விளையாடு

Sunday, March 30, 2014



கடல் ..

வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் இடமல்ல..

ஓடி விளையாடி மீண்டும் நம் குழந்தைபருவத்தை நம்முள் தேடவேண்டிய இடம்..

எல்லா வயதினரும் எந்த தடையுமின்றி விளையாடலாம் இங்கு.

அடுத்தமுறை கடற்கரைக்கு சென்றால் காலார ஓடி ஆடி கடலில் விளையாடிவிட்டு வாருங்கள். கடல் உங்களை ஒன்றும் செய்துவிடாது..

* தினேஷ்மாயா *

கற்போம் கற்பிப்போம்


   இந்த காலத்தில் படிப்புக்கு ஏத்த வேலை கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது மனதுக்கு பிடித்ததாய் இருப்பதில்லை. நம் நாட்டில் வளரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் எதை கற்றுத்தருகிறது என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீ நல்லா படிச்சு ஒரு டாக்டராகனும், இஞ்சினியர் ஆகனும், வக்கீல் ஆகனும் இப்படி சொல்லி சொல்லியே வளர்க்கிறோம். அவன் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அந்த எண்ணத்தை வளரவிடாமல் நம் எண்ணத்தை திணித்து நாளாக நாளாக அது அவனை ஆட்கொண்டுவிடுகிறது.

 நம் பள்ளிகளில் மாணவனில் அறிவை வளர்க்க எந்த கல்வியும் கற்பிக்கப்படுவதில்லை. உயர்கல்விக்கு என்ன தேவையோ அதைத்தான் கற்பிக்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் நான் இயற்பியலிலும் வேதியலிலும் என்ன படித்தேனோ அதே பாடங்கள்தான் என் பொறியியல் முதலாம் ஆண்டு பாடத்திலும் வந்தது. 

  SILVER NITRATE, SULPHURIC ACID, CENTRIPETAL FORCE, INTEGRATION, DIFFERENTIATION, HIBISCUS, ORYZA, METABOLISM, GYMNOSPERM, இப்படி பல வார்த்தைகள் படித்திருக்கிறேன். ஆனால் அவைகளை என் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதில்லையே.

 நான் என் பள்ளியில் படித்த அனைத்தும் என் வேலைக்கு பயன்படும்படியாக மட்டுமே இருந்திருக்கிறதே தவிர, என்னை மனிதனாக்கியது எனது கல்வியோ அல்லது எனது கல்விமுறையோ அல்ல. என்னை ஒரு குடிமகனாக்கியது எனது கல்விமுறையா என்றால் இல்லை என்ற பதில்தான் என்னிடம் இருந்து வரும்.

  சாலையில் செல்லும்போது என்ன மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டும், சமூகத்தில் எந்தெந்த பிரச்சனைகள் வரும் அவைகளை எவ்வாறு கையாள வேண்டும், ஒரு அரசாங்க அலுவலகத்திற்கு சென்றால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் இன்னும் இந்த மாதிரி வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை என் கல்விமுறை எனக்கு கற்றுதரவில்லை. நான் படித்ததெல்லாம் புத்தகங்களில் இருந்த பாடங்களைத்தான். ஆசிரியர்களும் பள்ளியும் மாணாக்கர்களை மதிப்பெண் எடுக்க வைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். மாணவனை சிறந்த குடிமகனாக்க எந்த கல்விமுறையும் நம் நாட்டில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. பள்ளியில் ஒருவன் எடுக்கும் மதிப்பெண்தானே ஒருவனின் தலையெழுத்தையே நிர்ணயிக்கிறது இங்கு. பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தவன் பன்னிரெண்டாம் வகுப்பிலும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் எடுக்கிறான். அவனுக்கு மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ இருக்கும் சிறந்த கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறத்து. அவனை வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து கொத்தி சென்றுவிடுகின்றன. ஒருவனை பாடுபட்டு வளர்த்தது வெளிநாட்டிற்கு தாரைவார்க்கவா ?

  இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வகுப்பில் தேர்ச்சிபெறும் மாணவன்தானே இன்று அரசு வேலைகளிலும் மற்ற வியாபரங்களையும் பார்த்துக்கொண்டு நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுகிறான்.

  இந்திய கல்விமுறையில் எங்கோ பிழை இருக்கிறது. அனைவரும் சொல்கின்றனர் இந்தியாவின் கல்விமுறைதான் உலகில் சிறந்தது, இதுதான் பல அறிஞர்களையும் உயர்ந்த சிந்தனையாளர்களையும் உருவாக்கியது என்று. அனைவருக்கும் நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

  இன்று நாம் பின்பற்றும் கல்விமுறை ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டு சென்றது. இங்கு அந்த கல்விமுறை இல்லாதபோதே உலகிற்கு பல அறிஞர்களை கொடுத்த தேசம் என் இந்திய தேசம். நம் கல்விமுறையில் இருக்கும் அந்த குறைப்பாட்டை என்னவென்று ஆராய்ந்து அதை மாற்றிவிட்டால், நிச்சயம் இந்தியாவை வல்லரசாக்க நம் குழந்தைகள் தயாராக இருக்கிறார்கள், அவர்களின் முயற்சியால் நம் நாடும் உலக நாடுகளின் வரிசையில் முதலில் நிற்கும் என்பதில் ஐயமில்லை..


* தினேஷ்மாயா *

ஹே லூசு..



 குக்கூ திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம். 

கதாநாயகி சொல்லும் “ ஹே லூசு..”  என்னும் வசனம். இதை அவர் சொல்லும் விதம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. இந்த வசனம் பலமுறை திரையில் வரும். எனக்காகவே மீண்டும் மீண்டும் இந்த வசனம் வருகிறது என்று நினைத்து ரசித்து கேட்டேன்..

* தினேஷ்மாயா *

வாழ்க்கை வேண்டும்

Saturday, March 29, 2014



  கடிகாரம் பார்க்காமல் வாழும் வாழ்க்கை எனக்கு வேண்டும்..

* தினேஷ்மாயா *

என்ன செய்ய ?



  எனக்கு பல காலமாக இருக்கும் ஒரு கேள்வியை இங்கு முன் வைக்கிறேன்.

5 ரூபாய் கொடுத்து ஒரு பேனா வாங்குகிறேன். அதில் இருக்கும் மை தீர்ந்துவிட்டால் முன்பெல்லாம் பேனாவில் மையை மட்டும் தனியாக விற்பார்கள். அதுபோல பேனாவின் மை தீர்ந்துவிட்டது என்று மை வாங்க கடைக்கு சென்றால், மை விலை 4 முதல் 7 ரூபாய் வரை சொல்கிறார்கள். நான் கேட்டேன், பேனாவே 5 ரூபாய் தானே மை ஏன் இவ்வளவு விலை விற்கிறீர்கள் என்று. அதற்கு கடைக்காரர் சொன்னார், பேனா அதிகம் விற்பனையாக வேண்டும் என்று பேனா நிறுவனங்கள் கையாள்ய்ம் வியாபார யுத்திகள் இது என்றார். அத்தோடு USE AND THROW என்னும் பேனாக்கள் இப்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலம். 2 அல்லது 3 ரூபாய் விலைக்கு வாங்கிவிட்டு எழுதி முடித்ததும் தூக்கி போட்டுவிடுகிறார்கள். THROW என்னும் வார்த்தை எனக்கு அதிகம் நெருடலை தருகிறது. மீண்டும் பயன்படுத்த முடியாமல் தூக்கி எறிவதால் குப்பைகளே அதிகம் சேருகிறது. இதுப்போன்ற விஷயங்கள் நம் சந்தையில் பல இருக்கின்றன. எழுதும் பேனாவில் தொடங்கி வீட்டில் பயன்படுத்தும் பல பொருட்கள் இந்த ரகம் தான். உபயோகித்து முடித்ததும் தூக்கி போட்டுவிடுகிறோம். ஆனால் அந்த பொருட்கள் மீண்டும் பயன்படுத்தமுடியாமல் நம் சுற்றுசூழலை நாசம் செய்யும் என்பதை எவரும் நினைப்பதில்லை. 

இனியாச்சும், ஒரு பொருளை தூக்கி எறியும் முன்னர், அந்த பொருளை வேறு எப்படியாவது பயன்படுத்த முடியுமா என்று நினையுங்கள். இயன்றவரை குப்பைகளை சேர்ப்பதில் நம் பங்கு குறைவாக இருக்கட்டும்.

* தினேஷ்மாயா *

சட்டதிட்டம்


சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். வெளிநாட்டின் அதிபர் ஒருவர், பன்னாட்டு தொலைப்பேசிகளை ஒட்டுகேட்பதில் சில கட்டுப்பாடுகள் விதிக்க தனது அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.

ஒரு சந்தேகம்..

ஒட்டுகேட்பதே தப்பு. அப்புறம் என்ன அதற்கு கட்டுப்பாடு ??

* தினேஷ்மாயா *

குக்கூ




 குக்கூ திரைப்படத்தின் பாடல்களை கேட்டேன். பாடல் அத்தனையும் அவ்வளவு அருமை. பாடல் கேட்டதும் உடனே படம் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். விரைவாக அலுவல் பணிகளை முடித்துவிட்டு நண்பர்களுடன் திரையரங்கிற்கு சென்றேன். 

   படம் முடித்து மனம் கொஞ்சம் பாரமாய் வெளியே வந்தேன். அற்புதமான கதை, திரைக்கதை. பிண்ணனி இசையும், பாடல்களும் பலம். ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிக்காமல், திரையில் வாழ்ந்திருக்கிறார்கள். பார்வையற்றவர்களின் உலகை நம் கண் முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜமுருகன். நிச்சயம் நீங்கள் பார்க்கவேண்டிய படம். தவறாமல் பாடல்களை திரும்ப திரும்ப கேளுங்கள். உங்கள் மனதை பாடலும், வரிகளும், அந்த குரல்களும் என்னென்னவோ செய்யும்..

* தினேஷ்மாயா *

மனசுல சூற காத்தே



தநநநா நநநநா நநநநா
தநநநா நநநநா நநநநநா

மனசுல சூற காத்தே
அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூற காத்தே
அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோறூட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும்
காதிலே கேட்குதே
உந்தன் வாசனை
வானவில் காட்டுதே

வாவென்று சொல்லும் முன்னே
வருகின்ற நியாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன்
அறியாத தாய்முகம்
ரகசிய யோசனை
கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை
சுட சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து
புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்
தநநநா நநநநா நநநநா
தநநநா நநநநா நநநநநா

ஆனந்தம் பெண்ணாய் வந்தே
அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ண 
குயில்போல கூவுதே
கைத்தொடும் போதிலே
கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும்
கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச
மிதந்திடும் வானமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வானொலி பாடுதே

மனசுல சூற காத்தே
அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோறூட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும்
காதிலே கேட்குதே
உந்தன் வாசனை

வானவில் காட்டுதே

படம்: குக்கூ
இசை: சந்தோஷ் நாராயணன்
வரிகள்: யுகபாரதி
குரல்: RR, திவ்யா ரமணி

* தினேஷ்மாயா *

கோடையில மழ போல



கோடையில மழ போல
என்னுயிரு நீ இருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன்கூட
காலையிளங்கதிராக கண்ணருகே நீயிருக்க
மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ

காரியம் நூறு செய்து 
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடம் அறிந்து 
செல்லும் பாதைகள் முடிவதில்லை
ஆலயம் தேடிசென்று 
செய்யும் பூசைகள் தேவையில்லை
உந்தன் கைவிரல் தொடும்பொழுது 
துன்பம் தொலைவிலும் வருவதில்லை
உருவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ
ரெண்டு இருதயம் கலந்துவிட

மாறிடும் யாவும் என்று
சொல்லும் வார்த்தையில் நெசமுமில்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை
ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும்
அன்பு தீ என்றும் அணைவதில்லை
உருவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ
ரெண்டு இருதயம் கலந்துவிட

கோடையில் மழ போல
என்னுயிரு நீ இருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன்கூட
காலையிளங்கதிராக கண்ணருகே நீயிருக்க
மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ


படம்: குக்கூ
இசை: சந்தோஷ் நாரயணன்
வரிகள்: யுகபாரதி
குரல்: விஜயலஷ்மி, கல்யாணி, பிரதீப்

கல்யாணமாம் கல்யாணம்



காதல் கண்மணியே
கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொன்னுக்கு கல்யாணம்

ஒன்னா சிரிச்சு மெய்யா பழகி
கண்ணால் பேசி காத்து கெடந்து
ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து
உறங்கிடாமல் கனவும் கண்டு
கடைசிவரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அதனையெல்லாம்
மறந்து விட்டு பறந்தும் விட்டாளே

கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொன்னுக்கு கல்யாணம்

கூரசேல மடிச்சு கட்டி
குங்கும பொட்ட நெத்தியில் வெச்சு
மணவறையில் அவ இருப்பா மகாராணியா
அவள காதலிச்சவன் கலங்கி நிப்பான் அப்புறானியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

கெட்டி மேளம் காது பொளக்க
நாதசொரம் ஓங்கி ஒலிக்க
கச்சேரிய ரசிச்சிருப்பா ஊரு முன்னால
அவள காதலிச்சவன் கலங்கிருவான் ஓசை இல்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

சாதி செனத்த வணங்கிகிட்டு
சட்டுனு சட்டுனு சிரிச்சுகிட்டு
பரிசும்கூட வாங்கி வெப்பா ரொம்ப ஆசையா
அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான் சந்நியாசியா
வக வகையா சமைச்சு வெச்சு
வாழை இலையில் பந்தியுமிட்டு
புருசனுக்கு ஊட்டிடுவா போட்டோ புடிக்கத்தான்
அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்
மங்கள தாலி கழுத்தில் ஆட
மந்திர வார்த்த ஐயரு ஓத
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன் வந்துடுவானே நடு ரோட்டுக்கு
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்…
காதல் கண்மணியே
கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொன்னுக்கு கல்யாணம்


படம்: குக்கூ
வரிகள்: யுகபாரதி
இசை: சந்தோஷ் நாரயணன்
குரள்: அந்தோனி தாசன்

* தினேஷ்மாயா *

ஆகாசத்த நான் பாக்குறேன்



ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீர பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உழக
உன்னால பாத்தேனே

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணே படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நெனவாகும் கனவே அருகிலே
உன்னை தூக்கி சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே உன் கரமா
கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்

காம்ப தேடும் குழந்தையா
உன்னை தேடும் உசிரு பசியில
கோடி பேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீர பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உழக
உன்னால பாத்தேனே


படம்: குக்கூ

வரிகள்: யுகபாரதி

இசை: சந்தோஷ் நாரயணன்

குரல்: கல்யாணி, பிரதீப்

* தினேஷ்மாயா *

ஒத்தநொடியிலதான் எனக்கு



ஒத்தநொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிருச்சே
மொத்த ஒலகமுமே அடடா சுத்தம் மறந்திருச்சே
நெத்தி நடுவுல லங்கரு சுத்துது
நெஞ்சு குழியில கவுளி கத்துது
தீ கங்குல பால் செட்டிய போல் பொங்குறனே
ஏ.. பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
எனை தொட்டதுபோல் தொட்டுவிட்டாள் அழகு ரோஜா
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்
அதை ஒத்ததுதான் பெண்ணவளின் புதிய நேசம்
பொத்திவெச்சா அந்த புள்ள
குண்டுமல்லி நெஞ்சுக்குள்ள
அ.. வேற சொல்லு இல்ல நானும் சொல்ல
ஏ.. பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே

சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன்
அவள் தொட்டதனால் ஆகிவிட்டேன் வண்ணதாசன்
முக்கனியில் சர்க்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி
இப்படிநான் என்ன சொல்ல
சிந்தனையும் ஓடவில்ல
யாவும் அந்த புள்ள செஞ்ச லீல..
பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புள்ள கண்டு துள்ளி குதிருச்சே



படம்: குக்கூ
இசை: சந்தோஷ் நாரயணன்
வரிகள்: யுகபாரதி
குரல்: RR

* தினேஷ்மாயா *

கால் நூற்றாண்டு

Friday, March 21, 2014


    22-03-2014... 

        ஆங்கில வருடத்தின்படி, இந்த தினத்துடன் என் கால் நூற்றாண்டு வயதை கடந்து அடுத்த கால் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கிறேன். சுட்டி பையனாய் திரிந்து, வால் பையனாய் வளர்ந்து, குறும்புக்கார பையனாய் பழகி, நல்ல நண்பனாய் மலர்ந்து, சிறந்த குடிமகனாய் இன்று பல பொறுப்புகளை  என்முன் கொண்டிருக்கிறேன். இனி வரும் 25 வருடங்கள் என் வாழ்வில் பல பல மாற்றங்களை கொண்டுவரப்போகிறது. எனக்கு இருக்கும் ஆசையெல்லாம் ஒன்று மட்டும்தான். என் 50-ஆவது வயதிலும் என் வலைப்பக்கத்தில் இப்போது எழுதுவதுபோலவே தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.

   இந்த சமயத்தில் பகிர்ந்துக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது இருப்பினும் பின்வரும் காலங்களில் பதிவு செய்கிறேன்.

* தினேஷ்மாயா *

விடா முயற்சி



* தினேஷ்மாயா *

எனக்கு ஒரு கேள்வி

Thursday, March 20, 2014


எனக்கு ஒரு கேள்வி..

  இந்த HIGH CLASS PEOPLE-னா யாரு ?

   எதை வெச்சு அவங்களை அப்படி சொல்றாங்க ?

* தினேஷ்மாயா *

C C++


   நல்லவேளை நான் C, C++, Java, .Net போன்ற மென்பொருட்களை படிக்கவில்லை.

       இன்று நான் நானாக சிந்திக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் இதை படிக்கும் கட்டாயம் ஏற்பட்டும் நான் இதை படிக்காமல் போனதுதான்.

       இது எல்லோருக்கும் போருந்தாது. என் கதை இது..

* தினேஷ்மாயா *

உன்னுடன் நடக்கும்போது



உன்னுடன் நடக்கும்போதுதான்

என் நிழலும் வண்ணமாய் மாறுகிறது..

* தினேஷ்மாயா *

தெகிடி

Sunday, March 16, 2014


இன்று தெகிடி திரைப்படம் பார்த்தேன். படம் நல்லா இருக்கு. கொஞ்சம் வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

* தினேஷ்மாயா *

கடல் அலை..


     ஒவ்வொரு முறையும் கடலில் இறங்கும் போது, துணி கடலில் நனைய கூடாது என்று துணியை முட்டிவரை மடித்துக்கொண்டுதான் இறங்குவேன். ஆனால், கடலில் இருந்து வெளியே வரும்போது உச்சந்தலை வரை தண்ணீரில் நனைந்தபடிதான் வெளியே வருகிறேன்..


* தினேஷ்மாயா *

கடற்கரை



கடற்கரைக்கு -

நான் நடைப்பழகாத குழந்தையாக இருக்கும்போது

வந்திருக்கிறேன்..

நடக்கப்பழகிய சின்னஞ்சிறுவனாய்

வந்திருக்கிறேன்..

பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும்

வந்திருக்கிறேன்..

பள்ளிக்கூட சுற்றுலாவில்

வந்திருக்கிறேன்..

கல்லூரி நண்பர்களுடன்

வந்திருக்கிறேன்..

காதலியுடன் காதலனாக

வந்திருக்கிறேன்..

என் காதலி மனைவியானதும் அவளுடன் கணவனாக

வந்திருக்கிறேன்..

என் குழந்தையுடன்

வந்திருக்கிறேன்..

என் பிள்ளை வளர்ந்ததும் அவனுடன்

வந்திருக்கிறேன்..

என் பேரப்பிள்ளைகளோடு

வந்திருக்கிறேன்..

வயதான காலத்தில் கையில் தடியோடு தடுமாறிய நடையில்

வந்திருக்கிறேன்..

நடக்கவே முடியாதபோது சக்கர நாற்காலியில் என்னவளுடன்

வந்திருக்கிறேன்..

கடையில் இன்று அஸ்தியாய் 

வந்திருக்கிறேன்..

ஒவ்வொரு முறையும் கடற்கரையில் விளையாடிவிட்டு சென்றிடுவேன்.

இம்முறை கடலோடு கலந்துவிடுகிறேன்..



* தினேஷ்மாயா *

மீரா

Saturday, March 15, 2014


புகைப்படம் : * தினேஷ்மாயா *

கோலி

Friday, March 14, 2014


  கோலி விளையாட்டு - சிறிய வயதில் விளையாடிய நியாபகம்..

* தினேஷ்மாயா *

தரிசனம்


கோபுர தரிசனம்

கோடி புண்ணியமாம்..

உன் தரிசனம்

கோடான கோடி இன்பம்..

* தினேஷ்மாயா *

காது குத்து


உனக்கு காது குத்தும்போது

உனக்கு வலித்ததைவிட

எனக்கே அதிகம் வலித்ததடி செல்லமே !!

* தினேஷ்மாயா *

மென்மை


மயிலிறகுதான் மென்மை என்றிருந்தேன்

உன் கைவிரல் பிடிக்கும்வரை ...

* தினேஷ்மாயா *

கல்யாண வைபோகமே

     இன்று இணையத்தில் உலா வரும்போது திருமணம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை தேடினேன். அதில் என் மனம் கவர்ந்த சிலவற்றை இங்கே பதிய விரும்புகிறேன்.























































புகைப்படங்கள் : இணையம்


* தினேஷ்மாயா *

Rubik's Cube

Monday, March 10, 2014



 புகைப்படம்:  * தினேஷ்மாயா *

கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்

Sunday, March 09, 2014



கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயாப் பிரியம் காப்பேன்
செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம்  பதித்து நித்தம் எழுவேன்
கைப்பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்குக் கேளேன்
ஒவ்வொரு வாதமும் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

அர்த்தஜாம திருடன்போல அழுது பேசேன்
காமம் தீரும்போதும் பொழுதிலும் எந்தன் காதல் தீரேன்
மாதமலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ விழுந்தால் தாய் மடியாவேன்
சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்

கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..

திரைப்படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஹரிசரன்


   ஒரு ஆண் திருமணத்தின் போது பெண்ணுக்கு செய்துக்கொடுக்கும் சத்தியம். இந்த பாடலும், இதற்கு முன்னர் இங்கே நான் பதிவு செய்த பாடலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. வரிகள் என்னுள் ஆழமாய் பயணிக்கிறது. நினைவுகளை மேலே பறக்கவைக்கிறது. வைரமுத்து அவர்களுக்கு நன்றி. இந்த வரிகளை கேட்டப்பின்னர் என்னவளுக்கும் நான் மனமார இந்த சத்தியத்தை செய்துகொடுப்பேன்..

* தினேஷ்மாயா *

காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்



காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

வாழை வரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழைக்கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண்அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்
மழைநாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன்
மழைக்காற்றாய் தலைக்கோதி நித்திரை தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்
காலம் மாற்றம் நேரும்போது கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன்
அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன்
உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்  இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..


திரைப்படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
குரல்: லதா ரஜினிகாந்த்.

    திருமண பந்தத்தின் உண்மையான அர்த்தத்தை எடுத்து சொல்லும் பாடல். மூன்று முடிச்சுக்குள் இருக்கும் அர்த்தம் புரியவைத்திருக்கிறார் வைரமுத்து அவர்கள். இந்த பாடல் வெளிவந்த இரு நாட்களில் பலமுறைக்குமேல் கேட்டிருப்பேன். கோச்சடையானின் மற்ற பாடல்களைவிட இந்த பாடல் என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. இந்த பாடலை கேட்கும்போது இப்படியொரு பெண் கிடைக்கவேண்டும் என்று மனம் சொல்கிறது. இந்த பாடலை கேட்கும் போதுதான் திருமணத்தின்மீதே ஆசை வருகிறது.

* தினேஷ்மாயா *

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்

Friday, March 07, 2014


ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

ஏ ரயிலே உன் போலே
என் உள் நெஞ்சில் ஓட்டம்
ஓடு பெண்ணோடு நீ
ரயில் தூது சொல்வாயா

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

உலகெங்கும் நீ போகிறாய் வருகிறாய்
இவளை போல் பெண்ணை எங்கு நீ பார்க்கிறாய்
விரைவு ரயிலொன்று எதிரினில் வருகையில் உன்னோடு விபத்து
ஓ அழகுபுயல் ஒன்று எதிரினில் இருக்கையில் என்னோடு விபத்து

ஹே ரயிலே உன் மேலே நான் தோள் சாயும் தோழன்
எனக்கு நீ எனக்கு போய் பெண் பார்த்து சொல்வாயா

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

நீயும்தான் செல்வாய் மலைகளின் குகையிலே
நானும்தான் செல்வேன் இமைகளின் குகையிலே
சிவப்பு நிறமது வழியில் தெரிந்ததும் நிற்பாயே நீயும்
ஓ இவளின் இதழ் நிறம் பார்த்ததும் என் இதயம் நிற்காதா பாவம்

ஹே ரயிலே உன் உள்ளே இங்கெல்லோரும் தூங்க
நான் மட்டும் தூங்காததேன் என்று சொல்வாயா

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

ஏ ரயிலே உன் போலே
என் உள் நெஞ்சில் ஓட்டம்
ஓடு பெண்ணோடு நீ
ரயில் தூது சொல்வாயா

படம் : 5 ஸ்டார்
இசை : பரசுராம் ராதா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்


         நான் எட்டாவது படிக்கும்போது இந்த திரைப்படம் வெளிவந்தது  என 
நினைக்கிறேன். இந்த பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன். சென்ற மாதம் ஊரில் இருந்து சென்னை வரும்வழியில் ரேடியோவில் இந்த பாடலை கேட்டேன். பழைய நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்துவிட்டது இந்த பாடல்..

* தினேஷ்மாயா *

பறை


     பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது.

நன்றி : தமிழ் விக்கிபீடியா..

* தினேஷ்மாயா *

நான் ரசித்த இசைக்கலைஞர்கள்


கடம் - விக்கு விநாயக்ராம்


வயலின் - குன்னகுடி வைத்தியநாதன்



ட்ரம்ஸ் - சிவமணி


தபேலா - சாகிர் உசைன்



செக்சோபோன் - கத்ரி கோபால்நாத்


வீணை - காயத்ரி

* தினேஷ்மாயா *