இறப்பு

Thursday, August 23, 2012

                           



இறப்பு என்பது அழகானதுதான்.ஏனெனில்அப்போது ஒரு ஆழ்ந்த அமைதியும் மிகுந்த ஓய்வும் ஏற்படுகிறது.ஆனால் இறப்பைக் கண்டு நாம் பொதுவாகவே பயப்படுகிறோம்.நீங்கள் தொடர்ந்து வாழ விரும்புகிறீர்கள்.நீங்கள் வாழ்வை இதுவரை முழுமையாக வாழவில்லை.இவ்வளவுதான் வாழ்வு என்று புரிந்தவனுக்கு இறப்பு ஒரு கொண்டாட்டம்.உங்கள் சக்தியை பணம் ,அந்தஸ்து,பதவி,சொத்து,சுகம்,மனைவி,மக்கள் என்ற உலகப் பொருள்களுக்கு செலவழித்து,அதுதான் நிரந்தரம் என்ற கருத்தை உங்கள் மனதில் ஆழமாக செலுத்தி விட்டீர்கள்.அது எப்போதும் வேலை செய்து கொண்டேயிருக்கும்.அதிலிருந்து உங்களால் மீள முடியவில்லை.இறப்பைக் கண்டு பயப்பட இது ஒரு காரணம்

- ஓஷோ


- என்றும் அன்புடன்

****தினேஷ்மாயா****

ஓஷோ சிந்தனைகள்..


@ தம்மிடம் இல்லாத பணத்தைக் கொண்டு
      தமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுக்கி
      தமக்குத் தெரியாதவர்களைக் கவர எண்ணுவது
      பலருக்கும் வாடிக்கை ஆகி விட்டது.

@  நமக்கு எது வசதி என்பதில்
      எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.

பயம் கதவைத் தட்டுகிறதா?நம்பிக்கையை எழுந்து போய் கதவைத் திறக்க    சொல்லுங்கள்.வெளியே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.          

வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும்  அனுபவித்து விடுங்கள்.
நாளை,ஒருவேளை,திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.      

ரசித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத ஒருவன் கொலைகாரனுக்கு சமமாவான்.

@ கடவுள்உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால்  அவரைக் காணமுடியாத படி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்.           

@ எதையும் உனக்குத்   தேவை என்று ஆசைப் படுமுன்  மும்முறை நினைத்துப்பார்.உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99% தேவையற்றதாகவே  இருக்கும்.அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.

@ கண்ணில் பட்ட சிறுமணல் எப்படி இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல,சிறிய தயக்கம் அல்லது சந்தேகம்,இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம் அனைத்தையும் மறைத்து விடும்.      

வெற்றி என்பதில் எந்தத்  தகுதியும் கிடையாது.உண்மையாகச் சொன்னால்,அது மிகவும் அருவருப்பானது.ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தம் இல்லாதது.ஆனால் அதைத்தான் மனம் விரும்புகிறது.வெற்றி என்பது நம் பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம்.           

கோடிக்கணக்கில் மக்கள் ஒருவருக்கொருவர் தீர்ப்பு சொல்லிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.             

@ சட்டம் என்பது தவறான மனிதனுக்கு உரியது.சரியான மனிதனுக்கு அல்ல. ஏனென்றால்,இந்த முழு உலகமும் தவறான மனநிலையில் செயல் படுகிறது.எப்போதாவது ஒரு சரியான மனிதன் வந்தால்,அவனை ஒரு அயலான் போலத்தான் பார்க்கிறது.             

முழுமை என்று எதுவும் இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது ஒரு பொய்மைதான்.ஒரு புத்திசாலி,வாழ்வு என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து கொள்வான்.அது எப்போதும் குறைகள் நிறைந்ததுதான். நாம் எல்லோரும் குறை நிறைந்தவர்கள் தான்.ஒருவனிடத்தில்,இங்கே அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.அதே சமயம் அவனிடம் நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.நீங்கள் ஒருவரை  விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று அதற்கு அர்த்தம் இல்லை.


- ஓஷோ


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

யாரோ நீ

Wednesday, August 22, 2012



யாரோ நீ??

எங்கிருந்தோ சுட்ட படம் இது..
இவளது கண்கள் ஆயிரம் அர்த்தம் சொல்கின்றன. அந்த அர்த்தம் என்ன என்று புரியாமல் மொழியிழந்து நிற்கிறேன்.

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே

Wednesday, August 15, 2012

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஹோ ஹோ ஹோ..
கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஹோ ஹோ..
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஹோ ஹோ ஹோ..
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஹோ ஹோ..
கண் மூடிக்கொண்டால்.
ஹோ ஹோ ஹோ..
ஹோ ஹோ ஹோ..ஹோ ஹோ ஹோ..


போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்
ஹோ ஹோ ஹோ..
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஹோ ஹோ ஹோ..
இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஹோ ஹோ ஹோ..
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஹோ ஹோ ஹோ..
அந்த கடவுளை கண்டால்
ஹோ ஹோ ஹோ.. ஹே ஹே ஹே

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஹோ ஹோ ஹோ..
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஹோ ஹோ ஹோ..
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஹோ ஹோ ஹோ..
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஹோ ஹோ ஹோ..
மறு பிறவி வேண்டுமா
ஹோ ஹோ ஹோ..

திரைப்படம்; புதுப்பேட்டை
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா***

ஆழியிலே முக்குளிக்கும் அழகே

Tuesday, August 14, 2012






ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்  அழகே
உன் குழலோடு  விளையாடும்  காற்றாக  உரு  மாறி
முந்தானை  படி ஏறவா
மூச்சோடு  குடி  ஏறவா

உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி
எந்நாளும் சுடேரவா
என்  ஜென்மம் ஈடேரவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்  அழகே
உன் தின்னென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைபோல் இலை வைக்கவா

உன் உம்மென்ற சொல்லுக்கும்
இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே   தடை வைக்கவா
மௌனத்தில்  குடி வைக்கவா

அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம்  மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே

அடிவானம்  சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உனை போல இருக்காது  அழகே

அடிவானம்  சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உனை போல  இருக்காது  அழகே

அழகே அழகே வியக்கும்  அழகே
அழகே அழகே வியக்கும் அழகே


திரைப்படம்: தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிசரண்


அப்பப்பா.. இப்பாடலை கேட்டதும் அவ்வளவு ஆனந்தம் மனசுக்குள். Earphone மாட்டிகிட்டு, கண்களை மூடி இப்பாடலை கேட்கையில் அவளோடு ஓர் ஜென்மம் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது இப்பாடல்.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை




நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

 சாந்தி சாந்தி  சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை


ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன் வில்லா

நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை


 சாந்தி சாந்தி  சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: தாமரை
பாடியவர்: ஹரிஹரன்

அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. சில வரிகள் அவளுக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும். இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அவளோடு நான் பழகிய அந்த பசுமையான நாட்கள்தான் நினைவிற்கு வரும்.

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****




அம்பேத்கர்



அடிபணிந்து வாழ்வதை விட
நிமிர்ந்து நின்று சாவதே மேல்...

- அண்ணல் அம்பேத்கர்

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

என் அம்மா



விந்தாய் வந்து உன் வயிற்றில் விதையாய் விழுந்தேன்
கருவறையில் நான் எட்டி உதைத்தும் அப்பாவிடம்
சொல்லி சிரித்தாய் அன்பாய்...!!!

முந்நூறு நாட்களும் உன் கருவறையில் என்னை தூங்க
வைக்க உன் தூக்கம் தொலைத்தாய்,
இனி நீ என் மடியில் சுகமாய் தூங்க அந்த பூக்கள்
வெடிக்கும் சத்தத்தையும் போரிட்டு நிறுத்தி
வைக்கிறேன்...!!!

என் மழலையின் மொழி புரிந்த ஒரே மொழி
பெயர்ப்பாளர்,
உன் முத்தம் மட்டும் தான் நான் வாழ்க்கையில் பெற்ற
பெரிய பட்டம்...!!!

பள்ளி செல்லும் அவசரத்தில் உன் வியர்வை துடைத்த
கையில் நீ பிசைந்து ஊட்டிய சோற்றை நான் எவ்வளவு
செலவு செய்தாலும் கிடைக்காது...!!!

மழையில் நனைந்து வீடு வந்ததும் உன் புடவை
முந்தானையில் துடைக்கும்போது வரும் வாசனையை
எந்த வாசனை திரவியத்தில் பெறுவேன்...!!!

உலகமே நான் தீயவன் என்று சொன்னாலும், என்னை
அணைத்து எம் மகன் நல்லவன் என்று சொல்லும் உன்
நம்பிக்கை இருக்கும்வரை எத்தனை தோல்வி வந்தாலும்
எழுந்து நின்று போராடுவேன் உயிர் போகும்
வேலையிலும்...!!!

ஆனால் ஒரு வருத்தம் உன் மேல், மீண்டும் ஒரு
பத்துமாதம் சுமக்க மாட்டாயா என்று உன்னை என்
நெஞ்சி சுமந்து , ஏக்கத்துடன் நான்...!!!

எத்தனையோ கவிதை என்னை காயப்படுத்திய
காதலியை பற்றி, என் கண் முன்னே இருக்கும்
தேவதை(தா)யே உனக்காய் இந்த மகனின் இந்த
படைப்பை ஏற்றுகொள்.....

- எழுதியவர் யார் என்று தெரியவில்லை.. இதை எழுதிய அந்த அன்பு மகனுக்கு நன்றி.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

விரும்பவில்லை!



எதை உண்மையென்று உறுதியாக கூறமுடியாதோ!
எதனால் நமக்கோ அல்லது சமூகத்திற்கோ பயனில்லையோ!
எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமில்லையோ!
அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை!

- சாக்ரடீஸ்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

தமிழ்த்தாய் வாழ்த்து





நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!
 - மனோன்மணியம் சுந்தரனார்

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

மாறாதே



யாருக்காகவும் உன்னை மாற்றிகொள்ளாதே...
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.

- கவியரசு கண்ணதாசன்


-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன்



சில நேரங்களில் ஒரு புன்னகை கூட அடுத்தவரின்
இதயத்தை உனக்கு திறந்துவிடும்.
மரியாதை கொடு,
அன்பு செய்,
ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை
ஒளிந்திருக்கிறது.

- ஓஷோ


-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

அன்பு



நேரில் பார்க்கும் ஒருவர் மீது
அன்பு செலுத்த முடியாவிடின்

எப்படி நேரில் பார்க்க முடியாத
இறைவன் மீது அன்பு செலுத்துவீர்கள்?

- அன்னை தெரசா


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

என்னபண்ணிக் கிழிச்சீங்க?



சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

மனிதகுலத்தின் கோழைகள்



சமீபத்தில் நடக்கும்
கொடுமைகளை
ஏற்றுக்கொண்டும்,
நாசுக்கோடும்
நடந்து கொள்பவர்கள்
மனிதகுலத்தின்
கோழைத்தனத்திற்கான
உதாரனங்களாக அவர்களின்
பெயர்கள் வரலாற்றில்
பதிவாகும்
- மால்கம் எக்ஸ்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

மனதில் உறுதி வேண்டும்


மனதில் உறுதி வேண்டும்
  வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
  நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு  மெய்ப்பட வேண்டும்
   கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
    தரணியிலே பெருமை வேண்டும்

- மகாகவி பாரதியார்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

Monday, August 13, 2012





சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவதுநம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் () ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம்யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.


இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...



- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****