விழியிலே மணி விழியில். ... ஹிந்தி

Monday, December 31, 2018


திரைப்படம்: சீனி கம்

இசை : இளையராஜா

* தினேஷ்மாயா *

2018-ல் நான் ரசித்த திரைப்படங்கள்.



1. காலா
2. இரவுக்கு ஆயிரம் கண்கள்
3. இரும்புத்திரை
4. பரியேறும் பெருமாள்
5. இமைக்கா நொடிகள்
6. செக்க சிவந்த வானம்
7. கோலமாவு கோகிலா
8. ராட்சசன்
9. வடசென்னை
10. KGF

இந்த ஆண்டு வெளிவந்த பல படங்களை இன்னும் பார்க்கவில்லை. உதாரணமாக , 96, சீத்க்காதி..

நான் பார்த்து ரசித்த படங்கள் இவை.

* தினேஷ்மாயா *

2019 வருக வருகவே...



        2018-ம் ஆண்டு வழக்கத்தைவிடவும் எனக்கு மிக சிறப்பான ஆண்டு. என் மாயா எனக்கு கிடைத்த ஆண்டு. தனியொருவனாய் சுற்றி திரிந்த எனக்கு அன்பால் கடிவாளம் போட்டாள் என்னவள். என் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை என்னைக் காணச்செய்த ஆண்டு. சிறப்பான குடும்ப சூழல், சற்று பிரிந்திருந்தாலும் அன்பு கொஞ்சமும் குறையாத தோழி/மனைவி, புதிதாய் எனக்கு கிடைத்த அன்பான குடும்பம்,  அலுவலகத்தில் என் அடுத்த உயர்பதவிக்கான அடிக்கல், புதிதாய் இடமாற்றம் செய்யப்பட்ட சிறப்பான அலுவலகம், வேலைப்பளுவை பகிர்ந்துக்கொள்ளும் சக பணியாளர்கள், அலுவலர், இறைவனை தினம் தினம் காணும்படியான ஒரு இடத்தில் வீடு, எனக்கு அமைந்த அனைத்து சூழலும் இறையருளால் மிகச்சிறப்பான ஆண்டாக 2018-ஐ மாற்றியது.

       2019-ல் காணவிருக்கும் மிகப்பெரிய உயர்வும், வளர்ச்சியும் அதில் நான் கற்றுக்கொள்ளும் பாடங்களும் இன்னும் என்னை பக்குவப்படுத்தும் என ஆவலுடன் 2019-ஐ எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்.

        2018-ல் தெரிந்தும் தெரியாதும் செய்த சிறு மற்றும் பெரிய தவறுகள் அனைத்தையும் மாற்றிக்கொண்டு புதிய மனிதனாய் பிறக்கப்போகும் 2019-ல் நானும் புதியவனாய் பிறந்து நல்ல மனிதனாய் இந்த சமூகத்திற்கு என் பணியை செய்வேன்.

            2018-ல் என் வலைப்பக்கத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. இனி 2019-ல் வழக்கம்போல் என் வலை என் பதிவுகளால் நிரம்பியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்

* தினேஷ்மாயா *

திருமகள்..




         இன்று காலையில் அலுவலகம் வரும் வழியில் ஒரு காட்சியை கண்டேன். ஒரு ஆட்டோவில் 6 பேர் பயணித்திக்கொண்டிருந்தனர். பின்னிருக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகள். முன்னிருக்கையில் ஓட்டுனருக்கு அருகே அந்த குடும்பத்தலைவர் அமர்ந்திருந்தார். இது எங்கும் நடக்கும் விஷயம்தான். ஆனால், பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு குட்டி குழந்தை, சுமார் 3 முதல் 4 வயது இருக்கும் அந்த சுட்டிக்குழந்தை, முன்னிருக்கையில் ஓட்டுனருடன் அமர்ந்திருக்கும் தன் தந்தையை பிடித்துக்கொண்டிருந்தது. அவர் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக. 

      அந்த குழந்தையின் எடை சுமார் 10-15 கிலோ இருக்கலாம். அந்த தந்தையின் எடை சுமார் 70 கிலோ இருக்கலாம். 70 கிலோ எடை இருக்கும் தந்தையை அந்த 15 கிலோ எடை இருக்கும் குழந்தை பிடிப்பதால் எந்த பலனும் இல்லைதான். ஆனால், அந்த தந்தையை கீழே விழாமல் பிடித்திருப்பது அந்த குழந்தையின் பாசம்தான். அக்காட்சி எனக்கு நெகிழ்ச்சியை தந்தது.


* தினேஷ்மாயா *

மனிதனை மதிப்போம்

Thursday, December 06, 2018




சமீபத்தில் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அது கொஞ்சம் பெரிய செய்தி. ஆனால் அதில் சொல்லப்பட்ட விஷயம், "தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே."

இதுதான் எனக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது. இந்த கருத்தை யார் சொல்லியிருப்பார்கள்? மனிதனுக்கு மரியாதை தராமல் தண்ணீருக்கு மரியாதையும் முக்கியத்துவமும் தருவதை எப்படி பார்ப்பது ?

மனிதனை மதிக்க முதலில் இந்த சமூகத்திற்கு சொல்லிகொடுப்போம். அதன்பிறகு, மாட்டையும், தண்ணீரையும் மதிக்க சொல்லிக்கொடுப்போம். அனைத்து உயிர்களும் ஒன்றுதான். ஆனால், சகமனிதனை பழித்து இன்னபிறவற்றை துதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

* தினேஷ்மாயா *

என்னங்க சார் உங்க சட்டம் ?



* தினேஷ்மாயா *