சமத்துவபுரமா ? சாதிபுரமா?

Friday, March 22, 2013


    
    பெரியார் நினைவு சமத்துவபுரம் என்னும் பெயரில் தமிழக அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளை இலவசமாக கட்டிக்கொடுக்கிறது. சமத்துவம் என்றால் அனைவரும் சமம் என்றுதானே அர்த்தம். சாதி, மதம், இனம், மொழி என்று எந்த பாகுபாடுமின்றி பழகுவதுதானே சமத்துவம்.
     
           ஆனால், சமத்துவபுரம் என்று சொல்லிவிட்டு தாழ்த்தபட்ட இனம் என்று அரசே ஒருசாராரை கைகாட்டி அவர்களுக்கு ஊருக்கு ஒதுக்குபுறமாய் காலனி என்னும் பெயரில் தனியே குடியமர்த்துவது ஏனோ ?

     அவர்களின் வாழ்க்கை நலனில் உண்மையாக அக்கறை அரசிடம் இருந்தால், அவர்களையும் ஊருக்கு நடுவே அனைவரோடும் ஒன்றாய் இருக்கும்படி வீடுகளை அமைத்து கொடுத்திருக்கலாமே ?

          எதையும் சற்று முற்போக்கு சிந்தனையுடன் பார்த்து செயல்பட்டால் மட்டுமே சமூக அவலங்களை நாம் வேரோடு அழிக்க முடியும்.

* தினேஷ்மாயா *

0 Comments: