நான் சென்னைக்கு புதுசு...

Thursday, April 22, 2010


நான் சென்னைக்கு வந்து 4 வருஷம் ஆகிடுச்சு.. நிறைய நிறைய கத்துகிட்டேன்..முதன் முதலில் சென்னைக்கு வருபவர்களை அவர்களின் செயல்களை வைத்தே சொல்லிவிடலாம்.. ஏனென்றால் சென்னைக்கு என்று தனியாக ஒரு எழுதப் படாத சட்டமே இருக்கிறது..சரி அதைவிடுங்கள்.. சென்னைக்கு ஒருவர் புதிதாய் வந்திருக்கிறார் என்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்.. ஏதோ என் அனுபவத்தை வைத்து கொஞ்சம் சொல்கிறேன்.. நீங்களும் உங்கள் கருத்துகளையும் அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்..

  • எந்த பேருந்தில் ஏறினாலும் டிக்கெட் எடுக்க 50 அல்லது 100 ரூபாய் நோட்டை எடுத்து தருவார்.. Conductor எதுவும் சொல்லாமல் ஒரு மாதிரியாய் முறைப்பார் இவரை.. 

  • Flight போனால் உடனே மேலே பார்ப்பார்.. அதுவும் அந்த Flight அவரின் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருப்பார்..

  • அப்புறம் ஆண்கள், பேருந்தில் செல்லும் போது பெண்கள் சீட்டில் உட்கார்வார்கள்..

  • AC பஸ் ஒன்று கடந்து சென்றால், ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டே இருப்பர்..

  • Beach அவர்களுக்கு சொர்க்க பூமியாய் தெரியும்.. பெரியவங்க கூட சின்ன பசங்க மாதிரி சந்தோஷமா இருப்பாங்க..

  • இங்கே இருக்கும் விலைவாசி தெரியாமல் பெரிய பெரிய ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு Bill பார்த்து கடுப்பாகுவாங்க..

  • Bus Stop ல நின்னுட்டு இருப்பாங்க.. அவங்களுக்கு தெரியாது, Bus எப்போதுமே அங்க நிக்காது 100 மீட்டர் தள்ளிதான் நிக்கும் என்று..

  • ஒரு பெண்ணும் பையனும் ஒன்னா வண்டியில் போனா ஏதோ கொலை செஞ்சுட்டு போறவங்கள பார்க்குற மாதிரி பார்ப்பாங்க..
  • Bus ல போய்டு இருக்கும்போது, அவங்க இறங்க வேண்டிய Stop ரொம்ப தூரம் இருந்தாலும் ஒவ்வொரு Stop லயும் இது தான் அந்த Stop ஆ என்று பக்கத்தில் இருப்பவரை கேட்டு கேட்டு கடுப்பேத்துவார்..
  • கண்டிப்பா கையில் 4 அல்லது 5 Saravana Stores கவர் இருக்கும்.. ரொம்ப Purchase செஞ்சு இருப்பார்..
இன்னும் நிறைய இருக்கு.. அப்புறம் பகிர்ந்துக் கொள்கிறேன்..எல்லோரும் ஒன்னு புரிஞ்சுகுங்க.. நான் யாரையும் காயப்படுத்தும் எண்ணத்தோடு இதை எழுதவில்லை.. இந்த விஷயத்தை ஒரு நகையாய் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் நோக்கோடுதான் இதை இங்கே பதிவு செய்தேன்..


அன்புடன் -




தினேஷ்மாயா

0 Comments: