திருடாதே.. பாப்பா திருடாதே…

Sunday, December 11, 2011



திருடாதே..
பாப்பா திருடாதே…
திருடாதே..
பாப்பா திருடாதே…
திருடாதே..
பாப்பா திருடாதே…

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே…
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே…
திறமை இருக்கு மறந்துவிடாதே…
திருடாதே..
பாப்பா திருடாதே…

சிந்தித்துப் பார்த்து
செய்கையை மாத்து..
சிரிசா இருக்கையில் திருத்திக்கோ..
தவறு சிரிசா இருக்கையில் திருத்திக்கோ..
சிந்தித்துப் பார்த்து
செய்கையை மாத்து..
சிரிசா இருக்கையில் திருத்திக்கோ..
தவறு சிரிசா இருக்கையில் திருத்திக்கோ..
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பார்த்துக்கோ…
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பார்த்துக்கோ…

திருடாதே..
பாப்பா திருடாதே…

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது..
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது..
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது…
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது…

திட்ருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது..
திட்ருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது..

திருடாதே..
பாப்பா திருடாதே…

கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது…
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது…
இனி எடுக்குற அவசியம் இருக்காது…

இருக்குறதெல்லாம் பொதுவாய்போனால்…
இருக்குறதெல்லாம் பொதுவாய்போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது….

உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது..
மனம் கீழும் மேலும் புரளாது..
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது..

திருடாதே..
பாப்பா திருடாதே…
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே…
திறமை இருக்கு மறந்துவிடாதே…
திருடாதே..
பாப்பா திருடாதே…
பாப்பா திருடாதே…

திரைப்படம் : திருடாதே

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: