பாலியல் கல்வி

Sunday, March 02, 2014



   இந்தியாவில் பாலியல் கல்விக்கு போதிய அளவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. முறையான பாலியல் அறிவு இல்லாததால் இன்னும் நம் சமூகம் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. 

   அன்றொரு நாள், நண்பருக்கு உடல் சுகம் இல்லாததால், அவருக்கு மாத்திரை வாங்க அருகில் இருக்கும் மருந்தகம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்ததால் மருந்தகத்தினுள்ளேயே நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். மருந்து சீட்டை என்னிடமே வைத்திருந்தேன். அப்போது ஒரு நபர் வந்தார். அவர் சில மாத்திரை பெயர்களை சொல்லி அவை இருக்கிறதா என்று விசாரித்துக்கொண்டிருந்தார். நான் அதை பொருட்படுத்தவில்லை, என் அழைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் அவர், சில நிமிடங்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மருந்துகளையும் வேடிக்கைப் பார்த்தார். இப்படியே 5 நிமிடங்கள் ஓடிவிட்டது. நான் என் தொலைப்பேசியை துண்டித்துவிட்டு, மருந்து சீட்டை கொடுத்தேன். மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வெளியேறினேன். அதற்குப்பின்னர்தான்  அங்கு நின்றிருந்த நபர் ஆணுறை வாங்கிச் சென்றார். அவர் அதற்காகத்தான் இவ்வளவு நேரம் தயங்கி நின்றிருந்தார் என்று எனக்கு புரியவில்லை.

  நம்மவர்கள் அறிவுசார்ந்த விஷயங்களில் பல முன்னேற்றங்களை கண்டிருந்தாலும், இந்த விஷயத்தில் இன்னும் பழைய பழக்கங்களை கைவிட்டபாடில்லை. பொதுமக்கள் அதிகம் இருக்கும் கடையில் ஆணுறை வாங்குவதற்கு இந்த காலகட்டத்திலும் தயக்கம் காட்டுகின்றனர். பாலியல் அறிவு நம் மக்களுக்கு இன்னமும் சரிவர சென்று சேரவில்லை என்பதையே இது காட்டுகிறது. முறையான பாலுறவும், பாலியியல் அறிவும் இருந்தாலே நம் சமூகத்தை பல பிரச்சனைகளிலிருந்து மீட்டுவிடலாம். இதற்கு அரசாங்கம்தான் இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து...

* தினேஷ்மாயா *

0 Comments: