நட்பு காலனி

Saturday, March 30, 2013


காதல் நகர் என்றும் பூத்துக்குலுங்கும் ஓர் நந்தவனம் தான். ஆனால் அதற்கான பாதை ஒன்றும் மென்மையானதாக இருப்பதில்லை..




சுகங்களை விட, பிரச்சனைகளே அதிகம் அங்கே..



காதல் நகர், ஒருவகையில் பார்த்தால் வாழ்வதற்காக பாதுகாப்பான இடமல்ல....




இருக்கவே இருக்கிறது நட்பு காலனி. காதல் நகர் என்பதை அடியோடு விட்டுவிட்டு நட்பு காலனிக்கு இடம்பெயர்வோம் நாம்..

* தினேஷ்மாயா *

கடின முயற்சி


வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில கடினமான முயற்சிகள்தாம் நம்மை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்கின்றன.


* தினேஷ்மாயா *

புகைப்படம்


    என் வாழ்க்கையை புகைப்படம் எடுப்பதிலேயே ஓட்டிவிட வேண்டும் என்று நீண்ட நாள் கனவு இருக்கிறது எனக்கு. நிறைவேறுமா என்றெல்லாம் தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் மூன்றாவது கண்ணிற்கு கொஞ்சம் வேலை கொடுக்கிறேன்.



புகைப்படக்கருவி புதிதாய் பெரிதாய் ஒன்று வாங்க வேண்டும் என்று மிகப்பெரும் கனவு நிறைவேறும்போது என் மூன்றாவது கண்ணிற்கு தெரிந்த காட்சிகளை நானே படம்பிடித்து என் வலையில் பதிவு செய்வேன். அந்த நாட்கள் விரைவில் வர ஆசைப்படுகிறேன்...

* தினேஷ்மாயா *

தைரியம்


காதலிப்பதற்கு மட்டுமல்ல

காதலை சொல்வதற்கும்

கொஞ்சம் அதிகமாகவே

தைரியம் தேவை..

* தினேஷ்மாயா *

தூக்கு கயிறு


ஒரு பெண் கழுத்தில்

தாலி கயிறு ஏறுவதற்காக

காதல் சர்வ சாதாரணமாக

தூக்கு கயிறை நாடுகிறது...

* தினேஷ்மாயா *

ச்சீ போடா..



என்னவள் பேசும் வார்த்தைகளில்

எனக்கு அதிகம் பிடித்தது

அவள் மௌனம்..

அடுத்தது

“ ச்சீ போடா” என்னும் சிணுங்கலான வார்த்தை ...

* தினேஷ்மாயா *

கிறுக்கன்



நீ என்னை சேர்ந்தபின்

கவிதை கிறுக்கனாய் திரிந்தேன்..
நீ என்னை பிரிந்தபின்

வெறும் கிறுக்கனாய் திரிகிறேனடி..

* தினேஷ்மாயா *

ஊஞ்சல்



உனக்கு ஊஞ்சல்

பிடிக்குமென்று எனக்கு

முன்னமே தெரிந்திருந்தால் ..

என்றோ கொண்டுவந்து கொடுத்திருப்பேன்

என் மின்னல் அழகிக்கு

மின்னலை ஊஞ்சலாய்..

* தினேஷ்மாயா *

தண்டவாளம்


நானும் என்னவளும் பேசிக்கொண்டோம்..

இருவரும் 

ரயில் தண்டவாளம் போல்

என்றென்றும் இணைந்திருப்போம்...

அவள் பிரிந்தபின்னர் தான் உணர்ந்தேன்

ரயில் தண்டவாளங்கள்

என்றுமே சேராது என்று..

* தினேஷ்மாயா *

துடிப்பில்லா இதயம்



துடுப்பில்லாத ஓடம் போல

அவளில்லாமல்

துடிப்பில்லாத இதயத்துடன் நான்..

* தினேஷ்மாயா *

வாழ்க்கை எனப்படுவது


என்றோ வரப்போகும் மரணத்தை

வரவேற்பதற்காக காத்திருக்கிறோம்.

அந்த காத்திருப்பு நேரம்தான் 

வாழ்க்கை எனப்படுகிறது !

* தினேஷ்மாயா *

ரௌத்திரம் பழகு



* தினேஷ்மாயா *

இந்த காட்சி



     “மயக்கம் என்ன” திரைப்படத்தில் வரும் இந்த காட்சி என்னை மிகவும் உருக்கிவிட்டது. தன் உழைப்பை இன்னொருவன் திருடிவிட்டான் என்பதை ஏற்கமுடியாமல் தவிக்கும் இந்த நாயகனின் நிலை, பலருக்கும் நடந்திருக்கும். என்னவோ தெரியவில்லை இந்த காட்சி என்னையும் கலங்க வைத்துவிட்டது...

* தினேஷ்மாயா *

பெண் குழந்தை


அதிக புண்ணியம் செய்தவனுக்கே 

பெண் குழந்தை பிறக்கும்...

அந்த குட்டிதேவதை

வீட்டில் தவழ்வதை

காண கண்கோடி வேண்டும்..

* தினேஷ்மாயா *

சைக்கிள் தேவதை


தேவதைகள் வானில் பறந்துவரும்

என்றெல்லாம் கதை கேட்டதுண்டு..

சைக்கிளிலும் வரும் என்பதை 

உன்னிடம் கண்டதுண்டு...

* தினேஷ்மாயா *

எது சாதனை


    நவீனகால அறிவியல் நிலவை தொட்டுவிட்டாலும், மனிதநேயத்தை இழந்துதானே தவிக்கிறது இன்றைய உலகம். மனிதனுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யாமல் நீங்கள் அசுரவேகத்தில் முன்னேறிக்கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்?

         வெறும் பணக்காரர்களை மட்டுமே மையமாகக்கொண்டு உங்கள் கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவே, என் ஏழை மக்கள் என்ன பாவம் செய்தனர் அவர்களை ஏன் நீங்கள் தள்ளிவைத்து பார்க்கிறீர்கள். பட்டினியால் செத்துக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருக்க கிடைத்த உணவு சுகாதாரமாக இல்லாமல் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் குளிர்சாதன அறையில் குடித்தனம் நடத்துகையில் நடைபாதையே வீடாய் வாழ்கின்றனர் பலர். 

                கண்டுபிடிப்புகள் அனைத்தும் பணமாக மாற்றப்படுகிறது. மக்களின் நலனுக்காக கண்டுபிடிக்கிறார்கள் என்று யாரும் நினைத்துவிடவேண்டாம். பணம் இருப்பவர்கள் எங்கள் கண்டுபிடிப்புகளை வாங்கி பயன் பெறட்டும் என்றுதான் நினைக்கின்றனர் அவர்கள்.

           உடலில் அனைத்து பகுதிகளும் வளர்ந்தால் அதுதான் வளர்ச்சி. சில பகுதிகள் மட்டும் வளர்ந்தால் அதன்பெயர் வீக்கம். அதுபோல, உலகில் அனைத்து மக்களும் சமமாக வளர்ந்தால் மட்டுமே அதன் பெயர் வளர்ச்சி. இன்று நடந்துக்கொண்டிருப்பது என்னவென்றே சொல்லமுடியாமல் தவிக்கிறேன் நான். இந்த அவலநிலையை மாற்றிக் காட்டுவதுதான் அறிவியலின் உண்மையான சாதனை.

* தினேஷ்மாயா *

மதம்


    மதம் என்பது மனிதனை நல்வழிப்படுத்துவதாக இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான மதங்கள் இறைவனை துதிப்பதிலும், மக்களை மூடனாக்குவதிலும் அவனை பயமுறுத்துவதிலுமே அதிக கவனம் செலுத்துகின்றன. இங்கே மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி பல காரியங்களை சாதித்துக்கொள்கின்றனர் பலர். மதம் மனிட்

ப்ரியமான தோழி


வாசல் நோக்கி

எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன்..

எனக்கான ஓர்

ப்ரியமான தோழியின் வருகைக்காக..

* தினேஷ்மாயா *

நாளைய உலகம்



இதுநாள்வரை உலகம் நம்மை தாங்கியது..

நாளைய உலகத்தை

நம் சந்ததிகள் தாங்கிப்பிடிக்கும் அவலநிலை வந்துவிடுமோ ?

* தினேஷ்மாயா *

காணிக்கை

Thursday, March 28, 2013



வெற்றி 

சில தியாகங்களை

காணிக்கையாக

கேட்கிறது !!

* தினேஷ்மாயா *

என்ன மாயமோ?


என்ன மாயமோ தெரியவில்லை..

அவளைப் பார்த்த நொடிமுதல்

நான்...................................



* தினேஷ்மாயா *

முதுமை


எல்லோரும் ஒருநாள்

முதுமையை அடைந்தே ஆகவேண்டும்..

நீங்கள் முதியவர்களை

எப்படி நடத்துகிறீர்களோ

அப்படியே உங்கள் சமூகம்

உங்கள் முதுமையில்

உங்களிடம் நடந்துக்கொள்ளும்..

* தினேஷ்மாயா *

நான் ரசித்த கதாபாத்திரங்கள்

Wednesday, March 27, 2013

தமிழ் திரையில் நான் ரசித்த சில கதாபாத்திரங்கள் இவை.


வேலு நாயக்கர் - நாயகன்




அந்நியன் - அந்நியன்





ஹாசினி - சந்தோஷ் சுப்ரமணியம்




பாஸ்கர் மணி - நந்தலாலா





மாயா - காக்க காக்க




கிருஷ்ணன் - வாரணம் ஆயிரம்




போதி தர்மன் - ஏழாம் அறிவு





சேனாபதி - இந்தியன்





அப்பு - அபூர்வ சகோதரர்கள்




நல்ல சிவம் - அன்பே சிவம்





சித்தன் - பிதாமகன்





குணா - குணா






என்னனு தெரியல , எல்லாமே கமல் நடிச்சபடம்தான் அதிகம் என் மனதை கவர்ந்திருக்கிறது. இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது மனதில், அதை பிறகு பதிவு செய்கிறேன்.

* தினேஷ்மாயா *

பரதேசி

      பல நாட்களுக்கு பிறகு என்னை கலங்கடித்த திரைப்படம். இப்படத்தை பற்றி என் கருத்துக்களை பின்னர் பதிவு செய்கிறேன். இப்படத்திலிருந்து சில காட்சிகளை இங்கே பதிய விரும்பி இதை எழுதுகிறேன்.


 






















































* தினேஷ்மாயா *