வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்

Thursday, April 01, 2010



வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்;
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்;
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்;
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கனைகள்;
மலர்க்கனைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சணைகள்;
பஞ்சணையில் பள்ளி கொள்ள மனமிரண்டும் தலையணைகள்;
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்;
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மனைவினைகள்!

யாராவது மறக்கமுடியுமா இந்த பாடல் வரிகளை..
பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்த்து, இரவு 11 மணி இருக்கும், பேருந்து ஓட்டுனர் இப்பாட்டை போட்டதும், மனம் சென்று வந்த அந்த நந்தவனத்திற்க்கு வழி இன்னமும் கிடைக்கவில்லை.. மனதையும், உயிரையும் தாண்டி இன்னமும் இன் இதயத் துடிப்பில் கலந்துவிட்டது இதன் இசையும், வரிகளும்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: