் தருவது இப்போது?

எல்லாம் என் அப்பன் முருகன் துணையிருப்பான். நடக்கப்போவதை அவன் பார்த்துக்கொள்வான். 

* தினேஷ்மாயா *

வருக வருக...

Friday, April 14, 2017







   என் வாழ்க்கைக்குள்ளும், என் அன்பான, அழகான உலகத்துக்குள்ளும் அடியெடுத்து வைக்கும் தேவதையை ஆரத்தி எடுத்து வரவேற்கிறேன்...

முதன்முதலாக இந்த பக்கத்திற்கு வருகைத்தரும் தங்களை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். நேரம் கிடைக்காவிட்டாலும் சரி, நேரம் ஒதுக்கி என் அனைத்து பதிவுகளையும் படித்துப்பார்க்குமாறு வேண்டுகிறேன். அதன்பின், நானென்ன சொல்ல, நீங்கள் தான் சொல்ல வேண்டும்..

பின் குறிப்பாக: முதலில் இதை படித்துவிட்டு, பின் இங்கிருந்து (2009-ல் என் முதல் பதிவில் ) தொடங்கி 2017 நான் இன்று எழுதிய கடைசி பதிவாகிய இந்த பதிவையும் சேர்த்து படித்து முடிக்க முயற்சி செய்யுங்கள்.

நன்றி..

* தினேஷ்மாயா *

இன்று மிக முக்கியமான நாள்



இன்றைய நாள் எனக்கு மிக முக்கியமான நாள். இது மறக்க முடியாத நாளாக இருக்கும் என நம்புகிறேன்.

" தேவதை போல் ஒரு 
பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி "

இப்பாடல் வரிகள் எனக்கு நினைவில் வருகிறது இப்போது. 

* தினேஷ்மாயா *

ஹேவிளம்பி.. வருக வருக..



அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

பிறந்திருக்கும் ஹேவிளம்பி ஆண்டு மகிழ்ச்சியையும், அனைத்து செல்வங்களையும், அனைவருக்கும் அள்ளி கொடுக்கும்.

அன்போடும், பண்போடும் அனைவரிடமும் பழகுவோம். ஒரு நாளில் 10 முறையாவது வாய்விட்டு சிரியுங்கள். 10 பேரையாவது வாய்விட்டு சிரிக்க வையுங்கள். இயன்றவரை எல்லோருக்கும் உதவுங்கள். ஆனந்தமாய் வாழ்வதைவிட நிம்மதியாய் வாழ வழி தேடுங்கள்..

அன்புடன்

* தினேஷ்மாயா *

முத்தத்தமிழ் !

Tuesday, April 11, 2017


முத்தமிழ் !

பிறர் பேசும் தமிழ் காதில் தேனாய் பாயும் எனக்கு..

முத்தத்தமிழ் !

நீ பேசும் தமிழ் என் கன்னங்களில் முத்தமாய் பதிகிறதடி..

* தினேஷ்மாயா *

மூன்று முடிச்சு !


பார்வை !

போர்வை !

வியர்வை !

* தினேஷ்மாயா *

தீஞ்சுவை


எல்லோரும் தீயை தொடுவார்கள்

நானோ தீயை சுவைக்கிறேனடி !

உன்னை !

நீ - தீ !

ஆம்..

தீஞ்சுவை பிடிக்கும் எனக்கு !

* தினேஷ்மாயா *

#பறந்து_செல்லவா


நனைந்து கொள்ளவா

மழை இல்லாமலே

இணைந்து கொள்ளவா

உடல் இல்லாமலே

#பறந்து_செல்லவா # ஓ_காதல்_கண்மனி

* தினேஷ்மாயா *

காற்று வெளியிடைக் கண்ணம்மா


காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)

நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று)

- பாரதியார்

* தினேஷ்மாயா *

நானே வருகிறேன்


நானே வருகிறேன்

கேளாமல் தருகிறேன் ..

#ஓ_காதல்_கண்மனி

* தினேஷ்மாயா *

என்னை நோக்கி பாயும் தோட்டா !


என்னை நோக்கி பாயும் தோட்டா !

வேறென்ன - உன் மின்னல் பார்வைதான் அது !

* தினேஷ்மாயா *

மறுவார்த்தை பேசாதே



மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமைபோல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில்தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழிநீரும் வீணாக
இமைதாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண் ஆனதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத  வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணிகாட்டும் கடிகாரம் 
தரும் வாதை  அறிந்தோம் 
உடை மாற்றும் இடைவேளை 
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மறைந்தாய் 
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் என்னும் மலர் கொண்டு 
கடிதங்கள் வரைந்தாய் 
பதில் நானும் தரும் முன்பே 
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி 
சினம் தீருமடி 
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழை காலம்

படம்: எனை நோக்கி பாயும் தொட்டா
வரிகள்: தாமரை
இசை: சிவா
பாடியவர்: சித் ஸ்ரீராம்

* தினேஷ்மாயா *

சுட்டும் சுடர் விழி பார்வையிலே



சுட்டும் சுடர் விழி பார்வையிலே
தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை
தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

சுட்டும் சுடர் விழி பார்வையிலே
தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை
தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

நிலவை பொட்டு வைத்து
பவளம் பட்டம் கட்டி
அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன் நான்
வரவேற்பேன் நான்

சித்திரை பூவே
பக்கம் வர
சிந்திக்கலாமா
மன்னனை இங்கே
தள்ளி வைத்து தண்டிக்கலாமா

சுட்டும் சுடர் விழி பார்வையிலே
தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை
தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

உனது பெயரை
மந்திரம் என
ஓதுவேன்
ஓதுவேன்

மின்மினிகளில்
நம் நிலவினை
தேடுவேன்
தேடுவேன்

உனது பெயரை
மந்திரம் என
ஓதுவேன்
ஓதுவேன்

மின்மினிகளில்
நம் நிலவினை
தேடுவேன்
தேடுவேன்

சந்தங்களில் நனையுதே
மௌனங்கள் தாகமாய்

மன்னன் முகம்
தோன்றி வரும்
கண்ணிலே தீபமாய்

என்றும் உனை நான் பாடுவேன்
கீதாஞ்சலியாய்
உயிரே
உயிரே
ப்ரியமே சகி

சுட்டும் சுடர் விழி
நாள் முழுதும்
தூங்கலையே
கண்ணா

தங்க நிலவுக்கு
ஆரிரரோ பாட
வந்தேன் கண்ணே

இரு விழிகளில்
உயிர் வழியுது
ஊமையாய்
ஊமையாய்

முள் மடியினில்
மலர் விழுந்தது
சோகமாய்
சோகமாய்

இரு விழிகளில்
உயிர் வழியுது
ஊமையாய்
ஊமையாய்

முள் மடியினில்
மலர் விழுந்தது
சோகமாய்
சோகமாய்

விண்ணுலகம் எரியுதே
பௌர்ணமி தாங்குமா
இன்று எந்தன் சூரியன்
காலையில் தூங்குமோ

கனவில் உனை நான் சேர்ந்திட
இமையே தடையாய்
விரிந்தால் சிறகே
இங்கு சிலுவையாய்

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (ஓ ஹோ ஓ ஹோ)
தூண்டில் இடும் தேவி (ஓ ஹோ ஓ ஹோ)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (ஓ ஹோ ஓ ஹோ)
தீண்டுது உன் ஆவி (ஓ ஹோ ஓ ஹோ)

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (ஓ ஹோ ஓ ஹோ)
தூண்டில் இடும் தேவி (ஓ ஹோ ஓ ஹோ)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (ஓ ஹோ ஓ ஹோ)
தீண்டுது உன் ஆவி (ஓ ஹோ ஓ ஹோ)

நிலவை பொட்டு வைத்து
பவளம் பட்டம் கட்டி
அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன் நான்
வரவேற்பேன் நான்

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (ஓ ஹோ ஓ ஹோ)
தூண்டில் இடும் தேவி (ஓ ஹோ ஓ ஹோ)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (ஓ ஹோ ஓ ஹோ)
தீண்டுது உன் ஆவி (ஓ ஹோ ஓ ஹோ)

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (ஓ ஹோ ஓ ஹோ)
தூண்டில் இடும் தேவி (ஓ ஹோ ஓ ஹோ)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (ஓ ஹோ ஓ ஹோ)
தீண்டுது உன் ஆவி (ஓ ஹோ ஓ ஹோ)

படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: காதல் மதி
பாடியவர்கள் : சித்ரா, எம்.ஜி.ஸ்ரீகுமார்

* தினேஷ்மாயா *

பனி மலரே !


என் உள்ளத்து ஆசைகள் எல்லாம் மொட்டாய்..

மலராய் நீ மலர்ந்து அவற்றை வென்றுவிட்டாய்..

என் அதிகாலை பனிமலர் நீ..

* தினேஷ்மாயா *


அரவணைப்பு



* தினேஷ்மாயா *

வானமே போர்வை..




      ரொம்ப நாள் கழிச்சு, மொட்டை மாடியில் படுக்க வந்திருக்கேன் இன்று. கோவையில் வெயில் கொஞ்சம் கம்மிதாம் ஆனாலும் இரவு நேரத்தில் வீட்டினுள் உஷ்ணம் அதிகம். ஆனாலும் அதிகாலையில் இங்கே பனி கொஞ்சம் கொட்டும். சரி, எது எப்படியோ என்று இன்று படுக்கையை மொட்டை மாடிக்கு மாற்றிட்டேன். மேலே இருக்கும் புகைப்படம் படுத்துக்கொண்டு வானத்தை இரசித்தப்போது எடுத்தேன். வானில் நிலா மட்டும் அப்புறம் பக்கத்தில் ஒரேயொரு நட்சத்திரம் மட்டும். இன்று பௌர்ணமி வேறு. வெளிச்சம் கொஞ்சம் துக்கலாகத்தான் தருகிறான் சந்திரன். 

   பூமியே மெத்தையாய், வானமே போர்வையாய். செம சூப்பரா இருக்கு இப்படி தூங்க. ஆனா என்ன, இளையராஜா, ரஹ்மான் இவர்கள் இசையோடு கொசுவின் ரீங்கார இசையும் கேட்கவேண்டிய சூழல். 

   சமீபத்தில் காற்று வெளியிடை படத்தில் வரும் அழகியே, சாரட்டு வண்டியில பாடல்கள் கேட்டேன். அந்த படத்துல எல்லா பாட்டும் கேட்டேன் ஆனால் இந்த இரு பாடல்கள் ரொம்ப பிடிச்சுபோச்சு. அழகியே பாடல் Repeat Mode -ல ரொம்ப நேரமா ஓடிட்டே இருக்கு. படம் இன்னும் பார்க்கல. ம்.. முடிஞ்சா இந்த வாரம் இல்லனா அடுத்த வாரம் பார்க்கலாம்னு இருக்கேன். படம் பாத்துட்டு அதைப்பற்றி அப்புறம் பதிவு செய்றேன்.

"துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே!"

"Honest-ஆ நான் பேசவா
இல்லை இது போதுமா?"

"Waiting for a புன்னகை.. சிரிடி..
காணவில்லை Heartbeat.. திருடி.."

"Chorus-ஆ நான் கேட்கவா ?
Yes-ஆ Yes-ஆ No-ஆ Yes-ஆ?"

"அழகியே ! 
Marry Me
Marry Me "

இவையெல்லாம் #காற்று_வெளியிடை படத்தில் #அழகியே பாடலில் எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள். வழக்கமான ARR Touch இந்த பாட்டிலும் இருக்கு. அதான் ரொம்ப பிடிச்சுருக்கு போல.

ம்.. சரி கொஞ்சம் போரடிக்குது. வானில் நட்சத்திரங்கள் ஏதுமில்லை. இருந்துச்சுனா அதை எண்ணிக்கொண்டிருப்பேன். சரி.. என்ன பண்ணலாம்?
ம்.. சரி அந்த நிலாவத்தான் என் கையில் பிடிச்சேன்னு ஒரு பாட்டு வரும். இருங்க. அதுமாதிரி நானும் முயற்சி செய்றேன்.



ஏதோ கொஞ்சம் முயன்று நிலாவை கைது செஞ்சுட்டேன். காலையில் விடுதலை செஞ்சுரலாமா இல்ல சூரியன் வந்து ஜாமீனில் எடுக்கும்வரை அப்படியே பிடிச்சு வெச்சிருக்கட்டுமா ?

இந்த நிலவுதான் உலகில் இருக்கும் எத்தனை கவிஞர்களுக்கு ஒரு பொதுவான காதலி !
நிலாவைப்பற்றி கவிதை எழுதாத கவிஞர் எவராவது உண்டா ? நானும்கூட எத்தனையோமுறை நிலாவைப்பற்றி எழுதியதுண்டு. நிலவை சந்திரன் என்று இதிகாசங்கள் சொன்னாலும் கவிஞர் மனதில் நிலா என்றுமே ஒரு அழகிய பெண்மணிதான்..

என்னங்க இது.. கொஞ்சம் கூட காத்து வீசாம இந்த மரமெல்லாம் சும்மா நின்னுட்டு இருக்கு.. சரி.. தப்பெல்லாம் நாம செஞ்சுட்டு மரத்தை குற்றம் சொல்றது என்ன நியாயம்.

ஓ.. நேரம் 2 ஆகப்போகுதா ! சரி.. கொஞ்ச நேரம் தூங்கறேன். எப்படியும் காலை 5:30 மணிக்கெல்லாம் சூரியன் வந்து எழுப்பிருவான். அதுகுள்ள கொஞ்சம் தூங்கிக்கறேன். வரப்போகும் தேவதையோடு கனவில் என்னுலகத்தை அவளுக்கு சுற்றிக்காட்டிவிட்டு வருகிறேன்..

இனிய இரவு வணக்கம்...

கடைசியாக, வரப்போகும் என்னவளுக்கு காற்று வெளியிடை படத்தில் மேலே சொன்ன பாடலில் இருந்து இரண்டு வரிகளை சமர்ப்பிக்கிறேன்..

"அழகியே ! 
Marry Me
Marry Me "


"துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே!"

"Honest-ஆ நான் பேசவா
இல்லை இது போதுமா?"

* தினேஷ்மாயா *

உன்னை நானறிவேன்

Tuesday, April 04, 2017



உன்னை நானறிவேன்

என்னையன்றி யாரறிவார் ?

கண்ணில் நீர்வடிந்தால்

என்னையன்றி யார் துடைப்பார் ?

#குணா

* தினேஷ்மாயா *

#நீயொரு_காதல்_சங்கீதம்



கடற்கரை காற்றே வழியைவிடு..

தேவதை வந்தால் என்னோடு..

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்,

நடந்ததை காற்றே மறைக்காதே..

தினமும் பயணம் தொடரட்டுமே !

#நீயொரு_காதல்_சங்கீதம்

* தினேஷ்மாயா *

#கப்பலேரி_போயாச்சு



அன்னமே அன்னமே நான் சொல்லி

வந்ததா தென்றலும் நேற்று

உன்னையே உன்னையே நான் எண்ணி

வெந்ததை சொன்னதா பூங்காற்று

உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்

உந்தன் கண்ணுக்கு கண்ணி போல் காவல் இருப்பேன்

மாலை சூடி கை தொட்டு மெய் தொட்டு

உன்னில் என்னை கரைப்பேன்

#கப்பலேரி_போயாச்சு

* தினேஷ்மாயா *

உண்மையான உலகம்



உண்மையான உலகம் சமூக வலைத்தளங்களுக்கு வெளியேதான் இருக்கிறது என்பதை மக்கள் எப்போது உணர்வார்கள் ?

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் WhatsApp பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் Facebook பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டேன். Twitter மட்டும் பயன்படுத்திவருகிறேன். அதிலிருந்தும் விரைவில் வெளியேற முயல்வேன். இந்த உலகம் எவ்வளவு அருமையானது, ஆச்சரியமானது, இனிமையானது. இந்த உலகை இரசிக்கவே இந்த ஒரு ஆயுள் போதாது. அதை அனுபவிக்காமல் வெறுமனே சமூகவலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்க நான் விரும்பவில்லை. அதிகம் தேவையற்ற விடயங்கள்தான் அதில் உலாவி வருகின்றன. நம் நேரத்தை விரயமாக்கும் விடயங்கள் அதில் அதிகம். ஒருநாள் FB பயன்படுத்தாமல் இருப்போம் என்று முடிவுசெய்து, அதை பின்பற்றினேன். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது, அட.. என் நாளில் இவ்வளவு நேரங்கள் எனக்கு கிடைக்கிறதா ? என்று. அதை வீணடித்து வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் சமூகவலைகளில் இருந்து சிக்கிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டேன். இந்த FB, WhatsApp வந்ததிலிருந்து நம் வாழ்க்கைமுறையில் எத்தனை எத்தனை மாற்றங்கள். நெருக்கமான நண்பர்கள் உறவினர்களிடம் கூட, அழைத்து பேசி அவர்களின் குரல்களை கேட்கும் வழக்கம் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரை அழைத்துப்பேசி வாழ்த்து தெரிவித்த காலம் போய், வெறுமனே குறுஞ்செய்திகளாலும், புகைப்பட பகிர்வுகளாலுமே இன்றைய சூழலில் வாழ்த்தும் பழக்கம் வந்துவிட்டது. இதை எவ்வளவு செய்தாலும், அவரை அழைத்துப்பேசி வாழ்த்து சொல்லுவதற்கு ஈடாகுமா? அவர் உள்ளம் நெகிழ்வதை நீங்களும் உணரலாம். ஆனால், அப்படியெல்லாம் இப்போது வெகுசிலரே பின்பற்றுகின்றனர். இதை எல்லாம்விட, வதந்திகள் அதிகம் பரவ இந்த சமூகவலைகள் அதிகம் பயன்படுகின்றன. எதையும் அறிவார்த்தமாக நம்பாமல், அப்படியே கண்மூடித்தனமாக பகிரும் வழக்கம் இங்கே அதிகம் பெருகிவிட்டது. இதை எப்படி மாற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. நான் என்னை முதலில் மாற்றிக்கொள்ள விரும்பினேன். இந்த சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேவந்துவிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள் யாருடனும் பேச வேண்டும் என்று தோன்றினால், உடனே அவரை அழைத்துப் பேசிவிடுகிறேன். இயன்றால், அருகில் இருப்பவரை நேரில் சென்று சந்தித்து வருகிறேன். என்னடா இவன், பின்னோக்கி செல்கிறான் என்று நினைக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, இது பின்னோக்கி செல்வதாக தெரியவில்லை. உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை தரும் செயலாகவே கருதுகிறேன். Privacy என்பது இந்த சமூக வலைகளில் எவருக்கும் கிடைப்பதில்லை. எனக்கு என் Privacy முக்கியம், அதுபோல பிறரின் Privacy-க்கு நான் மரியாதை கொடுக்கிறேன். அதான் இதிலிருந்து வெளியேறுகிறேன். சில பயனுள்ள தகவல்களும் அதில் பகிரப்படுகின்றன. அது என்னை சேராமல் செல்லலாம். அதற்காக வருந்தவில்லை. எந்தெந்த தகவல்கள் எனக்கு தேவையோ, அது எப்படியாவது என்னைவந்து சேர்ந்துவிடும். ஏனென்றால், நான் மட்டும்தான் இந்த சமூகவலைகளில் இல்லை, என்னை சுற்றியிருக்கும் அனைவரும் அதில் சிக்குண்டு இருப்பதால் !

* தினேஷ்மாயா *

#பூவே_செம்பூவே

நிழல்போல நானும்..
நிழல்போல நானும்.. நடைப்போட நீயும்..
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல்வானம்கூட நிறம் மாறக்கூடும்
மனம்கொண்ட பாசம் தடம் மாறிடாது..
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே !
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே !
வாய்ப்பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் !
#பூவே_செம்பூவே
* தினேஷ்மாயா *