Unique

Friday, December 23, 2016



I stay unique..

But people say am so different !

* தினேஷ்மாயா *

தோழன் சாய்ராம்

Thursday, December 22, 2016





அனைத்து தருணங்களில்லும் தோள் சாய

தோழனாய் நீ இருக்கிறாய் சாயிராம்..

* தினேஷ்மாயா *

இசைஞானி பாடல்கள்

Tuesday, December 20, 2016


இசைஞானியின் அருமையான பாடல்களை கேட்கவேண்டுமா ? உடனே கிளம்புங்கள். எதாவது ஒரு குக்கிராமத்துக்கு தனியார் பேருந்தில் பயணப்படுங்கள். அல்லது, இரவு நேரத்தில் எதாவது ஒரு அரசு பேருந்தில் நெடுந்தூர பயணம் செய்யுங்கள். உங்களுக்காகவே இளையராஜா அங்கே பல அருமையான பாடல்களோடு காத்துக்கொண்டிருக்கிறார்.

மழைச்சாரல், சில்லென்ற பனிக்காற்று, மனதிற்கு பிடித்த நபர் அருகில், ஜன்னலோர இருக்கை, இரவு பயணம்..

இவை சேர்ந்துக்கொண்டால், அப்போது கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை..

* தினேஷ்மாயா *

விடிய விடிய கவிதை சொல்லி


"விடிய விடிய கவிதை சொல்லி

மனசு கிள்ளி மலர வைக்கும்

உறவு வந்ததே.."

- 'சேது' திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் வரிகள் இவை

* தினேஷ்மாயா *

புத்துணர்ச்சியை


வெற்றிகரமாக இந்த ஆண்டு

300 பதிவுகளை கடந்து பயணிக்கிறேன் !

இது எனக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது..

* தினேஷ்மாயா *

தஞ்சம்


வானிலிருந்து விழும் நட்சத்திரம் யாவும்

உன் கண்களில்தான் தஞ்சம் அடைகிறது..

* தினேஷ்மாயா *

நீ என்னருகே வந்து

நான் வார்த்தைகளால் கவி எழுதிக்கொண்டிருக்கையில்

நீ என்னருகே வந்து -

உன் உதடுகளால் கவி எழுதிவிட்டு ஓடிவிடுகிறாய் ..

* தினேஷ்மாயா *

உன்னை கண்டு

இத்தனை ஜென்மம் நான் எடுத்தது

இந்த ஜென்மத்தில் உன்னை கண்டு

முக்தி அடைவதற்குத்தானோ ?

* தினேஷ்மாயா *

போர்வைக்குள் இருண்டுவிடுகிறது !


ஹே போடி..

இதே வேலையா போச்சு உனக்கு..

காதலோடு நான் பார்க்க

காமத்தோடு நீ பார்க்க

நம் பார்வை போர்வைக்குள் இருண்டுவிடுகிறது !

* தினேஷ்மாயா *

சரிதானே ?

உன் வெட்கத்திற்கு

என் ஓரப்பார்வையை

நான் தீணியாக கொடுக்கிறேன்..

சரிதானே ?

* தினேஷ்மாயா *

இன்னொரு பிறப்பு


நீ துணையாக வந்தால்

இன்னொரு பிறப்பும் எடுக்க நான் தயார்..

* தினேஷ்மாயா *

கண்ணடித்துவிட்டு செல்வாய் நீ !


எதைப்பற்றி எழுதலாம் என்று

என் கவிதைகளுக்கு கருவை தேடிக்கொண்டிருக்கையில்

என் சிந்தையில் வந்து கண்ணடித்துவிட்டு செல்வாய் நீ !

நீ இருக்கிறா என்பதை எனக்கு நினைவூட்ட !

* தினேஷ்மாயா *

என் மதியில்


உன் மடியில் நான் எப்போதாவது உன் குழந்தையாவேன்

என் மதியில் எப்போதுமே நீ குழந்தையாகத்தான் இருக்கிறாய் கண்ணே

* தினேஷ்மாயா *

நீதான் என்னுடைய சீமையே


சீமையில் இல்லாத அழகியா அவள் என்றார்கள் உன்னை..

அவர்களுக்கென்ன தெரியும் ?

நீதான் என்னுடைய சீமையே என்று !

* தினேஷ்மாயா *

சந்திரலோகமே இருண்டதடி

சந்திரலோகமே இருண்டதடி

நீ பூமிக்கு வந்துவிட்டதால் !

* தினேஷ்மாயா *

யசோதா


என்ன தவம் செய்தனை யசோதா? 

இந்த யசோதையையே துணையாய் பெற, நான்

என்ன தவம் செய்தனை யசோதா?

* தினேஷ்மாயா *

பொய்யான கோபம்

உன்னிடம் எனக்கு பிடித்ததே

உன் பொய்யான கோபம் தானடி செல்லமே !

* தினேஷ்மாயா *

நமக்காக ஒன்று !


நாதஸ்வரம் ஒலிக்கிறது

என் நாதமே ஸ்வரமாய் உன்னுள் கலக்கிறது

கெட்டிமேளம் ஒலிக்கிறது

உன் கால்களில் மெட்டி அணிவிக்கிறேன்

எனக்காக ஒன்று உனக்காக ஒன்று

நமக்காக ஒன்று !

மூன்று முடிச்சுப்போடுகிறேன்..

* தினேஷ்மாயா *

பரிசாக கொடுத்தோம்..

நிழல் தரும் மரத்தினடியில்

நாமிருவரும் மரத்திடமிருந்து நிழலைப்பெற்றுக்கொண்டு

நம் காதலை மரத்திற்கு பரிசாக கொடுத்தோம்..

* தினேஷ்மாயா *

என்னருமை காதலி


காதலிதான் மனைவியாக வரவேண்டும் என்றென்னி பல விஷயங்களை இழந்தேன்

இன்று தான் உணர்ந்தேன்.. வரப்போகும் மனைவிதான் என்னருமை காதலி என்று..

* தினேஷ்மாயா *


என்னவளுடன்..




என் சின்னஞ்சிறு ஆசைகளை என்னவளுடன் சேர்ந்து செய்ய வேண்டும். நேற்று கொஞ்சம் நேரம் கிடைத்தபோது ஒரு சில விஷயங்களை எழுதி வைத்தேன். அதை இங்கே பதிகிறேன்.

* கடற்கரையில் சூரிய உதயத்திற்கு முன்னர் காலார நடந்து செல்ல வேண்டும்

* மலேசியாவில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ( தேனிலவுக்கு மலேசியா செல்ல வேண்டும், அங்கே முருகனை தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்குண்டு )

* ஏதாவது தீம் பார்க்-ல் நாங்கள் இருவரும் அனைத்து விளையாட்டுக்களையும் சேர்ந்து விளையாட வேண்டும்.

* கார் மற்றும் பைக்-ல் நெடுந்தூர பயணம்

* அருவியில் குளியல்

* நீச்சல் குளத்தில் விளையாட்டு

* கோவில் கோவிலாக சுற்ற வேண்டும் அப்படியே ஊர் ஊராக ஊர் சுற்ற வேண்டும் அனைத்து கவலைகளையும் மறந்து

* காலை இருவரும் ஒன்றாக யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

* ஒன்றாக சமைக்க வேண்டும்

* ஒன்றாக பாடல் கேட்க வேண்டும், அவளும் நானும் ஒன்றாக பாட வேண்டும்

* இருவரும் ஒன்றாக, போட்டியாக ஏதாவது ஒரு வீடியோ கேம் விளையாடவேண்டும் - எதிரெதிர் அணியில் இருந்தவாறு

* அவள் தலைப்பு சொல்ல சொல்ல நான் உடனடியாக கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்

* இருவரும் எங்கே சென்றாலும் வேட்டி சேலையில் நம் பாரம்பரிய உடையணிந்தே செல்ல வேண்டும்

* ஒன்றாக ஓவியம் தீட்ட வேண்டும்

* நான் அவளுக்கு புகைப்படம் எடுக்க கற்று கொடுத்துவிட்டு அவள் புகைப்படம் எடுப்பதை ரசிக்க வேண்டும்

* மழையில் ஒன்றாக நனையனும்

* #Dubsmash

* வீட்டுக்குள் நடனம் ஆடனும்

* ஒன்றாக புத்தகம் படிக்கனும்

* இரவு காட்சி - திரையரங்கில்

* Photo in Mug

* Photo in Pillow

* Rudraksham

* Mono acting

* All adventures like - Parachute, Paragliding, Rafting, Bunjee Jumping, Etc.

* Playing Games together - Shuttle, Carrom, Chess, Etc

* Playing Skipping together

* WINDOW shopping ;-)

* Road side hotel food

* Candle light dinner @ Star Hotel & Beach Resort

* Social Service

* Adopting a child

* Minimalism

* Silly fights

* ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெரின்

* தினேஷ்மாயா *

இனிவரும் காலங்களில்


இனிவரும் காலங்களில் அஞ்சலி செலுத்தும் விதம் இப்படியும் மாறக்கூடும்.

" அனைவரும் தங்கள் - WiFi-ஐ அனைத்துவிட்டு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது "

* தினேஷ்மாயா *

காதலித்துப்பாருங்களேன்.


பொதுவாக காத்திருப்பு என்பது அனைவருக்கும் வெறுப்பைத்தான் தரும். ஆனால், காதலில் மட்டும்தான் காத்திருப்பு என்பது சொர்க்கத்திற்கு சமமாக கருதப்படும். இதை உணரவேண்டுமா ? 

காதலித்துப்பாருங்களேன்.. உங்களுக்கே புரியும் ..

* தினேஷ்மாயா *

உன்னதமான காதல்


திருமணத்திற்கு பிறகு வரும்காதல் தான் உன்னதமானது தூய்மையானது உண்மையானது என்பதை நான் உணரத்தான் இந்த காதலும் காதல் தோல்வியையும் நான் சந்தித்தேனோ ?

* தினேஷ்மாயா *

தேவதையை காண்கிறேன் !


ஆலய கதவை திறந்தால் தெய்வத்தை காணலாம்

இங்கோ நான் தேவதையை காண்கிறேன் !

* தினேஷ்மாயா *

என்றென்றும் சுமப்பேன்


நம் குழந்தையை நீ சுமப்பாய் என்பதைவிட
நான் உன்னை என்றென்றும் சுமப்பேன் என்பது சத்தியமடி..
* தினேஷ்மாயா *

பாவையே


பூவை வைத்திருக்கும் பாவையே
நாள்தோறும் உன் தரிசனம் தேவையே
* தினேஷ்மாயா *

ஒரு வெண்பாவை..


மல்லிப்பூவை அள்ளிக்கொடுத்தேன்
அல்லிப்பூவை கிள்ளிக்கொடுத்தேன்

இப்பெண்பாவைக்காக ஒரு வெண்பாவை பாடிக்கொடுத்தேன்
* தினேஷ்மாயா *

அந்த தருணம்


நீ என் கண்களை உற்று நோக்கும் தருணம்

நொடிப்பொழுதில் எனக்கேற்படும் மரணம்..

* தினேஷ்மாயா *

எது முக்கியம்


அழகு முக்கியமா ?
அன்பு முக்கியமா ? என்று
நான் யோசித்துக்கொண்டிருக்கையில்

நீதானடா எனக்கு முக்கியம் என்று வந்தவளே !
* தினேஷ்மாயா *

புது வருடம்:


புது வருடம்:
எல்லோரும் சொல்வதுதான். இப்போதுதான் ஜனவரி வந்தமாதிரி இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிருச்சு. இதையேதான் இவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். நொடியும், நிமிடமும், மணியும், நாளும், வாரமும், மாதமும், வருடமும் அது தன்னிச்சையாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் ஒரே இடத்தில் அமர்ந்துக்கொண்டு காலத்தை கணித்துக்கொண்டும், அதை வெறுமனே வேடிக்கைப்பார்த்துக்கொண்டும் நமக்கு சொந்தமான காலத்தை நமக்கு சொந்தமில்லை என்கிற மாயையை நம்பி வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.
365/366 நாட்களுக்கு ஒருமுறை புதுவருடம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வேகமாக கடந்த்து என்பது முக்கியமல்ல. இந்த வருடத்தில் நாம் சாதித்தது என்ன என்பதுதான் முக்கியம். சாதனை என்றால் நீங்கள் பெரிதாக எண்ண வேண்டாம். நோபல் பரிசோம் ஆஸ்கர் பரிசோ, பாரத ரத்னா பெறுவதுதான் சாதனை என்றில்லை. நம்முள் இருக்கும் நல்ல மனிதனை கண்டெடுத்து, அவனை இந்த சமூகத்திற்காக எதையாவது செய்ய விடவேண்டும். நம்முள்ளேயே எப்போதும் இருக்கும் அந்த நல்ல மனிதனை இந்த சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுப்பதும் ஒருவகை சாதனைதான்.
ஆம். சிறு சிறு விஷயங்களில் இருந்து தொடங்குவோம். முதலில் சிரிப்போம். நிபந்தனைகள் ஏதுமின்றி, எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி. இதில் இரண்டுவகை உண்டு. நமக்கு தெரிந்தவர்களிடம் சிரித்து பேசுவது, நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் சிரித்து பேசுவது. பெரும்பாலும் நன் அன்றாட வாழ்வில் நமக்கு அறிமுகமில்லாத நபர்களையே அதிகம் சந்திக்க வேண்டி இருக்கும். அவர்களிடம் தவறாமல் சிரித்து பேசுங்கள், அப்படி முடியாவிட்டாலும் ஒரு புன்முறுவல் புரியுங்கள். இதுவே அன்றைக்கு நீங்கள் செய்த மிகப்பெரும் சாதனை.
நம் வீட்டிலோ, அலுவலகத்திலோ, பொது இடத்திலோ எங்காவது மின்சாரமோ, தண்ணீரோ வீணாவதை கண்டால் அதை சரிசெய்ய உங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ளுங்கள். அதில் நீங்கள் வெற்றிப்பெற்றாலும் வெற்றிப்பெறாவிட்டாலும் பரவாயில்லை. இயற்கையின் வளங்களை காக்க ஒரு முயற்சி செய்தீர்களே. அதுவே அன்றைய சாதனைதான்.
குப்பைகளை நீங்கள் இருக்கும் இட்த்திலேயே போடாமல், உங்கள் சட்டைப்பையிலோ, தோள்பையிலோ போட்டுக்கொண்டு, எப்போது குப்பைத்தொட்டியை பார்க்க நேர்கிறதோ அதின் அந்த குப்பையை போடுங்கள். இதில் பலருக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள்.
பேசுவதை குறைத்துவிட்டு, அதிக நேரம் அமைதியாக இருந்து என்ன காரியம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். புத்தகம் படிக்கலாம், இன்னிசை கேட்கலாம், தியானம், யோகா பழகலாம், படம் பார்க்கலாம், காலார நடந்து செல்லலாம், உடற்பயிற்சி செய்யலாக் இப்படி நிறைய உண்டு. முதலில் பேச்சை குறையுங்கள். நிம்மதி தானாக வரும். அதிக பேச்சுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை பின்னாளில் பட்டு தெரிந்துக்கொள்வதைவிட, இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்.
புதுப்புது இடங்களுக்கு பயணப்படுங்கள். அது உங்களுக்கு நிறைய அனுபவங்களை கொடுக்கும். அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்கள். எவ்வளவு காசு கொடுத்தாலும் எவரும் கற்றுகொடுக்க முடியாத அனுபவங்கள். உங்கள் பயணமே உங்கள் ஆசான்.
இந்த வருடம் நான் அதிகமாக எவர்க்கும் துன்பம் கொடுக்கவில்லை, என்னால் இன்பமுற்றவர்களே அதிகம், அதேபோல இந்த வருடம் எனக்கும் அதிகமாக எவரும் துன்பம் கொடுக்கவில்லை, என்னைச்சுற்றி நல்லவர்களே அதிகம் ஆகையால் இந்த வருடம் எனக்கு அதிக நன்மையே நடந்த்து என்று நீங்கள் எந்த வருடத்தை உணர்கிறீர்களோ அந்த வருடம் உங்கள் வாழ்நாளில் சிறப்பான் வருடம் என்று சொல்லலாம்.
இந்த வருடத்தில் புது வேலை கிடைத்த்து, புது வீடு வாங்கினேன், திருமணம் ஆனது, குழந்தை பிறந்த்து, புது நட்பு கிடைத்த்து என்பதெல்லாம் சாதனையாக கருத வேண்டாம். இதெல்லாம் இயற்கை. அது தானாக நடப்பது.
நீங்கள் உங்கள் சுய மேம்பாட்டுக்காக என்ன செய்கிறீர்கள் என்பதுதான் இங்கே அதி முக்கியம். ஆகையால், நீங்கள் வளர்ந்து மற்றவர்கள் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
அப்போதுதான் பிறக்கும் வருடம் உண்மையாக புதுவருடமாக இருக்கும்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

இந்த ஏற்பாடு










என்னை தவணை முறையில் கொல்வதற்காகத்தான்

இந்த ஏற்பாடு போல !

* தினேஷ்மாயா *


ஒரு மொட்டில் இரு பூக்கள்..

Monday, December 19, 2016


ஒரு மொட்டில் இரு பூக்கள்..

பொதுவாக - பூவை செடி தாங்கும்

இங்கோ, பூவை

இன்னொரு பூவே தாங்குகிறது !

* தினேஷ்மாயா *

I need a relationship..


"I need a relationship in which I don't have to keep explaining myself. Nothing is more tiring than having to constantly explaining yourself. Emotional tiredness drains you far more than physical tiredness. So the search is for that one relationship in which I can enjoy the freedom of Trust where I don't have to explain everything about me.
I need a relationship in which I won't be held against myself. I have my strengths. I have my shortcomings. The search is for that one relationship in which my lesser side will not be provoked and instigated constantly. I want that one relationship in which my positives will always be brought to the surface.
I need a relationship in which My today is not viewed with the mistakes I made yesterday... Being human.. I am bound to err every now and then. I want someone who won't maintain a database of my mistakes. The search is for that relationship where yesterday's fight doesn't halt today's communication... where yesterday was over yesterday.
I need a relationship in which it isn't me who has to take the initiative all the time. I need a relationship where I can be transparent. I need a relationship in which I don't have to alter my likes and dislikes to gain and retain the relationship. I need a relationship in which my self-image is not scratched. I need a relationship in which I am not asked to be anyone else. I need a relationship in which I feel completely myself.. even more than when I am with my own self.
I need that one relationship in which I feel as though I am once again in my mother's womb... a relationship in which my heart always feel.. just born"
- Excerpts from 'Unposted Letter' by Mahatria Ra..
நான் என் வாழ்க்கைத்துணை பற்றி என்ன நினைத்திருந்தேனோ அதையெல்லாம் அப்படியே வார்த்தைகளில் இவர் செதுக்கியிருக்கிறார்..

தினேஷ்மாயா *

ஒரு நாள் கூத்து..



ஒரு நாள் கூத்து..

நேற்று இரயிலில் வரும்போது இந்த படம் பார்த்துக்கொண்டே வந்தேன். ஆரம்பத்தில் பாதி மட்டும் பார்த்துவிட்டு தூங்கிவிடலாம் மீதி இன்னொரு நாள் பார்க்கலாம் என்றுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், படம் என்னை முழுவதும் பயணப்பட வைத்துவிட்டது.

படம் ரொம்ப நல்லா இருக்கு. திருப்பங்கள் எதார்த்தமா இருக்கு. இசை படத்திற்கு மேலும் பலம். கதை எதார்த்தமான ஒன்று. திரைக்கதையும் ரசிக்குற மாதிரி இருந்துச்சு. ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி..

* தினேஷ்மாயா *

அடியே அழகே..



அடியே அழகே... என் அழகே அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற

அடியே அழகே... என் அழகே அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத

போனா போறா தானா வருவா மெதப்புள்ள திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப்போச்சு பொசுக்குனு ஒடஞ்சேன்
உன் சுக‌ பார்வ உரசுது மேல‌
சிரிக்கிற ஒச சரிக்குது ஆள‌
தீ தூவி... ஹே... தீ தூவி போனா
அவ வேணும் நானும் வாழ
ஏனோ உன்ன பாத்தா உள்ள‌ சுருக்குனு வருது
ஆன கிட்ட நீயா வந்தா மனசு அங்க விழுது
ஏதுக்கு இந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சி நீ பார்த்தும் வெளுக்குது சாயம் ஹே...
நேத்தே நா தோத்தேன் அட‌ இதுதானா உன் வேகம்

அடியே அழகே... அழகே...
அழகே அடியே... அடியே...
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... வலியே...
ஒளியே ஒளியே... ஒளியே...
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற..

படம்: ஒரு நாள் கூத்து
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்: சின் ரோல்டன், பத்மலதா
பாடல்வரிகள்: விவேக்

* தினேஷ்மாயா *

கண்ணாயுதம்



என்னை கொல்ல,

தன் ஆயுதத்தை (கண்களை)

பட்டை தீட்டுகிறாள் போல !

* தினேஷ்மாயா *

மார்கழி பிறந்தது..

Friday, December 16, 2016



அவனையே நினைத்திருந்தாள் ஒரு பாவை..

அவனுக்காக பாடினாள் முப்பது பாவை..

அது ஆனது திருப்பாவை !

மார்கழி பிறந்தது..

* தினேஷ்மாயா *

இதென்ன ?!



குடைக்குள் மழை தெரியும்..

இதென்ன -

குடைக்குள் ஒரு மின்னல் ?!

* தினேஷ்மாயா *

முதல் மரியாதை

Wednesday, December 14, 2016



சமீபத்தில் முதல் மரியாதை திரைப்படம் பார்த்தேன். பாரதிராஜா, இளையராஜா மற்றும் சிவாஜி அவர்கள் இணைந்த திரைப்படம் ஆகையால் இதை நேரம் ஒதுக்கிப்பார்த்தேன். அருமையான படம் என்று தெரிந்துதான் பார்க்கலானேன். அதுப்போலவே, உண்மையாகவே அருமையான படம் தான். சிவாஜி அவர்களின் நடிப்பை சொல்ல வேண்டுமா என்ன? அற்புதம். அவருக்கு ஈடு கொடுப்பதற்கு இத்திரைப்படத்தில் வடிவுக்கரசியின் நடிப்பும் சொல்லும்படியாக இருக்கிறது. இசை !! என்னவென்று சொல்வது.. இளையராஜா அவர்கள் தான் ஒரு இசைராஜா என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். பாடல்கள் மட்டுமின்றி பிண்ணனி இசையும் பிரமாதம். பூங்காற்று திரும்புமா, வெட்டிவேரு வாசம் பாடல்கள், ராசாவே உன்னை நம்பி, அந்த நிலாவத்தான்... இந்த பாடல்கள் மனதில் அதிகம் நிற்கிறது. மொத்தத்தில் பாரதிராஜா தனக்கான பாணியில் கதை சொல்லி மனதில் நின்றுவிட்டார்.

* தினேஷ்மாயா *

புனிதப் பயணம்


சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி – என்று சிவபுராணம் சொல்கிறது.
அதற்கேற்ப சிவன் என் சிந்தையுள் வந்து எனக்கு கட்டளையிட்டார். அவர் கட்டளைக்கேற்ப நான் தமிழகத்தில் இருக்கும் பல அற்புதமான கோவில்களை தரிசிக்க பயணப்பட்டேன். என்னுடன் என் நண்பர் ஒருவரும் இணைந்து இப்பேறினை பெற்றார்.
  1. 09.12.2016 அன்று – கோவையிலிருந்து கிளம்பி விருதாச்சலம் வந்து இறங்கினேன். ஆனந்தா லாட்ஜ்-ல் தங்கினேன். 10.12.2016 அதிகாலை விருதாச்சலத்திருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் முகாசபரூர் என்னும் ஊருக்கு ஆட்டோவில் சென்றோம். அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எங்கள் புனித பயணத்தை துவங்கினோம். அங்கிருக்கும் லிங்கம், கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட்து. அங்கே கோரக்கர் சித்தரின் சமாதி/சன்னதி அமைந்திருக்கிறது. அவரை தரிசிக்கும் அருள் பெற்றோம். இந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் இருக்கிறது, ஆனால் அதற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கென ஒரு வாகனம் அமைத்துக்கொண்டு இங்கே வந்தால் அது சிறப்பாக இருக்கும். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும். அன்பர்கள் இங்கே வந்து கோரக்கர் சித்தரின் அருள் பெறலாம்.
  2. முகாசபரூரிலிருந்து விருதாச்சலம் வந்து, அங்கிருந்து சிதம்பரம் சென்றோம். சுமார் 1 மணி நேரப்பயணம். கோவில் வாசலிலே பேருந்து நின்றது. இறைவன் அருளால் என் நண்பருக்கு நன்கு தெரிந்த தீட்ஷிதர் அங்கே இருந்தார். அவரை விசாரித்து கண்டுபிடித்தோம். அவர் உதவியுடன் நடராஜரை மிக அருகில் இருந்து தரிசிக்கும் பேறு பெற்றோம். பொதுவாக அனைவரும் சற்று தொலைவில் இருந்து கீழே இருந்துதான் நடராஜரை தரிசிப்பர். எங்களுக்கோ நடராஜர் அருகிலேயே அழைத்து தரிசனம் கொடுத்தார். அன்று அன்பர் ஒருவர் நடராஜருக்கு அன்னப்பாவாடை சாத்தினார். அதாவது, நடராஜரை வந்து வணங்கி வேண்டுதல் நிறைவேறியதும் இங்கே வந்து அரைப்பாவாடை, முழுப்பாவாடை என்று சொல்வர், அன்னப்பாவாடை சாத்தி இறைவனக்கு நன்றி தெரிவித்து வேண்டுதலை நிறைவேற்றுவர். இதை செய்ய சுமார் ரூ.75000-80000 ஆகும் என்று அங்கே இருந்த தீட்ஷிதர் தெரிவித்தார். அன்னம் சமைத்து அதை நடராஜருக்கு படையலிட்டு, அதை வேண்டுதல் செய்து அன்னப்பாவாடை சாத்தியவருக்கு தந்துவிட்டு, அன்ன பிரசாத்த்தை நடராஜர் கோவிலில் இருக்கும் 400 தீட்ஷிதர் குடும்பங்களுக்கு கொடுப்பர். 400 பிராமண குடும்பங்களுக்கு அன்னமிடுவது என்பதும் புண்ணியமே. இந்த பிரசாதம் இவர்களன்றி வெளியாட்கள் எவர்க்கும் கிடைக்காது. இறைவன் அருள் எங்களுக்கு கிட்டியதால் எனக்கும் என் நண்பருக்கும் அந்த பிரசாதம் கிடைத்த்து. இறைவன் தரிசனம் மிக அருகில் கிடைத்த்து ஒரு மகிழ்ச்சி, மேலும் இறைவன் திருவருட்பிரசாதம் கிடைத்த்து மேலும் மகிழ்ச்சி.

    இங்கே ஆதிமூலர் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த லிங்கம் தான் இங்கே விசேஷம். அனைத்துவிதமான பூஜைகளும் இங்கேதான் செய்யப்படுகிறது. இந்த லிங்கம்தான் திருமூலர் சித்தர் ஜீவசமாதி எனவும் சொல்லப்படுகிறது. இந்த லிங்கத்தை பதஞ்சலி சித்தரும், வியாக்ர பாதரும்  வழிப்பட்டனர் என்கின்றனர். திருமூலர் ஜீவசமாதி சிதம்பரத்தில் இருக்கிறது என்பர். நீங்கள் சிதம்பரம் சென்று நடராஜர் கோவிலில் திருமூலர் சித்தர் ஜீவசமாதி எங்கே என்று எவரையும் கேட்காதீர்கள். அங்கே அவர் சமாதிக்கு என தனி சன்னதி எதுவும் இல்லை. அங்கே அமைந்திருக்கும் ஆதிமூலர் சன்னதிதான் திருமூலர் சித்தரின் ஜீவசமாதி.


  3. சிதம்பரத்திலிருந்து சீர்காழி புறப்பட்டோம். சீர்காழி பழைய பேருந்து நிறுத்த்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சட்டைநாதர் ஆலயம். இவ்வாலயம் 1000-2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மிகப்பெரிய கோவில், மிகப்பிரமாண்டமான கொவில். இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு உமாமகேஸ்வர் சுமார் 10-12 அடி உயரம் இருப்பார். அவரை தரிசிக்கும் போது மெய் சிலிர்த்துவிட்ட்து.
  4. அங்கிருந்து கிளம்பி வைத்தீஸ்வரன் கோவில் வந்தடைந்தோம். இங்கே அருள்மிகு வைத்தியநாதர் சுவாமி, அருள்மிகு தையல்நாயகியை தரிசித்தோம். இவ்வாலயத்தில் தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. இவருக்கென தனி சன்னதி கோவிலின் உள்பிரகாரத்தில் அமைந்திருக்கிறது. இருப்பினும் என் உள்மனம் என்ன சொல்கிறதென்றால், அருள்மிகு வைத்தியநாத சுவாமி லிங்கம் தான் தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த இடம் என்று. எப்படியாயினும், நீங்கள் இவ்வாலயத்தின் உள்பிரகாரத்தினுள் சென்றாலே பிரபஞ்சத்தின் அதிர்வுகளை உணரலாம்.
  5. அங்கிருந்து மயிலாடுதுறை வந்தடைந்தோம். அங்கே புதுப்பேருந்து நிலையம் அருகே தங்கினோம். அங்கே சற்று ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் திருவாவடுதுறை சென்றோம். இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு கோமுக்தீஸ்வர்ர்/மாசிலாமணீஸ்வர்ர் ஆலயம் சென்றோம். இங்கே கோவிலின் வெளிப்பிரகாரத்தில் திருமூலர் சித்தரின் ஜீவ சமாதி/சன்னதி அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் திருமூலர் சித்தர் வாழ்ந்த இடம். மிக பிரம்மாண்டமான ஆலயம் இது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஏறி திருவலங்காடு நிறுத்த்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து நடந்து செல்லும் தூரம்தான். தேவையென்றால் ஆட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்.
  6. அங்கிருந்து திருவலங்காடு பேருந்து நிறுத்தம் வந்தடைந்து, மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறி குத்தாலம் வந்தடைந்தோம். அங்கிருந்து திருமணஞ்சேரி சென்றோம். குத்தாலத்தில் இருந்து அங்கு செல்ல நிறைய டாக்சி/ஆட்டோக்கள் உண்டு. திருமணஞ்சேரியில் இருக்கும் அருள்மிகு கல்யான சுந்தரேசுவரர் ஆலயம் சென்று அவரை தரிசித்தோம். இது ஒரு பரிகாரத்தலம். இங்கே வந்து பரிகாரம் செய்துகொண்டால், திருமணம் விரைவில் கைகூடும் என்று நம்பிக்கை இருக்கிறது.
  7. அங்கிருந்து கிளம்பி மயிலாடுதுறை வந்து தங்கினோம். 11.12.2016 அன்று அதிகாலை அருள்மிகு மயூரநாதர் ஆலயம் சென்றோம். அங்கே குதம்பை சித்தர் ஜீவசமாதி/சன்னதி அமைந்திருக்கிறது. அவரை தரிசித்துவிட்டு, அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டோம்.
  8. கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பிரகதீஸ்வரரை தரிசித்தோம். கலைநயம் மிகுந்த ஆலயம். சிவலிங்கம் அத்துனை பிரமாண்டமாய் இருக்கும். கோவிலும் அவ்வளவு பிரமாண்டமாய் இருக்கும்.
  9. அங்கிருந்து கிளம்பி கும்பகோணம் வந்து அங்கே ஒரு அறையை எடுத்து சற்று ஓய்வெடுத்துவிட்டு, அங்கிருந்து தாராசுரம் சென்று அருள்மிகு ஐராவதீசுவரரை தரிசித்தோம்.
  10. பின்னர் அங்கிருந்து பட்டீஸ்வரம் சென்று அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயம் சென்று, துர்க்கை அம்மனை தரிசித்தோம். இங்கே ஓர் அதிசயமும் நிகழக்கண்டோம். அங்கே பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கையில், அருகே ஒரு சிவாலயம் இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கே செல்ல்லாம் என்று முடிவெடுத்து நடக்கலானோம். அந்த சிவாலயத்தை நோக்கி நடக்கையில் ஒரு பெரிய அறிவிப்பு பலகையை கண்டோம். அகத்தியர் சித்தரின் தரிசனம் அங்கிருக்கும் ஆலமரத்தில் காணப்படுகிறது என்று. அந்த ஆலயம் சென்றோம். அங்கே அகத்தியர் குடில் ஒன்று உள்ளது. அங்கே சென்று அகத்தியர் சித்தரின் தரிசனத்தை அங்கே அமைந்திருக்கும் ஆலமரத்தில் கண்டு உள்மகிழ்ந்தோம்.
  11. பின்னர் கும்பகோணம் வந்து, ஆதிகும்பேசுவரர் ஆலயம் சென்றோம். அங்கே ஆதிகும்பேசுவர்ரை தரிசித்தோம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில், ஆனந்த விநாயகர் ஆலயம் அமைந்திருக்கிறது. அங்கே அகத்தியர் சித்தரின் ஜீவ சமாதி/சன்னதி அமைந்திருக்கிறது. அகத்தியரை கும்ப முனி என்றும் அழைப்பர்.
  12. அங்கிருந்து அடுத்த தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு இராமசுவாமி ஆலயம் வந்தோம். இதனை தென்னக அயோத்தி என்றும் அழைக்கின்றனர். நான் இதுவரை தரிசித்த இராமர் கோவில்களில் இது சற்று வித்தியாசமாக இருந்த்து. இராமர் பட்டாபிஷேக கோலத்தில் அருள்காட்சி புரிந்தார். இராமர், சீதை, இலக்குவனர், பரதன், சட்ருக்கணன், அனுமன் என அனைவரும் அருட்காட்சி புரிந்தனர். இந்த கோவிலில், சிவ்வாக்கியர் சித்தரின் ஜீவசமாதி பற்றி கேட்டறிந்தோம்.
  13. பெரிய வீதியில் கடைசிவரை நடந்து சென்று அங்கே மூர்த்தி தெரு என்று ஒரு தெரு வரும், அதில் திரும்பி சற்று தூரம் நடந்து சென்றால், சாத்தார தெரு வரும். அங்கே அமைந்திருக்கிறது சிவ்வாக்கியர் ஜீவசமாதி. சிவ்வாக்கியர் பிற்காலத்தில், திருமழிசை ஆழ்வாராக மாறினார் என்பர். நீங்கள் சிவ்வாக்கியர் என்று இணையத்தில் தேடினாலும், அவர் உருவத்தை உற்று நோக்கினால், அவர் நெற்றியில் நாம்ம் இருப்பதை காணலாம். இவர் சிவ்வாக்கியராக இருந்து, பின்னர் திருமழிசை ஆழ்வாராக தோன்றி இங்கே ஜீவசமாதி அடைந்தார். ஆனால் இக்கோவிலில் உள்ளே சென்று பார்த்தால் ஒரு அறிவிப்பு இருக்கும். இது திருமழிசை ஆழ்வார் சன்னதிதான் சிவ்வாக்கியர் சன்னதி இல்லை என்று. இவர்கள் இப்படி அறிவிப்பு வைக்கும்போதே புரிந்துவிட்ட்து, இதுதான் சிவ்வாக்கியரின் ஜீவ சமாதி/சன்னதி என்று.
  14. அங்கிருந்து வரும் வழியில், அஹோபிலம் மடம் – ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஆலத்தில் ஸ்ரீ நரசிம்மர் தரிசனம் கண்டோம்.
  15. 12.12.2016 அதிகாலை கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் பேருந்தில் ஏறினோம். நாகப்பட்டினம் பழைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வடக்கு பொய்கைநல்லூர் சென்றோம். இதனை பொய்யூர் எனவும் அழைக்கின்றனர். அங்கே அமையப்பெற்றிருக்கும், கோரக்கர் சித்தரின் ஜீவசமாதியில் அவரின் தரிசனம் கண்டோம். பிரபஞ்ச அலைகளை உம்முள் உணர எந்த ஒரு ஜீவசமாதி/சன்னதிக்கு சென்றாலும் ஒரு நாழிகை அதாவது 24 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
  16. பின்னர் அங்கிருந்து, வேளாங்கன்னி வந்தடைந்தோம். அங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் ஏறி சீராவட்டம் என்னும் ஊரில் இறங்கினோம். அங்கிருந்து எட்டுக்குடி ஊருக்கு ஆட்டோ வசதி உள்ளது. வேளாங்கன்னியில் இருந்தும் எட்டுக்குடிக்கு நேராக பேருந்து வசதி உள்ளது, இருப்பினும் அதிக நேரம் காத்திருக்க வேண்டிவரும். எட்டுக்குடி வந்து – அருள்மிகு எட்டுக்குடி முருகனை தரிசித்தோம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில், சித்திவிநாயகர் எழுந்தருளியுள்ளார். இதுவே வான்மீக சித்தரின் ஜீவசமாதி/சன்னதி ஆகும். அங்கே அவரின் தரிசனம் கண்டோம்.
  17. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வந்து, அங்கிருந்து தஞ்சாவூர் வந்தடைந்தோம். அங்கிருந்து திருவையாறு வந்து, அங்கிருந்து கடுவெளி ஊருக்கு சென்றோம். தஞ்சையில் இருந்தும் கடுவெளி ஊருக்கு பேருந்து வசதி உள்ளது இருப்பினும் பேருந்து வசதி அடிக்கடி இல்லை ஆதலால் திருவையாறு வந்து மாறவேண்டும். கடுவெளி வந்தடைந்து அருள்மிகு ஆகாசபுரீசுவரர் தரிசனம் கண்டோம். இதே ஆலயத்தில் இருக்கும் கடுவெளி சித்தரின் ஜீவசமாதி/சன்னதியில் அவரின் திருவருள் தரிசனம் கண்டோம். இந்த ஊரில்தான் கடுவெளி சித்தர் வசித்தார். அவரின் பெயராலேயே இந்த ஊரும் அழைக்கப்படுகிறது.
  18. பின்னர், அங்கிருந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தோம். அன்றைக்கு கார்த்திகை தீபம். தஞ்சை பிரகதீசுவர்ருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்த்து. அதை கண்குளிர காணும் அருட்பேறு பெற்றோம். இத்துடன் எங்கள் புனிதப்பயணம் இனிதே நிறைவுற்றது. அங்கிருந்து இரவு கோவைக்கு இரயிலில் பயணப்பட்டோம்.
ஓம் நம சிவாய...

* தினேஷ்மாயா *

வறுமையின் நிறம் சிவப்பு..

Tuesday, December 06, 2016



சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். குறிப்பாக கே.பாலசந்தர் அவர்களின் திரைப்படம், கமல் அவர்கள் நடித்த திரைப்படம் என்பதைவிட, இந்த தலைப்பிற்காகவே இத்திரைப்படத்தை பார்த்தேன்.

படமெங்கும் பாரதியார்தான் தெரிகிறார். பாரதியின் கவிதைகளை தேவைப்படும் இடங்களில் வசனமாகவும் பாடல்களாகவும் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு ஒரு வீரியத்தை தருகிறது என்றே சொல்லலாம். மெல்லிசை மன்னரின் இசையும் அருமை. படத்திற்கு இன்னுமொரு பலம்.

திரைப்படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்த வேலையில்லா திண்டாட்டத்தை அருமையாக சித்தரித்திருக்கிறார் K.B.

ஒட்டுமொத்த படத்தை ரசித்தேன். அதைவிட சில வசனங்கள என்னை அதிகம் கவர்ந்தது. அதில் ஒன்று இது...

கமல் தன் புகைப்படத்தை ஒரு குப்பைத்தொட்டியில் தேடிக்கொண்டிருப்பார். அப்போது நடக்கும் உரையாடல் இது

"கமல்: என்னங்க எடுக்க எடுக்க ஆரஞ்சு பழத்தோலா வருது. இந்த கட்டடத்துல வசதிக்காரங்க ரொம்ப ஜாஸ்தியோ ?
ஸ்ரீதேவி: இல்ல.. வியாதிக்காரங்கதான் ஜாஸ்தி"

"ஸ்ரீதேவி: வேணாங்க விட்டுடுங்க..
கமல்: இதுல என்னங்க இருக்கு. இன்னும் தோண்டினா சோசலிசமே கிடைச்சாலும் கிடைக்கும்"

சோசலிசம் என்பது குப்பைத்தொட்டியில்தான் இருக்கிறதென்பதை எவ்வளவு சாதாரணமாக போகிற போக்கில் சொல்லி மக்களுக்கு புரியவைக்கிறார் KB

இன்னும் படத்தில் அதிக வசனங்கள் என்னை கவர்ந்தது. படத்தை இரசித்து பார்த்தேன். நேரம் கிடைக்கும்போது இத்திரைப்படத்தை பொறுமையுடன் இன்னொருமுறை பார்க்கவேண்டும்..

* தினேஷ்மாயா *

தேசத்தின் சினிமா பக்தியா ?

Thursday, December 01, 2016


சினிமாவின் தேசபக்தியா ?
தேசத்தின் சினிமா பக்தியா ?

சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பித்தது. அது என்னவென்றால், இனி இந்தியாவில் அனைத்து திரையரங்குகளிலும், அனைத்து காட்சிகளுக்கும் முன்னர் தேசியகீதம் கட்டாயம் ஒலிக்கப்படவேண்டும், மேலும் திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும், அரங்கில் இருக்கும் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்சும், அப்போது அரங்கின் அனைத்து கதவுகளும் அடைத்திருக்க வேண்டும், உள்ளே இருப்பவர்களுக்கு எந்த இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காக.

என்ன செய்ய. நானும் ஒரு இந்தியனாச்சே. எந்த விஷயமானாலும் எனக்கொரு கருத்து இருக்கும் இல்லையா. என் கருத்தை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். என் கருத்தை கேட்டுவிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டாலும் போடுவார்களோ ? இருந்துவிட்டு போகட்டும். அதற்காக அஞ்சி என் கருத்தை சொல்லாமல் போவது தற்கொலைக்கு சம்மாயிற்றே.
இந்த உத்தரவை வரவேற்கலாமா வேண்டாமா என்று என்னால் சொல்லமுடியவில்லை. நீதிமன்றம் சொல்லும் அனைத்தும் சரியாகிவிடாது. இதற்கு எடுத்துக்காட்டுக்கள் சரித்திரத்தில் பல உண்டு. கீழ் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு தவறு என்று உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ சொல்லியதுண்டு. அதேபோல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும் தவறு என்று உச்சநீதிமன்றமே பிற்காலத்தில் அதன் தீர்ப்புக்களை திருத்திய சம்பங்களும் பல உண்டு. எதற்கு இதை சொல்கிறேன் என்றால், நீதிமன்றங்களும் சில நேரங்களில் தவறு செய்யும் என்பதற்கே.
சரி, இந்த உத்தரவிற்கு வருவோம். இந்த உத்தரவு எதைக்காட்டுகிறது ?
சினிமாவின்(ல்) தேசபக்தியா ? அல்லது,
தேசத்தின் சினிமா பக்தியா ?
தேசியகீத்த்திற்கு எழுந்து அனைவரும் கட்டாயம் நிற்கவேண்டும் என்கிற விஷயம் உணர்வு சார்ந்த ஒன்று அதை உத்தரவு போட்டுதான் கொண்டுவரவேண்டும் என்றில்லையே. இந்த உத்தரவு எதற்காக என்றால், மக்கள் மத்தியில் தேசபக்தியை நிலைநாட்ட என்கிறது நீதிமன்றம். இது எப்படி இருக்கிறது தெரியுமா ? சினிமாவில் இப்போதெல்லாம், மது மற்றும் புகை சம்பந்தமான காட்சிகள் வந்தால் உடனே திரையின் கீழே இட்துபுறம் எதோ ஒரு எச்சரிக்கை வரும். அது என்ன்வென்று திரையின் அருகே சென்று நின்று படித்தால் மட்டுமே கண்ணுக்கு தெரியும். அது என்னவென்றால், புகை மற்றும் மது உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது. இதை போட்டுவிட்டால், மக்களுக்கு விழிப்புணர்வு வந்து அனைவரும் புகை மற்றும் மது பழக்கத்தை விட்டுவிடுவார்கள் என்று அரசாங்கம் நினைத்து செய்த விஷயம் போலதான் இந்த நீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது.
அந்த எச்சரிக்கை சில வருடங்களாக திரையில் வந்தவண்ணம் இருக்கிறது. அந்த எச்சரிக்கை செய்தி திரையரங்கிலும் சின்னத்திரையிலும் வந்தபின்னர், எனக்கு தெரிந்த இப்பழக்கம் இருக்கும் சில நண்பர்கள் இந்த பழக்கத்தை விட்டமாதிரி தெரியவில்லை. இதைப்பற்றி அவர்களிடம் கேட்டால், இதைப்பற்றி புகை மற்றும் மது வாங்கும்போதே எல்லாம் அதில் தெளிவாக இருக்கும். அதை படித்தால் மட்டும் எங்களுக்குள் மாற்றம் வந்துவிடுமா என்றார். இன்னொரு கேள்வியும் எழுகிறது. திரையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களை கிண்டல் செய்வது இதுபோன்ற காட்சிகள் வந்தால் எந்தவொரு எச்சரிக்கையும் திரையில் வருவதில்லையே ? ஏன் ?
அவையெல்லாம் குற்றம் இல்லையா ? அவற்றால் இந்த சமூகம் பாதிக்கப்படுகிறதா இல்லையா ? திரையில் ஒரு நடிகர் புகைப்பிடிப்பதை பார்க்கும் இரசிகன் அந்த தவறை தானும் செய்கிறான் என்று நினைக்கும் அரசாங்கம், இதுபோன்ற காட்சிகள் வரும்போதும் அதே கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமா இல்லையா ?

தேசபக்தியை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்கிறது. இந்த உத்தரவை முதலில் கல்வி நிலையங்களில் அமல்படுத்த வேண்டும். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதை கட்டாயமாக்க வேண்டும். நான் முதன்முதலில் கல்லூரிக்கு சென்றபோது இந்த ஆசை எனக்கு இருந்த்து. என் கல்லூரியில் சுமார் 1000 மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தினமும் காலையில் ஒன்றாக கூடி தேசிய கீத்த்தை பாட வைப்பார்கள் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் நடந்த்தோ வேறு. என் பள்ளிக்கூட்த்தில் தினமும் காலை பிரார்த்தனை இருக்கும். அனைவரும் ஒன்றாக கூடுவோம். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம். பின், எங்கள் பள்ளியின் SPL- School People Leader என்று சொல்வோம், அவர் Prayer - வாசிப்பார், அவரை பின்பற்றி அனைவரும் வாசிப்போம். பின் அன்றைய செய்திகளை யாராவது ஒரு மாணவர் வாசிப்பார். பின்னர் பள்ளி முதல்வர் உரையாற்றுவார். கடைசியில் தேசியகீதம் பாடிவிட்டு அனைவரும் கலைந்து செல்வோம். இது தினமும் நடக்கும் விஷயம். ஆனால் இது என் கல்லூரியில் ஒருநாள் கூட நடந்த்தேயில்லை. ஒருவேளை கல்லூரி மாணவர்களுக்கு தேசபக்தியை ஊட்ட வேண்டாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ ? எதையும் சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். இங்கே சில தனியார் பள்ளிக்கூடங்களில் காலையில் அனைவரும் Prayer-க்காக கூடிய பின்னர், எதாவது ஒரு ஸ்தோத்திரமோ, சரஸ்வதி மந்திரமோ, அல்லது எதாவது ஒரு மந்திரமோ, ஜெபமோ சொல்லி ஆரம்பிப்பார்கள். இந்த பள்ளிகளில் தேசியகீதம் பாடி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இதற்கு நீதிமன்றம் என்ன பதில் வைத்திருக்கிறது ?
எந்தவொரு விஷயமும் கட்டாயப்படுத்தி வரக்கூடாது. சமீபத்தில் புனே நகரில் ஒரு திரையரங்கில் தேசியகீதம் ஒலிக்கப்பட்ட போது ஒரு கலைஞர் எழுந்து நிற்கவில்லை. இதனால் அங்கே இருந்த சிலர் அவரை தாக்கியதாக வந்த செய்தியை படித்தேன். இதில் வருத்தம் என்னவென்றால், அவர் ஊனமுற்றவர் என்பதும், அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்பதே! இந்த தேசபக்தர்கள் போர்வையில் திரியும் போலி தேசபக்தர்களை என்ன சொல்வது ?
இந்த உத்தரவால், கட்டாயம் அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்பதால் அனைவரும் எழுந்து நிற்பார்கள். உண்மையான உணர்வால் எழுந்து நிற்பார்களா என்று தெரியாது ஆனால் நாம் எழுந்து நிற்காவிட்டால் எல்லோரும் நம்மை தவறாக எண்ணுவார்கள் தேவையில்லாமல் போலி தேசபக்தர்கள் பிரச்சனை செய்வார்கள் என்றே பலர் எழுந்து நின்று தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்துவார்கள். இன்னொன்றும் கவனிக்க வேண்டும். அனைத்து கதவுகளும் மூடி இருக்கவேண்டும் என்கிற உத்தரவு. புதுடில்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் இதுசார்பாக தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. பொதுமக்கள் கூடியிருக்கும் எந்த ஒரு இட்த்தின் கதவுகளை ஒருபோதும் அடைத்துவைக்க கூடாது என்று. ஏதும் அவசர சூழ்நிலை வந்தால் அனைவரும் தப்பிக்க ஏதுவாக இருக்கும் என்பதாலேயே இந்த உத்தரவு. ஆனால் அதை உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட்து.
இந்த கேள்விதான் என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது. ஏன் திரையரங்கங்களில் மட்டும் இதை அமல்படுத்த வேண்டும் ?
இது சினிமாவில் இருக்கும் தேசபக்தியை காட்டுகிறதா அல்லது ஒட்டுமொத்த தேசத்தின் சினிமா பக்தியை காட்டுகிறதா ?
ஒவ்வொரு காட்சிக்கு முன்னரும் திரையரங்கில் தேசியகீதம் ஒலிக்கும் வழக்கம் சில திரையரங்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு திரையரங்கில் நானும் சென்று படம் பார்த்திருக்கிறேன். தேசியகீதம் ஒலிக்கப்பட்டபோது பெரும்பாலும் அனைவரும் தாமாகவே எழுந்து நின்றனர். இதில் எந்தவொரு கட்டாயமும் இல்லை. ஒருசிலரால் ஒருசில காரணங்களால் எழுந்திருக்க முடியாது. அந்த காரணத்தை பொது மேடையில் பகிந்துக்கொள்ள முடியாது. அப்படி இருக்கும் அவர்கள் எழுந்து நிற்கவில்லை என்பதால் அவர்களை தேசபக்தி இல்லாதவர் என்றுதான் அனைவரும் முத்திரை குத்துவார்களேயன்றி, அவருக்கு இருக்கும் சொல்ல முடியாத கஷ்டம் எவர் கண்களுக்கும் தெரியாது.
தேசபக்தி மக்கள் மத்தியில் ஊற்றாய் இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவர அரசாங்கமோ நீதிமன்றமோ தேவையில்லை. நாமிருக்கும் சமூகம்தான் இதை செய்தாக வேண்டும்.
சமூகத்திற்கு அடிப்படையான பல தேவைகள் இருக்கிறது. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இப்படி ஏராளமாய் இருக்கிறது. அரசாங்கத்தாலும் அமைச்சர்களாலும் செயலிழந்து கிடக்கும் இந்த அரசு என்னும் இயந்திரத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரம் நீதிமன்றங்களின் கைகளில் உள்ளது. அதை செவ்வனே செய்து மக்களின் அடிப்படை தேவைகளுக்காக கூட மக்கள் நீதிமன்றத்தை நாடும் அவலநிலையை போக்கும் கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. அதை செய்தாலே போதும், ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையை செய்வான். தேசபக்தி என்பது அங்கே தானாகவே அனைத்து மக்கள் மனதிலும் விதைக்கப்ப்ட்டு விருட்சமாக வளந்து நிற்கும்.
( Thoughts expressed here are my Personal views )
* தினேஷ்மாயா *