பெருந்தன்மை

Monday, January 24, 2022

இப்போதெல்லாம் பெருந்தன்மை என்கிற உயர்குணம் இங்கே மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுவதில்லை. நவநாகரிகம் என்கிற பெயரில் நம்மிடையே ஊடுருவிவிட்ட கலாச்சாரத்தின் பின்விளைவினாலேயே பெருந்தன்மை என்கிற உயர்குணம் கொஞ்சம் கொஞ்சமாக நம் சமூகத்திலிருந்து மறைந்து வருகிறது. 

இக்குணம், பெரும்பாலும் வயது மற்றும்/அல்லது அறிவு (அ) அனுபவம் முதிர்ச்சியால் ஒருவருக்குள் இருக்கும். ஆனால் வயது/அறிவு/அனுபவத்தில் முதிர்ந்த அனைவருக்கும் பெருந்தன்மை இருப்பதில்லை என்பது வேறு கதை. பொதுவாக, இவற்றில் முதிர்ச்சி அடைந்த மக்கள் பெருந்தன்மை குணத்தோடு விளங்குவர்.

இந்த உலக வாழ்க்கையையே வெறுமனே போட்டிகள் மற்றும் நிறைந்த ஒன்றாக, வெற்றி/தோல்வி என்கிற இலக்கை மட்டுமே வைத்து ஓடக்கூடிய ஒன்றாக இச்சமூகம் மாற்றிவிட்டது. இச்சூழலில், இந்த உலகில் பெருந்தன்மையாக வாழ்வதென்பது முட்டாள்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று என்று வாதிடும் மக்களையும் நான் கடந்து வந்திருக்கிறேன்.

அவர்களின் கூற்றுக்களை ஏற்கவியலாது. நாம் இங்கே வந்திருப்பது வாழ்வதற்காக. அந்த வாழ்க்கையில் நீங்களும் கொஞ்சம் பெருந்தன்மையோடு வாழ்ந்துப் பாருங்களேன். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டானதாய் உணர்வீர், நீங்களும் மனநிம்மதியை உணர்வீர்.

இங்கே ஒரு முதுமொழியை குறிப்பிட விளைகிறேன்.

“ விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.”

*தினேஷ்மாயா*

0 Comments: