கல்யாணமாம் கல்யாணம்

Saturday, March 29, 2014



காதல் கண்மணியே
கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொன்னுக்கு கல்யாணம்

ஒன்னா சிரிச்சு மெய்யா பழகி
கண்ணால் பேசி காத்து கெடந்து
ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து
உறங்கிடாமல் கனவும் கண்டு
கடைசிவரைக்கும் வருவதாக
கதையும் விட்டாளே
இன்று அதனையெல்லாம்
மறந்து விட்டு பறந்தும் விட்டாளே

கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொன்னுக்கு கல்யாணம்

கூரசேல மடிச்சு கட்டி
குங்கும பொட்ட நெத்தியில் வெச்சு
மணவறையில் அவ இருப்பா மகாராணியா
அவள காதலிச்சவன் கலங்கி நிப்பான் அப்புறானியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

கெட்டி மேளம் காது பொளக்க
நாதசொரம் ஓங்கி ஒலிக்க
கச்சேரிய ரசிச்சிருப்பா ஊரு முன்னால
அவள காதலிச்சவன் கலங்கிருவான் ஓசை இல்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்

சாதி செனத்த வணங்கிகிட்டு
சட்டுனு சட்டுனு சிரிச்சுகிட்டு
பரிசும்கூட வாங்கி வெப்பா ரொம்ப ஆசையா
அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான் சந்நியாசியா
வக வகையா சமைச்சு வெச்சு
வாழை இலையில் பந்தியுமிட்டு
புருசனுக்கு ஊட்டிடுவா போட்டோ புடிக்கத்தான்
அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்
மங்கள தாலி கழுத்தில் ஆட
மந்திர வார்த்த ஐயரு ஓத
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன் வந்துடுவானே நடு ரோட்டுக்கு
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்…
காதல் கண்மணியே
கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொன்னுக்கு கல்யாணம்


படம்: குக்கூ
வரிகள்: யுகபாரதி
இசை: சந்தோஷ் நாரயணன்
குரள்: அந்தோனி தாசன்

* தினேஷ்மாயா *

0 Comments: