தாயுள்ளம்

Sunday, March 02, 2014


     ஒருநாள் பேருந்தில் பயணிக்கும் போது என் இருக்கைக்கு முன்னர் ஒரு அம்மா தன் கைகுழந்தையோடு அமர்ந்திருந்தார். அவரை பார்க்கும்போது படித்தவர் போல இருந்தது. பேருந்தில் அதிகம் நெருக்கமாக இருந்தது. அப்போது அந்த குழந்தை அழுதுக்கொண்டிருந்தது. அந்த அம்மா தன் குழந்தையின் அழுகையை நிறுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் தன் குழந்தையிடம், கொஞ்ச நாள் பொறுத்துக்கோடா செல்லம் அம்மா இன்னும் கொஞ்சநாளில் வேலைக்குப்போய் சொந்தமாக வண்டி வாங்கி உன்னை அதில் கூட்டி செல்கிறேன் என்றார். அந்த சம்பவம் என்னை வெகுவாக கவர்ந்தது.

    திருமணம் ஆகி குழந்தை வந்துவிட்டால், தன் வாழ்க்கை இனிமேல் குழந்தை, கணவன், குடும்பம் என்று மட்டுமே சுழலும் என்ற மனநிலை நம் பெண்களுக்கு உண்டு. ஆனால், குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று அந்த அம்மா, இனிமேல் ஒரு வேலைத்தேடி, பணம் சேர்த்து தன் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கையை பரிசாக தர நினைக்கிறாள். இதுதான் தாயுள்ளம்.

* தினேஷ்மாயா *

0 Comments: