இது ஒரு பொன்மாலைப் பொழுது

Thursday, April 01, 2010







பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்!

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்



திரைப்படம்: நிழல்கள்

இவை வைரமுத்து அவர்களின் முதல் பாடல் வரிகள்..
எத்தனை அர்த்தமும் அனுபவமும் இது எல்லாவற்றையும்விட எத்தனை உணர்வுபூர்வமான தீண்டல்கள் இதில் இருக்கிறது என்பதை பாடலை கேட்ட அனைவரும் உணர்ந்து இருப்பீர்கள்..



அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: