என்ன கற்றோம் ?

Wednesday, December 30, 2015



    இவ்வுலகம் எத்தனையோ போர்களை கண்டிருக்கிறது. குருதி சொட்ட சொட்ட பல கோரமான போர்களைப் பற்றியெல்லாம் சரித்திரம் சொல்கிறது. இந்த போர்களில் இருந்தும், சரித்திரத்தில் இருந்தும் நாம் என்ன கற்றோம் ?

போர்கள் மீண்டும் மீண்டும் வருவதை பார்க்கையில், நாம் நமது சரித்திரத்தில் இருந்து எதையும் கற்கவில்லை என்பது தெளிவாகிறது. நம்மிடையே மனிதம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துவருவதையும் தெளிவாக காட்டுகிறது.

* தினேஷ்மாயா *

அதிகார வர்க்கத்தின் அடிமைகள் !

Monday, December 28, 2015



அரசு அதிகாரிகள்...

அதிகார வர்க்கத்தின் அடிமைகள் !

* தினேஷ்மாயா *

இறையருள்



  நான் செய்யும் தவறுகளுக்கு உடனுக்குடன் எனக்கு தண்டனைகள் கிடைக்கும்போதுதான் உணர்கிறேன், இறைவன் என்னுடனே இருக்கிறான் என்பதை..

* தினேஷ்மாயா *

முத்தம்

Sunday, December 20, 2015


தினமும் அதிகாலையில் 

உன்முகம் பார்த்தே நான் கண்விழிக்க வேண்டுமடி..

கண்ணில் ஒரு முத்தம்

கண்ணத்தில் ஒரு முத்தம்

இவற்றுடன் என் நாள் துவங்க வேண்டும்...

* தினேஷ்மாயா *

சொல்லி வையுங்கள்


யாராவது எங்காவது என்னவளைப் பார்த்தால் 

அவளிடம் சொல்லி வையுங்கள்..

அவளை நினைத்து இங்கே ஒருத்தன்

பித்து பிடித்தவன்போல் இருக்கிறான் என்று..

* தினேஷ்மாயா *

சம்மதம் மட்டும் போதும்



என்னடி யோசனை ?

நேற்று நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்றா யோசிக்கிறாய் ?

அதிகம் யோசிக்காதே..

உன் சம்மதம் மட்டும் சொல் போதும்..

* தினேஷ்மாயா *

கள்வனின் காதலி


என் ராணியே..

என் மனம் கவர் கள்ளியே..

இந்த கள்வனின் காதலியே..

எங்கிருக்கிறாயோ நீ ?

* தினேஷ்மாயா *

நீதானே



உலகமே காதலுக்கு அர்த்தம் புரியாமல் திணறியபொழுது,

உன் மௌனத்தால் என் காதலுக்கு அர்த்தம் சொன்னவள் நீதானே !

* தினேஷ்மாயா *

காகித கப்பல்



மூழ்கும் என்று தெரிந்தாலும்

மழையில் காகித கப்பல் விடுவது

அலாதி இன்பம்தான்..

* தினேஷ்மாயா *

பள்ளிப் பருவ காதல்..


பள்ளிப் பருவ காதல்..

அவள் பெயரை வருகை பதிவேட்டில் யாருமறியா வண்ணம் திருட்டுத்தனமாய் பார்ப்பது..

அவள் அமரும் இடத்தில் யாரும் வருவதற்கு முன்னர் சென்று அமர்வது..

அவள் வரும் மிதிவண்டியின் அருகில் என் மிதிவண்டியை நிறுத்திவைப்பது..

அவள் பிறந்தநாளன்று நண்பர்களுக்கு நான் மிட்டாய் கொடுப்பது..

அவளிடம் தயங்கி தயங்கி பேசுவது..

அவள் இருக்கும்போது அவளின் நெருங்கிய தோழியிடம் வேண்டுமென்றே சண்டையிடுவது..

அவள் கடந்து செல்கையில், நண்பர்கள் என் பெயரை சத்தமாய் அழைக்க நான் அவர்களை அடிப்பது...

காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இதுதான் உலகின் புனிதமான காதல் என்று நினைப்பது..

வராத கவிதையை வரவைத்த் எழுத முனைவது..

பாட்டு போட்டியின்போது அவள் எங்கிருக்கிறாளோ அவளையே பார்த்துக்கொண்டு பாடுவது..

வேண்டுமென்றே அவளிடம் பேனா கடன் வாங்கி திருப்பி தராமல் இருப்பது..

அவள் அப்பா பெயரையும் அவள் வரும் இடத்தின் பெயரையும் எப்படியோ தெரிந்துக்கொண்டு YELLOW PAGES-ல் அவள் வீட்டு தொலைபேசி எண்ணை தேடுவது..

ஒருவழியாக அவள் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அடிக்கடி அழைத்து அவள் குரலுக்காக ஏங்கியிருப்பது..

இப்படி பள்ளிப் பருவ காதல் பல நீங்கா நினைவுகளோடும் அனைவர் மனதிலும் இன்னமும் இருக்கும் என்று நினைக்கிறேன்..

* தினேஷ்மாயா *

நீ என்னுள்


பேனா எடுத்தேன்..

உன்னை நினைத்து

ஏதேதோ கிறுக்கினேன்..

அப்போதுதான் உணர்ந்தேன்

நீ என்னுள் வந்துவிட்டதை..

* தினேஷ்மாயா *

காதல் கொண்டேன்



இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் அப்பாற்பட்டுதான்

நான் உன்மீது காதல் கொண்டேன்..

* தினேஷ்மாயா *

திகட்டாத காதல்



உயிர்கள் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஓடிவிட்டாலும்

இன்னமும் திகட்டாமல் இருப்பது காதல் மட்டும்தான்..

* தினேஷ்மாயா *

போடி..



போடி..

கவிதை எழுத நினைக்கும்பொழுதெல்லாம்

உன்னழகால் என் கவிதையையும் 

என்னையும் கொன்றுவிடுகிறாயடி..

* தினேஷ்மாயா *

விதியை மாற்று


விதியை கொஞ்சம் மாற்றி எழுதேன்..

உன்னை நினைக்கையில் கவிதை வருகிறது..

தூக்கம் போகிறது..

இனிமேல்,

உன்னை நினைக்கையில் தூக்கம் வரட்டும்..

அப்போதுதான் என் கனவில் நீ வருவாயடி..

அங்கே உனக்கான கவிதையை எழுதிக்கொள்கிறேன்..

* தினேஷ்மாயா *

பாக்கியம்


இது போதும் பெண்ணே..

நான் எப்போதும் உன்னருகில் இருந்து

உன்னை பார்த்துக்கொள்ளும் பாக்கியம்..

* தினேஷ்மாயா *

நீ வருவதால்..



மழையின்றி நனைகிறேன்

வானவில்லாய் நீ வருவதால்..

* தினேஷ்மாயா *

பூந்தென்றல்

+

அதிகாலை வீசும் பூந்தென்றல் நீ..

நீ எனை வருடி செல்லும்போது

இந்நாள் புதிதாய் உதயமாகிறது..

என் நாள் முடிவது உன்மடியில் தான்..

* தினேஷ்மாயா *

உதவுவோம்


  இரயிலில் விற்பனை செய்யும் மக்களிடம் எதாவது பொருட்களை வாங்குவோம். பிச்சை எடுக்காமல் சுயமாக உழைக்கும் இவர்களை ஊக்குவிப்போம் உதவுவோம்.

* தினேஷ்மாயா *

சம நீதி




   சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக்கொள்ளும்படி இயற்றலாமே. மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது. அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால்தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகுல் இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும்தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...

* தினேஷ்மாயா *

My Lord



    பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே. தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது ?

* தினேஷ்மாயா *