எப்படி மனசுக்குள் வந்தாய்

Friday, September 07, 2012




மலைபோல நின்றவனை
மண்மேடு துகளாய் செய்தாய்...
விழுதோடு நின்றவனை
வேரோடு புயலாய் சாய்த்தாய்...
மலைபோல நின்றவனை
மண்மேடு துகளாய் செய்தாய்...
விழுதோடு நின்றவனை
வேரோடு புயலாய் சாய்த்தாய்...
ஒரு பார்வையிலே எனை வீழ்த்திவிட்டாய் அடியே..
சிறு புன்னகையால் விலை பேசிவிட்டாய் எனையே..
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
காதல் என்றொரு நூலகம்
என் மனதில் திறந்துவைத்தாய்..
சொர்க்கம் என்றொரு புத்தகம்
எனை தினமும் படிக்கவைத்தாய்..
காதல் என்றொரு நூலகம்
என் மனதில் திறந்துவைத்தாய்..
சொர்க்கம் என்றொரு புத்தகம்
எனை தினமும் படிக்கவைத்தாய்..
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
வலி தீர்ந்திடுமோ உயிர் மீண்டிடுமோ சகியே..
உன் விழிகளொடு விழிகளொடு
என்னை விழுங்கும்போது கண்ணே,
கருநாகம் ஒன்று என்னை தீண்டும்
வலி கண்டேன்..
புது நதியைபோல நதியைபோல
நீயும் வளைந்து நெளிந்து ஓடி
என் காதல் தேசம் பூக்கள் பூக்கும்
உயிர் கண்டேன்..
எனை வாழவைப்பாயோ ?
இல்லை வீழவைப்பாயோ ?
உயிர் போகும் தருவாயில்
வந்து மீளவைப்பாயோ ?
உன் மடியோடு எனை சாய்த்து
நீ கொடுக்கும் முத்தங்கள்
உயிர்காக்கும் மருந்தென்று
மறுவாழ்வு பெறுவேன்..
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
வலி தீர்ந்திடுமோ உயிர் நீண்டிடுமோ சகியே..
கோவில் தெருவில் கோவில் தெருவில் தொலைந்து
அழுது புலம்பும் குழந்தை..
அது மீண்டும் சேர்ந்து சிரிக்கும் புதுமை
நீ தந்தாய்..
உன்னை மட்டும் பார்த்து சிரித்து ரசிக்கும்
காதல் குருடனாக்கி,
நீ மேலும் கீழும் உருட்டி
என்னை ரசிக்கின்றாய்..
உன் காற்று தெரியாமல்,
என் வாழ்க்கை நகராதே
உயிர் நூலை வடம் செய்து
காதல் தேரை இழுக்காதே..
என் தாய் தந்தை உயிரை நீ
கொலை செய்ய துணிந்தாலும்
அஹிம்சைகள் நீ தந்து
இம்சைகள் செய்தாய்..
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
வலி தீர்ந்திடுமோ உயிர் நீண்டிடுமோ சகியே..
காதல் என்றொரு நூலகம்
என் மனதில் திறந்துவைத்தாய்..
சொர்க்கம் என்றொரு புத்தகம்
எனை தினமும் படிக்கவைத்தாய்..
காதல் என்றொரு நூலகம்
என் மனதில் திறந்துவைத்தாய்..
சொர்க்கம் என்றொரு புத்தகம்
எனை தினமும் படிக்கவைத்தாய்..
ஒரு பார்வையிலே எனை வீழ்த்திவிட்டாய் அடியே..
சிறு புன்னகையால் விலை பேசிவிட்டாய் எனையே..
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
வலி தீர்ந்திடுமோ உயிர் மீண்டிடுமோ சகியே..

திரைப்படம்: எப்படி மனசுக்குள் வந்தாய்
இசை: ஏ.ஜே.டேனியல்
வரிகள்: பி.வி.பிரசாத்
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா


இந்த திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை, ஒரு நாள் திரையரங்கிற்கு வேறொரு படம் பார்க்க சென்றேன். அப்போது இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் காண்பித்தார்கள், அதில் இந்த பாடல் வந்தது. கேட்ட உடனே மனதை தொட்டுவிட்டது. உடனே இணையத்தில் தேடி இந்த பாடலை எடுத்தேன். இப்பாடலின் வரிகளை எனக்கு தெரிந்தவரை இதுவரை யாரும் பதியவில்லை. முதன்முதலாய் நான் இவ்வரிகளை இங்கே இணையத்தில் பதிவு செய்கிறேன் என்று நினைக்கிறேன். முடிந்தால் இப்பாடலை கேட்டு பாருங்களேன். 

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: