நான்கு பேர் மட்டுமா?

Wednesday, January 29, 2020

நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பதில் அரசாங்கமும் பொதுமக்களும் தீவிரம் காட்டுவதை உணர முடிகிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் துளியும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. என் கேள்வியெல்லாம், அவர்கள் நால்வர் மட்டுமா குற்றாவாளிகள் ?
சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் ஒரு மருத்துவர் சிலரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலீசாரால் தற்காப்புக்காக சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று செய்திகள் வந்தது. ஆனால், இது தொடர்பான இன்னொரு செய்தியை நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க தவறிவிட்டோம். இந்த சம்பவம் நடந்த மறுதினம், இணையத்தில் இறந்த அந்த பெண்ணின் பெயரை ஆபாச வலைத்தளங்களில் 80 இலட்சத்திற்கும் மேலான மக்கள் தேடியுள்ளனர். அதிலும், இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அதிக தேடல் வந்துள்ளது என ஒரு இணைய செய்தி வந்தது. இது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம் ?

ஒரு சில மனித மிருகங்களால், ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதைப்பற்றி மனதில் சிறிதும் ஈரமின்றி இரக்கமின்றி, அந்த பெண்ணின் வீடியோ கிடைக்குமா என்று தேடிய அந்த வக்கிர மனம் படைத்த 80 இலட்சம் மனித மிருகங்களை தண்டிப்பது யார் ? குற்றம் செய்தவன் மட்டுமா குற்றவாளி ? அந்த நால்வரை இதுபோல குற்றத்தில் ஈடுபட வைத்தது எது ? இதோ… இந்த 80 இலட்சத்திற்கும் மேலான மனித மிருகங்களின் மனதில் இருக்கும் வக்கிர குணம் தானே !

இந்த தேடலில் ஈடுபட்ட 80 இலட்சத்தில் இதுப்போன்ற நால்வர் இருக்கிறார்கள். இதுப்போல பல்லாயிர மனித மிருகங்கள் ஒளிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

இதுப்போன்ற குற்றங்கள் இருவகைப்படும். ஒன்று, திட்டம் தீட்டி செய்வது, மற்றொன்று சந்தர்ப்பத்தால் செய்வது. திட்டம் தீட்டி செய்யப்படும் குற்றங்களைவிட, சந்தர்ப்பத்தால் செய்யும் குற்றங்களே அதிகம் எனலாம். ஒரு சொலவடை இங்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்வரை தான் ஒரு ஆண் நல்லவனாக இருக்க முடியும். இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிடவும் முடியாது, எவர்க்கும் பொருந்தாது என்று புறந்தள்ளிடவும் இயலாது.

மத்திய குற்ற ஆவணப்பிரிவின் அறிக்கைப்படி, 70 சதவிகிதம் குழ்ந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அவர்களின் நெருங்கிய சுற்றத்தாரால் மட்டுமே நடத்தப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கையில் எதிரில் இருப்பவர் எவர் என்றெல்லாம் பாராமல் அவர் மீது தன்னிடம் மறைத்து வைத்திருக்கும் வக்கிர மிருகத்தை கட்டவிழ்த்து விடுவர்.

ஆனால், பெரும்பாலும் இதுப்போன்ற செயல்கள், உயிரிழப்பில் கொண்டுப்போய் விடுவது வேதனையளிக்கிறது. இதற்க்குக் காரணம், அவர்க்கும் தெரியாமல், எவர்க்கும் தெரியாமல், ஒருவருக்குள் இதுநாள்வரையில் மறைந்திருந்த அந்த வக்கிர மனம், இன்று செயல்வடிவம் கொண்டு மனிதவேட்டை நிகழ்த்தியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால், செய்வதறியாது தற்கொலை அல்லது கொலையில் முடிகிறது.

இதுப்போன்ற குற்ற செயல்களின் பிண்ணனி என்னவென்று ஆராய்ந்தால், மனிதனுள் மறைந்திருக்கும் அதீத காமமும், மூர்க்க குணமும், வக்கிர மனமும், தனிமனித ஒழுக்கமின்மையும்தான்.

சமீபத்தில், பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சொல்ல முடியாத துயரத்தை எதிர்க்கொண்டார்கள். இவர்கள் மீது பரிதாபப்படும் மக்கள் ஒரு சாரார் என்றால், இவர்களின் ஆபாச வீடியோக்கள் கிடைக்குமா என்று எதிர்ப்பார்க்கும் மனித மிருகங்கள் இன்னொரு சாரார்.
அப்படி பாதிக்கப்பட்ட பெண்களின் உங்கள் குடும்ப பெண்களோ, உறவினர்களோ, தோழிகளோ இருந்தால் உங்கள் மனம் இப்படி அலையுமா ? உங்களுக்கு தொடர்புடைய பெண்களாக இருக்க வேண்டும் என்றில்லை, நீங்கள் ஒரு உண்மையான மனிதனாக இருந்தாலே போதுமே.
தனிமனித ஒழுக்கம் என்பதன் முக்கியத்துவத்தை இந்த சமூகத்தில் உள்ள அனைவரும் கடைப்பிடிக்கும்வரை, எத்தனை குற்றவாளிகளை தூக்கிலிட்டாலும் குற்றங்கள் குறையாது.

மீண்டும் ஒருமுறை நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி…

அந்த நால்வர் மட்டுமா குற்றாவாளிகள் ??

* தினேஷ்மாயா *

கரோனா வைரஸ்

Tuesday, January 28, 2020



     இன்று  சீனாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், திட்டமிட்டு சீன மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. சீனாவின் சொத்தே அதன் மக்கள்தான். ஆப்பிரிக்காவில் சில ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய எபோலா வைரஸுக்கு மருந்தே இல்லை, இதனால் உலகமே அழியக்கூடும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், ஆறு மாதத்தில் மருந்து கண்டிபிடிக்கப்பட்டு அந்த நோய் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த கரோனா வைரஸுக்கும் எதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் மருந்து தயாரித்து வைத்திருக்கும். அதனை வெளியிடவே இந்த கிருமியை மக்கள் மத்தியில் பரப்பியிருப்பார்கள் என்பது என் கருத்து. இந்த கருத்து உண்மையாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். தவறாக இருக்கும் பட்சத்தில் பெரிதாக பாதிப்பு யாருக்கும் இல்லை என நினைக்கிறேன். ஆனால், அதுவே உண்மையாக இருந்துவிட்டால் ??!!

* தினேஷ்மாயா * 

பேரழகு

Friday, January 24, 2020



பிரம்மாண்டம் அழகு...

எளிமை பேரழகு !

* தினேஷ்மாயா *

ஒரு ராஜா



ஒரு ஊரில்

ஒரு ராஜா இருந்தாராம்..

ஒரு ஊரில்

ஒரே ஒரு ராஜாதான் இருந்தாராம்..

* தினேஷ்மாயா *

அளவோடு உண்

Saturday, January 04, 2020



விருந்து உண்ட பின்

மருந்து உண்ணாமல் இருக்க

அளந்து உண் !!

* தினேஷ்மாயா *

திராவிடநேசன்

Wednesday, January 01, 2020


ஆண்டில் என்ன புதுமை

அறிவில் வேண்டும் முதுமை

போக்க வேண்டும் மடமை

பரப்ப வேண்டும் பொதுவுடமை

அதுவே நம் திராவிட கடமை...

-(தி)ராவிட(நேசன்)
தினேஷ்