அன்றொரு நாள் நான் அவளை நினைத்து உறங்காமல் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்..
ஒருமுறை எதேச்சையாக கடிகாரத்தை பார்த்த போது, மணி 6 ஆடியிருந்தது..
சரி, அவளுக்கு காலை வணக்கம் சொல்லலாமே என்று ஒரு கவிதையை அப்போது யோசித்து அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்..
“ உறங்கியது போதும்.. விழித்துக்கொள்.. என் கனவில் வந்து என்னை மட்டும் உறங்கவிடாமல் செய்துவிட்டு, நீ மட்டும் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பது என்ன நியாயம்?”
இதை அவள் கண்விழித்ததும் படித்து பார்த்திருப்பாள்.. ஆனால் என்ன, அவளுக்கு இது புரிந்திருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.. இது வெறும் வழக்கமான Forward SMS என்று நினைத்திருப்பாளோ..!
ஒருவேலை என்னவள் இந்த வலைப்பதிவை படித்துப் பார்க்க நேர்ந்தால், அவளுக்கு நான் அனுப்பிய இந்த SMS நினைவுக்கு வருமா என்று தெரியவில்லை..
ஒருதலை காதலில் ஒருவித இன்பம் இருந்தாலும் கடைசியில் அந்த இன்பமும் வலியில் தாம் முடியும் என்பதை எல்லோருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..
அன்புடன் -



தினேஷ்மாயா 



0 Comments:
Post a Comment