என்று தணியும் ?

Saturday, September 15, 2012

                             

    சமீபத்தில் எத்தியோப்பியாவில் வேலை செய்யும் நம் இந்தியர் ஒருவர் நண்பராய் கிடைத்தார். அவரிடம் இருந்து அந்த நாட்டைப்பற்றியும் ஆப்பிரிக்காவில் இருக்கும் பெரும்பாலான நாடுகளைப்பற்றியும் தெரிந்துக்கொண்டேன். நேற்று அவர் தனது 3 மாத விடுமுறை முடிந்து திரும்பவும் பணி நிமிர்த்தமாக எத்தியோப்பியா சென்றார். அப்போது அவரை வழியனுப்ப சென்ற போது ஒரு விஷயம் தெரியவந்தது. அவர் திரும்பிவர ஒரு வருஷம் ஆகும் என்பதால் ஒரு வருடங்களுக்கு தேவையான  மருந்து மாத்திரைகளை இங்கிருந்தே வாங்கி சென்றார். எதுக்கு இங்கே வாங்குறீங்க அங்கே இவையெல்லாம் கிடைக்காதா என்று கேட்டேன். அங்கே விலை அதிகம் அதைவிட, போலி மருந்துகள் அதிகம் என்றார். எனக்கு அதிர்ச்சி.
      உயிரை காக்கும் மருந்துகளிலும் போலி இருக்கா என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் அவரை கேட்கும்போதே இன்னொரு அதிர்ச்சியை தந்தார். பாகிஸ்தான் தன் நாட்டில் போலி மருந்துகளை தயாரித்து அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது போல சீல் வைத்து வெளிநாடுகளின் சந்தைகளில் விற்கிறார்கள் என்று. 
          நாட்டை பிரித்துக் கொடுத்தும் இவர்கள் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை புரிந்துக்கொண்டேன். 1947 தடங்கி இன்று வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு பனிப்போர் இருந்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில தகவல்களை திரட்டினேன் இங்கே அலச. 
            மருந்துகளை போலியாய் பாகிஸ்தான் தயாரித்து இந்தியாவின் பெயரில் விற்பனை செய்து நம் நாட்டிற்கு கலங்கம் விளைவிக்கின்றனர். நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நம் நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையை தீவிரவாதிகளால் தாக்கி பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினர். பெரும்பாலும் அவர்கள் வெளிநாட்டினரை அதிகம் குறிவைத்தனர். இதனால், வெளிநாட்டவர் நம் இந்தியாவில் முதலீடு செய்வது குறையும் என்ற கோணத்தில் செய்தார்கள். மேலும் நமது பொருளாதாரத்தை வேரோடு அழிக்க அவர்கள் நம் இந்திய ரூபாயை அங்கே அச்சடித்து நேபாளம், வங்காளதேசம், இலங்கை வழியாக இந்தியாவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுகின்றனர். 
             பல பொருட்களை தரம் குறைவாக அவர்கள் தயாரித்து நம் நாட்டின் தயாரிப்பு என்று சொல்லி வெளிநாடுகளில் விற்பனை செய்து நம் பெயரை கெடுத்து வருகின்றனர். 
     நமது ராணுவ ரகசியங்களை அவர்கள் தெரிந்துக்கொள்ள பல கைக்கூலிகளை இங்கே வைத்திருக்கின்றனர். இன்னொரு அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், தில்லியிலும் மும்பையிலும் இருக்கும் ஒவ்வொரு அரசு அலுவகங்களிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் இருக்கிறார் என்று. வெறும் செவிவழி தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரையும் சந்தேகிக்க கூடாது. ஆனால், இதுபோன்ற விஷயங்களில் செவிவழி செய்தியாக வந்தாலும் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. 
        அவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை. காஷ்மீர் மட்டும்தான் வேண்டுமா இல்லை ஒட்டுமொத்த இந்தியாவும் வேண்டுமா என்று. ஒவ்வொரு இந்தியனின் குருதியின் சகோதரத்துவம் ஊட்டி வளர்ப்பதைப்போல ஒவ்வொரு பாகிஸ்தானியின் குருதியிலும் இந்தியாவின் மீது எதிர்ப்பை ஊட்டி வளர்க்கிறார்கள் என்று ஒரு திரைப்படத்தில் பார்த்தேன். ஆனால், ஒரு சிலர் செய்கிற தவறுக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையே குற்றம் சொல்வது சரியல்ல. இந்தியாவில்கூடத்தான் பல ஊழல்கள், இன்னும் பல வெறுக்கத்தக்க செயல்கள் நடக்கிறது. அதற்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் குற்றம் சொன்னால் எப்படி.
          ஆனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இருக்கும் உறவை கொஞ்சம் உணர்வுபூர்வமாகத்தான் கையாள வேண்டியிருக்கு. ஏனென்றால், நம்மிரு நாடுகளுக்குள் நடக்கும் கிரிக்கெட் போட்டியை உலகமே எதோ போர் நடப்பதுபோல ஆவலாய் பார்க்கிறது. இந்த மனநிலையை அவ்வளவு எளிதாக மாற்றிட முடியாது. இது உலக மக்கள் பல கோடி பேரின் மனதில் விதைக்கப்பட்ட விஷ விதை. அது இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது, அதை கிள்ளி எரியாமல் வளரவிட்டு, இப்போது வெட்டவும் முடியாமல் இரு நாட்டு மக்களும்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எந்தவொரு விஷயத்திற்கும் ஆட்சியில் இருப்பவர்கள் முடிவு எடுக்கட்டும் என்று இருக்காமல், சில விஷயங்களை நாமே முடிவு செய்ய வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது எளிதல்ல. இன்னும் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் இந்த இரு நாடுகளுக்கு ஒத்துவராது. இல்லாத இறைவனின் கைகளில் இந்த விஷயத்தை விடமுடியாது. இதற்கு தீர்வு காண்பது மற்றவர்களுக்கு எப்படியோ, ஒரு இந்திய குடிமகனாக அல்ல, ஒரு மனிதனாக எனக்கு உரிமை இருக்கிறது. ஒருவன் என்ன செய்திடமுடியும் என்கிறீர்களா. ஒருவன் நினைத்தால் உலகத்தையே மாற்றிக்காட்டலாம் என்று இன்னமும் சரித்திரத்தில் பலர் பெயர் இருக்கிறது. இறக்கும்வரை முயல்வோமே, ஒரு நட்புறவை இந்த இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்த....


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: