ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்

Friday, March 07, 2014


ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

ஏ ரயிலே உன் போலே
என் உள் நெஞ்சில் ஓட்டம்
ஓடு பெண்ணோடு நீ
ரயில் தூது சொல்வாயா

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

உலகெங்கும் நீ போகிறாய் வருகிறாய்
இவளை போல் பெண்ணை எங்கு நீ பார்க்கிறாய்
விரைவு ரயிலொன்று எதிரினில் வருகையில் உன்னோடு விபத்து
ஓ அழகுபுயல் ஒன்று எதிரினில் இருக்கையில் என்னோடு விபத்து

ஹே ரயிலே உன் மேலே நான் தோள் சாயும் தோழன்
எனக்கு நீ எனக்கு போய் பெண் பார்த்து சொல்வாயா

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

நீயும்தான் செல்வாய் மலைகளின் குகையிலே
நானும்தான் செல்வேன் இமைகளின் குகையிலே
சிவப்பு நிறமது வழியில் தெரிந்ததும் நிற்பாயே நீயும்
ஓ இவளின் இதழ் நிறம் பார்த்ததும் என் இதயம் நிற்காதா பாவம்

ஹே ரயிலே உன் உள்ளே இங்கெல்லோரும் தூங்க
நான் மட்டும் தூங்காததேன் என்று சொல்வாயா

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ
என் போல் தடம் புரள்வாய்

ஏ ரயிலே உன் போலே
என் உள் நெஞ்சில் ஓட்டம்
ஓடு பெண்ணோடு நீ
ரயில் தூது சொல்வாயா

படம் : 5 ஸ்டார்
இசை : பரசுராம் ராதா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்


         நான் எட்டாவது படிக்கும்போது இந்த திரைப்படம் வெளிவந்தது  என 
நினைக்கிறேன். இந்த பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன். சென்ற மாதம் ஊரில் இருந்து சென்னை வரும்வழியில் ரேடியோவில் இந்த பாடலை கேட்டேன். பழைய நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்துவிட்டது இந்த பாடல்..

* தினேஷ்மாயா *

0 Comments: