நாய்கள் ஜாக்கிறதை

Wednesday, December 07, 2011




நாய்கள் ஜாக்கிறதை
      இந்த வாசகம் பெரிதும் நாம் அனைவருக்கும் அதிகம் பரிச்சயமானதுதான். பல வீடுகளின் கதவுகளில் இவ்வாசகத்தை காணலாம். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளில் இவ்வாசகத்தை யாரும் பெரும்பாலும் பார்க்க முடியாது. அவர்களின் வீட்டின் கதவுகளில் “நல்வரவு” , “வணக்கம்” , “வாழ்க வளமுடன்” என்னும் வாசகங்களே இடம்பெற்றிருக்கும்.
      இந்த இரு விஷயங்கள் மனிதர்களின் மனதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நடுத்தர மக்கள் தங்கள் வீட்டிற்கு வருபவர்களை நல்வரவு என்று சொல்லி வரவேற்கிறார்கள். ஆனால் பணம் படைத்ததாய் நினைத்துக் கொண்டிருப்பவர்களோ, நீங்கள் வீட்டிற்கு வரவேண்டாம், மீறி வந்தால் நாய் இருக்கிறது, ஜாக்கிறதை என்று சொல்லா குறையாக நாய்கள் ஜாக்கிறதை என்பதை வரவேற்பு வாசகமாக எழுதிவைக்கின்றனர்.
      நான் யார் மனதையும் புன்படுத்த இதை சொல்லவில்லை. வீட்டிற்கு வருபவர்களை மனமார வரவேற்று அவர்களை உபசரித்து அனுப்புவதுதான் தமிழர் பண்பாடு.
      இனியாவது நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் உறவினர்கள் நண்பரகள் வீட்டிலோ “நாய்கள் ஜாக்கிறதை” என்னும் வாசகத்தை கண்டால் அதை அகற்றிவிட்டு “நல்வரவு” என்று எழுதும்படி அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      தமிழர் பண்பாடு என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது, மிகவும் உயர்ந்தது. அதை மேலை நாட்டின் பண்பாட்டிற்கு தாரை வார்த்து தருவதை இனிமேலாவது நிறுத்திக்கொள்வோமே…


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: