என்ன செய்ய ?

Saturday, March 29, 2014



  எனக்கு பல காலமாக இருக்கும் ஒரு கேள்வியை இங்கு முன் வைக்கிறேன்.

5 ரூபாய் கொடுத்து ஒரு பேனா வாங்குகிறேன். அதில் இருக்கும் மை தீர்ந்துவிட்டால் முன்பெல்லாம் பேனாவில் மையை மட்டும் தனியாக விற்பார்கள். அதுபோல பேனாவின் மை தீர்ந்துவிட்டது என்று மை வாங்க கடைக்கு சென்றால், மை விலை 4 முதல் 7 ரூபாய் வரை சொல்கிறார்கள். நான் கேட்டேன், பேனாவே 5 ரூபாய் தானே மை ஏன் இவ்வளவு விலை விற்கிறீர்கள் என்று. அதற்கு கடைக்காரர் சொன்னார், பேனா அதிகம் விற்பனையாக வேண்டும் என்று பேனா நிறுவனங்கள் கையாள்ய்ம் வியாபார யுத்திகள் இது என்றார். அத்தோடு USE AND THROW என்னும் பேனாக்கள் இப்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலம். 2 அல்லது 3 ரூபாய் விலைக்கு வாங்கிவிட்டு எழுதி முடித்ததும் தூக்கி போட்டுவிடுகிறார்கள். THROW என்னும் வார்த்தை எனக்கு அதிகம் நெருடலை தருகிறது. மீண்டும் பயன்படுத்த முடியாமல் தூக்கி எறிவதால் குப்பைகளே அதிகம் சேருகிறது. இதுப்போன்ற விஷயங்கள் நம் சந்தையில் பல இருக்கின்றன. எழுதும் பேனாவில் தொடங்கி வீட்டில் பயன்படுத்தும் பல பொருட்கள் இந்த ரகம் தான். உபயோகித்து முடித்ததும் தூக்கி போட்டுவிடுகிறோம். ஆனால் அந்த பொருட்கள் மீண்டும் பயன்படுத்தமுடியாமல் நம் சுற்றுசூழலை நாசம் செய்யும் என்பதை எவரும் நினைப்பதில்லை. 

இனியாச்சும், ஒரு பொருளை தூக்கி எறியும் முன்னர், அந்த பொருளை வேறு எப்படியாவது பயன்படுத்த முடியுமா என்று நினையுங்கள். இயன்றவரை குப்பைகளை சேர்ப்பதில் நம் பங்கு குறைவாக இருக்கட்டும்.

* தினேஷ்மாயா *

0 Comments: