உன் குத்தமா என் குத்தமா

Sunday, August 05, 2012




உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல

உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல

உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
பச்ச பசுஞ்சோலையிலே பாடி வந்த பைங்கிளியே
இன்று நடைப் பாதையிலே வாழ்வதென்ன மூலையிலே
கொத்து நெரிஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ள
சொன்னாலும் சோகமம்மா தீராத தாகமம்மா

உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல

நிலவோடு மணலோடு தெருமண்ணு உடம்போடு
விளையாண்டதொரு காலம்...
அலைஞ்சாலும் திரிஞ்சாலும் அலையாத கலையாத
கனவாச்சி இளங்காலம்
என்ன எதிர் காலமோ...
என்ன எதிர் காலமோ என்ன புதிர் போடுமோ
இளமையில் புரியாது முதுமையில் முடியாது
இன்பத்திற்கேங்காது இளமையும் இங்கேது
காலமும் போடுது கோலங்களே

என் குத்தமா... உன் குத்தமா...
யாரை நானும் குத்தம் சொல்ல
இது என் குத்தமா...

பேசாம இருந்தாலும் மனசோட மனசாக
பேசியதொரு காலம்
தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே
குலவியதொரு காலம்
இன்று நானும் ஓரத்தில்...
இன்று நானும் ஓரத்தில் என் மனது தூரத்தில்
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேங்குழல் பாடுது வீணையொடு

உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
இது உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
பச்ச பசுஞ்சோலையிலே பாடி வந்த பைங்கிளியே
இன்று நடைப் பாதையிலே வாழ்வதென்ன மூலையிலே
கொத்து நெரிஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ள
சொன்னாலும் சோகமம்மா தீராத தாகமம்மா

இது உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல


திரைப்படம்: அழகி
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: