ஆழியிலே முக்குளிக்கும் அழகே

Tuesday, August 14, 2012






ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்  அழகே
உன் குழலோடு  விளையாடும்  காற்றாக  உரு  மாறி
முந்தானை  படி ஏறவா
மூச்சோடு  குடி  ஏறவா

உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி
எந்நாளும் சுடேரவா
என்  ஜென்மம் ஈடேரவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்  அழகே
உன் தின்னென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைபோல் இலை வைக்கவா

உன் உம்மென்ற சொல்லுக்கும்
இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே   தடை வைக்கவா
மௌனத்தில்  குடி வைக்கவா

அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம்  மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே

அடிவானம்  சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உனை போல இருக்காது  அழகே

அடிவானம்  சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உனை போல  இருக்காது  அழகே

அழகே அழகே வியக்கும்  அழகே
அழகே அழகே வியக்கும் அழகே


திரைப்படம்: தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிசரண்


அப்பப்பா.. இப்பாடலை கேட்டதும் அவ்வளவு ஆனந்தம் மனசுக்குள். Earphone மாட்டிகிட்டு, கண்களை மூடி இப்பாடலை கேட்கையில் அவளோடு ஓர் ஜென்மம் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது இப்பாடல்.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: