இசையும் நானும்..

Friday, June 30, 2017




          எனக்கும் இசைக்குமான ஒரு பந்தம் பல ஜென்ம தொடர்புபோல. இசை என்னுயிர் போல. என்னிடமிருந்து பிரித்தால் நான் ஒன்றுமில்லை. இசை எங்கும் இருக்கிறது என்பதை உணர்ந்தவன் நான். அமைதியான ஓர் இடத்தில் வீசும் காற்றும் ஒருவகை சங்கீதம்தான். அமைதியும் கூட இசையே. ஒலியதிர்வுகள்தாம் இசை என்கிறது அறிவியல். அதிர்வுகள் இல்லாமலும் இசையை சிலரால் மட்டுமே உணர முடியும். நான் பொதுவாக தியானம் செய்கையில், மொட்டைமாடியில் காற்று வீசும் திசையை கண்கள் மூடி கவனிப்பேன். காற்று வீசும் திசை மாறிக்கொண்டே இருக்கும். அது எழுப்பும் ஓசையும் அருமையாக இருக்கும். இன்னும் ஆழமாக தியானத்தில் மூழ்கினால் என் இதயத்துடிப்பை கேட்பேன். அதுவும் ஒரு இசை என்பதை உணர்ந்துள்ளேன். 

       எவரும் எனக்கு துணையாய் இல்லாதபோது இசை எனக்கு எல்லாமுமாய் இருந்துள்ளது, இருக்கிறது, இனியும் இருக்கும். பக்தி, மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், காதல், காமம், ஏமாற்றம், தோல்வி, வெற்றி, தியானம், தூக்கம், அமைதி, ஆர்ப்பாட்டம், குதூகலம், திருவிழா, சுப வைபவம், பயணம், ஜனனம், மரணம் இப்படி என் வாழ்வில் ஒவ்வொரு நொடியில் இசை கலந்துள்ளது. 

       என் பலநாள் கனவு - வயலின் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது. வீணை, புல்லாங்குழல் இவையும் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது நேரம் இல்லையென்றாலும் வாழ்நாளில் நிச்சயம் இவைகளை வாசிக்க நிச்சயம் கற்றுக்கொள்வேன். 

      இசை என்றால் தமிழ் மொழி பாடல்கள் என்றல்ல. அனைத்து மொழிகளிந் பாடல்களும் கேட்பேன். அனைத்து விதமான பாடல்களையும் கேட்பேன். ஆனால், மனதை வருடும் பாடல்களை மட்டுமே திரும்ப திரும்ப கேட்பேன். 

        மொழியில்லா வரிகளில்லா இசையை அதிகம் இரசிப்பேன். பீத்தோவன் தொடங்கி யானி, நம் இசைஞானி என அனைவரின் சின்பனியையும் கேட்டிருக்கிறேன். பழங்கால மக்கள் பயன்படுத்திய இசைகருவிகளின் இசையை கேட்பேன். Bull Roarer, Armenian Duduk, Pan Pipes இப்படி ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பூர்வகுடி மக்கள் பயன்படுத்திய கருவிகளின் இசையை கேட்கவும் பிடிக்கும். 

            ஒரு ஞாயிறன்று, இணையம் வந்தேன். உலகத்தில் இருக்கும் இசைக்கருவிகள் என்னென்ன என்று தேடினேன். அவைகளின் புகைப்படத்தை சேகரித்து வைத்தேன்.சில வித்தியாசமான கருவிகளின் இசையை தேடி பதிவிறக்கம் செய்தேன். குறிப்பாக பழங்குடியின மக்களின் இசைக்கருவிகள் சற்று வித்தியாசமாக இருக்கும் அதன் ஓசையும் இனிமையாகவும் இருக்கும். 

        ராகம், தாளம் இவை மட்டுமே இசை என்னும் ஒரு வட்டத்துள் சிக்காமல் அனைத்து இசையையும் கேட்கிறேன். புதுப்புது இடங்களுக்கு செல்ல நான் அடிக நாட்டம் கொள்வேன், அதுபோல புதுப்புது இசை கேட்கவும் அதேயளவு நாட்டமும் இருக்கிறது.

       இசையில் இறைவனை என்னால் காண முடிகிறது. இசையுணர்வு என்னை இறையுணர்வுக்கு இட்டு செல்கிறது. இந்து மதத்தில் இறைவன் என்பவன் இசைப்பிரியன் தானே.. நானும் அவனைப்போல இசைக்காதலனாக இருந்துவிட்டு போகிறேனெ !

* தினேஷ்மாயா *

இசை !

Thursday, June 29, 2017



இசை !

இயற்கையின் பரிசு..

மனிதனின் உன்னதமான படைப்பு..

இசை மட்டுமில்லை எனில்

இப்பிரபஞ்சமே இயங்காது..

எவர்க்கும் அடிமையில்லை நான்

உயிரை உருக்கும் இசையை தவிர !

* தினேஷ்மாயா *

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல




எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே...

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே
வாழ்வில் நீ காணும் சுகங்கள்
நூறாக வேண்டும் தங்கச் சிலையே
தாயின் மடிசேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே
சிறுகிளி போல் பேசும் பேச்சில்
என்னை மறந்தேன் நானம்மா...

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தாள் காதல் தேவி...
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே
காணக் கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

படம் : சின்னக் கண்ணம்மா 
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ
பாடல்வரி: பஞ்சு அருணாச்சலம்



நாம் இப்போது நெல்லையில் இருந்து கோவை நோக்கி பேருந்தில் பயணத்தில் இருக்கிறேன். வழக்கம்போல் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பேருந்தில் இளையராஜா அவர்களின் இசையில் மலர்ந்த பாடல்கள் என்னை தாலாட்டிக்கொண்டு வருகிறது. இதோ இங்கே பதிந்திருக்கும் பாடலும் என்னை தாலாட்டிய பாடல்களில் ஒன்று, இருந்தாலும், பாடல் என்னை அவ்வளவு புரட்டிப்போட்டுவிட்டது. பாடல் கேட்ட முதல்முறையே என் உயிரில் கலந்துவிட்டது என்றும்கூட சொல்லலாம். என்னில் அவ்வளவு கலந்துவிட்டது இப்பாடல். அப்பா தன் மகளுக்கு பாடும் பாடல். அப்பாவாக நான் மகளாக எங்களுக்கு பிறக்கும் தேவதையை நினைத்து பாடுவதாய் இப்பாடலை நினைத்துக்கொண்டேன். என்னிடம் இப்பாடல் இல்லை, உடனே பதிவிறக்கம் செய்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன். வரிகள் கண்களில் கண்ணீரை வார்த்துவிட்டு செல்கிறது..

* தினேஷ்மாயா *

நினைவுகள்




நினைவுகள் !!!

சில பழைய பொருட்களை தூசு தட்டினால்

தும்மல் வரும்.

ஆனால், நினைவுகளை தூசு தட்டினால் மட்டுமே

கண்ணீர் வரும் !!

* தினேஷ்மாயா *

வேறு யார் எனக்கு ?


  எத்தனையோ மனக்கவலை, குழப்பங்கள், வலிகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், இன்னும் என்னை கீழே தள்ளும் எத்தனை சங்கடங்கள் வந்தாலும், என்னை கீழே விழ விடாமல், விழுந்தாலும் அதிகம் அடிபடாமல், என்னை கைக்கொடுத்து தூக்கிவிட்டு தன்னம்பிக்கை தந்து நடக்க வைக்கும் இறைவனின் கருணைக்கு நான் என்ன நன்றிக்கடன் செய்வேன் !

பெற்றக்கடன் - பெற்ற பிள்ளையை காப்பது அவன் கடன்..

வளர்த்தகடன் - என்னை வளர்த்த அவனுக்கு சேவை செய்வது என் கடன்..

இது இறைவனுக்கும், என் பெற்றோருக்கும் பொருந்தும்..

* தினேஷ்மாயா *

நம் எண்பதுகளில்

Tuesday, June 27, 2017


நம்முடைய எண்பதுகளில்,

உன் கைகளை பிடித்தப்படி

நான் உரைப்பேன் -

" நாம் சாதித்துவிட்டோம் கண்ணே" என்று !

* தினேஷ்மாயா *

தாய்மாமன்

Sunday, June 25, 2017



என் தேவதை !

என்னை தாய்மாமன் ஆக்கிய என் தங்கையின் தேவதை !

டேய் மாமா.. இவ்ளோ நாள் பொறுப்பா இருந்தியா இல்லையானு எல்லாம் எனக்கு தெரியாது. இனிமேல் மருமகள் நான் வந்துட்டேன், மவனே இனிமே பொறுப்பா இருந்துக்கோனு சொல்ல ஒரு குட்டி தேவதை வந்துவிட்டாள்..

நேற்று நான் சொன்னதுபோல பெண் தேவதைதான் பிறந்திருக்கிறாள் !!

நன்றி இறைவா !!

* தினேஷ்மாயா *

பெண் பார்க்க...

Saturday, June 24, 2017



பெண் பார்ப்பதற்காக நாளை சென்னை செல்லலாம் என்றிருந்தேன். ஆனால் இறைவன் என்னை பெண் பார்க்க இன்றே சென்னை வரவைத்துவிட்டார். இப்போது சென்னைக்கு பேருந்தில் பயணத்தில் இருக்கிறேன்.

தாய்மாமா ஆகப்போகிறேன் !!

என் ஆழ்மனது பெண் தேவதைதான் பிறக்கும் என்று சொல்கிறது. இறைவனின் பரிசு என்ன என்பதை பிறகு பகிர்கிறேன்.

* தினேஷ்மாயா *

புது உறவு


எங்கள் வீட்டில்

புதியதொரு உறவு சேரவிருக்கிறது..

அத்தைக்கு முன் மருமகன்/மருமகள்

எங்கள் வீட்டை அலங்கரிக்க போகிறான்/ள்..

* தினேஷ்மாயா *

காரணமின்றி

Friday, June 23, 2017




மீண்டுமொருமுறை

காரணமேதும் இன்றி

கண்ணீர் விட்டு

கதறி அழனும் போல் தோன்றுகிறது..

* தினேஷ்மாயா *

நிலநடுக்கம்



நாணத்தால் என்னவள்

நிலம் நோக்குகையில் ஏற்படும்

மெல்லதிர்வுகள்தாம்

நிலநடுக்கம் என்பதோ ?

*தினேஷ்மாயா*

மாற்றம்




பணம் படைத்தவனுக்கே இவ்வுலகம் சொந்தம்

என்னும் நிலை என்று மாறும் ?

* தினேஷ்மாயா *

உன் கண்கள்

Monday, June 19, 2017



கண்களால் பார்த்தால்தான்
உலகம் தெரியுமாம்..

உன் கண்களை பார்த்தாலே
என் உலகமே அதில் தெரிகிறதே !

* தினேஷ்மாயா *

ஆணாதிக்கம்




பல ஆண்களுடன் தன்னை பகிர்ந்துக்கொள்ளும் பெண்ணுக்கு இந்த சமூகம் ஓர் பெயர் வைத்திருக்கிறது..

ஆனால், பல பெண்களுடன் தன்னை பகிர்ந்துக்கொள்ளும் ஆணுக்கு இந்த சமூகம் ஏன் அப்படி எந்த பெயரும் வைக்கவில்லை ?

பெண்ணை காட்சிப்பொருளாக பார்த்தார்கள் முன்னர்.

இன்றோ அவளை வெறும் இச்சைப்பொருளாய் மட்டுமே பார்க்கிறது ஆண்களின் கண்கள் !

பெண்மையின் சிறப்பே தாய்மைதான்.

ஆனால், பெரும்பாலும் ஆண்களின் பார்வை அவளை தாய் ஆக்குவதாகவே இருக்கிறது..

ஆண்களை சாடினால் அவர்கள் சமூகத்தை கை காட்டுகிறார்கள்..

சமூகத்தை சாடினால் அது பெண்ணை கை காட்டுகிறது..

பெண்ணை எப்படி சாடுவது !

பாதுகாப்பு அளிக்க வேண்டிய பெண்களுக்கு பாதுகாப்பைவிட பாதிப்பே அதிகம்..

வக்கிர பார்வை கொண்ட ஆண்கள் திருந்தாமல், பெண்களை திருந்த சொல்லும் இந்த சமூகத்தில்

பெண்ணியம் பேசுவதென்பது 

சூரியனை தண்ணீர் ஊற்றி அணைப்பது போல !

வாழ்க ஆணியம்
வாழ்க ஆணாதிக்கம்

வீழ்க மனித இனம் !!

* தினேஷ்மாயா *

என்ன பயன்

Friday, June 16, 2017



சக மனிதனின் நிறத்தை கேலி செய்துவிட்டு வானவில்லை ரசித்து என்ன பயன்
#copied from twitter

* தினேஷ்மாயா *

ஸ்ரீ ராமஜெயம்





    என்னுடம் தங்கியிருக்கும் நண்பன், நாளை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம் என்றிருக்கிறேன், வெற்றிலை எங்கே கிடைக்கும் என்றான். எதுக்குடா இப்போ இந்த வேண்டுதல் என்று கேட்டேன். அவன் அக்கா இப்படி செய்ய சொன்னார்களாம், நல்ல வேலை கிடைக்க விரைவில் திருமணம் நடக்க,காரிய வெற்றி கிடைக்க. சரி, நானும் அவனுடன் சேர்ந்து இந்த வேண்டுதலில் ஈடுபடலாமே என்று கிளம்பிச்சென்று, வெற்றிலை வாங்கிவந்து, நாங்கள் இருவரும் எங்கள் கைப்பட 108 வெற்றிலை கொண்டு மாலை கட்டி முடித்தோம். மறந்துவிட்டது எனக்கு, எப்படி கட்ட வேண்டும் என்று. பின் இணையதளத்தில் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டு கட்டிமுடித்துவிட்டேன். இறைவனுக்காக செய்யும் ஒவ்வொரு விஷயமும் காதலுடனும் பக்தியுடனும் செய்யும்போது நாம் இறைவனுக்கு மிக அருகில் செல்வதுபோல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. நாளை அருகில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு இந்த வெற்றிலைமாலையை சாற்றி அவர் ஆசி பெற்று வரவேண்டும்..

* தினேஷ்மாயா *

கருணை


அனைத்து உயிர்களிடத்தும் கருணையோடு இருப்போம் !

* தினேஷ்மாயா *

பாவம் நான்

Thursday, June 15, 2017


புயல் வீசுகிறது..

மெதுவாக சுவாசி !

பாவம் நான் !

* தினேஷ்மாயா *

மின்னல்



மின்னல் வானில் வராது

அதோ அங்கே நீ நடந்துவருகிறாய் என்று

எப்படி இந்த பறவைக்கு சொல்வேன் நான் ?

* தினேஷ்மாயா *

என்னவளுக்காக காத்திருக்கிறது

நிர்பந்தமில்லா அன்பு..

நிபந்தனையில்லா காதல்..

எதிர்பார்ப்புகளில்லா பாசம்..

மனது நிறைய நேசம்..

இவையாவும் காத்திருக்கிறது

என்னவளுக்காக !

* தினேஷ்மாயா *

என் பிரிய நிலா !


வான் முழுதும் உலாவி

சோர்வுடன் என் மடியில் -

கண்ணுறங்குகிறது என் பிரிய நிலா !

* தினேஷ்மாயா *

நிலவு - என்னவள்


ஒருமுகம் மட்டுமே காட்டும்

நிலவு - என்னவள் !

* தினேஷ்மாயா *

என் முதல் வணக்கம் !!


வணக்கம் !!

என் முதல் வணக்கம் !!

* தினேஷ்மாயா *

இந்த ஆயுள் போதாதடி..


உன்னுடைய குழந்தைத்தனமும் குறும்புத்தனமும்

இரசித்து முடிக்க எனக்கு இந்த ஆயுள் போதாதடி..

* தினேஷ்மாயா *

கங்கையின் பிறப்பிடம் !


கங்கையின் பிறப்பிடம் !

* தினேஷ்மாயா *

பேரழகி


நீ மட்டுமே பேரழகி என்கிற கர்வமோ ! ?

* தினேஷ்மாயா *

தேனீ கூட்டம் !

இரண்டு பூக்களில் -

எதனிடம் தேனெடுப்பது என்று

குழப்பத்துடன் திரும்பிவிட்டது அந்த

தேனீ கூட்டம் !

* தினேஷ்மாயா *

பரிணாமம்


நாணத்தின் அடுத்த பரிணாமம்

இதுதானோ !

* தினேஷ்மாயா *

என்னுயிர் நட்பே !

* தினேஷ்மாயா *

Good Thoughts


* தினேஷ்மாயா *

நற்சிந்தனையாளன்


* தினேஷ்மாயா *

துணையாய் வாராயோ ?

Wednesday, June 14, 2017




நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்

வழிப்போக துணையாய் அன்பே வாராயோ ?!

#எங்கே_செல்லும்_இந்த_பாதை

* தினேஷ்மாயா *

I Hate this !

Tuesday, June 13, 2017


* தினேஷ்மாயா *

But am not so..


* தினேஷ்மாயா *

Never Blame


* தினேஷ்மாயா *

இது நினைவிருக்கா ?



* தினேஷ்மாயா *

Simple


* தினேஷ்மாயா *

I DON'T STOP

* தினேஷ்மாயா *

யாரோ அவள் ?


* தினேஷ்மாயா *

Savings !


* தினேஷ்மாயா *

Never Give Up


* தினேஷ்மாயா *

Don't Quit !


* தினேஷ்மாயா *

Love is.....



Love is gentle.
Love is respectful.
Love is truthful.
Love is committed.
Love is patient.
Love is cooperative.
Love is loyal.
Love is forgiving.
Love is honest.
Love is peaceful.
Love is kind.
Love is responsible.
Love is compassionate.
Love is thoughtful.
Love is happy.

You and I create the most amazing life
when we are ambassadors of #LoveInAction

#copied from FB

* தினேஷ்மாயா *

Where do I begin

Monday, June 12, 2017



Where do I begin
To tell the story of how great a love can be
The sweet love story that is older than the sea
The simple truth about the love she brings to me
Where do I start

With her first hello
She gave new meaning to this empty world of mine
There'd never be another love, another time
She came into my life and made the living fine
She fills my heart

She fills my heart with very special things
With angels' songs , with wild imaginings
She fills my soul with so much love
That anywhere I go I'm never lonely
With her around, who could be lonely
I reach for her hand-it's always there

How long does it last
Can love be measured by the hours in a day
I have no answers now but this much I can say
I know I'll need her till the stars all burn away
And she'll be there

- Where do I begin - Song

* தினேஷ்மாயா * 

ஒரு மாலை நேரத்தில்




ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில்

அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்

அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து

என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்

மழை நின்றும் பெண் எழவே இல்லை

என்ன செய்தோம் அது நினைவே இல்லை

என்ன வியப்பு... மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள்

மார்போடு ஏதோ பட்டு நழுவி கொண்டாள்

#ஓ_சோனா

* தினேஷ்மாயா *

இதயத்தை ஏதோ ஒன்று


இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடல் அலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின்வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது
எனை விட்டு மெதுவாய்
அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்பவில்லை
கனவுக்குள் கனவாய்
எனை நானே கண்டேனே

எனக்கு என்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

எனக்கு என்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

மலர்களை அள்ளி வந்து
முகிலுடன் கையில் தந்து
மனதினை பகிர்ந்திடவே
ஆசை கொள்கின்றேன்

தடுப்பது என்ன இன்று
தவிக்குது நெஞ்சம் இன்று
நதியினில் இலையென நான்
தோய்ந்து செல்கின்றேன்

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சிணுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நாளும் மின்னுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சிணுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நாளும் மின்னுங்கும் மேல

இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடல் அலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின்வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது
எனை விட்டு மெதுவாய்
அது போக கண்டேனே

இது ஒரு கணவு நிலை
கலைத்திட விரும்பவில்லை
கனவுக்குள் கனவாய்
எனை நானே கண்டேனே

எனக்கு என்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என்ன சொல்லும் நாளும் இன்று

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சிணுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நாளும் மின்னுங்கும் மேல

படம்: என்னை அறிந்தால்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்: சின்மயி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

* தினேஷ்மாயா *

தினேஷ்-மாயா


* தினேஷ்.மாயா *

அழைப்பு


* தினேஷ்மாயா  *