போனால் போகட்டும் போடா

Sunday, September 16, 2012




போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடாஇந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்வரும்
ஜனனம் என்பது வரவாகும்அதில்
மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான்அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காதுஇது
கோர்ட்க்குப் போனால் ஜெயிக்காதுஅந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடாஇந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

எலும்புக்கும்
சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடாஅவன்
நாலும் தெரிந்த தலைவனடாதினம்
நாடகமாடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடாஇந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

திரைப்படம்: பாலும் பழமும்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: