என்னை என்ன செய்தாய் வேங்குழலே

Sunday, April 16, 2017


என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இயங்கிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே.......

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்….
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்

யாரோ…. அவன் யாரோ….
யாரோ…. அவன் யாரோ….
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தோரு இசை கனையால்
என்னை என்ன செய்தாய் வேங்குழலே

மழை கம்பி குத்தாமல் இருக்க
குடை கம்பியாய் ஒதுங்கினேன்
குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்

கானம் கேட்க கண் மூட போய்
காணாமலே போனேன் நான்

விட்டு கூடு பாய்ந்திருப்பேனோ என
தட்டு தடுமாரி தேடி
காதுகளால் இரைந்துகிடக்கும்
உன் கால் அடிவாரம் வந்தடைந்தேன் 

மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க

அடடா தாளமிடும் கைக்கும்
தட்டு படும் உன் தொடைக்கும் இடையே நான்
சிக்கிகொண்டிருப்பதை கண்டுகொண்டேன்

மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க

துளைக்கும் வண்டாய் மனதினை துளைத்தாய் நீயே
துளைக்கும் வண்டாய் மனதினை துளைத்தாய் நீயே
ஏதோ காது கொடுக்க வந்தவன்
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ

தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க
ஆஆ……
மீட்டும் விரலாய் நரம்பினில் அடங்காய் நீயே
வண்ண மலர் உண்டு….
வண்ண மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவு போ
வண்ண மலர் உண்டு
வெள்ளி அலை உண்டு
வருடிடும் காற்றென உலவு போ

பச்சை கொடியுண்டு
பசும் புல் மடியுண்டு
பனியின் துளியை போல தழுவு போ
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ
நீயும் விலையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ

என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இயங்கிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே......
வேங்குழலே......

படம் : இவன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
பாடியவர்கள் : சுதா ரகுநாதன்


இன்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கையில் இந்த பாடலை கடந்து வந்தேன். அருமையான பாடல். கவிஞர் வாலி மற்றும் இசைஞானி இளையராஜா அவர்கள் இருவரும் சேர்ந்து நல்ல இசை விருந்து படைத்திருக்கிறார்கள். சுதா ரகுநாதன் அவர்களின் குரல் அந்த விருந்தை மேலும் ஒருபடி மேலே சென்று இன்னிசை விருந்தாக்கிவிட்டது..

* தினேஷ்மாயா *

0 Comments: