கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்

Sunday, March 09, 2014



கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயாப் பிரியம் காப்பேன்
செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம்  பதித்து நித்தம் எழுவேன்
கைப்பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்குக் கேளேன்
ஒவ்வொரு வாதமும் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

அர்த்தஜாம திருடன்போல அழுது பேசேன்
காமம் தீரும்போதும் பொழுதிலும் எந்தன் காதல் தீரேன்
மாதமலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ விழுந்தால் தாய் மடியாவேன்
சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்

கன்னி கனியே உன்னைக் கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..
தூய்மையான என் சத்தியம் புனிதமானது..

திரைப்படம் : கோச்சடையான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஹரிசரன்


   ஒரு ஆண் திருமணத்தின் போது பெண்ணுக்கு செய்துக்கொடுக்கும் சத்தியம். இந்த பாடலும், இதற்கு முன்னர் இங்கே நான் பதிவு செய்த பாடலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. வரிகள் என்னுள் ஆழமாய் பயணிக்கிறது. நினைவுகளை மேலே பறக்கவைக்கிறது. வைரமுத்து அவர்களுக்கு நன்றி. இந்த வரிகளை கேட்டப்பின்னர் என்னவளுக்கும் நான் மனமார இந்த சத்தியத்தை செய்துகொடுப்பேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: