அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?

Tuesday, September 16, 2014

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?

அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?

சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊர் பறவை எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை அழைத்தேன் உன் ஆகிம்ஸை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா?
குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா

அழகே சுகமா? அன்பே சுகமா?
உன் கோபங்கள் சுகமா? உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா?
கன்னம் ரெண்டு சுகமா அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா என் ஒற்றை தலையணை சுகமா?

படம்: பார்த்தாலே பரவசம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

சமீபத்தில்தான் இந்த பாடலை கேட்டேன். இன்னமும் இந்த படத்தை நான் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கனும். இப்பாடல் கேட்ட முதல்முறையே என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. இசையும், வரிகளும் இதற்கு காரணம் என்றும் கூட சொல்லலாம். இசையைவிட வரிகள்தான் என்னை அதிகம் கவர்ந்தது. அதுவும் கடைசியில் இருக்கும் வரிகளில் வைரமுத்து அதிகம் விளையாடியிருக்கிறார் !!

* தினேஷ்மாயா *

0 Comments: