அன்பு - கடவுளின் மொழி..

Monday, April 12, 2010




நாம் ஒவ்வொருவரும் நமக்கென்று ஒரு மொழியை பின்பற்றி வருகிறோம்..
கடவுள் என்ன மொழி பேசுவார் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா..
கடவுள் என்பவர் எங்கோ மேலுலகத்திலோ கீழுலகத்திலோ இல்லை..
நம்மிடையேதான் இருக்கிறார்..






கட - வுள்...
உன் உள்ளத்தை கடந்தால் அங்கே இருக்கிறார் அவர்..
உங்களின் பொய்யான முகத்திரையை கிழித்துவிட்டு உண்மையான மனதுடன் உங்கள் உள்ளத்தை பார்த்தால், நிச்சயம் ஒவ்வொருவருள்ளும் கடவுள் இருப்பது புரியும்..






கடவுளின் மொழி என்ன தெரியுமா !!!!   ????

 “மௌனம்”...... “அன்பு”.......

ஆம்.. இவை இரண்டும்தான் உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான மொழி...

உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும், மௌனத்தை போல சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.. மௌனம் சொல்லும் அர்த்தம் ஓராயிரம் சொற்களால்கூட தர முடியாது..






மௌனத்தின் இன்னொரு முகம்தான் அன்பு..

ஒரு நாய்குட்டி வழியில் அடிப்பட்டு கிடக்கிறது.. அது வலியால் துடித்துக் கொண்டிருக்கிறது.. அது வலியால் கத்துகிறது.. அது பேசும் மொழி உங்களுக்கு புரியவில்லை, புரியவும் புரியாது.. அப்படியிருக்கையில், உங்களை அறியாமலேயே நீங்கள் அதற்கு சென்று உதவி செய்கின்றனர்..
அது உங்களை உதவி செய்யுமாறு கேட்கவில்லை.. ஒருவேளை அது கேட்டிருந்தாலும் உங்களுக்கு புரிந்திருக்காது.. அப்படியிருக்கையில் நீங்கள் சென்று அதற்கு உதவியது எப்படி.. உங்கள் இருவருக்கும் பொதுவாக இருந்த மொழி எது?

அன்புதானே...!!

அந்த நாய்குட்டியிடம் இருக்கும் கடவுள் அன்பு என்னும் மொழியில் பேசினார்..
அந்த மொழியை உங்களிடம் இருந்த கடவுள் புரிந்துக் கொண்டார்.. அதான் உங்களை அந்த நாய்குட்டிக்கு உதவுமாறு செய்தார்...

உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் இறைவனின் மொழியும், அனைவருக்கும் பொதுவான மொழியும் அன்புதான்..!!!



இந்த அன்பு என்பது உலகில் இருக்கும் அனைத்து மொழிகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானது.. மற்ற மொழிகளை பேச நமக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும், அது மட்டுமில்லாமல் அதன் வார்த்தைகளை நாம் உச்சரித்து பேச வேண்டும்..

ஆனால் அன்பு என்னும் மொழிக்கு எந்தவொரு இலக்கணமும் இல்லை.. வார்த்தைகளும் இல்லை.. அதை உச்சரித்து பேசவும் வேண்டாம்..

இது உணர்வு சம்பந்தமான மொழி... இந்த மொழியை புரிந்துக் கொள்வதைவிட உணர வேண்டும்... அதுதான் இம்மொழியின் சிறப்பு..

இம்மொழி அனைவருக்கும் வெகு விரைவில் புரிந்துவிடுவதில்லை.. மனதில் அன்பு இருந்தால் மட்டுமே இம்மொழி உங்களுக்கு புரியும்..

கடவுளின் மொழி - அன்பு.. இந்த உயரிய மொழியை நாம் அறிந்திருக்கிறோம் என்பதில் பெருமைப் பட்டுக்கொள்வோம்.. மற்றவரிடத்திலும் அன்பை பரப்புவோம்.. இந்த புனிதமான மொழியை அனைவருக்கும் கற்றுத் தருவோம்...

அன்புடன் -

தினேஷ்மாயா