ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

Sunday, September 16, 2012




ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா

ஆகாயப்
பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா

பால்
வண்ணம் பழத் தட்டு பூக்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
ஊராரின் சன்னிதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாய் என்றும் சேய் என்றும் தந்தை என்றும் ஆவோமா

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

கண்ணென்றும்
வளை கொண்ட கையென்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்
பொன் மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண் உள்ளம் ராகம் சொல்லி ஆடி வரும்

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா

படம்: பொன்னூஞ்சல்
பாடியவர்கள்: டி.எம்.சொந்தர்ராஜன், சுசீல
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: